சனி, ஜூன் 19, 2010

பால்ய காதல்.
டேய் மாப்பிள என்ன நீ பஸ்ல வர்ற. சைக்கிள் என்னாச்சி. சைக்கிள் டயர் கிழிஞ்சிடுச்சி. மாத்தச்சசொன்னா. காசுயில்ல ஒருவாரம் ஆகட்டும்ன்னு எங்கப்பா சொல்லிட்டாரு. ஆதனால தான்டா பஸ்ல வர்றன் என சொன்னதும். பொய் சொல்லாதடா அந்த பொண்ணுக்காக தானே பஸ்ல வர்ற என லந்தை ஆரம்பித்தார்கள் என்னுடன் 11வது படிக்கும் பக்கத்து ஊரைச்சேர்ந்த நண்பன்கள் முருகேசன், சக்திவேல், ரமேஷ்.

சும்மாயிருங்கடா பொண்ணுக்காக வர்றனா அந்தளவுக்கு எந்த அழகிடாப்பா பஸ்ல வருது என எதிர்பாட்டு பாடினேன். அவ்வளவு கூட்டத்திலும் இதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர் டேய் நீங்கயெல்லாம் படிக்கவாடா போறிங்க. ஆமாண்ணே என்னன்னே சந்தேகம். இல்ல பொண்ணுங்கள பத்தியே பேசிம்போறிங்களே நியாயமாடா?. சும்மா ஜாலின்னே கண்டுக்காதிங்கன்னே என்றதும் தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார்.

ஏன்னடா அப்படி சொல்றா முன் பக்கம் ஒரு பொண்ணு ஏறனத பாத்தோமே.

ஆவளா. நீங்க வேறடா அது ரெட்டியார் பொண்ணு. 9வது படிக்கறா. அவுங்கப்பன் அவள கேள்ஸ் ஸ்கூல்ல சேர்த்துயிருக்கான். இதல நான் காதலிக்கறன்னு சொன்னாலோ பிரச்சனைடா என சொல்லிவிட்டு கூட்டத்தில் நெளிந்தபடி நின்றேன்.

சும்மா சொல்லாத அந்த பொண்ணுக்காக தானே பஸ்ல வர்ற என திரும்ப உசுப்பேத்தியபடியே வந்தனர். பள்ளியை விட்டு மாலை வீடு திரும்பும்போதும் அவள் நாங்கள் ஏறிய அதே பேருந்தில் வந்தால். அடுத்தடுத்த நாட்களும் பேருந்து பயணம் தான். இவன்கள் தினமும் உசுப்பேத்தியதன் விளைவு. நான்காவது நாள் அவளை ஓரக்கண்ணால் பார்க்க வேண்டியதானது. நல்லா தான்யா இருக்கா என மனம் சொன்னது. சினிமாவில் காட்டுவதை போல ரசித்ததும் காதல் வந்தது. காலை-மாலை பேருந்து பயணத்தில் அவளை பார்ப்பதிலேயே நேரம் போனது. நாட்களும் போனது.

மறுவாரம்…………..

எவன்தான் காலையில 9 மணிக்கு ஸ்கூல் வச்சான்னு தெரியல. 11 மணிக்கு ஸ்கூல் தொறந்தா நல்லாயிருக்கும் சொன்னா எவன் கேட்கறான். 7கி.மீ சைக்கிள் மிதிக்கனும் என திட்டியபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு புலம்பியபடி வந்தேன். கூட்ரோடு நெருங்கும்போது தூரத்திலேயே அவள் பேருந்துக்காக காத்திருப்பது தெரிந்தது. வேகமாக சைக்கிளை நிறுத்தி இறங்கி காற்றை பிடிங்கிவிட்டுவிட்டு பஞ்சர் என பாவ்லா காட்டி நிழல் கூடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு பேருந்துக்காக அவளுடன் காத்திருந்தேன்.

தினமும் அவளுடன் பயணம் ஆரம்பமானது. அவளின் பார்வையில் படுவதற்காக படியில் தொங்குவதும், ஸ்டைல் செய்வதுமாக பயணமானது என் வாழ்க்கை. என் வகுப்பு தோழர்களாகயிருந்து இன்று வரை என்னுடன் பயணிக்கும் நண்பன்கள் பிரபு, முகைதின், கோபிநாத்திடம் மச்சான் நான் ஒரு பொண்ண காதலிக்கறன்டா என்றேன். யார்ர்ரா அது என கோஷம் எழுப்பினார்கள். நம்ம ஸ்கூல் இல்லடா. கேள்ஸ் ஸ்கூல். பொண்ணு யாரு? ……… தங்கச்சிடா. பிரபு, முகைதீன்க்கு தெரியும் என்பதால். அப்பறம் என்ன ரெட்டியார் மருமகன் என ஓட்ட ஆரம்பித்தார்கள்.

டேய் நீங்களும் என்கூட பஸ்ல வாங்கடா என்றேன். எங்க வீடு அதிகபட்ச தூரமே 3கி.மீ தான். நீ பஸ்ல போ நாங்க பஸ் ஏத்த வர்றோம் என பஸ் ஏற்றி விட வருவார்கள். பேருந்து நிறுத்தத்தில் அவள் முன் பந்தா செய்து நாங்கயெல்லாம் பில்கேட்ச விட பெரிய ஆள் தெரிஞ்சிக்க என்கிற ரேஞ்சில் பில்டப் தூள் பறந்தது.

வேறு சில நண்பர்கள் ஒருநாள் திருவண்ணாமலை நகரின் பஜாரின் மைய பகுதியில் நட்ட நடு சாலையில் என் காதல் கடிதம் அவளிடம் தந்தார்கள். பதிலுக்காக மறுநாள் அவளுடன் பேருந்தில் பயணமானேன். பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் அவள் பின்னால் நானும் நடந்தேன். நின்றவள் என்னிடம் இதுயெல்லாம் நல்லாயில்ல எனக்கு இதுயெல்லாம் புடிக்காது என முறைத்து கோபத்தில் பேசிவிட்டு போய்விட்டாள்.

அப்ப தாடி வலரல இல்லன்னா தேவதாஸ் மாதிரி சுத்திக்கிட்டுயிருந்திருப்பன். அந்தளவுக்கு என் காதல் வெற்றி பெறவில்லையே என்ற சோகம். அந்த சோகத்தை மறைக்க, காதலை மறக்க கணிப்பொறி பயிலகத்தில் நானும் நண்பன் பிரபுவும் சேர்ந்து பயில ஆரம்பித்தோம்.

சில வாரங்களுக்கு பின் பேருந்தில் பள்ளிக்கு பயணமாகவேண்டி வந்தது. அவளுடன் போக விரும்பாமல் அரசு பேருந்தை விட்டுவிட்டு பின்னால் வந்த தனியார் பேருந்தில் பயணமானேன். மறுநாளும் அதையே செய்தேன். அதற்கடுத்த நாள் தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. அரசு பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை. கூட்டம் அதிகம் என்பதால் கம்பியை பிடித்து தொங்கியபடியே சென்றேன். ஒரு நிறுத்தத்திற்க்கு பிறகு. உள்ள வாங்க ஏன் தொங்கறிங்க என திருவாய் மலர்ந்தால். நம்மக்கிட்டயா சொல்றா என நம்ப முடியாமல் ஆச்சர்யமாய் பார்த்தேன். தலை குனிந்து கொண்டாள்.

நம்மக்கிட்ட பேசறாலே என்ற சந்தோஷத்தில் விடுமுறை நாட்களில் நண்பனின் தையலகமே கதியென கிடந்தேன். காரணம் அங்கிருந்து பார்த்தால் அவளுடைய வீடும், அவர்கள் வைத்துள்ள சிறு கடையும் தெரியும். அவளும் என்னை பார்க்க விரும்பி நிற்பால். என்னுடைய சைக்கிள் பெல் சத்தம் கேட்டால் வீட்டுக்குள்யிருந்து ஓடிவந்து சிரிப்பாள்.

விடுமுறையில் எனக்காக வீட்டு பாடங்களை எழுதி தந்தாள், கையெழுத்து மாறியதற்க்காக அடிவாங்கினேன் பொருளாதார ஆசிரியர் மணியிடம். நீங்க நல்லா படிச்சதுக்கப்பறம் தான் மத்ததுயெல்லாம் என்றால். (வெளிப்படையாக காதலிப்பது). எனக்காக காத்திருப்பாள். காலம் மாறியது. அரசல் புரசலாக ஊருக்குள் காதல் விவகாரம் பரவ ஆரம்பித்தது. எனக்கே தெரியாமல் உறவுகளின் விசாரணை தொடர்ந்தது.

11 ஆம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமானது. அவள் 9 ஆம் வகுப்பு என்பதால் இருவருக்கும் மதியம் 2 மணிக்கு தான் தேர்வு ஆரம்பமாகும். மதிய நேரத்தில் வெய்யில் அதிகம் என்பதால் சைக்கிளை துறந்து பேருந்தில் செல்ல முடிவு செய்தேன். மதியம் 1 மணிக்கு புறப்பட்டால் பள்ளிக்கு போய்விட முடியும் என்பதால் கணக்கு போட்டு கிளம்பினேன். அவளும் கண்கு போட்டு கிளம்பினால். பேருந்து நிறுத்ததிற்க்கு எதிரில் அவள் வீடு என்பதால் அவளின் தாயார் எங்களை கவனிக்க ஆரம்பித்திருந்தார்.

எங்களுக்குள் நடந்த ஒன்றிரண்டு வார்த்தைக்கு இப்படி தடை விழுந்தது. மதிய நேரம் அரசு பேருந்து தாமதமாக தான் வரும். அந்த நேரத்தில் படிக்க பேருந்து நிறுத்தத்தில் உட்காருவோம். அவள் உட்காரும்போது நான் பேருந்து வருகிறதா என பார்ப்பேன், நான் உட்காரும்போது அவள் பார்ப்பாள். திடீரென பேருந்து வந்தாள். சில சமயம் தொண்டை கணைப்பேன், சில நேரங்களில் கண்ணால் சைகை செய்வேன். இதை கற்று தந்தவளே அவள் தான். மற்றவர்களுக்கு தெரியாமல் இது நடக்கும். யாரும்மில்லாத நேரத்தில் வாங்க பஸ் வந்துடுச்சி என்பால் சன்னமான குரலில். அதில் தான் எத்தனை இனிமை, எவ்வளவு காதல்.

இவளின் அக்கா வேறு ஒரு பையனை காதலிக்கறாள். அதுவும் சாதி மாறி காதலிக்கறாள் என்றவுடன் அவளின் தாய்மாமனுடன் அவசர கோலத்தில் திருமணம் நடைபெற்றது. முதலிரவில் மாமனுடன் சேர மறுத்தவள் சில மாதங்களில் காதலனுடன் பறந்து போய்விட்டாள். இதனால் மனம் ஓடிந்து போன அவளின் தந்தை இறக்க முயல காப்பாற்றப்பட்டார். அரசு ஊழியர், ஊரில் ஓரளவு பணக்காரராக வலம் வந்தவர் பெண் ஏற்படுத்திய இந்த கலங்கத்தால் மனம் நொந்து போய் நடை பிணமானார்.

இன்னோரு காதலையோ, எங்களது காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவமோ அவர்களிடம்மில்லை என்பதை என்னால் கால போக்கில் உணர்ந்து கொள்ள முடிந்தது. கல்லூரி காலம், பணிச்சூழ்நிலை என் காதலை மறு ஆய்வு செய்ய வைத்தது.

என் காதல் என்னால் மறைந்து வைக்க நினைத்தது அப்போது தான். அவளுடன் இருந்த சில சில வார்த்தைகள் தான் எங்களுடனான காதலை எங்களுக்குள் வளர்த்து விட்டது. அந்த வார்த்தைகளை துண்டித்துக்கொள்ள வைத்தேன்.

பெண்களுக்கு ஒரு இயற்கையிலேயே ஒரு குணம் உண்டு. ஆண் நண்பன், காதலன் தன்னை தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் பேசினால் அவளுக்குள் ஒரு மென்மையான கோபம் உண்டாகும். அது தொடர்ந்தால் பெரியதாகிவிடும். என்னிடம் செல்பேசி, தொலைபேசி இல்லாத நேரம், அவளின் கடை தொலைபேசியில் பேசிக்கொள்ள செல்லும்போது அவளுள் ஒரு கோபத்தை உருவாக்கி என் மேல் வெறுப்பை உருவாக்க தொடங்கினேன்.

நினைத்தது நடந்தது. அறியா பருவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்குள் முளைத்த காதல், என்னால் மெல்ல பிடுங்கி எறியப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் அவளுக்கு என் மீதான காதல் திரும்பி வந்ததை அறிய முடிந்தது. காலங்கள் பழையவற்றை அவளுள் மறக்க வைத்திருந்தது. என்னிடம் பேச முயன்றால் பிடி கொடுக்காமல் நழுவினேன். அவள் நினைத்தாள் நான் தலைகணம் பிடித்தவன், சம்பாதிக்கும் திமீர், தன்னை ஏமாற்றிவிட்டான் என நினைத்துக்கொண்டிருப்பாள். அவள் என்னைப்பற்றி எந்தளவுக்கு கேவலமாக நினைத்தாலோ அது அப்படியே தொடரட்டும் என விட்டுவிட்டேன். இது அவளுக்கு நான் தந்த கல்யாணபரிசு. அது அவளின் சந்தோஷ வாழ்க்கைக்கு உறுதுணையாகயிருக்கும்.நான் நினைத்திருந்தால் என் காதல் வெற்றி பெற்றிருக்கும், ஒரு குடும்பத்தின் நிம்மதி, சந்தோஷம், மானம் ஆகியவற்றை பறித்து பஞ்சு மெத்தையாக போட்டு அதன் மேல் என் காதல் திருமணம் நடைபெற விரும்பவில்லை அதனாலயே அவளை விட்டு விலகினேன்.

ஆனால் என்னுள் இருந்த அந்த காதலின் நினைவுகள் என்னை விட்டு விலகவில்லை. என் இதயத்தின் ஓரத்தில் உள்ளது. பசுமையாக ஏன் எனில் எங்களுடையது தொடாத, தொட்டுக்கொள்ள விரும்பாத பாலக காதல்.

வெள்ளி, ஜூன் 18, 2010

தூங்காமல் வந்த கனவு.எப்போதும் போல பணி பயணமாக திருவண்ணாமலையில் இருந்து விடிந்தும் விடியாத காலை பொழுதில் திருப்பத்தூர் செல்ல பேருந்து நிலையம் சென்ற போது எனக்கான பேருந்து போய்விட்டுயிருந்தது. என்ன செய்யலாம் என யோசித்து பேருந்து மாறி மாறி செல்லலாம் என சேலம் பேருந்தில் ஏறியபோது பல இருக்கைகள் காலியாகயிருந்தன. எங்கு உட்காரலாம் என கண் அலை பாய்ந்தது. இரண்டு பேர் அமரும் சீட்டில் நடுத்தர வயதுடைய ஆணும், சுடிதார் போட்ட இளம் பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த அழகான இளம்பெண் திரும்பி பார்த்தால்.


டேய் உன்னை தாண்டா பாக்கறா அந்த பொண்ணு என மனம் சொன்னது. கூடவே ராசா உனக்கு எங்கயோ மச்சம்டா.ஆழகான பொண்ணு என்ன போய் பாக்குதே என மனசாட்சி சொன்னது. அப்பெண் அமர்ந்த இருக்கைக்கு நான்கு இருக்கைகள் தள்ளி அமர்ந்தோம். 40 நிமிட பயணத்தில் அந்த பெண் குறைந்தது 5 முறையாவது திரும்பி பார்த்திருப்பாள். எனக்கோ நான் சென்ற அந்த பேருந்து சொர்க்கமாக தெரிந்தது. சந்தோஷத்தில் என் மனம் எதை எதையோ கணக்கு போட்டது. அந்த பொண்ணு திரும்பி பார்த்தாலே அந்த பொண்ணுக்கு என் உயரம் புடிச்சியிருக்குமா?, வழுக்கை தலை புடிச்சியிருக்குமா? முரட்டு தனமாயிருக்கற என் முகம் புடிச்சியிருக்குமா என யோசித்து ரசித்து சிரித்தபடி பயணமாகிக்கொண்டிருந்தோம். செங்கம் வந்தது. அந்த பெண்ணுடன் அமர்ந்திருந்தவர் பேருந்தை விட்டு கீழேயிறங்கும்போது, பாத்தும்மா, ஹாஸ்டல் போனதும் போன் பண்ணு, பத்தரம்மா என சொல்லிவிட்டு கீழேயிறங்கினார்.பேருந்து கிளம்பியது, அந்த பெண் திரும்பி பார்த்தாள் அழகு தேவைதைடா என மனம் குதுகலித்தது. சில நிமிட நேரம்மிருக்கும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் என் இருக்கையை தாண்டி போய் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தார். அந்த பெண் சிரித்தபடி தலையில் ஒரு முட்டு முட்டிவிட்டு அந்த பெண் அரவணைப்புடன் அவன் தோளில் சாய்ந்தது. நம் கனவுகள் கலைந்தது. அடடா முழிச்சிக்கிட்டே கனவு காண்றதுல உனக்கு நோபால் பரிசு தரனும்டா ராசா என எண்ணியபடி மீதி பயணத்தை நிறைவு செய்தோம். போகும்போது தான் அந்த பிரச்சனை வரும் போது அடடா அந்த பெண்ணுக்கு கோயில் கட்ட வேண்டும் என எண்ணிக்கொண்டே வந்துள்ளேன்.

ஞாயிறு, ஜூன் 13, 2010

என்னை சந்தோசப்படுதிய பேருந்து.
tpbaw;fhiy Neuj;jpy; fPr; fPr; vd Fuy; vOg;Gk; gwitfspd; Xir. fhiyapy; kq;fshf vOk; R+hpad;> kq;iffspd; kq;fsfukhd Kfk; Nghd;wtw;iw fhZk; ghf;fpaj;ij ,oe;J Nrhk;Ngwpaha; 8 kzp tiu J}q;fptpl;L mtru mtrukhf vOe;J fhiy fld;fis Kbf;f Vhpf;fiu Ngha;te;J Fspj;J tpl;L fpsk;Gk;NghJ jhd; epidTf;F te;jJ.

vdJ ,uz;L rf;fu thfdk; gOJ vd;gJ. kilah kilah vd vd;id ehNd jpl;bf;nfhz;L NgUe;J gpbf;f miu fp.kP J}uk; ele;J XbNdd;. ( Xd;Dk; ngUrh Ngha; fpopf;f Nghwjpy;y kpd;ntl;L kjpa Neuj;jpy; tpOtjhy; mjw;f;F Kd; Ntiyia Kbf;f Ntz;Lk; vd;gjw;fhf jhd;).

fhj;jpUe;J fhj;jpUe;J fz; fl;b te;J tpLk; msTf;F NgUe;Jfs; epuk;gp te;jd.  10 kzpastpy; xU muR NgUe;J vd;id cs;Ns Vw;wpf;nfhz;lJ. ,bghLfspy; rpf;fp eRq;fpagb gazkhNdd;.

ehd; jpdKk; vg;NghJk; fle;J NghFk; CH jhd; mJ. me;jT+hpy; NgUe;J epw;fpwJ vd;why; me;j Xl;LdH kpfg;nghpa kdpjhgpkhdp vd jPHkhdpj;Jf;nfhs;syhk;. Me;jT+iu NrHe;j vd; taJ ,isQH-,isQhpfs; vd;Dld; gbj;jtHfs; jhd;. Mdhy; mq;F vdf;F Mz; ez;gHfs; jhd; mjpfk;. ngz; ez;gHfs; fpilahJ. fhuzk; mJ ,];yhkpaHfs; thOk; gFjp. MdhYk; me;jT+hpy; vdJ ghy;afhy ngz; ez;gp xUj;jpapUe;jhs;.

vdf;fhf gytw;iw tpl;L je;jts;. ehd;> RNu\;> nre;jpy;> nre;jpy;FkhH> Rjh> kQ;R vd xU el;G tl;lk; cz;L. vdJ fpuhkj;ij NrHe;j RNu\;> Rjh> kQ;R MfpNahH 1 fp.kP J}uk; ele;J gf;fj;J CH muR gs;spapy; gbf;f nry;Nthk;.

Xd;whk; tFg;G Kjy; mg;gb nry;Yk; NghJ gs;spf;F gf;fj;jpy;Ts;s ,];yhkpa kf;fs; trpf;Fk; fpuhkj;jpy; ,Ue;J ,];yhkpa rKfj;ij NrHe;j nkfuh[;Ngfk; vd;w me;j ngz; tUths;. mts; trpf;Fk; fpuhkj;jpy; muR gs;spAs;sJ. mjpy; 90 rjtpjk; ,];yhkpa rKfj;jhNu gbg;gH. Mdhy; mtspd; je;ijNah mtis mg;NghNj ,e;Jf;fs; mjpfk; gbj;j ehq;fs; gbj;j gs;spapy; NrHj;jhH. mts; vq;fsJ el;G tl;lj;Jld; NrHe;J tpisahLths;> CH Rw;Wths;.  fz;zh%r;rp tpisahLk; NghJ vdf;F mjpfk; miyr;ry; juf;$lhJ vd;gjw;fhf jhdhf te;J khl;bf;nfhs;Sk; ez;gHfspy; mtSk; xUj;jp.

Ie;jhk; tFg;G gbf;Fk; NghJ vq;fsJ MrphpaUk;> jiyikahrphpUkhd eNlrd; ey;yh gbf;Fk; gps;isfis NjHT nra;J mtHfsplk; rhpahf gbf;fhj 5 gps;isfis jUthH. mtHfs; ,tHfSf;F fw;W ju Ntz;Lk;. 3 khjj;jpw;f;F XUKiw FO khw;wp mikf;fg;gLk;. ehd; xUKiw FO jiytdhNdd;. vd;dplk; nkfuh[;Ngfk; vd;w me;j ngz;NzhL NrHj;J 5Ngiu xg;gilj;jhH.

3 khj;jpw;f;F gpd; ehd; rhpahf gbf;ftpy;iy vd ehd; fw;W je;J ed;whf gbj;jjhf nkfuh[;Ngfj;ij FO jiytpahf;fpdhH. mg;NghJ vdJ Mzhjpf;f kNdhghtk; ntspg;gl;lJ. ,tf;fpl;l ehd; gbf;f khl;ld;. ehd; gbf;fhk mbthq;fwd; Mdh ,tSf;F fPo gbf;f khl;ld; vd tPk;G nra;Njd;.
vdf;fhf mts; Mrphpahplk; ey;yh gbf;fwhd; vd ngha; nrhy;ths;> vdJ Nehl; vLj;J ghlq;fis vOjp jUths;. mg;NghJk; ehd; khwtpy;iy. mtf;fpl;l ehd; xUthHj;ij $l Ngrkhl;Nld; vd tPk;G nra;Njd;. filrpapy; xhPU thuq;fSf;F gpd; vd;dplNk me;j nghWg;ig mts; xg;gilj;jhs;. thj;jpahu nghWj;j tiu ehd; yPlH. vq;fis nghUj;jtiu eP jhd; yPlH vd gjtpia khw;wp kw;wtHfs; vdf;F fl;Lg;gl Ntz;Lk; vd Nfl;Lf;nfhz;lhs;.
,g;gb gy vd; Nky; ghrk; nfhz;l me;j ez;gpia ehd; 5Mk; tFg;G tpLKiwf;F gpd; re;jpf;f Kbatpy;iy. ehd; 10tJ gbf;Fk; NghJ mtSf;F jpUkzk; ele;J tpl;lJ jpUtz;zhkiyapy; jpUkzk; Kbj;j je;Js;shHfs; vd Nfs;tpg;gl;L Mr;rHag;gl;L NghNdd;.

mg;gbAk; mNjT+iur;NrHe;j vdJ ez;gHfsplk; rpy Neuq;fspy; tprhhpg;Ngd; mNjhL rhp. MdhYk; mtis ghHf;f Ntz;Lk; vd vd; kdk; me;jT+iu jhz;b tUk; Ntiyapy; vz;Zk;.

fy;Y}hpfhyj;jpNyNa gzpapy; NrHe;Jtpl;ljhs; mtSila epidTfs; Mz;Lf;F ,uz;L Kiw te;jhs; nghpa tp\akhdJ.

md;W me;jT+iu neUq;fp NgUe;J nry;Yk;NghJ mtis ghHf;f KbAkh vd;w vz;zk; te;jJ.

nky;y NgUe;J Ntfk; Fiwe;J epd;wJ. Xl;LeH kdpjhgpkhdp jhd; vd vz;zpf;nfhz;Nld;. rpy gazpfs; VwpdH.

mg;NghJ vd; fz;iz vd;dhy; ek;g Kbatpy;iy. mtsh ,ts; epr;rakhth vd vd; kdk; Nfl;Lf;nfhz;NlapUe;jJ. 15 Mz;Lfhy Vf;fk;. re;jpf;f KbAkh vd epidj;j ehl;fs; gy. Ahiu re;jpf;f Ntz;Lk; vd epidj;J ez;gHfsplk; tprhhpj;NjNdh mts;. Kfj;ij %lhj gHjh mzpe;Jf;nfhz;L ,Lg;gpy; xU Foe;ij> elf;f itj;J xU ngz; Foe;ij vd ,uz;L Foe;ijfNshL mts; NgUe;jpy; Vwpf;nfhz;LapUe;jhs;. epr;rak; mts; jhd; vd vd; kdk; nrhd;dJ. kdk; nrhd;dhy; rhpahf jhd;apUf;Fk; vd vz;zpagb mtis ghHj;jgbNaapUe;jd;.

mts; vd;id ghHj;Jtpl;lhs; ek;g Kbahky; Mr;rHag;gl;lij mts; KfNk fhl;b je;jJ. me;j fz;fspy; njhpe;j gpufhrk; ez;gh vd miof;f mts; kdk; epr;rak; Vq;fpapUf;Fk;. vd; kdk; eyk; tprhhpf;f Vq;fpaJ. Mdhy; Kbatpy;iy. fz;fshy; eyk; tprhhpj;jhs;. md;G nfhz;l mtis ePz;l…………… Mz;Lf;F gpd; re;jpj;Njd;. rpy epkpl gazj;jpy; ,wq;f Ntz;ba ,lk; te;jJnad ,wq;fptpl;lhs;.

ehd; ,wq;Fk; ,lk; te;jNghJ vd; ,jak; VNdh typj;jJ. mtsplk; epr;rak; NgrpapUf;f Ntz;Lk; vd kdk; jpUk;g jpUk;g nrhd;dJ. Vd; vdpy; mts; vdJ cz;ikahd ez;gp. 

சனி, ஜூன் 12, 2010

கண்ணாடியில் காதல் ........இளமை துள்ளும் மாலை Neu குளிர்ந்த காற்று லேசான தூரல் என மிதமாகவேயிருந்தது அன்றைய மாலைப்பொழுது. வேலூரில் இருந்து புறப்பட்டது அந்த தனியார் பேருந்து. நானும் நண்பர் ஒருவரும் ஒரு அரசியல் நபரை சந்திக்க இராணிப்பேட்டைக்கு செல்ல அந்த தனியார் பேருந்தில் ஏறினோம்.

நடத்துனர் ஆற்காடு> ராணிப்பேட்டை> வாலாஜா எனக்கூவிக்கொண்டிருந்தார். பேருந்தின் உள்ளே அவள் வருவாளா........ அவள் வருவாளா...... காதின் சவ்வை கிழிக்கும் பாட்டு சத்தம் பாலாற்றங்கரை வரை கேட்டது. பாட்டு நல்லாதான்யிருக்கு ஆனா சத்தம் அதிகமாயிருக்கே என பேருந்தில் பேசியபடி அமர்ந்திருந்தோம்.

கல்லூரி சுடிதார் அழகிகள் 5 பேர் பேருந்தில் ஏறினர். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபன் வந்தாளய்யா வந்தாளய்யா வந்து சொக்குபொடி போட்டாளய்யா என டைமிங் சாங் போட்டான்.

ஏதோ பையன் கிறக்கமாயிருக்கான் போல என எண்ணி நானும் நண்பரும் பாடல்களையும் அழகிகளையும் கம்பேர் செய்து உரையாடிக்கொண்டிருந்தோம். பேருந்தில் கூட்டம்மில்லை. அடுத்தடுத்து காதல் பாடல்களாக காதில் பாய என்னடாயிது அதிசயம் என எண்ணியபடி இருந்தோம்.

அடிக்கடி டிரைவர் பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடியே இருந்தான். பேருந்தில் நம்மயும் சேர்த்து 10 பேர்தான். நாங்க 2 பேர். கல்லூரி அழகிகள் 5 பேர்> 3 நடுத்தர வயதுடைய பெண்கள். இதல யார பாக்கறான். காதல் பாட்டா ஓடுது யாரோ எழுதி யாரோ இசையமைத்து யாரோ பாடிய பாடல் வழியா தன் எண்ணத்தை தூது விடறாரு.  அந்த பாடல் தூது யாருக்காக என நானும் நண்பரும் தீவிரவாக விவாதித்தபடியே இருந்தோம்.

30 பேர் இருக்கையில் அமர்ந்திருக்க பேருந்து புறப்பட்டது. பேருந்தின் உள்ளே சின்னதாக கண்ணாடி வைக்கப்பட்டுயிருக்கும் அந்த கண்ணாடியை பார்த்து சிரிப்பதும்> முகத்தை பல கோணல்களாக்கி காட்டுவதும்மாகயிருந்தார் ஓட்டுநர். எங்கயிருந்து அவருக்கு ரிப்ளை போகுது என பார்த்துக்கொண்டிருந்தோம்.

நடத்துனர் நம்மிடம் டிக்கர் வாங்கிக்குங்க சார் என்றார். என்ன சார் உங்க டிரைவர் பயங்கரமா பாட்டுயெல்லாம் போட்டு கலக்கறாரு. என்ன சங்கதி என்றோம். மனசுக்குள்ள காதல் வந்துச்சி வந்துச்சி என பாட்டு பாடினார்.

ஏய் எண்ணய்யா எல்லாம் ஒரு டைப்பாயிருக்கிங்க என்றதும். சார் 1 வாரத்துக்கு முன்ன தான் லவ் சக்சஸ் ஆச்சி அதான் புது மோதிரம்> புது மைனர் செயின்னு போட்டு கலக்கறாரு. அத அவரோட ஆளுக்கு காட்டறதுக்கு தான் அடிக்கடி சட்டை காலரை தூக்கி விட்டுக்கறதுயெல்லாம் என்றார்.

அதுயிருக்கட்டும் யார்ய்யா அந்த பொண்ணு அதச்சொல்லு முதல்ல. நீங்க வேற சார் என நகர்ந்தார். டிக்கட் டிக்கட் என அழகிகள் மத்தியில் போனவர். 4 அழகிகளிடம் மட்டும் காசு வாங்கினார். 1 பெண்ணிடம் மட்டும் வாங்கவில்லை.

இதான் ஒட்டுநரை ஓட்டும் வாகனமோ என எண்ணியபடி. vங்க உயிர் உன் கைல தாண்டா சாமீ என அவன் காதல் நல்லாயிருக்க வேண்டினோம்.

புதன், ஜூன் 09, 2010

நட்புகள் உடைவது எதனால்.
டேய் மச்சான் நம்ம காலேஜ்க்கு சூப்பரா ஒரு பிகர் வந்திருக்கு. பாக்க நமீதா... இல்லல்ல அசின் மாதிரியிருக்காடா வா மாச்சான் அவளை ரசிப்போம் என அந்த பெண்ணின் பின்னால் அலைய தைரியமாக அழைப்பது நண்பனை தான். உறவுக்காரனை அல்ல.

டேய் ஒருத்தன் அடிச்சிட்டான்டா வாடா என அடித்தனை திருப்பி அடிக்க உதவிக்கு அழைப்பதும் நண்பனை தான்.

மாமா எக்ஸாம்ல பெயில்டா வீட்ல எப்படி சொல்றதுன்னு தெரியலடா என டாஸ்மாக் பாரில் அமர்ந்து தண்ணி அடித்துக்கொண்டு புலம்புவது நண்பனிடம் தான்.

விட்ல ஒரே பிரச்சனைடா தலைவலிக்குதுடா. தண்ணி அடிக்க கூட காசுயில்ல உன் பாக்கெட்ல எவ்வளவுயிருக்கு என உரிமையோடு கேட்பது நண்பனிடம் தான்.

மச்சான் நான் ஒரு பெண்ணை சின்சியரா லவ் பண்றன்டா அவக்கிட்ட இன்னும் சொல்லல நீ தான் சொல்ல உதவி பண்ணனும் என கேட்பது நண்பனிடம் தான். காதல் சக்சஸ் ஆனதும் ஜோடி போட்டு ஊர் சுற்ற ஐடியா கேட்பது நண்பனிடம் தான். என் ஆளோட வெளியில போறன் உன் வண்டிய தாடா என கேட்பது நண்பனிடம் தான். அவ வீட்ல ஒரே பிரச்சனைடா. என் வீட்ல எங்க மாமா பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு சொல்றாங்க என அழுது புலம்பி கல்யாணம் பண்ணி வைக்க கேட்பதும் நண்பனிடம் தான்.

குடும்பத்திற்க்குள் அடிதடி என வரும்போது உதவிக்கு அழைப்பதும் நண்பனை தான்.

தனிக்குடித்தனம் வந்ததுலயிருந்து பணத்துக்கு திண்டாட்டமாயிருக்குடா என மனகுமுறலை சொல்வதும் நண்பனிடம் தான்.

நண்பனின் மனைவி மருத்துவமனையில் இருக்கும் போது உதவி செய்வதும் நட்பு தான்.

கடைசி காலத்தில் மருமகள், மருமகன் பிரச்சனையை நம்பிக்கையுடன் கூறி ஆறதல் தேடுவது நண்பனிடம் தான்.

உறவுக்கூட்டத்தைவிட ஒருவன் நண்பர்களை நம்பகாரணம் அவர்கள் சுயநலம் இல்லாதவர்கள். சாதி, மதத்திற்க்கு அப்பாற்பட்டு, ஏழை பணக்காரனா என யோசிக்காமல் தோள் மேல் கை போட்டு பால்ய காலம் முதல் உடன் வருபவர்கள். நுண்பன் வாழ்க்கையில் தாழந்தால் முட்டுக்கொடுப்பவன் நண்பன் தான். உயரும்போது ஏணிப்படியாக இருப்பவனும் நண்பன் தான். எழும் போது ஓடி வரும் உறவுக்கூட்டத்தை போவவோ, தாழும்போது ஓடிவிடும் உறவுக்கூட்டத்தை போல அல்ல நண்பன். எந்த பிரச்சனை வந்தாலும் உறுதியுடன் பின்னால் இருந்து உதவுவது எதையும் எதிர்பார்க்காத நண்பர்கள் தான். அதனால் தான் ஒருவன் உலகத்தில் யார் ஏமாற்றினாலும் தாங்கிகொள்வான். நண்பன் ஒருவன் ஏமாற்றும் போது உடைந்து போகிறான்.

இந்த மாதிரியான சாதாரண விவகாரம் தான் நட்பை உடைத்து விடுகிறது. நண்பனிடம் எதையும் மறைக்க கூடாது. வாழ்வோ, சாவோ இறுதி வரை உடன் வரப்போவது நண்பர்கள் தான்.

செவ்வாய், ஜூன் 08, 2010

காதல் பயணம்மாலை நேரம் மயக்கும் மல்லிகள் வாசனையோடு திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விற்பனையாகிகொண்டிருந்தது. பணியின் காரணமாக வெளியூர் சென்று விட்டு சோர்வோடு வந்த அரசு பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சார் பஸ் கிளம்ப 20 நிமிஷமாகும் என்றார். பரவாயில்லண்ணே எனச்சொல்லிவிட்டு பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்தேன். மல்லியின் வாசைனயில் கண் உறக்கத்தை நோக்கி பயணமாகிக்கொண்டிருந்தது. அழுக்கான வார்த்தைகளை சந்தோஷமாக பேசியபடி மாணவர்கள் குழவொன்று பேருந்தில் வந்து ஏறியது. பார்க்கும் போதே தெரிந்தது தொழிற்பிரிவு மாணவர்கள் என்பது.


பயங்கரமாக ரவுசு செய்துக்கொண்டிருந்த மாணவனை பார்த்து மற்றொரு மாணவன் டேய் மச்சான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது உன் ஆளுக்கிட்ட இன்னைக்கி உன் லவ்வ சொல்ற.
இல்ல மச்சான் பயமாயிருக்குடா. …………
 சாகடிச்சிடுவன் ஒழுங்கா சொல்லு.
எப்படிடா சொல்றது?
மயிரு ஏதாவது கிப்ட் வாங்கி தந்து சொல்லு என்றான்.

அதேநேரம் பள்ளி மாணவிகள் கூட்டம் ஒன்று வந்து பேருந்தை ஆக்ரமித்தது. அவர்களின் வலையல் சத்தமும், சிரிப்பொலி சத்தமும் தான் அந்த பேருந்தில் அதிகமாகயிருந்தது. அதில் எந்த பெண் இவனின் காதல் இளவரசி என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என் மனதில் தோன்றி ஜெட் வேகத்தில் பயணமாகிக்கொண்டிருந்தது. காரணம் பையன் 15 ஆண்டுக்கு முன் வடிவேல் தோற்றத்தில் இருந்தான். பேருந்தில் வந்து ஏறிய மாணவிகளோ தேவயாணி கலரில் தேவதையாய் இருந்தார்கள்.

பேருந்து கிளம்ப 10 நிமிடம் இருந்தது. பேருந்தை விட்டு காதல் இளவரசனோடு ஐடியா தந்த ஐடியா மன்னனும் ஓடினார்கள். மாணவிகளில் சிலர் மாணவர்கள் சிலரோடு அலவலாவி கொண்டுயிருந்தார்கள்.

ஓடியவன்கள் வந்துவிடுவான்களா என மனம் ஏங்கி கொண்டுயிருந்தது. பேருந்து நடத்துனர் வந்து டிக்கெட் தந்துக்கொண்டிருந்தார். என் மனம் வேகமாக துடித்துக்கொண்டிருந்தது. பேருந்து கிளம்ப இரண்டு நிமிடம் இருக்கும் போது வந்து விட்டான்கள். கையில் கிப்ட் பாக்ஸ்சோடு வந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த அவனது நண்பர்கள் அதை கண்டு கீழே இறங்கி விட்டார்கள். மச்சான் தந்துடுடா என தட்டிக்கொடுத்தார்கள் (தேர்வு நேரத்தல இப்படி பண்றானுங்களான்னு தெரியாது). அவன் தயங்கி தயங்கி ஜன்னல் ஓரத்தில் ஷாலினி போல் அமர்ந்திருந்த அந்த பள்ளி மாணவியிடம் மெல்லிய குரலில் இந்த என நீட்டினான்.


என்னது இது?
சும்மா வாங்கி பாரு.
வாங்கிக்கொண்டாள். என்னயிருக்கு?
வீட்லபோய் பாரு.
வீட்ல என்னண்ணு கேட்பாங்க?
பர்த்டே கிப்ட் ப்ரண்ட் வாங்கி தந்தாங்கன்னு சொல்லு.
எனக்கு போன மாசமே பொறந்த நாள் போயிடுச்சி.
சைலண்டாகயிருந்தான்.
இது எதுக்குன்னு சொல்லு? இல்ல திருப்பி வாங்கிக்க?


அவன் சைலண்டாகயிருந்தான். இத வாங்கறியா இல்ல கீழ போடவா என கேட்டதும் பையன் அழும் நிலைக்கு போய்விட்டான். பரிச்சையில் பெயிலாகி போனது போல் ஆனது அவனது முகம். அதே நேரம் பேருந்து புறப்பட இதை 5 அடி தொலைவில் நின்று கவனித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பேருந்து கிளம்பியதும் ஏறினார்கள். இவன் மட்டும் ஏறாமல் நின்றான். டேய் ஏறுடா ஏறுடா என அவனது நண்பர்கள் கத்த அவன் அப்படியே நின்றான். கீழே இறங்கிய அவனது நண்பர்கள் டேய் இதோட பஸ் நைட் 8 மணிக்கு தான். ஒழுங்கா ஏறு என இழுத்து வந்து பஸ் ஏற்றினார்கள். அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கீழே குனிந்துக்கொண்டான். பேருந்து பெரியார் சிலை, பைபாஸ் என பயணமானது. திருவள்ளுவர் சிலை வரும் வரை அவன் தன்னை பார்ப்பான் என அந்த பெண் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்தது. அவனோ லெமுரியா கண்டத்து கல்யாண பெண் போல குனிந்த தலை நிமிரவில்லை.

திருவள்ளுவர் சிலை தாண்டியபோது அந்த பெண் அவன் தந்த அந்த கிப்ட்டை பிரித்து அதன் காகிதங்களை வெளியே எறிந்தாள். அந்த பெண்ணின் மனது போல என்ன கிப்ட் என தெரிந்துக்கொள்ளும் ஆவல் என்னை தொற்றிக்கொள்ள சீட்டை விட்டு மெல்ல எழுந்து எட்டி பார்த்தேன். (ஏண்டா இந்த பொழப்பு என திட்டுவது காதில் விழுகிறது) உள்ளே அழகான இளம் ஜோடி ரொமான்ஸ் மூடில் காதல் பேசியபடி கை கோர்த்து நின்றுக்கொண்டிருந்த மெழுகு சிற்பம். அதை பார்த்துவிட்டு அந்த பெண் அவனை பார்த்தது அவன் இன்னமும் லெமுரியா கண்டத்தில் இருந்தான். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையின் கீற்றுகள்.


ஒரு வலைவில் பேருந்து நின்றது. முன்னே நிற்க்கும் பேருந்து போனால் தான் இந்த பேருந்து போகும் என்ற நிலை. லேசான மழை தூறல். இருக்கையில் அமர்ந்திருந்த காதல் இளவரசன் பேருந்தை விட்டு கீழே இறங்கி விட்டான். அவனது நண்பர்களும் கீழே இறங்கி டீ கடையை பார்த்து மச்சான் ஒரு டீ சொல்லு சாப்பிடலாம் என லந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வைலண்டாக பேசிக்கொண்டிருந்த காதல் இளவரசன் இப்போது சைலண்டாகயிருந்தான்.

மழை தூரலின் வேகம் மிதமாக விழுந்தது. நனைந்தபடி நின்ற காதல் இளவரசனை இளவரசி பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவன் இன்னமும் சோக கீதம் இசைத்துக்கொண்டிருந்தான். பேருந்து புறப்பட்டது. கீழே நின்றிருந்தவர்கள் ஓடிவந்து ஏறினார்கள். காதல் இளவரசன் என் அருகில் வந்து நின்றான். அதை கவனிக்காத இளவரசி பேருந்தின் முன் பகுதி, பின் பகுதி என தேடினாள். இதை இளவரசன் கவனிக்கவேயில்லை. கடைசியில் இருந்த இவனை பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சந்தோஷ மின்னல். இவனை பார்க்க தலைவன் இப்போதுதான் அப்பெண்ணை பார்த்தான். கண்ணும் கண்ணும் மோதியது. கண்கள் காதல் மொழி பேசியது. அவள் கண்ணாலே இவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு வரச்சொல்ல தலைவன் தன் இருக்கையை நோக்கி போனான். அங்கே வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். இவன் அப்பெண்மணியை எழுப்ப மனம்மில்லாமல் நின்றான். காதல் இளவரசி அந்த பெண்ணை பார்த்து அக்கா இதுக்கு முன்னாடி அவர் தான் இங்க உட்கார்ந்துயிருந்தாரு. கீழ இறங்கனதும் நீங்க உட்கார்ந்துட்டிங்க எழுந்திருங்க என்றதும் யார் அவனை எழுந்திருக்க சொன்னது என எதிர் கேள்வி கேட்டார். இளவரசி கோபமாகி நீ எழுந்திருக்கறியா? இல்லையா என சத்தம் போட்டார்.

அடுத்து என்ன என ஆவலோடு காத்திருந்த என் எண்ணத்துக்கு வில்லனாக வந்தார் நடத்துனர்.

டிக்கட்.... டிக்கட் என குரல் கொடுத்தவர். இளவரசனை பார்த்து டிக்கட் என்றார். ஸ்கடூடன்ட் சார் என்றான். அப்ப பாஸ் இருக்குமே எடு. அது பேக் லயிருக்கு. பேக் பின்னாடியிருக்கு என்றான். ( என் அருகில் இருந்த ஒருவரிடம் இருந்தது.) அறிவில்ல பஸ்ல ஏறும் போதே அத எடுத்து பாக்கெட்ல வைக்கறதில்லயா என எகிறினார். இதை கேட்ட அந்த பெண் தனது இருக்கையை விட்டு எழுந்து விட்டாள். நாங்க தினமும் இந்த பஸ்ல தான் வர்றோம் இன்னைக்கி மட்டும் என்ன புதுசா பாஸ் கேட்டு திட்டறிங்க. அவர் தான் பாஸ் பேக் ல இருக்குன்னாருயில்ல. அப்பறம் எதுக்கு திட்டற. இந்த கூட்டத்தல அத எப்படி எடுக்க முடியும். ஸ்டூடன்ட்ன்னதும் கேவலமா பேசறிங்க. என்ன நினைச்சிக்கிட்டுயிருக்கிங்க என சவுண்ட் விட பேருந்தே இதே வேடிக்கை பார்த்தது. இளவரசன் அரண்டு போய் அதை பார்த்துக்கொண்டிருந்தான். இந்த காசு அவருக்கு டிக்கட் குடு என 10 ரூபாய் நோட்டை நீட்ட நடத்துனர் நான் புதுசும்மா தெரியாம கேட்டுட்டன் என்னை மன்னிச்சிடும்மா .... மன்னிச்சிடும்மா.. என மன்னிப்பு கேட்டதும் தான் சாந்தமாகி அமர்ந்தாள் இளவரசி.


இளவரசனின் நண்பர்கள் மச்சான் மச்சான் என கத்த அவன் முகத்தில் ஒரே புன்னகை தான் போங்க. இதை கண்ட அப்பெண் ஒரு சிரிப்பு தலையை குனித்து சிரித்தவள் கூச்சல் போட்ட பையன்களை பார்த்து முறைக்க சைலண்டானான்கள். பின் தன் இருக்கையில் இருந்து எழுந்து குழந்தையுடன் இருந்த ஒரு பெண்மணியை அழைத்து உட்கார வைத்துவிட்டு இளவரசன் அருகே வந்து நின்றாள். தலைவன் முகத்தில் 10000 வாட்ஸ் லைட் போல் பிரகாசம். காதல் வந்தால் முகங்கள் கூட பேசும் என்பதை அன்று தான் கண்டேன். கண் அசைவில்லாமல் புன்னகையுடன் பேசினார்கள். சில நிமிடங்களில் அந்த பெண் சிரிக்க மெல்ல கிசு கிசுப்பாக காதல் பயணம் ஆரம்பமானது அவர்களிடையே.

 அதுக்கப்பறம் நிச்சயமா என்ன பேசறாங்கன்னு நான் கேட்கல.

திங்கள், ஜூன் 07, 2010

நட்பின் வலி

நன் உன்னை பற்றி தெரியும் என  தம்பட்டம் அடித்தது எல்லாம் - பொய்.
நான் உன்னில் ஒருவன் என நினைத்ததெல்லாம் - பொய் 
நான் உனது நம்பகமானவன் என  நினைத்ததெல்லாம் - பொய்  
நான் உனது உற்ற  நண்பன் என நினைத்ததெல்லாம் - பொய்
நீங்கள் புத்திசாலியாக இருந்திர்கள்
நான் முட்டாளாக இருந்துள்ளேன்
என் முட்டாள்தனத்துக்கு நானே காரணம்.
இன்று - வார்த்தைகள் வராமல் என் உதடுகள் துடிக்க காரணம் நானே.
இதயத்தில் பலவாறு கேள்விகள், குழப்பங்கள் தீர்க்க முடியவில்லை 
என் வேகம் என் இதயத்தை வலிக்க செய்கிறது.  
ஏன் எனில் என்னை பொய்யனாக்கியது  என் நட்பு .