ஞாயிறு, ஏப்ரல் 26, 2026

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்...

 

பெங்களுருவை சேர்ந்த கிரண் என்கிற சப்ட்வேர் இன்ஜினியரை அவனது காதலி பிரேமா, நாற்காலியில் கட்டிப்போட்டு அவன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் புகை வருவதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல்போய்வுள்ளது. பிரேமாவை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பி.டி.எஸ்.எம் செய்தோம், அப்படி நடந்துவிட்டது எனச்சொன்னதை காவல்துறை நம்பவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக பார்க்கிறது பெங்களுரூ காவல்துறை.

இப்படி தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. (தமிழ்நாடா என அதிர்ச்சியடைய வேண்டாம் ஒசூர் சம்மந்தமான புகார் ஒன்று இணையத்திலேயே உள்ளது.) அதனை குற்றம்சாட்டப்பட்டவர் பி.டி.எஸ்.எம் எனச்சொல்ல காவல்துறை அதனை திட்டமிட்ட கொலையாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.

அதுயென்ன BDSM?

இது கலவியில் ஒருவகை சிற்றின்ப விளையாட்டு.

B - Bondage : Use of physical restraints (ropes, handcuffs) to limit movement.

D - Discipline : Rules-based interaction involving a dominant partner and a submissive partner.

S - Sadism : Deriving pleasure from inflicting

M - Masochism : masochism pain or intense sensation.

நீங்கள் தமிழ்படுத்தி படித்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து எளிமையாக சொல்லவேண்டும் என்றால் உணவில் ஒருவருக்கு இட்லி பிடிக்கும், இன்னொருவருக்கு தோசை, மற்றவருக்கு பூரி, சிலருக்கு பரோட்டா, மிகச்சிலருக்கு உப்புமா பிடிக்கும். இப்படித்தான் கலவியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் பிடிக்கும். தம்பதிகளில் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. டுபாகூர் செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களை தாண்டி உண்மையான செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களின் விளக்கங்கள் மூலம் அதுக்குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த பி.டி.எஸ்.எம் குறித்த பயிற்சி வகுப்புகள் சென்னை, பெங்களுரூவில் நடப்பதாக இணைய நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் ஆச்சர்யத்துடன் வெளியிட்ட விளம்பரத்தை கண்டேன். அந்த விளம்பரத்தில் பி.டி.எஸ்.எம் பாதுகாப்பாக செய்வது குறித்த பயிற்சி எனச்சொல்லியிருந்தார்கள். எனக்கு பி.டி.எஸ்.எம் குறித்தெல்லாம் அதிர்ச்சியெல்லாம் இல்லை. பலஆண்டுகளுக்கு முன்பே நாராயணரெட்டி போன்ற மருத்துவர்களின்  கட்டுரைகள் வழியாக இதுப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதன்பின் கோவில் சிற்பங்கள், தண்டராம்பட்டு, தானிப்பாடியில் உள்ள கலவி குளத்தின் சிற்பங்களில் பார்த்துள்ளேன். நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரை நேரிலும் பார்த்துள்ளேன். இப்போது பி.டி.எஸ்.எம் க்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுமட்டும்மல்ல மாஸ்ட்ரூபேட் செய்யவும் பயிற்சி தருகிறார்கள் என்கிற விளம்பரத்தையும் பார்த்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. இந்த 2கே தலைமுறை எல்லாவற்றிலும் தெளிவு என நினைக்கிறோம். ஆனால் அதிலும் 100க்கு 10 பேராவது அம்மாஞ்சியாக அதாவது இணையருக்கு முத்தம் தந்தால்போதும் குழந்தை பிறந்துவிடும் கேட்டகிரியாகவே இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.

மரணித்த அந்த இளைஞனின் அப்பா தன் மகன் குறித்து சொன்னதாக எழுதியிருந்தார்கள்.தன் மகன் நல்லவன், அவனுக்கு பெண்களிடம் பேசுவதே தெரியாது எனச்சொல்லியிருந்தார். உலகத்தில் 90 சதவித பெற்றோர்கள் என் பிள்ளைகள் அப்பாவி என நினைக்கிறார்கள், நம்புகிறார்கள், வாதாடுவார்கள். தன் பிள்ளைகளின் தவறுகள் தெரியாதவரை.

உலகம் முழுவதும்மே பி.டி.எஸ்.எம் விரும்பும் கேட்டகிரி மனிதர்கள் குறிப்பிட்ட சதவிதம் இருக்கிறார்கள். உணவே ஆளுக்கு ஆள் மாறுப்படும்போது கலவி மாறுப்படாதா என்ன? மறுப்படும். சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இணையருக்குள் நடக்கும் கலவி தவறில்லை. அதிலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அப்படி நஞ்சாகி ரத்த காவு வாங்கியபின்பே விவகாரம் வெளியே வருகிறது.

வெள்ளி, ஏப்ரல் 17, 2026

கார்ப்பரேட் கம்பெனிகளும்........ இளசுகளை சீரழிக்கும் அதன் உளவியல் விதிகளும்.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்படும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தார்கள், மதமாற்றம் செய்ய முயன்றார்கள் என தரப்பட்ட புகாரின் அடிப்படையில் 7 டீம் லீடர்களையும், ஊழியர்களின் புகார்களை விசாரிக்காத எச்.ஆர் என்கிற மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ஒரு பெண்மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

இதில் கவனிக்கவேண்டியது சம்மந்தப்பட்ட 6 பேரும் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். இங்குதான் சந்தேகம் வருகிறது. காரணம், கார்ப்பரேட் அலுவலகத்தில் மதப்பிரச்சாரம் என்பதெல்லாம் காமெடிக்கானது. இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்களின் பின்னணியை பார்த்தாலே தெரிந்துவிடும். சங்கிகளை விட மோசமான சங்கிகள் அவர்கள். இந்தியாவில் 90 சதவித நிறுவனங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுடையது. அந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் கோலோச்சுகிறார்கள். இந்த சங்கிகள் திறமையான பிறமதத்தவரை வேலைக்கு எடுத்தாலும் முதலாளிகள் என்ன வழியோ அந்த வழியவே இவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதாவது முதலாளிகளின் விருப்பத்தின்படியே உணவு, உடை கூட இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டினில் அசைவ உணவு வெளியில் இருந்துக்கூட எடுத்துவந்து சாப்பிடகூடாது என சிலநிறுவனங்கள் பாலிஸியாகவே வைத்துள்ளன. இப்படி யார் செய்வார்கள் என யோசித்துப்பாருங்கள்? அப்படியிருக்க மதப்பிரச்சாரம் செய்தார்கள் என்பதை ஏற்கமுடியாது.

அதேநேரத்தில் பாலியல் குற்றத்தை புறந்தள்ளமுடியாது. ஊழியர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் நிறுவன தலைமை பீடங்கள் இப்போதுயெல்லாம் கண் மூடிக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களில் எச்.ஆர்கள், சாதாரண ஊழியர்களுக்கு பதில் டிப்பார்ட்மென்ட் ஹெட்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள், புகார்களை நியாயமாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு.

கார்ப்பரேட் பணி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கடியானதோ அதே அளவுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்குகிறது. அது இன்று நேற்றல்ல ஐ.டி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெறத்துவங்கியபோதிலிருந்தே அதைச்சார்ந்து பாலியல் பிரச்சனைகள் எழத்துவங்கியுள்ளன, அது கடந்தகாலத்தில் உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அதுக்குறித்து பலசெய்திகள் வெளியாகும், இப்போது அதுக்குறித்து யாரும் எங்கும் எந்த தளத்திலும் பேசுவதில்லை. தற்போதைய சூழலில் பார்ட்டி, ட்ரக்ஸ், செக்ஸ் போன்றவற்றை சமூகம் நார்மலைஸ் செய்துவருகிறது, கார்ப்பரேட், மெட்ரோ சிட்டிகளில் இது சர்வே சாதாரணம் என இதுக்குறித்து பெரும்பாலும் எந்த ஊடகமும் பேசுவதில்லை. புகாராகி வெளிவந்தபின்பும் பத்தோடு ஒன்றாக பேசுகிறது.

கார்ப்பரேட் நிறுவனம் மட்டும்மல்ல பெரும்பாலும் எந்த இடத்திலும் சக ஊழியர்கள் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு தருகிறார்கள் என எந்த பெண் ஊழியரும் எச்.ஆர் உட்பட எங்கும் புகார் தந்துவிடமுடியாத சூழ்நிலையே பெரும்பாலும் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் திறமைக்குதான் மரியாதை என்பார்கள், சமத்துவம் பேசுகிறார்கள். உண்மையில் அது ஆணாதிக்க உலகமாகவே உள்ளது. டீம் லீடர்கள், எச்.ஆர்கள் என வேலை வாங்கும் இடத்திலுள்ள உயரதிகாரிகள் டீம் சேர்ந்துக்கொண்டு பெண் ஊழியர்களை பாலியல் தொந்தரவு தருவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது. சில பெண்கள் நேரடியாகவே அதனை எதிர்த்து கேட்டுவிட்டு போங்கடா நீங்களும் உங்க வேலையும் என உதறியவர்கள் உண்டு. பலர் தங்களுடைய குடும்ப சூழ்நிலையால் சகித்துக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு, சிலர் இதனையே அட்வான்டேஜ்ஜாக எடுத்துக்கொண்டு அட்ஜஸ் செய்துக்கொண்டு உயர்கிறவர்களும் உண்டு. இதில் புகார் தெரிவிப்பவர்களை, மசியாதவர்களை டார்கெட் செய்து வெளியேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது ஐடி உலகம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வார இறுதி நாட்களில் வாரவிடுமுறை, மாதவிடுமுறை, ஆண்டு விடுமுறை என விதவிதமாக சம்பளத்தோடு விடுமுறை தந்து சுற்றுலா அனுப்புவார்கள். இதெல்லாம் தப்பில்லை என மூளைச்சலவை செய்யப்பட்டு ட்ரக்ஸ்க்கு, பார்ட்டிகளுக்கு அடிமையாக்கினார்கள். இதன்பின்னால் பெரிய உளவியல் பாடம் இருக்கிறது. காலப்போக்கில் நிறுவனத்தின் லாபம் பாதிக்கிறதே என ஐடி நிறுவனங்கள் உட்பட பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை ட்ரிப் அனுப்புவதை மெல்லமெல்ல குறைத்தது. ஆனால் அதனை பார்த்து, கேள்விப்பட்ட பெரும்பாலான இளசுகள் அதனை விடத்தாயாரில்லை, நீங்கள் இன்ஸ்டாவில் பாருங்கள் என்னடா இப்படியெல்லாமா பார்ட்டிக்கு பெயர் வைப்பிங்க என இருக்கிறது. பலபல ஆஃபர்கள் தந்து பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் ஒன்றுமட்டும் நீக்கமறவுள்ளது. அதாவது, பெண்களுக்கு என்ட்ரீ ப்ரீ அல்லது மிகமிக குறைந்த கட்டணம். யுவாதிகளுக்கு சரக்கு ப்ரீயாக தருவதாகவும் விளம்பரம் செய்கிறார்கள்.

நகரம் விட்டு நகரம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு சென்று விடுதியில் தங்கி வேலை செய்யும் இளைஞனுக்கும் – இளைஞிக்கு பெரிய சுதந்திரம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். தங்களை இனி கட்டுப்படுத்த குடும்பத்தார் இல்லை, என்ன செய்கிறாய் எனக்கேட்க கண்காணிக்க யாரும்மில்லை. கையில் மாதாமாதம் தேவைக்கு அதிகமான சம்பளம் வருகிறது நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். இந்த மிடில் க்ளாஸில் இருந்துவருபவர்களைத்தான் அனைவரும் டார்க்கெட் செய்கிறார்கள்.

குட்டி கோவா என கொண்டாடப்பட்டும் பாண்டிச்சேரிக்கு கல்லூரி, ஐடி இளசுகள் என படையெடுத்து வந்து வாராவாரம் குவிகிறார்கள். பார்ட்டி, டான்ஸ் என விதவிதமாக நடக்கிறது. எல்லாமே கிடைக்கிறது, எல்லாமுமே. சில மாதங்களுக்கு முன்பு பப் ஒன்றில் தகராறு நடந்து மரணம் நடக்கிறது. அதன் விசாரணையின்போது, பிரபல கல்லூரி விடுதியில் இருந்தும், பெங்களுரு ஐ.டியில் பணியாற்றும் பையன்கள் பாண்டிச்சேரிக்கு வந்து பார்ட்டி செய்து புகாரில் சிக்கியபின்பே குடும்பத்தாருக்கே தெரிந்தது. ஏலகிரியில் ஒரு ஐ.டி பெண் விடுதி அறையில் இறந்து கிடந்தபின்பே குடும்பத்தாருக்கு தெரிந்தது. வேலூரில் ஒரு கார் விபத்தில் சிக்கியபோதே தன் மகள் நண்பர்களோடு சென்னையில் இருந்து ஏலகிரி ட்ரிப் போனது ஐதராபாத்தில் இருந்த பெற்றோர்களுக்கு தெரிந்தது. இப்படி பலவற்றை சொல்லமுடியும்.

நாம் வீட்டுக்கு தெரியாமல் செய்கிறோம்………… செல்கிறோம். இங்கே நம்மை யாருக்கு தெரியும், நாம் செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் 2கே கிட்ஸ், ஜென் ஸி தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்களேயே ஏமாற்றிக்கொள்கிறார்கள். குடும்பத்தார், நண்பர்கள் அவர்கள் மீது வைக்கும் அதீத நம்பிக்கையை, அவநம்பிக்கையாக்கும்போது அதன்பின் அவர்கள் மீது யாருக்கும் எக்காலகத்திலும் நம்பிக்கை வராது. அதை அவர்கள் உணரும்போது அவர்கள் எடுக்கும் முடிவு என்பது விபரீதமாகவே இருக்கிறது. நான் சமீபத்தில் அப்படி இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை பார்த்து வேதனை மட்டுமே படமுடிந்தது.

தங்களின் லாப வெறிக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி இளசுகளின் வாழ்க்கையை சீரழிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் விசாரணை கமிட்டியில் வெளிநபர்கள், நிறுவனத்தில் சங்கம் அமைக்கும் உரிமை, அரசின் சட்டவிதிகள் கடைப்பிடிக்காதவரை இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.

சனி, ஏப்ரல் 04, 2026

ஆணென்ன? பெண்ணெண்ண?


 


தொலைக்காட்சிகளில் சுட்டிகள் நிகழ்ச்சி என்கிற பெயரில் குழந்தைகளிடம் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கேட்பார்கள். இமான் அண்ணாச்சி உட்பட இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். மழலைகள் வீட்டில் அம்மா கோபப்படுவது, அப்பா மிரட்டுவது, தாத்தா பாட்டி குறித்தும், பள்ளியில் நடப்பது குறித்தெல்லாம் சொல்வார்கள். இப்போது அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நிகழ்த்துகிறார்களா எனத்தெரியவில்லை?.

 

இந்தவாரத்தில் அப்படியொரு நிகழ்ச்சியை அமெரிக்கா தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்ததை இன்ஸ்டா ரீல்ஸில் பார்த்தேன். நீங்களும் பார்த்துயிருக்கலாம் அல்லது பார்க்கும் சூழ்நிலை வரும். நான்கு அல்லது ஐந்து வயது குட்டி குழந்தையிடம் தொகுப்பாளினி பேசும்போது, என்னை என் அறையில் விட்டுவிட்டு அம்மாவும் – அப்பாவும் தங்களது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் ஓ மை காட் என மம்மி முனகும் சத்தம் வரும் எனச்சொல்வார். அதைக்கேட்டு அந்த நிகழ்ச்சி நடத்திய தொகுப்பாளி மற்றும் பார்வையாளர்கள் வரை ஜாலியாக சிரிப்பார்கள். பெற்றோர் வெட்கப்படுவர்.

 

இதுப்போன்ற பதிலை நம் இந்திய சமூக குழந்தைகள் சொல்லியிருந்தால் அக்குழந்தையை அப்பெற்றோர் பொளந்துக்கட்டியிருப்பார்கள். முதலில் தொலைக்காட்சிகள் அக்குழந்தை சொன்னதை ஒளிப்பரப்பியும் இருக்கமாட்டார்கள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் இங்கு காமத்தை புனிதமாக்கி வைத்துள்ளோம். அதுக்குறித்து பொதுவெளியில் பேசவேகூடாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அதுக்குறித்து விவாதம்மல்ல சின்ன சின்ன கேள்விக்குகூட பதில் சொல்வது கிடையாது. இதெல்லாம் நம்ம பிள்ளையிடம் நாம் எப்படி பேசுவது என தயங்குகின்றனர். பள்ளி – கல்லூரிகளில் பாடத்திட்டமாக கலவியல் கல்வியும் இருக்ககூடாது என எதிர்த்துவருகிறார்கள் கலாச்சார புண்ணாக்குகள். பின் எங்கிருந்து அவர்களுக்கு பாலியல் சார்ந்த கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்?

 

பாலியல் தேவை என்பது ஒவ்வொரு உயிரினத்துக்கும் தேவை. பாலியல் உறவுதான் அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்கும். நம் இந்திய சமூகம் அதனை கலச்சாரம், பண்பாடு, கற்பு என பேசவோ அல்லது சொல்லித்தரவோ மறுத்துவருகிறது. அதனால்தான் அதன்மீது பெரும் ஈர்ப்பு இருந்துவருகிறது.

 

கடந்த ஒருவாரம் இந்த செய்தி இணையத்தில் பரவியது, இன்று அது பிரபல செய்தித்தாளிலும் வந்துள்ளது. இதை இவ்வளவு டீப்பாக செய்தியாக்கவேண்டியதன் அவசியம் எங்கிருந்துவருகிறது என்றால் காமத்தை புனிதமாக்கி வைத்திருப்பதால்தான் திருமணத்துக்கு பிந்தைய பாலியல் உறவுக்கான பிரபலமான மொபைல் ஆப் பாம் அது. அதில் 40 லட்சம் இந்தியர்கள் இணைந்துள்ளார்களாம். பெங்களுரூ முதலிடம், ஐதராபாத், டெல்லி, மும்பை போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக கூறுகிறது அச்செய்தி. அந்த செய்தியில் நுணுக்கமாக ஒன்றை பதிவு செய்துள்ளார்கள். அதாவது, இந்த ஆப் பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் அதிகமாக இணைந்துள்ளார்கள் என்பதாகும். அதுயென்ன பெண்கள் அதிகமாகிறார்கள்? ஆண்களுக்கு மட்டும்தான் முட்டிக்கிட்டு பாலியல் உணர்வு வரும், பெண்களுக்கு பாலியல் உணர்வு எழாதா? அவர்கள் என்ன மரக்கட்டையா? பொம்மையா? ஜடமா?

