ஹமாஸ் தீவிரவாதிகள் |
விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படுபவர்கள் தீவிரவாதிகள்ள, அமெரிக்காவை எதிர்த்து போராடும் போராளிகள் அவர்களை எப்படி தீவிரவாதிகளாக காட்டலாம் என தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு இஸ்லாமிய இயக்க தோழர் கேள்வி எழுப்புகிறார். அதேபோன்றே அவரைப்போன்ற சில இஸ்லாமிய தோழர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
போராளிகள் என்பவர்கள் யார் ?.
இலங்கையில் ஈழ பகுதியில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக, அரசப்படைகளை எதிர்த்து போராடியவர்கள் விடுதலைப்புலிகள். ஆரசாங்கத்துக்கு தங்களது எதிர்ப்புகளை காட்ட அவர்கள் இராணுவம், துணை இராணுவம், எல்லை பாதுகாப்பு படை வீரர்களை தான் கொன்றுள்ளார்கள். அதில் அவர்கள் கொல்லப்பட்டும் உள்ளார்கள். உலகில் உள்ள போராளிகள் இயக்கங்களின் குறி அரசப்படைகள் தான். மக்கள் உயிரல்ல. 99 சதவிதம் போராளி குழுக்கள் மக்களை கொன்றதில்லை. தீவிரவாதிகள் நோக்கம் அரசப்படைகளள்ள பொது மக்கள். உலகில் உள்ள எல்லா தீவிரவாதிகளின் குறியும் பொதுமக்கள் தான். மக்கள் பகுதியில் நடக்கும் எல்லா வெடிகுண்டுகளுக்கு பின்னாடி இருப்பது தீவிரவாதம். இது தான் தீவிரவாதத்துக்கும், போராளிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு.
விஸ்வரூபம் பட விவகாரத்துக்கு வருவோம். விஸ்வரூபம் படத்தின் கதை மற்றும் பிற மொழிகளில் படத்தை பார்த்த நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில், படத்தில் காட்டப்படுவது இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் பற்றி தான். அதாவது படத்தில் காட்டப்படுவது தாலிபான்கள் பற்றி.
தாலிபான்கள் யார்?
ஆயிலுக்காக, இயற்கை வளத்துக்காக ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்ரமித்தபோது, ரஷ்யாவின் இராணுவத்தை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது முகாஜிதின்கள் இயக்கம். இந்த இயக்கத்துக்கு இளைஞர்களை இழுக்க சவுதிஅரேபியாவின் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிற்போக்குவதத்தை தூக்கி பிடிக்கும் இஸ்லாமிய பிரிவை சார்ந்தவர்களை அமெரிக்கா பயன்படுத்தியது. அவர்கள் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த பழங்குடி மக்களை மதத்தின் பெயரில் தங்கள் பக்கம் இழுத்து மூளை சலவை செய்து முஹாஜின்களாக்கினார்கள்.
பணம், ஆயுதம் தந்தது தந்தது கிருத்துவ அமெரிக்கா என்றால், ஆள் சேர்த்தது, மத பயிற்சி தந்தது இஸ்லாமிய அரச குடும்பத்தின் சவுதிஅரேபியா அரசு. அவர்களுக்கு பயிற்சி தந்து, பாதுகாப்பு தந்தது இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் அரசு. ஆப்கானிஸ்தானில் மதத்தை முன்னிருத்தி இளைஞர்களை இழுத்து அவர்களுக்கு பயிற்சி தந்து தீவிரவாதிகளாக்கியது இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் என்பது உலகறிந்த உண்மை. ரஷ்ய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டதும் அந்தயிடத்தில் அமெரிக்கா படைகள் உட்கார்ந்து சுரண்ட தொடங்கியது. அரச அதிகாரத்தை பெற அமெரிக்கா ஆசிபெற்ற முகாஜிதின்கள் தங்களுக்குள் பிரதேசவாரியாக நான்கு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டதோடு தன் இன மக்களை குண்டு வைத்து கொன்றனர்.
இவர்களை அடக்க தாலிபான்கள் என்ற அணியை அமெரிக்கா ஊக்குவித்தது. அவர்களின் வளர்ச்சி வேகவேகமாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க எவ்வளவோ முயன்றது. அது முடியவில்லை. தாலிபான் ஆட்சியும் ஆப்கானில் சில ஆண்டுகள் நடந்தன. இவர்களுக்கு பண உதவி செய்தன பல இஸ்லாமிய நாடுகள். மற்றொரு தீவிரவாத குழுவான அல்கயிதா தலைவர் பின்லேடன் திட்டப்படி அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டது. ஒசாமாவை அமெரிக்கா கொல்ல முயன்றது ஒசாமா தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானில் அடைக்கலம் புகுந்தார். தாலிபான்கள் அவரை பாதுகாத்தனர். அமெரிக்கா தாலிபான்களை வேட்டையாட ஆப்கானிஸ்தான் மீது அதிகாரபூர்வமாக படை எடுத்தது. தாலிபான்கள் அரசை கவிழ்த்துவிட்டு அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையரசு உருவாக்கப்பட்டது.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்பும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் - அமெரிக்காவுக்கும் தினம் தினம் மோதல் நடக்கிறது. இதில் தாலிபான் - அமெரிக்காவின் மோதலை மையமாக கொண்டு விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டது.
படத்தில் குரான் ஓதுவது போல காட்டியுள்ளார் என்கிறார்கள் படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய தலைவர்கள். தாலிபான்கள் என்ன கிருத்துவர்களா பைபிள் படிப்பது போல் காட்டுவதற்க்கு. இல்லை பகவத்கீதையை காட்ட அவர்கள் என்ன இந்துவா. தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் குரானை காட்டியுள்ளார். தொழுகை நடத்திவிட்டு ஒருவன் குண்டு வைக்க போகிறான் என காட்டியுள்ளதில் என்ன தவறு. கடவுள் நம்பிக்கையுள்ளவன் நல்லது செய்ய போனாலும், தவறு செய்ய போனாலும் கடவுளை வேண்டுவான் அதைத்தான் காட்டியுள்ளார். இதை எவ்வாறு தவறு என கூறமுடியும். இதில் எங்கே மதத்தை புன்படுத்துவது போல் கருத்துள்ளது என்பதை காட்ட முடியும்மா ?.
இந்து மதத்தில் எப்படி தீவிர இந்துத்துவா மனம் கொண்டவர்கள் இருக்கறிhர்களோ அப்படித்தான் இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய, பௌத்த மதத்திலும் உள்ளார்கள். அவர்கள் தீவிரவாத பாதையை நாடுகிறார்கள். அவர்கள் அரசப்படைகளை எதிர்த்து போராடும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. மக்களை கொல்லும் போது அவர்கள் தீவிரவாதிகளாகிறார்கள்.
அதேபோல் தாலிபான் தலைவனை கதாநாயகன் சந்திக்கும் போது, தலைவன் தமிழ் பேசுகிறான் அவனிடம் கதாநாயகன் அதுப்பற்றி கேட்கும் போது, கோவை, மதுரையில் ஓராண்டு இருந்தேன் என்கிறானாம். சரி சொல்லிவிட்டு போகட்டும். இதனால் முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். தீவிரவாதி எங்குயிருந்தால் என்ன?. படத்தில் என்ன அங்குள்ள முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்ற சொல்கிறார்?.
மக்களுக்கு எதிரானவர்களை அடையாளப்படுத்தும் போது அதை எதிர்ப்பவர்கள் மக்களின் எதிரிகளாகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக