புதன், டிசம்பர் 15, 2010

அரசியலுக்கு அடுத்த கோமாளி தயார்.


ஒருவன், படுத்துக்கொண்டோ, உட்கார்ந்துக்கொண்டோ, நடந்துக்கொண்டோ, கனவு கான்பதையும், கற்பனை செய்வதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் காணும் கனவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அர்த்தமேயில்லாமல் கனவு கண்டு கொண்டுயிருப்பவர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல கோமளிகளுக்கும் நாடாளும் ஆசை வந்துவிட்டது. தற்போது அந்த ஆசை நடிகர் விஜய்க்கு வந்துள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதியாகலாம், முதல்வர் ஆகலாம் என்பது என்ன நியாயம். அதற்க்கு ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா?. முதல்வர் பதவி என்பது என்ன வீட்டுக்கு வெளியில் போடும் கோலமா சரியில்லை என்றால் அழித்து விட்டு திருப்பி போட.
விஜய்க்கு எதனால் இந்த ஆசை?. இந்த சமுகத்திற்க்கு விஜய் என்ன செய்துவிட்டார்?, விஜய்க்கு தமிழனின் வரலாறு தெரியுமா?, ஈழ தமிழனின் பிரச்சனை தெரியுமா?, சமுக பிரச்சனை தெரியுமா?, இந்த சமுகத்தில் எத்தனை சாதியிருக்கிறது என்று தெரியுமா?, சமூகநீதி பற்றி தெரியுமா?, பெரியார் பற்றி தெரியுமா?, திராவிட அரசியல் பற்றி தெரியுமா?, படித்து வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை தெரியுமா?, மக்களுக்காக இவரால் 2 நாள் சிறையில் இருக்க முடியுமா?,
மைக் தந்தால் இன்றைய மக்கள் நிலை பற்றி சொந்தமாக பேச தெரியாத கத்துக்குட்டி தான் நடிகர் விஜய். இயக்குநர் சந்திரசேகர் மகன் என்ற தகுதியுடன் 25 வயதில் சினிமாவுக்குள் வந்தவர் நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது, மாமியாருக்கு சோப்பு போடுவது என 8 ஆண்டுகள் குஜிலி சினிமாக்களில் நடித்துவிட்டு மற்ற நடிகர்களை விட அதிகமாக இளைஞர்களுக்கு வன்முறையையும், தண்ணி, தம்மு என கற்று தந்த விஜய் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். புதவிக்கு வந்தால் இன்னும் என்னன்ன கற்று தருவாரோ?.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என ஆரம்பித்தவர் தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்து அதற்கான காரியத்தில் இறங்கியுள்ளார். அரசியல் ஆசை வரலாம். இந்த சமுகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் ஆனால் அதற்கென்று ஒரு தகுதி வேண்டாமா?.

அவர் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை மக்களுக்கு பலப்பல உதவிகள் செய்துள்ளார் இந்த தகுதி போதாதா என காரணம் சொல்லலாம். நடிகர்-நடிகைகள் பொதுவாக சம்பளத்தில் பாதியை கறுப்பு பணமாக வாங்குவார்கள். விஜய்யும் இதற்க்கு விதிவிலக்கல்ல. வந்த பணத்தை அரசின் கணக்கிலிருந்து மறைக்க பொய் கணக்கு காட்ட நலத்திட்ட உதவி அதுயிது என சிலவற்றை செய்தார். அதனால் அந்த உதவிகள் மட்டுமே காரணமாகிவிட முடியாது. தமிழக முதல்வர் கருணநிதி குடும்பம் தான் விஜய் சினிமாவுக்கு வர காரணம் என்கிறார்கள் வேறுசிலர். எப்படி? என கேட்டால், சினிமா உலகை ஆட்டிப்படைக்கும் முதல்வரின் பேரன்கள் விஜய்க்கு தொந்தரவு தருகிறாhகள் அதனால் தான் அரசியலில் இறங்குகிறார் என்கிறார்கள்.

இது சொத்தையான காரணம். விஜய்க்கு அரசியல் ஆசை இப்போது வரவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒருயிடத்தை வாங்குகிறார். அந்தயிடம் சர்ச்சையில் சிக்குகிறது. தான் தமிழின் பிரபலமான நடிகர் அதனால் அதிகாரிகள் தனக்கு சாதகமாக இருப்பார்கள் என எண்ணினார். ஆனால் அவரின் எண்ணத்தில் மண் விழுந்தது. அரசியல் தலைகள் தலையிட அரசியல்வாதிகளுக்கு சாதகமாகவே விவகாரம் போனது. முதல்வர் கலைஞர் வரை போய் உதவி கேட்டார். அதன்பின் அவருக்கு சாதகமாக விவகாரங்கள் நடந்தன. அப்போது தான் அவருக்கு அந்த அரசியல் ஆசை விதையாக மனதில் விழுந்தது. ஏற்கனவே அரசியல் வாசனை அறிந்த சந்திரசேகர் மகன் ஆசைக்கு உரம் போட்டார்.
சினிமா பட விழாக்களில் ரஜினியை விட விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் குவிந்தார்கள். இதை கண்டு மதி மயங்கிய விஜய் தான் தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி என எண்ணினார். விஜய் போகும்மிடங்களில் எல்லாம் மக்கள் ஓடிவந்து முண்டியடித்து பார்த்தார்கள். தமிழக மக்களை பொருத்தவரை சினிமாவில் துணை நடிகர்கள் பொதுயிடங்களுக்க வந்தால் ஆசையாக பார்க்க கூடிவிடுவார்கள். அதுவொரு ஈர்ப்பு அவை ஓட்டாக மாறிவிடாது.
நடிப்பு திலகம் என அழைக்கப்படும் சிவாஜிகணேசனுக்கு எம்.ஜீ.ஆர்ரைவிட ரசிகர்கள் அதிகம். ஆனால் அவரால் கூட அரசியல்வாதியாக ஜெலிக்க முடியவில்லை. அதன் பின் கடந்த தேர்தலின் போது அடுத்த முதல்வர் நான் தான் என கர்ஜித்து கட்சி ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த்க்கு கூடாத கூட்டம்மில்லை. இதனால் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். 1 இடத்தில் அவர் மட்டுமே ஜெயித்தார். விஜயகாந்த் ஏதோ 50 படம் நடித்து முடித்தவுடன் சினிமாவுக்கு வரவில்லை. 125 படங்களுக்க மேல் நடித்து முடித்தபின்பே அரசியலுக்கு வந்தார். அவரே மின் மினி பூச்சியாய் தமிழக அரசியலில் இருக்கிறார்.

நான் எம்.ஜீ.ஆர் போல் அரசியலில் ஜெயிப்பேன் என விஜய் சொன்னால் இதை விட காமெடி இருக்க முடியாது. ஏம்.ஜீ.ஆர் அரசியலுக்கு வந்தது விபத்து. 50 வயதுக்கும் மேல் நடித்துக்கொண்டு மட்மேயிருந்தார். அறிஞர் அண்ணாவால் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்களிடையே மக்களிடத்தில் ஒரு பெரிய ஆதரவு வட்டமேயிருந்தது. திமுக தலைவருடன் ஏற்பட்ட மோதலில் திமுகவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். அடிமட்ட மக்களின் செல்வாக்கை  கொண்டு கட்சி ஆரம்பித்து ஜெயித்தார்.

இதுயெல்லாம் தெரியாமல் தமிழ்நாடே என் பக்கம்மிருக்கிறது என கட்சி ஆரம்பிக்கும் விஜய்யை முட்டாள் என்பதை தமிழக மக்கள் உணர வைக்க வேண்டும்.

5 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. உண்மை தோழரே! உங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். 5 திரைப்படம் வெற்றியடைந்தால் அடுத்த முதல்வர் நானே என்று சொல்கிறார்கள் இதற்கு காரணம் நம் மக்கள்தான், கவர்ச்சியை விட்டுவிட்டு உண்மையான தலைவனை கண்டறிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. உலகிலேயே சினிமா பைத்தியங்கள் நிறைந்திருப்பது தமிழ்ர்களிடத்தில் தான். ரசிகர்கள் நிறைந்துள்ள நடிகர்கள் உலகெங்குமுண்டு.ஆனால் பித்து பிடித்து அலையும் ரசிகர் கூட்டம் தமிழ்ர்களிடந்தான் மிகுதி.இதைக் கட்டாயம் இளவய்திலிருந்தே மாற்றி விளையாட்டு வீரர்கள், பாடகர்கள்,திறமை சாலிகளை ஊடகங்கள் விளம்பரம் செய்ய வைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. அவர் நீக்கீட்டாருங்கறதுக்காக என் கருத்தை மாத்திக்க மாட்டன். அவர் நீக்கனதால் பிரச்சனையில்லை விடுங்க நண்பரே........

  பதிலளிநீக்கு