வியாழன், டிசம்பர் 23, 2010

ஸ்பெக்ட்ராம் நடந்தது-நடப்பது-நடக்க வேண்டியது என்ன?


2ஜீ ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ஏட்டிக்கு போட்டியாக தகவல்களை அரசியல்வாதிகளும், மீடியாக்களும் ஊழல், ஊழல் என பேசியும், எழுதியும் வருகிறார்கள். ஊழல்க்கும் நட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் இவர்களுக்கு தெரியும். ஆனால் திட்டமிட்டே 2ஜீ ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் நட்டம் ஏற்பட்டதை ஊழல் என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
1.70ஆயிரம் கோடியை கொள்யைடித்தோ, லஞ்சம் வாங்கினலோ ஊழல். அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது இழப்பு. இழப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல்வாதிகள், ஆளும் பிரமுகர்கள் லாபம் அடைந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த லாபத்தை லஞ்சம் என சொல்லலாம். ஆனால் இழப்பு முழுவதையும் ஊழல் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இழப்பு ஏற்படுத்தி அதன் பின் பெற்ற பங்கு எவ்வளவு என்பதை ஆராய்ந்து அதை ஊழல் அ லஞ்சம் என குற்றம்சாட்டலாம். அப்படி செய்யாமல் மொத்த தொகையும் ஊழல் என விளிப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகள் அப்படி தான் சொல்வார்கள் ஆனால் ஊடகத்துறையும் அப்படி சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் நட்டம் என குறிப்பிடப்படும் தொகையும் ஏற்றுக்கொள்ளும் படியாகயில்லை. ஏலம் விட்டுயிருந்தால் மட்டுமே அதை கணக்கிட்டுயிருக்க முடியும். 99 பி.ஜே.பி ஆட்சி காலம் முதலே ஏலம் நடத்தாமல் முதலில் வரும் கம்பெனிக்கு முன்னுரிமை என பெரு முதலாளிகளுக்கு ஏற்ப கொள்கை வகுத்து அதன்படி செயல்பட்டு வந்துள்ளார்கள் நம்மை ஆண்ட ஆளும் அரசியல்வாதிகள். 2000த்திற்க்கு முன்பு வரை மொபைல் போன்களை அவ்வளவாக யாரும் பயன்படுத்தாததால் அலைக்கற்றைகள் பெற்ற கம்பெனிகள் நட்டம் என காரணம் சொல்லிவந்தது. அதன் பின் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, டெக்னாலஜி வளச்சியால் மொபைல் போன் பயன்பாடு நாட்டில் அதிகமானதால் அலைக்கற்று மீதான ஏக்கம் பெருமுதலாளிகளுக்கு அதிகமானது.

2ஜி அலைக்கற்றை பெற பல முக்கிய கம்பெனிகள் போட்டி போட்டன. ஆனால் ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற சில கம்பெனிகள் மட்டும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி மற்றவர்களுக்கு சரியாக கிடைக்க விடாமல் செய்தன. இதற்க்கு மத்திய அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் போன்றவர்கள் ஒத்து ஊதினார்கள்.
2007ல் தொலைதொடர்பு துறை அமைச்சரான ராசாவுக்கும் முக்கிய கம்பெனிகளின் ஆதிக்கம் பற்றி தெரியும். ஆனால் அதில் அரசுக்கு வரும் வருமானம், தனக்கு வரும் தனிப்பட்ட வருமானத்தை கவனத்தில் கொண்டு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேகவேகமாக 2ஜீ அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தார். மொபைல் கம்பெனிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் முக்கிய கம்பெனிகளை தவிர பல முகம் தெரியாத கம்பெனிகள் கூட லாபமடைந்தன. இதன்பின் தான் பிரச்சனை ஆரம்பமானது. இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தி சிலர் லாபம்மடைந்துள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டது.

இப்படி கிளப்பி விட்டவர்கள் யார் என்றால் ஏற்கனவே அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திய பெருமுதலாளிகள் தான் அவர்கள். அவர்கள் ராசா மட்டுமே குற்றவாளி என குற்றம் சாட்ட வைத்தார்கள் 3 ஆண்டு போராட்டத்தில் ராசாவிடம் இருந்த அமைச்சர் பதவியை காவு வாங்கினார்கள். சி.பி.ஐ விசாரணை தொடங்கி தற்போது ராசா கைதாவாரா என்பதில் வந்து நிற்க்கிறது பிரச்சனை.
அரசியல்வாதிகள், ஊடகங்கள் சொல்வது போல 1.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்குமா என்றால் வாய்ப்பு குறைவு. ஏன் என்றால் மத்திய தணிக்கை துறை 3ஜீ ஏலம் போன தொகையை வைத்து 2ஜீயை கணக்கிட்டுள்ளது. 2ஜீ அலைக்கற்று ஒதுக்கும் போதே அடுத்து 1 ஆண்டில் 3ஜீ அலைக்கற்றுக்கு ஏலம் விடப்படவுள்ளது என தொலைத்தொடர்புத்துறை அறிவித்தது. 2ஜீயை விட 3ஜீ டெக்னாலஜி வாயிலாகவும், வருமானம் அளவிலும் அதிக லாபம் கிடைக்ககூடியது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் புதியதாக ஏதாவது அறிமுகப்படுத்தி பணம் பறிக்கவே முயற்ச்சி செய்வார்களே ஒழிய அதைவிட லாபம் குறைந்ததை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் 2ஜீயை குறைந்த விலைக்கு தான் வாங்கியிருப்பார்கள்.

அதேபோல், 126 கம்பெனிகள் 2ஜீயில் அலைக்கற்றைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மிக குறைந்த விலையில் அதாவது ஆயிரம் கோடி, 2 ஆயிரம் கோடி என குறைந்த அளவிலேயே பணம் தந்து அலைக்கற்றை பெற்ற பெயர் தெரியாத, முகவரியில்லாத, தொலைத்தொடர்புக்கு சம்மந்தமில்லாத கம்பெனிகள் அதை வேறு கம்பெனிகளுக்கு 3 ஆயிரம், 4 ஆயிரம் கோடிக்கு விற்று லாபம்மடைந்துள்ளது. லாபம் பெற்ற கம்பெனிகளின் பணம்மெல்லாம் தொலைதொடர்பு துறை அமைச்சராகயிருந்த ராசாவுக்கே வந்தது என சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதோடு, 100 ரூபாய் முதலீடு வைத்தாலே லாபத்தில் 75 சதவிதம் லாபத்தில் பங்கு வேண்டும் என கேட்கும் மனிதர்கள் வாழும் காலத்தில் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் பெரு முதலாளிகள் 1000 கோடி, 2000 கோடி முதலீடு செய்துவிட்டு அதனை கைமாற்றி விட்டு அதன் மூலம் வரும் லாபத்தை வேறு ஒருவருக்கு முழுவதுமாக தருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வந்த லாபத்தில் 50 சதவிதம் பெரு முதலாளிகள் ராசாவுக்கு தந்துள்ளார்கள் என வைத்துக்கொண்டாலும் அந்த 50 சதவித பணம் ராசாவுக்கு மட்டுமே போய்யிருக்க வாய்ப்பில்லை.

ராசாவை அமைச்சாராக்கியது திமுக. அது மாநில கட்சி. அவர் அமைச்சராகயிருப்பது காங்கிரஸ் கட்சியின் கீழ், அமைச்சர்களுக்கு மேல் பிரதமர் என ஒருவர் இருக்கிறார். டம்மி பிரதமரை ஆட்டி வைக்கும் அம்மையார் ஒருவர் உள்ளார். பலாயிரம் கோடிகள் வருமானம் கேட்காமலே கமிஷனாக வரும் துறையில் மேல்யிருப்பவர்களுக்கு தெரியாமல் ஒன்றும் செய்துயிருக்க முடியாது. அவர்கள் லாபம் பெறாமலும் இருந்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் ராசாவை மட்டும் குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம்?. நியாயமான விசாரணை என்றால் பிரதமரையும் விசாரிக்க வேண்டும், ஊழலின் ஊற்றுக்கண் தெரியவேண்டும்மென்றால் தொலைத்தொடர்பு துறையின் ஆதி முதல் அந்தம் வரை விசாரிக்க வேண்டும்?, லாபம் அடைந்தவர்கள் யார், யார் என்பது அறிய வேண்டும், இத்துறையில் பெருமுதலாளிகளின் விளையாட்டை விசாரிக்க வேண்டும்?, கம்பெனிகளின் ஜாதகங்களை அலச வேண்டும்?, அலைக்கற்றை பெற்ற கம்பெனிகளின் உரிமையை ஒட்டு மொத்தமாக ரத்து செய்ய வேண்டும்? உண்மையான விசாரணை என்றால் இதுதான் வழி. இவைகளை செய்தால் மட்டுமே நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு அதனால் பெற்ற பலன் ஆகியவற்றை முழுமையாக கண்டுபிடிக்க முடியும்.

இல்லையேல் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை என்றாலும் உண்மை நிச்சயம் வெளிவராது. ஏன் எனில் நாம் வசிப்பது அரசியல்வாதிகளின் நாட்டில். ஜனநாயக நாட்டில் அல்ல. ஜனநாயகம் எனச்சொல்வது பித்தலாட்டம்.

2 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வதை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால் போகிற போக்கை பார்த்தால் ராஜா மட்டுமே குற்றவாளி என்று தி மு க வும், தி மு க மட்டுமே குற்றவாளி என்று காங்கிரஸ் -உம் கை கழுவி விடும் என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது உண்மை தான் நண்பரே. காங்கிரஸ் அப்படித்தான் நடந்துக்கொள்கிறது. தன்னை ஊழல் இல்லாதவனாக காட்டிக்கொள்ள முயல்கிறது இந்தியாவை ஊழல் மிகுந்த நாடாக மாற்றிய காங்கிரஸ்.....

    பதிலளிநீக்கு