 

ஆணுக்கு எப்படி பாலியல் உணர்வு எழுமோ, அதேபோல் பெண்ணுக்கும் வரும். மூன்றாம் பாலினத்தவருக்கும் பாலியல் உணர்வு எழும். அது மனிதனின் உடல் ஹார்மோன் செய்யும் செயல். குறிப்பிட்ட வயது வந்ததும் பாலியல் உணர்ச்சி தானாகவே எல்லா உயிரினங்களுக்கும் வரும். மனிதர்கள் அந்த உணர்ச்சியை சட்டப்படி அல்லது உரிமைப்படி போக்கிக்கொள்ளத்தான் திருமணம் செய்துவைப்பது. இந்த திருமணம் வழியாக பாலியல் தேவை தீர்வு ஏற்படுவதோடு தங்கள் சந்ததியை உருவாக்கவும் முடிகிறது.

 

கள்ள உறவுகளில் ஆண்கள் அதிகரித்தால் தப்பில்லை? பெண்கள் அதிகரித்தால் தப்பா என்ன? திருமணத்துக்கு பிந்தைய உறவுகளை ஏன் நாடுகிறார்கள்?  

 

தங்களது இணையர் தனக்கான பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதபோது இப்படிப்பட்ட கள்ளஉறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதற்கும் வாய்ப்பில்லாதவர்கள் இதுப்போன்ற ஆப்களை தங்களுக்கான வடிகால்களாக பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம் நடக்கும் குற்றசம்பவங்கள், மோசடிகள் தனி.

 

இப்படியொரு இக்கட்டான நிலையை வைத்திருப்பது நமது சமூக கட்டமைப்பும், கல்வியும் தான். கோவில்களில் பாலியல் சிற்பங்கள் இருக்கலாம். கல்வி நிலையங்களில் கூடாது என்பது என்ன லாஜிக் எனத்தெரியவில்லை. பாலியல் கல்வி பாடம் பள்ளி – கல்லூரியில் இருந்தால் அதுக்குறித்து தெரிந்துக்கொள்வார்கள், வீட்டில் பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் அதுக்குறித்து பேசி, விளக்கினால் இப்படியொரு நிலை வராது.  

 

கலவியில் தனக்கு என்ன தேவை என்பதை இணையர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்வது இல்லை, புரிந்துக்கொள்வதும் இல்லை. காரணம் நாம் கேட்டால் கணவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என பெண்களும், எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும் என்கிற ஏகாம்பரமாக ஆணாதிக்கவாதியாக இருக்கிறார்கள். கணவன் – மனைவியே வெளிப்படையாக பாலியல் குறித்து பேசிக்கொள்ள முடியாத அளவுக்கே இச்சமூகம் அதனை கட்டமைத்துவைத்துள்ளது. கட்டிலறை என்பது இணையர்களின் மனசாட்சி பேசும் இடம். இணையர்களின் மனசாட்சி அங்கே பேசவில்லை என்றால் இதுப்போன்ற ஆப் வழிதான் பேசவேண்டி வரும்.


 

 

மேற்கத்திய நாடுகளில் பாலியல் உணர்வுகளை, உறவுகளை குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே பெற்றோர்கள் புரியவைக்கிறார்கள், அதனால் அவர்கள் வளர்ந்தபின்பும் அதனை சாதாரணமாக கடந்துப்போகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அரைநிர்வாண போராட்டம், முழுநிர்வாண போராட்டம் என நூற்றுக்கணக்கான பெண்கள் நடத்துவர். ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பார்த்துக்கொண்டு கடந்துப்போவார்கள். கடற்கரைகளில் குளியலறை உடையுடன் குவிந்துக்கிடப்பார்கள், யாரும் அதனைப்பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆசிய நாடுகளில் நாம் நம் பிள்ளைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதில்லை, கல்வியும் கற்றுத்தருவதில்லை. அதனால் இங்கே லேசாக பெண்களின் இடுப்பு தெரியுமா? கிளிவேட்ச் தெரியுமா? என அலையவைக்கிறது. அவையெல்லாம் உடலின் பாகங்கள் என உணராமல் அதைப்பார்த்து கிளர்ச்சி அடையவைக்கிறது. அதனால்தான் இதுப்போன்ற உறவுகள் அதிகரிக்கிறது. இன்று தன்னிடம் 40 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளதாக கூறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அது அதிகரிக்கவே செய்யும். ஏன் எனில் 90s, 2K, GenZ புதுமையை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளி, பிப்ரவரி 20, 2026

ஹீக்அப் கலாச்சாரம்.


நாம் கல்லூரியில் படிக்கும்போது நமக்கு பிடித்த பெண் நம்மை ஒருமுறை திரும்பி பார்க்கமாட்டாளா என மனம் ஏங்கும் தலைமுறை இருந்தது.

காதல் கடிதம் தந்துவிட்டு பதில் வருமா? அண்ணன்களை அழைத்துவருவாளா எனத்தெரியாமல் தவித்த தலைமுறை உண்டு.

அவள் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தவன், போன் செய்து ஹலோ சொல்ல வாரக்கணக்கில் பயந்த தலைமுறை உண்டு.

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டையில் காதலை வெளிப்படுத்திவிட்டு பதில் வருமா என காத்திருந்தவர்கள் உண்டு.

காதல் வந்தாலும் பார்த்து பேசிக்கொள்வது என்பது கனவாகவே இருந்த தலைமுறையும் உண்டு.

அந்த தலைமுறையெல்லாம் பூமராகிவிட்டார்கள். இன்றைய தலைமுறை வாழ்வியல் முறை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. காதலுக்காக காத்திருப்பதும், கத்தி குத்துகளும், அடிதடிகளும், வீட்டை விட்டு ஓடிப்போவதும், திருட்டு கல்யாணம் செய்துக்கொள்வதுயெல்லாம் கடந்துப்போய் மாமங்கமாகிவிட்டன.

காதல் என்பதற்கு புது அகராதியை உருவாக்கியிருக்கிறது இன்றைய Gen Z தலைமுறை. புதுப்புது ரிலேசன்ஷப்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது புதியதாக ஹீக்கப் கலாச்சாரம் என ஏதோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் போல. அது லிவிங் டூ கெதர் போன்றது என்கிறார்கள். லிவிங்கில் ஒரு கமிட்மென்ட் இருக்கிறது. இந்த ஹீக்அப் கலாச்சாரத்தில் அப்படியொரு கமிட்மென்ட் கூட கிடையாதாம். அதாவது கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், உடலுறவு இதனை சாதாரணமாக செய்துக்கொள்வதுதான் ஹீக்அப் கலாச்சாரமாம்.

மச்சி வா போய் டீ சாப்பிட்டுட்டு வருவோம், டார்லிங் வா டின்னர் போகலாம் என அழைப்பதுப்போல் டீல் செய்கிறார்களாம் இந்த ஹீக்அப் கலாச்சாரத்தில். மெட்ரோ சிட்டிகளில், கார்ப்பரேட் பணிகளில் அதாவது ஐடி செக்டாரில் பணியாற்றும் இடங்களில் வாரஇறுதியில் பப் களுக்கு போகும்போது, வெளியே ப்ரண்ட்ஸ் டூர் போகும் இடத்தில் நடக்கிறது என்கிற தகவல்கள் பூமர் அங்கிள்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

2008, 2009 காலக்கட்டத்தில் பிரபலமான இந்தியா டுடே இதழில் பாலியல் சார்ந்த கருத்து கணிப்பு கட்டுரைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும். திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்கு பின்பு பாலியல் உறவுகள், பாலியல் நட்புகள், உறவு பொஷி***சன்ஸ், லெஸ்பி என பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சர்வே எடுத்து வெளியிடுவார்கள், ஒவ்வொரு ஆண்டும் அது பரபரப்பாக பேசப்படும். (அந்த சர்வே வெளியீட்டின் பின்னால் வேறு வர்த்தக காரணங்கள் உண்டு) ஆண்டு நினைவில் இல்லை இந்தியா டுடே தமிழ் பதிப்பில் வெளியான பாலியல் உறவு குறித்து நடிகை குஷ்பு சொல்லியிருந்த கருத்து தமிழ்நாட்டில் புயலை உருவாக்கியது. ( தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு என்னவாவது என சிலகட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஊருக்கு ஊர் அவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள். அதன்பின்தான் குஷ்பு அரசியலுக்குள் நுழைந்தார்.)

அப்போது மேற்கத்திய கலாச்சாரம் என நாம் சொல்லிக்கொண்டுயிருந்த கலாச்சாரங்கள் தமிழ்நாட்டின் மெட்ரோநகரங்கள் வரை டேட்டிங் கலாச்சாரம், லிவிங் டூ கெதர், மைக்ரோ ஷிப்ட், Situationships, Open Relationships, ஒன் நைட் செக்****ஸ், ஹீக்அப் என்கிற பெயரில் பரவி அது உலக கலாச்சாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. எனக்கு தெரிந்ததே இவ்வளவு என்றால் இன்னமும் என்னன்ன மாதிரி இருக்கும் எனத்தெரியவில்லை.

GenZ தலைமுறையே இப்படியென்றால் ஆல்பா தலைமுறை வேறு உருவாகி இருக்கிறது, 15 வயதிலேயே GenZ யை தூக்கி சாப்பிடும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வரும் காலங்களில் இன்னும் என்னன்ன செய்யப்போகிறார்கள் எனத்தெரியவில்லை.


திங்கள், பிப்ரவரி 02, 2026

உலக தலைவர்களை மிரட்டும் பாலியல் புரோக்கரின் ஆவணம்.

 

அமெரிக்கா நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பில்கேட்ஸ், பிரதமர் மோடி, கிளிண்டன் என பல உலகமே அதிர்ச்சியாகிறது. அதிகாரத்தில் இருப்பவர் இதனை கடந்துப்போவார்கள். அவர்கள் கவலைப்படுவது, அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற மக்களிடம் நல்லவர் என்கிற பிம்பம் தேவை. அது உடைவதால்தான் பதறுகிறார்கள்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் போல் பாலியல் தரகர்கள் உலகம் முழுவதும்மே கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உண்டு. சாதாரண மக்களுக்கு தெரியாது, ஆட்சி அதிகாரத்திலுள்ள பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சமூகத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியும். இந்த பிரபலங்களின் பாலியல் தேவையை வெளியுலகத்துக்கு தெரியாமல் பூர்த்தி செய்துதரும் புரோக்கர்கள் தேவை. தங்களுக்கு தேவையானதை கச்சிதமாக செய்துதந்துவிட்டால் அந்த புரோர்க்கர்களுக்கு என்ன தேவையோ அதை இவர்கள் தங்களது அதிகாரத்தை வைத்து செய்துதருவார்கள். இது ஆதிகாலம் முதல் இப்போதுவரை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

 நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

 எம்.ஜி.ஆர் உயிரை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவருக்கு தரப்பட்ட சன்மானம் என்ன?

 1991 – 1996 ஜெயலலிதா ஆட்சியில் கவர்னருக்கு தரப்பட்ட விருந்து என்ன?

 ஆட்டோ சங்கர் எழுதிய மரணவாக்குமூலம் நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்தபோது, சமூகம் மதித்த அரசியல் பிரபலங்களின் கறுப்பு பக்கம் தெரிந்து மக்கள் அதிர்ச்சியாகவில்லையா?

 2005 காலக்கட்டததில் ஆந்திராவை சேர்ந்த பாலியல் புரோக்கர் ஒருவர் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டாரே நினைவில் இருக்கிறதா? அவரின் வாக்குமூலம் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பிம்பத்தை உடைத்தது.

 

அதற்கு முன்பு பிரபல மருத்துவர் பிரகாஷ் என ஒருவர் இருந்து, இளம்பெண்கள், குடும்ப பெண்களை பிரபலங்களுக்கு பாலியல் சேவை செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் விற்று தண்டனை பெற்றாறே அவரின் வாக்குமூலம் நினைவில் இருக்கிறதா?

 தமிழ்நாட்டில் பாலியல் புரோக்கராக இருந்தவர்கள் கடந்தக்காலத்தில் எம்.எல்.ஏக்களாக அமைச்சர்களாகி நம் கண்முன் இப்போதும் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

 நமது இந்தியாவின் உச்ச அதிகாரத்தில் உள்ளவர் உத்தரவில் நடத்தப்பட்ட சொரபுதின் என்கௌண்டர் வழக்கு எதற்கானது?

 இது எல்லாமே அதிகாரத்தில் இருப்பவர்களின் பாலியல் வேட்கைக்காகத்தான். புரோக்கர்களை அதிகாரவர்க்கம் பாதுகாக்கும். தங்கள் கைமீறி செல்லும்போது பலி தந்துவிடும். அப்படி பலி தந்தவர் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்………. ஜீன் லூக் புருனெல் போன்றவர்கள்.

 இது அமெரிக்கா அதிபர் முதல் உள்ளுர் கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் இதுதான் எழுதப்படாதவிதி.

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026

அமெரிக்கா முதல் இந்தியா வரை பரபரப்பாக்கியுள்ள எபஸ்டின் பைல்ஸ். - உலக தலைவர்களை தலைகுனிய செய்த ஆவணங்கள்.

 





30 லட்சம் பக்கங்களை கொண்ட "எப்ஸ்டின் பைல்ஸ்" வெளியாகி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் முதல் பல நாட்டு பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போது அமெரிக்காவை தாண்டியும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.  

 

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் யார்?

 

இவர் ஒரு அமெரிக்க கோடீஸ்வரர். இவர் வங்கி மற்றும் நிதி தொடர்பான பணியில் இருந்ததாகவும், அதனால் இவருக்கு அமெரிக்காவின் அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுடனும் மிக நெருக்கமான நட்பு இருந்தார். ஏராளமான, சிறுமிகளையும் இளம்பெண்களையும், ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, அவர்களை பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய மிக மோசமான பாலியல் குற்றவாளியாக இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

 

கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.  "லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்" எனும் தீவில், சிறுமிகளை ஏமாற்றி கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுவந்தது. 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், புளோரிடா பொலிஸாரிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் வைத்து தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் ஒன்றை தந்தார்கள். விசாரணையை ஆரம்பித்த  புளோரிடா காவல்துறையினர், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் Palm Beach வீட்டில் நடத்திய சோதனையில்  அங்கிருந்து  சிறுமிகளின் புகைப்படங்களை கைப்பற்றினர். ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார்.  எனினும் ஜெஃப்ரி எப்ஸ்டீனை கைது செய்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். அதன்பின் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் 2019 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலுக்காக குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு வலையமைப்பை (Network) நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார். அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. எப்ஸ்டீன் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதி சிறையில் வைத்தே அவரது கதையை முடித்துவிட்டார்கள் என பரபரப்பாகின.

 

எப்ஸ்டின் பைல்ஸ் என்றால் என்ன? 

 

ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார் என வழக்கு முடிக்கப்பட்டது. எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லேன் மாக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். அமெரிக்க நீதிமன்ற சட்டப்படி வழக்கு முடிவுக்கு வந்தபின் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் அவை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும். அதன்படி குற்றவாளியாக அறியப்பட்டு, உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற நபர் பற்றிய நீதிமன்ற ஆவணங்கள் தான் எப்ஸ்டின் பைல்ஸ். 

 

ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் என சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் அடங்கிய 300GB அளவிலான ஆவணங்களை அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ சேமித்து வைத்திருந்தவற்றைத்தான் அமெரிக்கா நீதித்துறை ஜனவரி இறுதியில் நீதித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றி வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள "எப்ஸ்டின் பைல்ஸ்" உள்ள தகவல்தான் இந்தியா வரை பரபரப்பாக்கியுள்ளன.

 

அதில், அமெரிக்க ஜனாதிபதியாவுள்ள டொனால்ட் ட்ரம்ப், 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் வைத்து 13-14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை ட்ரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். அப்போது அச்சிறுமி தற்காப்புக்காக ட்ரம்ப்பைக் கடித்ததாகவும், அதற்காக அவர் அச்சிறுமியின் முகத்தில் தாக்கியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

ட்ரம்ப்பின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் நடைபெற்ற விருந்துகளில் ஈலோன் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதாக எப்ஸ்டின் பைல்ஸ் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

 

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் குறித்து கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 18 ம் திகதி ஈ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், "Microsoft இன் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தார். அதன்பிறகு பாலியல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளை நாடினார்.  இந்த ஈ-மெயிலை அழிக்க பில்கேட்ஸ் வலியுறுத்தினார்'' என்ற விவரங்கள் உள்ளன. பில்கேட்ஸ் - மெலிண்டா ஆகியோர் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்தனர். அதன்பிறகு இருவரும் விவகாரத்து செய்தனர். அந்த சமயத்தில் பில்கேட்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில் எப்ஸ்டீன் உடனான தனது நட்பும் விவகாரத்துக்கு ஒரு காரணம்'' என்று கூறியிருந்தார்.

 

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், 26 வயது ரஷ்ய இளம்பெண் ஒருவரை ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் எப்ஸ்டீன். அவரது மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஆண்ட்ரூ, தான் ஐரினா என்னும் அந்த ரஷ்ய இளம்பெண்ணை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் எப்ஸ்டீனுடைய மாளிகைக்கு விருந்துக்குச் சென்றபோது, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் 17 வயது பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாக பின்னாட்களில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்ததால் ஆண்ட்ரூவையும் அவரது மனைவியும் அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்கள். அதற்கான ஆவணங்கள் அதில் உள்ளன.


 

ஜெப்ரி எப்ஸ்டீன் விசாரணை ஆவணங்களில், அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு மெலானியா ட்ரம்பிற்கும், எப்ஸ்டீனின் உதவியாளரும் காதலியுமான கிஸ்லேன் மாக்ஸ்வெல்லிற்கும் (Ghislaine Maxwell) இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் உரையாடல்கள் இதில் அம்பலமாகியுள்ளன.

 

2002 அக்டோபரில் மெலானியா எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், "அன்புள்ள G! எப்படி இருக்கிறீர்கள்? நியூயார்க் இதழில் எப்ஸ்டீன் (JE) பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அந்த புகைப்படததில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ஸ்வெல் மீண்டும் நியூயார்க் வரும்போது தன்னை அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மெலானியாவின் மின்னஞ்சலுக்கு பதிலளித்த மாக்ஸ்வெல், அவரை "Sweet pea" என குறிப்பிட்டு, தனது பயணத்திட்டங்கள் மாறியுள்ளதால் தற்போதைக்குச் சந்திக்க முடியாது எனச்சொல்லியுள்ளார். இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காலத்தில் மெலானியாவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் திருமணம் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது. 

 

இந்த வரிசையில் நம்ம இந்திய பிரதமர் மோடியை 2017ல் நடனம் ஆடச்சொன்னதாக அதில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் உள்ளது. நான் சொன்னதுப்போல் இந்திய பிரதமர் நடந்துக்கொண்டார் என ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

 

இந்த விவகாரம் இன்னும் சிலமாதங்களுக்கு உலகநாடுகளில் பரபரப்பாக இருக்கும்.