டேய் மச்சான் நம்ம காலேஜ்க்கு சூப்பரா ஒரு பிகர் வந்திருக்கு. பாக்க நமீதா... இல்லல்ல அசின் மாதிரியிருக்காடா வா மாச்சான் அவளை ரசிப்போம் என அந்த பெண்ணின் பின்னால் அலைய தைரியமாக அழைப்பது நண்பனை தான். உறவுக்காரனை அல்ல.
டேய் ஒருத்தன் அடிச்சிட்டான்டா வாடா என அடித்தனை திருப்பி அடிக்க உதவிக்கு அழைப்பதும் நண்பனை தான்.
மாமா எக்ஸாம்ல பெயில்டா வீட்ல எப்படி சொல்றதுன்னு தெரியலடா என டாஸ்மாக் பாரில் அமர்ந்து தண்ணி அடித்துக்கொண்டு புலம்புவது நண்பனிடம் தான்.
விட்ல ஒரே பிரச்சனைடா தலைவலிக்குதுடா. தண்ணி அடிக்க கூட காசுயில்ல உன் பாக்கெட்ல எவ்வளவுயிருக்கு என உரிமையோடு கேட்பது நண்பனிடம் தான்.
மச்சான் நான் ஒரு பெண்ணை சின்சியரா லவ் பண்றன்டா அவக்கிட்ட இன்னும் சொல்லல நீ தான் சொல்ல உதவி பண்ணனும் என கேட்பது நண்பனிடம் தான். காதல் சக்சஸ் ஆனதும் ஜோடி போட்டு ஊர் சுற்ற ஐடியா கேட்பது நண்பனிடம் தான். என் ஆளோட வெளியில போறன் உன் வண்டிய தாடா என கேட்பது நண்பனிடம் தான். அவ வீட்ல ஒரே பிரச்சனைடா. என் வீட்ல எங்க மாமா பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு சொல்றாங்க என அழுது புலம்பி கல்யாணம் பண்ணி வைக்க கேட்பதும் நண்பனிடம் தான்.
குடும்பத்திற்க்குள் அடிதடி என வரும்போது உதவிக்கு அழைப்பதும் நண்பனை தான்.
தனிக்குடித்தனம் வந்ததுலயிருந்து பணத்துக்கு திண்டாட்டமாயிருக்குடா என மனகுமுறலை சொல்வதும் நண்பனிடம் தான்.
நண்பனின் மனைவி மருத்துவமனையில் இருக்கும் போது உதவி செய்வதும் நட்பு தான்.
கடைசி காலத்தில் மருமகள், மருமகன் பிரச்சனையை நம்பிக்கையுடன் கூறி ஆறதல் தேடுவது நண்பனிடம் தான்.
உறவுக்கூட்டத்தைவிட ஒருவன் நண்பர்களை நம்பகாரணம் அவர்கள் சுயநலம் இல்லாதவர்கள். சாதி, மதத்திற்க்கு அப்பாற்பட்டு, ஏழை பணக்காரனா என யோசிக்காமல் தோள் மேல் கை போட்டு பால்ய காலம் முதல் உடன் வருபவர்கள். நுண்பன் வாழ்க்கையில் தாழந்தால் முட்டுக்கொடுப்பவன் நண்பன் தான். உயரும்போது ஏணிப்படியாக இருப்பவனும் நண்பன் தான். எழும் போது ஓடி வரும் உறவுக்கூட்டத்தை போவவோ, தாழும்போது ஓடிவிடும் உறவுக்கூட்டத்தை போல அல்ல நண்பன். எந்த பிரச்சனை வந்தாலும் உறுதியுடன் பின்னால் இருந்து உதவுவது எதையும் எதிர்பார்க்காத நண்பர்கள் தான். அதனால் தான் ஒருவன் உலகத்தில் யார் ஏமாற்றினாலும் தாங்கிகொள்வான். நண்பன் ஒருவன் ஏமாற்றும் போது உடைந்து போகிறான்.
இந்த மாதிரியான சாதாரண விவகாரம் தான் நட்பை உடைத்து விடுகிறது. நண்பனிடம் எதையும் மறைக்க கூடாது. வாழ்வோ, சாவோ இறுதி வரை உடன் வரப்போவது நண்பர்கள் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக