புதன், நவம்பர் 24, 2010

மண்ணை கவ்விய ராகுல் காங்கிரஸ்.


இந்திய பேரரசை காக்க வந்த கடவுள் என காங்கிரஸாரால் வர்ணிக்கப்படும் ராகுல் தான் அடுத்த பிரதமராக்குவதற்கான முயற்சிகள் காங்கிரஸ் கட்சியால் செய்யப்பட்டு வருகின்றன. லண்டன் பல்கலைகழகம் ஒன்றில் பொருளாதாரம் படித்து பல பாடங்களில் தோல்வியடைந்து இந்தியா திரும்பினார்.
கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திராகாந்தி, அப்பன் ராகுல்காந்தி உட்கார்ந்த நாற்காலியில் உட்கார ஆசைப்பட்டார். கல்யாணம் கூட ஆகாத சின்ன பையன்க்கு இந்தியாவின் அரியாசனம் தந்தால் கட்சியின் பெரும் பெருச்சாளிகள் ஏற்றுக்கொள்ளாது என திட்டமிட்டு காய் நகர்த்த ஆரம்பித்தார்கள் சோனியா காங்கிரஸார்.
முதலில் எம்.பி சீட் தந்து வெற்றி தந்து உட்காரவைத்தார்கள். அமைச்சராக்குங்கள் என ராகுலின் அடிப்பொடிகள் குரல் கொடுத்தார்கள். நான் சின்ன பையன் என ஸ்டன்ட் அடித்து பதவியை மறுத்தார் ராகுல். இன்னோருத்தரின் கீழ் நாம் பணி புரிவதா என்ற தயக்கம் தான் அவரை அமைச்சராக்காமல் தடுத்தது.
அடைந்தால் சிவலோக பதவி என்பதைப்போல ஆனால் பிரதமர் தான். கீழ் உள்ள அமைச்சர் பதவி வேண்டாம் என்பதை சொல்லாமல் நான் சின்ன பையன் என பில்டப் தந்தார்.
நான் சாதிக்க வேண்டும், இந்திய இளைஞர்களுக்கு வழி காட்ட யாரும்மில்லை அவர்களுக்கு நான் வழிகாட்ட போறன். அவர்களை அரசியலுக்கு அழைக்க போறன் என ஸ்கூல், காலேஜ்களுக்கு ஓடினார், ஓடினார். மாணவ-மாணவிகள் மத்தியில் நான் புது விதமான அரசியல்வாதி என்றார். இந்திய நதிகளை இணைப்பது என்பது கேலிக்கூத்து என திருவாய் மலந்து வாங்கிகட்டிக்கொண்டார். கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்து மன்னிப்பு கேட்டார்.
பீகார் மாநிலத்திற்க்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ்க்கு என்று மரியாதை உள்ளது. நாங்கள் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என பம்மாத்து செய்துவிட்டு பீகாரை சுற்றிப்பார்த்தார். கூட்டணி என்பது இனி காங்கிரஸ்க்கு தேவையில்லை. இளைஞர்களின் பலம் காங்கிரஸாரின் உழைப்பு எங்களை தனித்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கும். நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என சவடால் பேசினார்.
பீகார் மாநிலத்தில் பல திட்டங்களை செய்த நிதிஷ்குமார் பி.ஜே.பியுடன் கூட்டணி சேர்ந்தார், லாலு பாஸ்வானுடன் கூட்டணி சேர்ந்தார் கூட்டணி சேர காரணம் தனித்து நின்றால் போனியாகாது என தெரிந்து தான்.

அரசியல் அடிப்படைக்கூட தெரியாத ராகுல் தனித்து நிற்போம், வெல்வோம் என  244 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். வாக்கு சேகரிக்க நகரங்களுக்குள் பயணமானார். ஏழை, ஒதுக்கப்பட்ட மக்களின் குடிசைகளில் தங்கி சோறு சாப்பிடுவது என பந்தா செய்து நாங்கள் தான் ஏழைகளின் பங்காளன் என நடித்து காட்டினார்.

6 கட்டமாக பீகாரில் தேர்தல் நடந்து 24ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நிதிஷ்குமார் கூட்டணி மெகா வெற்றி பெற்று விட்;டது. அதெயெல்லாம் விடுங்க.
காங்கிரஸ் ?.
5 இடங்களை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணியில் 9 இடங்களில் வென்றது. தனித்து நின்று 5 இடங்கள் என்பது பெரிய விஷயம் தான். ஆனால் நாங்க மெஜாரிட்டியா ஜெயிப்போம் என்ற ராகுல் நிலை தான் பரிதாபம்.
இந்த பீகார் முடிவை மனதில் வைத்துதான் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அடுத்த தேர்தலில் துணை முதல்வர் பதவி என தமிழக இளைஞர் காங்கிரசை பேச வைத்தார்கள் ராகுலும் அவரின் சிஷ்ய கோடிகளும். இல்லையேல் தனித்து நிற்போம், ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் கூட்டணி வைப்போம் என சவடால் பேசினார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.
பீகார் தேர்தல் காங்கிரஸ்க்கு அடியை தந்து விட்டது. இனி என்ன பேசப்போகிறார்கள் தமிழக காங்கிரஸார்.  

3 கருத்துகள்:

  1. செருப்பு கிடைக்காமல் ஓட்டு போடாமல் காங்கிரெஸ்ஐ அடித்திருக்கிறார்கள் பீகார் மக்கள்.

    பதிலளிநீக்கு
  2. காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த பீகார் மக்களுக்கு தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிப்போம்...

    பீகாரிகள் வாழ்க! காங்கிரஸ் ஒழிக!

    பதிலளிநீக்கு
  3. 49 வருடங்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து தேசப்ப்ரதமர் ஆன கவிஞர் வாஜ்பாய் அவர்களையும் . கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திராகாந்தி, அப்பன் ராகுல்காந்தி உட்கார்ந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் ராகுல் லையும், ஒப்பிட்டு பார்த்தால், ராகுல் என்கிற பிறவி
    அர்த்தமில்லாத ஒன்று. என்னை பொறுத்தவரையில் ராகுல் அரசியல் காமெடி பீஸ்.

    பதிலளிநீக்கு