ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

விநோதினி கொலையும் உண்மைகளும்.


இந்த கட்டுரையை படிக்கும்போது பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவானது போல தோன்றும். கட்டுரையை படித்துவிட்டு யோசித்து பாருங்கள் உண்மை விளங்கும்.

கடந்த நவம்பர் மாதம் 14ந்தேதி சொந்தவூரில் தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்ப பேருந்து நிலையம் வந்த காரைக்காலை சேர்ந்த 23 வயது விநோதினி என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை குறிவைத்து திராவகம் வீசப்பட அதில்; முகம் கருகி பார்வைகள் பறிப்போய் அலங்கோலமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண் கடந்த பிப்ரவரி 13ந்தேதி மருத்துவமனையில் தனது உயிரை விட்டுள்ளாள்.

திராவகம் வீசிய கொடியவன் 24 வயதான கட்டிட மேஸ்திரி சுரேஷ் சிறை கம்பிகளுக்குள் உள்ளான். அவனை தூக்கில் போட வேண்டும் என பல தரப்பில் இருந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதாவது கட்டிட வேலை செய்யும் சுரேஷ் என்ற அந்த இளைஞன் ஒரு தலையாக விநோதினியை காதலித்துள்ளான். அந்தப்பெண் இவனை காதலிக்காததால் வெறியில் இப்படி செய்துள்ளான் என்றார்கள். நடந்தது கொடூர சம்பவம் எதனால் நடந்தது என்ற விவாதத்தில் அனைத்து தரப்பினரும் அந்த பெண்ணும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் செய்த தவறை மறைத்தும், திரித்தும் விட்டார்கள்.

காரைக்கால் பகுதியை சேர்ந்த சில முகநூல் செயல்பாட்டாளர்கள், இன்னும் சிலர் தங்களது பக்கங்களில், விநோதினியை படிக்க வைத்தது, அந்த குடும்பத்துக்கு தேவையானதை செய்து தந்தது எல்லாம் சுரேஷ். சுரேஷ்க்கு விநோதினியை திருமணம் செய்து வைப்பதாக அந்தப்பெண்ணின் தந்தை பலமுறை உறுதி தந்துள்ளார். அந்தப்பெண்ணும் உணர்ந்து அவனுடன் பழகியுள்ளார். படித்து முடித்ததும் அந்த பெண் தனக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை கிடைத்ததும் சுரேஷ்சை கை கழுவியுள்ளாள் என எழுதியுள்ளார்கள். 

ஒரு வேலை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதில் குற்றவாளியாக அந்தப்பெண்ணும், அவரது குடும்பத்தாரும் உள்ளாகிறார்கள். அதனால் விநோதினியின்  பெற்றோரையும் இதில் தண்டிக்க வேண்டும். காரணம், அந்த பெண் மீது கொண்ட காதலை அந்த பெண்ணின் பெற்றோர்கள் ஆசை வார்த்தை கூறி பயன்படுத்திக்கொண்டு கடைசியில் அவனை ஏமாற்றியுள்ளார்கள். ஏமாந்தவன் தன்னை ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் எடுக்க கூடாதா தவறான முடிவை எடுத்து அந்தப்பெண்ணையும் அழித்துவிட்டான், தன் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிக்கொண்டான். 

இதில் சிலர் கேட்கலாம், யாரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த பெண் முடிவு செய்ய வேண்டிய உரிமையாச்சே என்று. நிச்சயம் அது அவரது தனிப்பட்ட விருப்பம் தான். ஆனால் அதை முன்பே அந்த இளைஞனிடம் கூறியிருக்கலாம்மே?. வசதி வாய்ப்பு வருவதற்கு முன் அவனை திருமணம் செய்துக்கொள்வதாகவும், வாய்ப்புகள் வந்தப்பின் அவனை புறந்தள்ளி அந்தப்பெண்ணும் ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். 

அவன் புகார் தந்துயிருக்கலாம்மே என கேட்கலாம். வழக்கு விவகாரங்களில் பெண்கள் சொல்வதையெல்லாம் உண்மை என நம்புவதால் தான் இந்த பிரச்சனை. 

அதோடு இன்றுக்கூட செய்தித்தாள்களாகட்டும், மீடியாவாகட்டும் ஆசிட் வீச்சுக்கு ஆளான விநோதினியை மட்டுமே சுற்றி சுற்றி வந்தனவே தவிர.......... ஆசிட் வீசியவன் பக்கம் உள்ள நியாயத்தை அல்லது அவன் தரப்பின் குரலை கேட்கவேயில்லை. இது தான் தவறுக்கு வழி வகுக்கிறது. தவறு செய்பவர்களை தைரியம் பெற வைக்கிறது.

தவறு செய்த பெண்ணுக்கு தண்டனை தந்தான் எனச்சொல்லவரவில்லை. ஏமாந்த ஒரு இளைஞன் என்ன செய்வான், சம்மந்தப்பட்ட பெண்ணை மிரட்டுவான். ஆனால் இவன் தவறான சேர்க்கையால் அந்த பெண் மீது திராவகம் வீசியுள்ளான். இதற்கு சினிமாவும் ஒரு காரணம். 

அவன் செய்த தவறுக்கு தண்டனை தரலாம் மாற்றுக்கருத்துயில்லை. அதற்காக அவனுக்கு மரணதண்டனை தருவது என்பது கொலைக்கு கொலை செய்வது போன்றது. இந்த விவகாரத்தில் விவாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. உணர்ச்சி வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுப்பது என்பது தவறுக்கு துணை போவது போல. 

எதையும் யோசிப்போம்.......... முடிவு எடுப்போம்.

8 கருத்துகள்:

 1. //காரைக்கால் பகுதியை சேர்ந்த சில முகநூல் செயல்பாட்டாளர்கள், இன்னும் சிலர் தங்களது பக்கங்களில், விநோதினியை படிக்க வைத்தது, அந்த குடும்பத்துக்கு தேவையானதை செய்து தந்தது எல்லாம் சுரேஷ். சுரேஷ்க்கு விநோதினியை திருமணம் செய்து வைப்பதாக அந்தப்பெண்ணின் தந்தை பலமுறை உறுதி தந்துள்ளார். அந்தப்பெண்ணும் உணர்ந்து அவனுடன் பழகியுள்ளார். படித்து முடித்ததும் அந்த பெண் தனக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை கிடைத்ததும் சுரேஷ்சை கை கழுவியுள்ளாள் என எழுதியுள்ளார்கள்.//
  This is wrong news, show the proof who is that Facebook people, I saw few post all are copy paste posts and started by some anonymous, did you enquire about this? I enquired.

  இதை இப்படி நீங்கள் எழுதி இந்த தவறான தகவலை பரப்புவதே தவறானது, வினோதினியின் தந்தைக்கு கடன் கொடுத்தவன் என்பது மட்டுமே உண்மை, இதற்காக எல்லாம் நீங்கள் வினோதினியை பற்றி தவறாக பேசுவதென்றால் உங்கள் அப்பனுக்கு கடன் கொடுத்தவனோடெல்லாம் உன் அம்மாவுக்கோ உன் தங்கைக்கோ தொடர்பு இருக்கு என்று செய்தி போட்டால் அதை பரப்புவாயாடா பொறம்போக்கு நாயே... மரியாதையாக இந்த பதிவை எடு, இல்லையென்றால் உன் அம்மாவை பற்றி நான் எழுதறேன் அந்த போஸ்ட்டுக்கும் இப்படி பரப்பி எழுதுவியாடா நாயே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழலி, உங்கள் கருத்தை படித்தேன். நீங்கள் விசாரணை செய்துள்ளீர்கள் நன்றி. பேஸ்புக் செயல்பாட்டாளர்கள் மட்டுமல்ல வேறு சில தகவல்களை கொண்டு தான் இதை எழுதினேன். உண்மையாக இல்லையென்றால் மட்டுமே நீக்குவேன். உங்கள் மிரட்டுலுக்காக எல்லாம் நீக்க மாட்டேன். அதோடு, யார் வேண்டுமானாலும் யார் அம்மா, தங்கையை பற்றியும் எழுதலாம். அது உங்களைப்போன்றவர்கள் மறைமுகமாக எழுதும் செக்ஸ் கதைகளைப்போல. எனக்கு அப்படி எழுத வராது. கவலைப்படாதீர்கள்.

   நீக்கு
 2. செய்திகள் உண்மையாகவே இருக்கட்டும் .வினோதினி இறந்தபின் இவைகளை பேசும் வாய்கள் அவள் உயிரோடு இருக்கையில் ஊமையாய் இருந்ததேன்..ஒரு குடும்ப தலைவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் .வினோதினி தந்தை மீது தவறிருக்கிறது என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை.அதேசமயம் சுரேசுக்கு மரண தண்டனை வேண்டாம் என்பதை ஏற்க முடியாது.மன்னிப்பு என்பது தெரியாமல் செய்யும் தவறுக்கும் மனிதனுக்கும் தான்.மனித உருவில் இருக்கும் மிருக்கதிர்கல்ல.இதை எல்லாம் விட உண்மைக்காதல் அழிக்காது,பழிவாங்காது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதிரா அவர்களுக்கு, தூக்குதண்டனைக்கு நான் எதிரானவன். தப்பு செய்தவன் அவனுக்கு கடுமையான தண்டனை தரலாம். அதற்காக தூக்கு தண்டனை என்பது ரொம்ப அதிகம் என்பதாலே எழுதினேன்.

   நீக்கு
 3. இவ்வாறு பல இடங்களில் நடந்துள்ளன, எதோ ஒரு சினிமாக் கூட வந்துள்ளது என நினைக்கின்றேன். பெற்றோர்கள் கூட பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும், சில பல தேவைகளுக்காக அயலவ ஆடவரோடு பழக விடுவதும் பின்னர் கத்தரித்து விடுவதும் எதிர்விளைவுகள் தரும். என்ன இருந்தாலும் அமிலம் வீசுவது கொடுமையான குணம், தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மரண தண்டனை எனக் கூறுவது எல்லாம் ரொம்ப அதிகமுங்க.

  பதிலளிநீக்கு
 4. பல சம்பவங்கள் இப்படித்தான் நடக்கின்றன. இங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. சிறுவயதில் இருந்தே மருமகனே என்று அழைப்பது என் மகள் உணக்குத்தான் என்று சொல்லும் பெற்றோர்களும் பின் வரும் விபரதங்களை அறியாமல் செய்கிறார்கள். இதில் அனைத்து ஊடகங்களும் யாரோ ஒரு கட்டிட தொழிலாளி முகம்தெறியாதவன் போல சொல்லி சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்த முயலுகின்றன. என்ன ஒரு கேவலமான சிந்தனை இந்த மீடியாக்கள் மற்றும் மக்களிடம் " காதல் உணர்ச்சி மிக்கது ஒருவன் காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயல்கிறான் என்றால் அவன் கோழை என்று சொல்கிறது ஏமாற்றியவரை கொன்றால் படு பாதக செயல் புரிந்தவன் ஆகிறான் ( கொலை குற்றவாளி ) ஒரு பக்கம் இளைஞர்களே வாருங்கள் காதலியுங்கள் என்கிறது ஒரு கூட்டம். காதலையும் காமத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது நம்சமூகம் ஜைன் மதத்திலோ பூண்டு வெங்காயம்கூட காமம் கோபம் போன்ற உணர்ச்சிகளை தூண்டும் என்பதால் தவிர்க்க சொல்கிறது."

  பெண்கள் பாதுகாப்பு சிறுபாண்மையினர் பாதுகாப்பு என்று சமூகத்தில் உடல் பலம் மற்றும் எண்ணிக்கை பலத்தில் குறைந்தவர்களுக்கு ஆதரவாக சட்டங்களும் அரசியல் வாதிகளும் செயல்படுவதால் அதனை இவர்கள் சாதகமாக பயன்படுத்தும்போது வளியவர்கள் மற்றும் பெரும்பான்மையிடம் இருந்து அதிக கோபத்தையும் வெருப்பையும் பெருகிறார்கள் இந்த சூழல் சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் தாக்குதலுக்கான வாய்ப்பையும் வீரியத்தையும் அதிகரிக்கிறது.
  பதிலளிநீக்கு