ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள அரசு கொத்து குண்டுகளை போட்டு ஆயிரக்கணக்கில் அழித்தபோது வேடிக்கை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. தெரிந்தும் தெரியாதமாதிரி நாம் கண் மூடிக்கொண்டிருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் செய்த பின் தான் வரிசையாக பா.ம.க, மதிமுக, தமிழ் அமைப்புகள் கொடி பிடித்தன. முத்துக்குமார் தீக்கு அகுதியானபோது எழுந்த எழுச்சி அலையை அரசியல்வாதிகள் திட்டமிட்டு மழுங்கடித்தனர். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈழ போரை பெரிய பிரச்சாரமாக கொண்டும் சென்றார்கள். ஈழ மக்களின் எதிரியான ஜெயலலிதாவே ஈழத்துக்கு ஆதரவு அறிக்கை விட்டார்.
தொப்புள் கொடி உறவை அழித்த மத்திய காங்கிரஸ் அரசுக்கு திமுக துணை போனதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக செய்தது துரோகம் என எண்ணினர். ஆனால் அவர்களுக்கு மாற்று வழியில்லை. திமுகவை எதிர்த்து நின்றவர்கள் ஈழ பிரச்சனையை மக்கள் பிரச்சனையாக்காமல் அரசியல் பிரச்சனையாக்கியதை மக்கள் உணர்ந்தேயிருந்தார்கள் அதனால் வந்த விளைவு. திமுக கூட்டணி வென்றது. இதை யோசிக்காமல், திமுக நினைத்திருந்தால் இலங்கையில் நடந்த போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் அதை செய்யாமல் கருணாநிதி விட்டு விட்டார் தமிழர்களின் விரோதி கருணாநிதி என ஈழ உணர்வாளர்கள் குற்றச்சாட்டினர். இந்த குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜெ மீது கூட வந்திருக்கும்.
திமுகயில்லை போரை நடத்திய காங்கிரஸ்சே நினைத்திருந்தாலும் ஈழத்தில் நடந்த போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. காரணம், ஆசிய கண்டத்தில் நடக்கும் மறைமுக யுத்தம் அப்படி. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்களில் நடக்கும் மறைமுக யுத்தத்தில் சீனா குதிரை பாய்ச்சலில் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறது. இந்தியா ஆமை வேகத்தில் நகர்கிறது. அதோடு பாதுகாப்பு ரீதியாக சீனா இந்தியாவை சுத்தி வலைத்துள்ளது. (சீனாவின் முத்துமாலை திட்டத்தை இணையத்தில் தேடி படியுங்கள் புரியும்) சீனா சொன்னால், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், நேபாளம் போன்றவை கை கட்டி சீனாவுக்கு சேவகனாக நிற்க்கும். இந்தியா மிரட்டினால் கூட கேட்பதற்க்கு ஒரு நாடும் தயாரில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியா முழித்துக்கொண்டது. அது முழித்தபோது இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே பிரகாசமாக தெரிந்தது. அதேநேரம் சீனா இலங்கையை வலைக்க பேசிக்கொண்டுயிருந்தது. கடல், ஆகாயம் மார்க்கத்தில் மிக முக்கியமான நாடு இலங்கை அதை கோட்டை விட்டால் நம் கதி அதோகதி தான் என பயந்து சிங்கள தேசத்தை மிரட்ட தொடங்கியது இந்தியா.
இதை பயன்படுத்திக்கொண்ட இலங்கை, எனக்கு தேவை பணம், ஆயுதம், நான் செய்யறத மத்த நாடுகள் கண்டுக்கொள்ளாத அளவுக்கு நீ எனக்கு பாதுகாப்பு தந்தன்னா நான் சீனா பக்கம் போகல என சொல்லி இந்தியாவிடம்மிருந்து எல்லாவற்றையும் வாங்கி ஈழத்தமிழர்களை, விடுதலைப்புலிகளை அழிக்க அதை பயன்படுத்திக்கொண்டது. வாலை நமக்கு காட்டிவிட்டு தலையை சீனாவிடம் தந்து துரோகம் செய்தது இலங்கை. இதைக்கண்டு அதிர்ந்து தலையை மீட்க இலங்கை கேட்டதை விட அதிகமாகவே தந்தது. மேற்க்குலக நாடுகளுக்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் தெரிந்து அவர்கள் பங்குக்கு கேட்காமலே உதவிகளை வாரி வழங்கினார்கள். போட்டி போட்டுக்கொன்டு உதவிகள் தேடி வந்ததால் விடுதலை புலிகளை அழிக்க தைரியமாக வறைமுறை, விதிகளை மீறி ராணுவத்தை ஏவியது. இதில் விடுதலை புலிகளுக்கு ஆதராவக தோள் கொடுத்து நின்ற மக்களையும் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
போர் உச்சகட்டத்தை நெருங்கிய போது தான் தமிழகத்தில் நாம் தெருவில் இறங்கி போராடினோம். அப்போது காலம் கடந்து போய்யிருந்தது. உணர்வாளர்கள் மத்தியரசுக்கு முட்டு தருவது திமுக தான். நாங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவோம் என காங்கிரஸ்சை திமுக மிரட்டினால் காங்கிரஸ் பணிந்து போரை நிறுத்தியிருக்கும் என பேசினார்கள். இப்போதும் அதையே பேசி வருகிறார்கள். திமுக ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தாலும், மத்தியில் காங்கிரஸ்சின் ஆட்சி கவிழ்ந்துயிருந்தாலும் இலங்கையில் போர் நடந்திருக்கும். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவோடு இலங்கை போரை நடத்தியிருக்கும்.
இதை அறிந்தே இலங்கையை நம் வசம்மில்லாவிட்டால் இந்தியாவின் கதி அதோகதி தான் என பயந்து அப்போது பாதுகாப்பு துறை செயலாளராகயிருந்த நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர்மேனன், மத்தியமைச்சர் பிரணாப்முகர்ஜி அடிக்கடி தமிழகம் வந்து இந்தியாவின் இக்கட்டான நிலையை தெளிவுப்படுத்தி கருணாநிதியை கூல் செய்துவிட்டு போனார்கள். ஆனாலும் ஒட்டு வங்கியில் குறை வந்துவிடுமோ என பயந்து மனிதசங்கிலி, உண்ணாவிரதம் என நாடகம் நடத்தினார் முதல்வாரன கருணாநிதி.
பாராளமன்ற தேர்தலில் ஈழ பிரச்சனை மக்களிடம் எடுபடவில்லை என நினைத்து தேவையில்லாத விமர்சனங்களை புலிகள் மீது முதல்வர் கருணாநிதி வைக்க மக்கள் மனதில் அது காயத்தை ஏற்படுத்தியது. இதை அதிகமாக பிடித்துக்கொண்ட ஈழ ஆதரவாளர்கள், எதிர்கட்சிகள் போரை என்னவோ திமுகவே நடத்தியது போல தமிழகத்தில், இணைய தளங்களில் பிரச்சாரம் செய்து திமுகவை துரோகி என சொல்லி வருகிறார்கள்.
தமிழினம் என்றால் காங்கிரஸ்க்கு பிடிக்காது துரோகத்தின் வெளிப்பாடு என்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமல்ல பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் தமிழனை ஏமாளியாக நடத்தி வருகிறது.
அதற்க்கு காரணம் யார்?
அதற்க்கு காரணம் யார்?
மனசாட்சியில் கை வைத்து யோசித்து பார்ப்போம். தெருவில் ஒருவனை யாராவது அடித்தால் கேள்வி கேட்க பயந்து ஓடிப்போய் பதுங்கி விடுகிறோம், நமக்கு வந்த பிரச்சனையில்ல இது என பாதுகாப்பாக மறைந்துக்கொண்டு போலிஸ் என்ன செய்கிறது ஒட்டு வாங்கிம் போனவர்கள் என்ன செய்கிறார்கள், நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என பேசுவது வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களை பாருங்கள், அங்குள்ள மக்கள் தன் இனத்தை, சாதியை, மதத்தை சார்ந்தவர்களுக்கு எங்கே ஒரு பிரச்சனை என்றாலும் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை கவனித்துக்கொள்ளும் எனயில்லாமல் யாருக்கும் பயப்படாமல் தெருவில் இறங்கி மக்கள் போராடுகிறார்கள். வெற்றி கிட்டும் வரை ஓயாமல் போராடுகிறார்கள் வெற்றி பெருகிறார்கள். அந்த மக்களின் உறுதியை உணர்ந்தே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் பயந்து மக்கள் பக்கம் நிற்க்கிறார்கள்.
இங்கு அவன் பாத்துக்குவான், இவன் பாத்துக்குவான் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி பயந்து ஒளிந்துக்கொள்கிறோம். இதனால் தான் நம்மை கிள்ளு கீறையாக நடத்துகிறார்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள். இது யார் தவறு?. நாம் செய்த தவறு. அரசியல்வாதியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என எதிர் பார்த்தோம். ஆதை அறிந்துக்கொண்ட நம் முதுகில் சவாரி செய்கிறார்கள். நாம் மானம் கெட்டவர்கள், சொரணையற்றவர்கள் என அறிந்து நம் குணிய வைத்து குத்துகிறார்கள். தெரிந்தும் நாம் அவர்களை தண்டிப்பதில்லை. காரணம், தேர்தலில் 500, 1000த்திற்க்கு எப்படியும் ஓட்டு போடுபவர்களாக மாறிவிட்டதால் தான் இந்தநிலை. ஈழ பிரச்சனையின் போதும் அதை உணர்த்தி காட்டினார்கள்.
எல்லாவற்றையும் அரசியலாக்கினார்கள். உன் இனத்தை அழிக்கும் போது இங்கு நீ போராடியிருந்தால் அரசாங்கம் பயந்துயிருக்கும். போராட போகும் முன்பே கைது, சிறை என பயந்து பதுங்கினால் ஆள்பவர்களுக்கு தைரியம் வரத்தான் செய்யும். நீ எதிர்த்து நின்றிருந்தால் உன்னை நெருங்க அச்சப்பட்டிருப்பார்கள். ஒரு அரசாங்கம் மக்களை என்ன செய்துயிருக்க முடியும், கைது செய்யும். அவ்வளவு தானே இனத்திற்க்கா சிறையில் இருக்க கஷ்டம் என்றால் நீ உரிமையை பற்றி பேச தகுதியில்லாதவன். மக்களுக்காக, இனத்திற்காக உயிரை கொடுக்க விடுதலைப்புலிகள் பயந்திருந்தால் ஈழப்பிரச்சனை உலகம் பேசும் அளவுக்கு வந்திருக்காது.
நம் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் தான் கேள்வி கேட்க வேண்டும் என எண்ணுவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது. நீ கேள்வி கேட்டால் தானே தப்பு செய்பவன், செய்ய துணிபவன் பயப்படுவான். கேள்வியே கேட்காத நாம் மற்றவர்களை குறை சொல்ல என்ன தகுதியிருக்கிறது. தவறுகளை நம் மீது வைத்துக்கொண்டு மற்றவர்களை குறை சொல்வது நியாயம்மில்லை.
அவன் துரோகி, இவன் துரோகி என குறைசொல்வதை விட்டுவிட்டு நாம் என்ன செய்தோம், என்ன செய்யலாம் என யோசிப்போம். அதன் பிறகு மற்றவர்களைபற்றியும், துரோகம் செய்தவர்கள், ஏமாற்றியவர்கள் பற்றியும் பேசுவோம்.