செவ்வாய், நவம்பர் 30, 2010

சினிமா நடிகர்களுக்காக காதலாக பெயர் மாறும் கள்ளக்காதல்கள்.



சக செய்தியாளர் ஒருவரிடம் அவரின் நண்பர், ஏங்க தினமும் நடிகர் பிரபுதேவா-நயன்தாரா மேட்டர் பேப்பர்ல போடறிங்க. நானும் அந்த பிரச்சனை ஆரம்பிச்ச காலத்துலயிருந்து படிக்கறன். எந்த செய்திதாளும் அவர்கள் பிரச்சனைய ஒழுங்க சொல்ல மாட்டேன்கிறிங்களே நியாயமா என கேட்டுள்ளார். 



என்னங்க ஒழுங்கா சொல்லல என கேட்ட பத்திரிக்கை நண்பரிடம், பிரபுதேவா ரமலத்துன்னு ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்கிட்டு குழந்தை குட்டிகளோட குடும்பம் நடத்தறவரு. இப்ப அவர் நடிகை நயன்தாராக்கூட சேர்ந்து ஜல்சா பண்றாரு. இத பிரபுதேவா மனைவி கண்டிச்சி கோர்ட்க்கு போய்யிருக்காங்க. ஆனா இத எழுதற பத்திரிக்கைகாரங்களான நீங்க, காதலர்கள் கோர்ட்க்கு வருவார்களா?, காதலர்கள் விழாவில் கலந்து கொண்டனர், காதல் முறியுமா?ன்னு செய்தி போடறிங்களே இது நியாயமா?
அப்படி எழுதறதுல என்ன?
 
இல்ல சாதாரண ஏழையாயிருக்கற, பிரபலமாகத ஆணோ அ பெண்ணோ தங்களுக்கு கல்யாணம்மான பிறகு தன் துணையை விட்டுட்டு வேற ஒருத்தரோட தொடர்பு வைத்திருந்தா கள்ளக்காதல்ங்கறிங்க. பிரச்சனைன்னு காவல்நிலையத்துக்கு வந்தா, கள்ளக்காதலால் மனைவி துன்புறுத்தல், கள்ளக்காதலால் கணவன் கொலைன்னு செய்தி போடறிங்க. இத கள்ளக்காதல்ன்னு சொல்ற நீங்க, நடிகர் பிரபுதேவா விவகாரத்தலயும் நீங்க அத கள்ளக்காதல்ன்னு தானே எழுதனும் என கேட்டவர்.

 
பணக்காரன், சமுகத்துல பிரபலமாயிருக்கறவங்க தன் மனைவி, பிள்ளைகளை விட்டுட்டு வேற ஒருத்தரோட தொடர்பு வச்சியிருந்தா அதுக்கு பேர் காதல். ஏழை, பாவப்பட்டவன் அதே தவறை செய்தா அதுக்கு பேர் கள்ளக்காதலாங்க என கேட்டுள்ளார்.
 
பத்திரிக்கை நண்பர் என்ன பதில் சொல்வது என தெரியாமல் நொந்து போய்வுள்ளார். நண்பரால் பதில் சொல்ல முடியாது. அவருக்கு மட்டுமல்ல பத்திரிக்கை துறையை சேர்ந்த என்னாலும் பதில் சொல்ல முடியாத கேள்வி தான்.
 
திரையுலகை சேர்ந்த பிரபுதேவா-நயன்தாரா விவகாரம் மட்டுமல்ல பிரகாஷ்ராஜ்-போனிவர்மா, நடிகை சீதா-டீவி நடிகர் ஆகாஷ் என இவர்கள் காதல் விவகாரத்தை எழுதும் போது மட்டும் கள்ளக்காதல் நல்ல காதலாக மாறிவிடுகிறது. 
 
நம் சமுகத்தில் கள்ளக்காதல் என்பது இதுதான் என ஒரு அளவுகோல் வைத்துள்ளார்கள் மிஸ்டர் பொதுஜனம். அதாவது கல்யாணம்மான ஒரு ஆணோ அ பெண்ணோ கல்யாணமாகாத அ கல்யாணமான பெண்ணோடவோ அ ஆணோடவோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அதை கள்ளக்காதல் என்கிறார்கள்.
 
அந்த விதிப்படித்தான் பிரபுதேவா-நயன்தாரா, பிரகாஷ்ராஜ்-போனிவர்மா விவகாரங்கள் உள்ளது. ஆக அவர்களைப்பற்றி எழுதும் போது கள்ளக்காதலர்கள் என்று தானே எழுத, அழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காதலர்கள் என எப்படி அழைக்க முடியும்.

இது மட்டுமல்ல பத்திரிக்கை துறையின் ஆணாதிக்க சிந்தனையும் இதில் உள்ளது. மேலே சொன்ன பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் விவகாரங்கள் ஆண் சார்ந்தது என்பதால் அவ்விவகாரத்தை காதல் என எழுதப்படுகிறது.

இதே விவகாரங்கள் நடந்துக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் நடிகை வினிதா தன் தந்தை நடிகர்கள் விஜயகுமார், அண்ணன் அருண்தம்பி மீது புகார் வாசித்துள்ளார். நடிகை வினிதாவை பற்றி செய்தி எழுதும் போது, நடிகை வினிதா இரண்டாவது கணவருடன் காவல்நிலையம் வந்து புகார் தந்;தார் என சில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளது. இது எப்படி சரியாகும்.

வினிதா முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டே இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். முதல் கணவரை விவகரத்து செய்தவுடனே திருமண பந்தம் சட்டப்படி முடிவுற்றது. ஆக மீண்டும் திருமணம் செய்துக்கொண்டவரை கணவர் என்று தானே எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு இரண்டவாது கணவருடன் வந்தார் என எழுதப்படுகிறது. அவருக்கு அப்படி எழுதும் போது,

நடிகர் பிரபுதேவா கள்ளக்காதலி நயன்தாராவுடன் ஊர் சுற்றுகிறார், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் இரண்டாவது மனைவியுடன் விழாவுக்கு வந்திருந்தார் என்று தானே எழுத வேண்டும். 

விதிவிலக்கு நடிகர்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? 

நடிகர்கள் கள்ளக்காதலை பத்திாிக்கை, மீடியா நண்பர்கள் காதல் என எழுதுவது எந்த விதத்தில் நியாயம் . சட்டம் பற்றி பேசும் நாம், இதில் ஏழைக்கு ஒரு விதமாகவும், பிரபலமான சினிமாக்காரர்களுக்கு ஒரு விதமாக நாம் எழுதுவது நியாயமா? வருங்காலத்தில் இதை மாற்றிக்கொள்ளவில்லை எனில் இன்று ஒருவர் கேட்டவர் கேள்வி நாளை பலர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஜாக்கிரதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக