வியாழன், நவம்பர் 11, 2010

நியாயமா இது நியாயமா............?


கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி இருவரை ஈவு இறக்கமின்றி கொன்ற கொலை காரர்கள் இருவரில் மோகன்ராஜ் என்பவனை போலிஸார் என்கவுண்டர் செய்து கொன்றபோது நரகாசூரன் இறந்தது மகழ்ச்சியே என கோவை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மனித உரிமை ஆர்வலர்களோ அவனை காவல்துறை சுட்டுக்கொன்றது தவறு என நீதிமன்ற படியேறியுள்ளது.

இதற்கிடையே இறந்தவனின் சொந்தவூரில் நடந்த கொடுமை மன்னிக்க முடியாதது. அதைப்பற்றி யாரும் பேசமறுப்பதேன்?. சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் உடல் ஊருக்குள் வரக்கூடாது, இங்கு அவன் உடலை புதைக்க விடமாட்டோம்மென அவன் பிறந்து வளர்ந்த பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சி ஊர் பொதுமக்கள் அவனது தந்தையாரை தடுத்துள்ளனர். அதன் பின் அவன் தங்கியிருந்த கோவனூர் என்ற கிராமத்தில் எரிக்கலாம் என முடிவு செய்து அங்கு கொண்டு போனபோது அங்கிருந்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடைசியாக காவல்துறை உதவியுடன் பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் எரித்துள்ளனர். பிறந்த, வளர்ந்த, வாழ்ந்தயிடத்தில் எரிக்க விடாமல் மக்கள் துரத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுவும் மனித உரிமை மீறல் தான். பெற்ற பாவத்துக்காக அவனின் உடலை எறிக்க வந்து தங்களது கடமையை செய்ய சென்றவர்களை சுத்தி சுத்தி துரத்தியவர்களை என்னவென்று சொல்வது. 

அவன் செய்த கொலைக்கு அவனை பெற்றவர்களோ, அவனை நம்பி வந்தவாளே, அவனுக்கு பிறந்த குழந்தையோ எப்படி காரணமாக முடியும். அவன் செய்த தவறுக்கான தண்டனையை காவல்துறை துப்பாக்கி குண்டு மூலம் தந்துவிட்டது. இருந்தும் அவனது உடலை புதைக்க கூட விடமாட்டோம் எனச்சொல்வது எந்த விதத்தில் நியாயம். 

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் சுதந்திரம் கேட்டு போராடிய நம் மக்களை கொத்து கொத்தாக கொன்ற வெள்ளையனுக்கு தமிழகத்தில் பலயிடங்களில் சமாதியுள்ளது. கோடி கோடியாய் கொள்ளையடித்து பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விட்டு மறைந்த பல அரசியல் தலைவர்களுக்கு நம் நாட்டின் தெருக்களில் சிலையுள்ளது.

நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் பக்கத்து நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அங்குள்ள மக்களை ஆயிரக்கணக்கில் கொல்ல சொன்ன, உதவி செய்த அரசியல் கட்சியை நாம் அரியணையில் அமர்த்தி வைத்துள்ளோம்.

அப்படிப்பட்ட சூடு சொறணையற்ற நாம் உயிரற்ற உடலை மேலும் மேலும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக