எப்போதும் போல பணி பயணமாக திருவண்ணாமலையில் இருந்து விடிந்தும் விடியாத காலை பொழுதில் திருப்பத்தூர் செல்ல பேருந்து நிலையம் சென்ற போது எனக்கான பேருந்து போய்விட்டுயிருந்தது. என்ன செய்யலாம் என யோசித்து பேருந்து மாறி மாறி செல்லலாம் என சேலம் பேருந்தில் ஏறியபோது பல இருக்கைகள் காலியாகயிருந்தன. எங்கு உட்காரலாம் என கண் அலை பாய்ந்தது. இரண்டு பேர் அமரும் சீட்டில் நடுத்தர வயதுடைய ஆணும், சுடிதார் போட்ட இளம் பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த அழகான இளம்பெண் திரும்பி பார்த்தால்.
டேய் உன்னை தாண்டா பாக்கறா அந்த பொண்ணு என மனம் சொன்னது. கூடவே ராசா உனக்கு எங்கயோ மச்சம்டா.
ஆழகான பொண்ணு என்ன போய் பாக்குதே என மனசாட்சி சொன்னது. அப்பெண் அமர்ந்த இருக்கைக்கு நான்கு இருக்கைகள் தள்ளி அமர்ந்தோம். 40 நிமிட பயணத்தில் அந்த பெண் குறைந்தது 5 முறையாவது திரும்பி பார்த்திருப்பாள். எனக்கோ நான் சென்ற அந்த பேருந்து சொர்க்கமாக தெரிந்தது. சந்தோஷத்தில் என் மனம் எதை எதையோ கணக்கு போட்டது. அந்த பொண்ணு திரும்பி பார்த்தாலே அந்த பொண்ணுக்கு என் உயரம் புடிச்சியிருக்குமா?, வழுக்கை தலை புடிச்சியிருக்குமா? முரட்டு தனமாயிருக்கற என் முகம் புடிச்சியிருக்குமா என யோசித்து ரசித்து சிரித்தபடி பயணமாகிக்கொண்டிருந்தோம். செங்கம் வந்தது. அந்த பெண்ணுடன் அமர்ந்திருந்தவர் பேருந்தை விட்டு கீழேயிறங்கும்போது, பாத்தும்மா, ஹாஸ்டல் போனதும் போன் பண்ணு, பத்தரம்மா என சொல்லிவிட்டு கீழேயிறங்கினார்.
பேருந்து கிளம்பியது, அந்த பெண் திரும்பி பார்த்தாள் அழகு தேவைதைடா என மனம் குதுகலித்தது. சில நிமிட நேரம்மிருக்கும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் என் இருக்கையை தாண்டி போய் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தார். அந்த பெண் சிரித்தபடி தலையில் ஒரு முட்டு முட்டிவிட்டு அந்த பெண் அரவணைப்புடன் அவன் தோளில் சாய்ந்தது. நம் கனவுகள் கலைந்தது. அடடா முழிச்சிக்கிட்டே கனவு காண்றதுல உனக்கு நோபால் பரிசு தரனும்டா ராசா என எண்ணியபடி மீதி பயணத்தை நிறைவு செய்தோம். போகும்போது தான் அந்த பிரச்சனை வரும் போது அடடா அந்த பெண்ணுக்கு கோயில் கட்ட வேண்டும் என எண்ணிக்கொண்டே வந்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக