செவ்வாய், பிப்ரவரி 19, 2013

மாலத்தீவில் நடக்கும் இந்திய சீன அதிகார யுத்தம்.



மாலத்தீவில் தன் அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது இந்தியா. முகமது நசீத். மாலத்தீவின் முன்னால் அதிபர். இந்தியாவின் தீவிர ஆதரவாளர். மாலத்தீவு அதிபர் ஆட்சி முறையை கொண்ட இஸ்லாமிய நாடு. மொத்த மக்கள் தொகையே 3 லட்சத்து 20 ஆயிரம் தான். 1965ல் ஆங்கிலேயரிடம்மிருந்து விடுதலைப்பெற்ற மாலத்தீவு 1968 குடியரசாகி தேர்தல் மூலம் நாடாளமன்றத்தை நடத்தி வருகிறது. மொத்த நாடாள மன்ற உறுப்பினர்கள் 50 பேர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல். 

இப்ராஹீம் நாசீர் மாலத்தீவின் முதல் அதிபர். 1975ல் நாட்டின் பிரதமரான அஹ்மத் சகி அதிபர் இப்ராஹீம் நாசீர்க்கு எதிர்ப்பாக நாட்டில் கிளர்ச்சி செய்ய முயன்றார் என கைது செய்யப்பட்டார். 1978 நசீரின் அமைச்சரவை சகாவான அப்துல் கயூம் அதிபராக்கப்பட்டார். அவர் ஆட்சியில் நாடு படு மோசமானது. சர்வாதிகாரம். ஒரு கட்சி ஆட்சி முறை. எதிர்ப்பவர்கள் அரசப்படைகளால் தண்டிக்கப்படுவது அதாவது கொன்றுவிடுவது. அவர் தொடர்ந்து 30 ஆண்டுகள் அதிபராக இருந்தார். முப்பது ஆண்டில் நாட்டில் திரும்பிய பக்கம்மெல்லாம் ஊழல். இந்த அரசை இந்திய அரசும் ஆதரித்தது. இவரது ஆட்சியை கவிழ்க்க போராளி குழுக்கள் முயன்ற போது இந்திய இராணுவம் போய் தடுத்தது. புரட்சியை ஆதரித்தது இந்தியா என்பது குறிப்பிடதக்கது. 

2006ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. சட்டத்திருத்தம் மூலம் அதுவரை அங்கீகரிக்படாத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கப்பட்டன. 2008ல் தேர்தல் நடைபெற்றது. மலாத்தீவு ஜனநாயக கட்சி வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. வெற்றியும் பெற்றது. முகமது நசீத் அதிபராக பதவியேற்றார். கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட்டது. 

2010 ஜீன் மாதத்தில் திடீரென நசீத்தின் அமைச்சரவை சகாக்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்கள். எதிர்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார்கள். எதிர்கட்சி தலைவர் அப்துல்லா மற்றொரு அரசியல் கட்சி தலைவரான கஸிம் இருவர் எம்.பிக்களுக்கு லஞ்சம் தந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்கள். இதனை உச்சநீதிமன்றம் கண்டித்தது. 

ஜீலையில் ராஜினாமா செய்தவர்களை மீண்டும் அழைத்து அமைச்சராக்கினார் நசீம். இதனை நாடாளமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது. 2011 டிசம்பரில் அதிபருக்கு எதிராக நாட்டில் எதிர்கட்சிகள் போராட்டம் செய்தனர். போராட்டத்துக்கு எதிராக இராணுவம், காவல்துறை களம்மிறங்கியது. போராடியவர்களை கைது செய்தது. இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த மாலத்தீவு நாட்டின் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கைது செய்யச்சொல்லி தன் அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டார். 

இதற்கு கடும் கண்டனம் எழுந்து, நாட்டில் பெரும் போராட்டங்கள் எல்லாம் வெடித்தன. இதனால் 2012 பிப்ரவரி 7ந்தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் நசீத். அதோடு, துப்பாக்கி முனையில் என் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது என அறிவித்தார். இது உலக நாடுகளில் பெரும் பிரச்சனையானது. அடுத்த அதிபராக மொஹபத் வாஹீத் பொறுப்பேற்றுக்கொண்டார். 

தலைமை குற்றவியல் நீதிபதியை கைது செய்வதற்க்கு எதிர்ப்பான வழக்கு மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் நசீத் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது அவர் இந்தியாவின் அதிகார மையங்களை காண வந்ததால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. நாடு திரும்பியபோது அவரை கைது செய்யச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இந்திய தூதரகத்தில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார். 


அவர் குறிப்பாக இந்திய தூதகரத்தில் வந்து அடைக்கலம் கோராவும், இந்தியா அடைக்கலம் தரக்காரணம். சீனா மற்றும் இந்தியாவுக்கான போட்டி இதில் அடங்கியுள்ளது. தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவானது. முந்தைய அதிபரான நசீர் இந்தியாவுக்கு சாதமாக இருந்தார். மலாத்தீவில் உள்ள சர்வதேச விமான நிலைய பராமரிப்பு பணியை இந்தியாவின் ஜி.எம்.ஆர் என்ற நிறுவனம் 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை தன் ஆட்சிக்காலத்தில் அதிபராக இருந்த நசீத் தந்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்தியாவுடான இன்னும் சில ஒப்பந்தங்களை ரத்து செய்ய சீனா ராஜதந்திரிகளின் சொல்லை தற்போதைய மாலத்தீவின் புதிய அரசு முயல்கிறது. இந்திய நிறுவனத்துக்கு தந்த விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்தது புதிய அரசு. இதனை எதிர்த்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை பெற்றுள்ளது அந்நிறுவனம். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அந்த விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தை சீனாவுக்கு தர முடிவு செய்துள்ளது. இது இந்தியாவை கடும் கோபப்படுத்தியுள்ளது. 

இந்தியா – சீனா போட்டியில் தன் ஆதரவாளரை காப்பாற்ற முயல்கிறது இந்தியா. அதில் இந்தியா வெற்றி பெறுமா என்பது போக போகத்தான் தெரியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக