இளமை துள்ளும் மாலை Neu குளிர்ந்த காற்று லேசான தூரல் என மிதமாகவேயிருந்தது அன்றைய மாலைப்பொழுது. வேலூரில் இருந்து புறப்பட்டது அந்த தனியார் பேருந்து. நானும் நண்பர் ஒருவரும் ஒரு அரசியல் நபரை சந்திக்க இராணிப்பேட்டைக்கு செல்ல அந்த தனியார் பேருந்தில் ஏறினோம்.
நடத்துனர் ஆற்காடு> ராணிப்பேட்டை> வாலாஜா எனக்கூவிக்கொண்டிருந்தார். பேருந்தின் உள்ளே அவள் வருவாளா........ அவள் வருவாளா...... காதின் சவ்வை கிழிக்கும் பாட்டு சத்தம் பாலாற்றங்கரை வரை கேட்டது. பாட்டு நல்லாதான்யிருக்கு ஆனா சத்தம் அதிகமாயிருக்கே என பேருந்தில் பேசியபடி அமர்ந்திருந்தோம்.
கல்லூரி சுடிதார் அழகிகள் 5 பேர் பேருந்தில் ஏறினர். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபன் வந்தாளய்யா வந்தாளய்யா வந்து சொக்குபொடி போட்டாளய்யா என டைமிங் சாங் போட்டான்.
ஏதோ பையன் கிறக்கமாயிருக்கான் போல என எண்ணி நானும் நண்பரும் பாடல்களையும் அழகிகளையும் கம்பேர் செய்து உரையாடிக்கொண்டிருந்தோம். பேருந்தில் கூட்டம்மில்லை. அடுத்தடுத்து காதல் பாடல்களாக காதில் பாய என்னடாயிது அதிசயம் என எண்ணியபடி இருந்தோம்.
அடிக்கடி டிரைவர் பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடியே இருந்தான். பேருந்தில் நம்மயும் சேர்த்து 10 பேர்தான். நாங்க 2 பேர். கல்லூரி அழகிகள் 5 பேர்> 3 நடுத்தர வயதுடைய பெண்கள். இதல யார பாக்கறான். காதல் பாட்டா ஓடுது யாரோ எழுதி யாரோ இசையமைத்து யாரோ பாடிய பாடல் வழியா தன் எண்ணத்தை தூது விடறாரு. அந்த பாடல் தூது யாருக்காக என நானும் நண்பரும் தீவிரவாக விவாதித்தபடியே இருந்தோம்.
30 பேர் இருக்கையில் அமர்ந்திருக்க பேருந்து புறப்பட்டது. பேருந்தின் உள்ளே சின்னதாக கண்ணாடி வைக்கப்பட்டுயிருக்கும் அந்த கண்ணாடியை பார்த்து சிரிப்பதும்> முகத்தை பல கோணல்களாக்கி காட்டுவதும்மாகயிருந்தார் ஓட்டுநர். எங்கயிருந்து அவருக்கு ரிப்ளை போகுது என பார்த்துக்கொண்டிருந்தோம்.
நடத்துனர் நம்மிடம் டிக்கர் வாங்கிக்குங்க சார் என்றார். என்ன சார் உங்க டிரைவர் பயங்கரமா பாட்டுயெல்லாம் போட்டு கலக்கறாரு. என்ன சங்கதி என்றோம். மனசுக்குள்ள காதல் வந்துச்சி வந்துச்சி என பாட்டு பாடினார்.
ஏய் எண்ணய்யா எல்லாம் ஒரு டைப்பாயிருக்கிங்க என்றதும். சார் 1 வாரத்துக்கு முன்ன தான் லவ் சக்சஸ் ஆச்சி அதான் புது மோதிரம்> புது மைனர் செயின்னு போட்டு கலக்கறாரு. அத அவரோட ஆளுக்கு காட்டறதுக்கு தான் அடிக்கடி சட்டை காலரை தூக்கி விட்டுக்கறதுயெல்லாம் என்றார்.
அதுயிருக்கட்டும் யார்ய்யா அந்த பொண்ணு அதச்சொல்லு முதல்ல. நீங்க வேற சார் என நகர்ந்தார். டிக்கட் டிக்கட் என அழகிகள் மத்தியில் போனவர். 4 அழகிகளிடம் மட்டும் காசு வாங்கினார். 1 பெண்ணிடம் மட்டும் வாங்கவில்லை.
இதான் ஒட்டுநரை ஓட்டும் வாகனமோ என எண்ணியபடி. vங்க உயிர் உன் கைல தாண்டா சாமீ என அவன் காதல் நல்லாயிருக்க வேண்டினோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக