செவ்வாய், பிப்ரவரி 12, 2013

மகாகும்பமேளாவும் உயிர் பலிகளும்.இந்து மதத்தில் கொண்டாடப்படும் விழா கும்பமேளா. அசுரர்களுக்கும் - தேவர்குளுக்கும் நடக்கும் யுத்தத்தில் தேவர்களுக்காக உருவாக்கப்பட்ட அமிர்தம் கொண்டு செல்லும் வழியில் ஆற்றில் விழுந்ததாகவும் அந்த அமுதம் விழுந்த ஆற்றில் குளித்தால் மனிதனின் அக புற பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை.

இந்தியாவில் அலகாபத், நாசிக், அரித்துவார், உஜ்ஜையின் போன்ற நகரங்கள் வழியாக ஓடும் ஆற்றில் அமிர்த துளிகள் சிந்தியதாக ஒரு நம்பிக்கை. இந்துக்கள் தங்களது பாவங்களை போக்கிக்கொள்ள இந்த நகரங்களில் ஓடும் ஆற்றில் இறங்கி நீராடுகிறார்கள். 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாகும்பமேளா என்ற விழா பெரிய அளவில் நடக்கும். 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை மகாமஹம் நடக்கிறது. உலகத்தின் அத்தனை பகுதிகளில் இருந்தும் இந்து மத சாமியார்கள், சந்நியாசிகள் என இங்கு வருகை புரிவார்கள். இந்து சமயத்தை சார்ந்த ஆத்திகர்கள் இங்கு வந்து நீராடுவர்.

2013 ல் அலகாபாத்தில் உள்ள திரிவேணிசங்கமத்தில் தை 1 ந்தேதி மகாகும்பமேளா தொடங்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து நீராடி செல்கின்றனர். வரும் மார்ச் 13ந்தேதி வரை மகாகும்பமேளா நடைபெறவுள்ளது. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள், சந்நியாசிகள், கார்ப்பரேட் சாமியார்கள் முதல் குட்டி சாமியார்கள் வரை தங்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலம் தான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அரை கும்பமேளாவாக இருக்கட்டும் அல்லது முழு கும்பமேளாவாக இருக்கட்டும் கும்பமேளா நடைபெறும் போதுயெல்லாம் பெரிய விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.

10ந்தேதி இரவு அலகாபாத்தில் நடந்த மகாகும்பமேளாவில் தள்ளு முள்ளும், போலிஸ் தடியடி நடத்தியதில் குறுகிய பாலத்தில் பக்தர்கள் முண்டியடித்து ஓடியதன் விளைவாக 31 பேர் பலியாகியுள்ளனர். பாவத்தை கழுவ போய் தங்களது உயிரை விட்டுள்ளார்கள். இது இப்போது மட்டுமல்ல இதற்கு முன் கும்பமேளா நடந்தபோதும் நடந்துள்ளது.


ஓவ்வொரு முறையும் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி தருவதோடு முடிந்துவிடுகிறது அதன் விவகாரம். மக்களின் உயிர் சார்ந்த விஷயமாக யாரும் பார்ப்பதில்லை. மக்கள் இறப்பது செய்திகளாவே போய்விடுகின்றன. மீடியாக்களும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே பார்க்கின்றன. தலைவர்கள் இறந்தால் மட்டுமே விசாரணை கமிஷன், பாதுகாப்பு அறிக்கை போன்றவை கேட்கப்படும் போலும்.

மக்களின் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டு. அதாவது ஒரு சினிமா ரசிகனுக்கும் - நடிகைக்கும் உள்ள ‘உறவை’ போல. பக்தி என்பது மக்களின் நம்பிக்கை சார்ந்தது. கடவுள் என்பவர் ஒருவர் இருக்கலாம், நாம் வேண்டுவதை செய்து தரலாம் என்ற நம்பிக்கை தானே தவிர அது உண்மையாகாது.

கங்கையில் நீராடினால் தன் பாவங்கள் போகும் என எண்ணுவது நம்பிக்கை. அது நிகழ்வில் உண்மையாகாது. ஆனாலும் மக்களின் நம்பிக்கையை புறந்தல்லாமல் நம்பிக்கையோடு வருபவர்களுக்கு தேவையானதை செய்து தந்து வழியனுப்ப வேண்டும்மே தவிர அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களது உயிரோடு விளையாடுவது என்பது மோசமானது, மன்னிக்க முடியாத குற்றம். அதைத்தான் மகாகும்பமேளா நடத்துபவர்களும், அரசுகளும் செய்கிறது.

இந்து மத சொல்படி கூறுவதுயென்றால் பாவங்களை கழுவ வரும்மிடத்தில் அந்த பக்தர்களை ஏதோ ஒரு விபத்தில் தள்ளி அவர்கள் இறக்க காரணமாகி அவர்களும் பாவக்காரர்களாக மாறுகிறார்கள்.

நீங்கள் ( அரசுகள் ) மக்களை கொன்ற பாவத்தை கழுவ கங்கைக்கு போய் குளிப்பதை விட அந்த மக்களின் பாதுகாப்புக்கு அதிக நேரத்தை செலவிடுங்கள் அதுவே உங்கள் பாவத்தை போக்கிவிடும்.

1 கருத்து:

  1. பன்றியே .. அது Railway station இல் நடந்தது
    உன்னோட Mecca ல நடக்கிறமாதிரி இல்லை

    பதிலளிநீக்கு