சனி, மே 28, 2011

சமச்சீர் கல்வி ‘ அம்மாவின் ‘ பிராமணிய திட்டம்.


நகரத்தில் உள்ள ஆல்பர்ட் வீட்டு பையனும், அருள் குடும்பத்தது மகளும் கற்கும் கல்வியை கிராமத்தில் உள்ள குப்பன் வீட்டு பையனும், சுலைமான் வீட்டு பெண்ணும் படிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். காரணம், தமிழகத்தில் ஸ்டேட் போர்டு கல்வி திட்டம், மெட்ரிக்குலேஷன் பாட திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடதிட்டம், ஓ.எஸ்.எல்.சி பாடத்திட்டம், மத்தியரசின் சி.பி.எஸ்.சி கல்வி திட்டம் என 5 வகை உள்ளது. இதில் ஏழை, கிராமத்து பிள்ளைகள் படிப்பது ஸ்டேட் போர்டு கல்வி திட்டம், நடுத்தர, பணக்கார வீட்டு பிள்ளைகள் படிப்பது மெட்ரிக் அ சி.பி.எஸ்.சி பாட திட்டம்.

ஸ்டேட் போர்டு கல்வி திட்டத்தில் சேரும் பிள்ளைகளுக்கு அவ்வளவாக செலவு ஆகாது. ஆனால் மற்ற பிரிவில் சேரும் பிள்ளைகள்க்கு எக்கச்சக்கமாக செலவாகும். உ.ம் எல்.கே.ஜி சேர்த்தாலே 50 ஆயிரம் பிடுங்கி விடுவார்கள். பணம் பிடுங்க வேண்டும் என்பதற்காக பலர் மெட்ரிக், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்துக்கு அனுமதி வாங்கி பள்ளி தொடங்கி கல்வி கொள்ளையடிக்கின்றனர். வாங்கிய பணத்திற்க்கு விசுவாசமாக பாடம் நடத்துகிறார்கள் அதை மறுப்பதற்க்கில்லை.

ஆனால், பிள்ளைகள் 12 வது முடித்தபின் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 12வதுக்கு பின் இன்ஜினியரிங், மெடிக்கல், ஆர்ட்ஸ் காலேஜ் எது சேர வேண்டும் என்றாலும் கட் அப் மார்க், நுழைவு தேர்வு ஆகியவை வைக்கப்படுகிறது. இதில் தான் ஸ்டேட் போர்டு பிள்ளைகளுக்கு சிக்கல் ஆரம்பமாகிவிடுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ-இண்டியன், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில்  படித்த பிள்ளைகள் ஆங்கில அறிவு மற்ற மொழி அறிவு இருப்பதாலும், ஸ்டேட் போர்டை விட உயர்வான கல்வி கிடைப்பதால் அதிகமான மார்க் எடுக்கின்றனர். கட் அப் மார்க் அதிகம் கிடைக்கிறது, நுழைவு தேர்வு ஈசியாக எழுதி கல்லூரி படிப்பில் அதிக இடங்களை பிடித்துக்கொள்கின்றனர். ஸ்டேட் போர்டில் படிக்கும் பிள்ளைகள் ஏழை விட்டு பிள்ளைகள் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதிக மார்க் எடுக்க முடிவதில்லை. இதனால் இவர்களின் கல்லூரி படிப்பு கானல் நீராகவே போய்விடுகிறது.

இதனை எப்படி மாற்றலாம் என கல்வியாளர்கள் யோசித்தபோது, ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தை தற்போதைக்கு மத்தியரசின் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை போல மாற்ற முடியாது. அதற்க்கு பதில் புதிய தரமான புதிய பாடத்திட்டத்தை மெட்ரிக் தரத்தில் உருவாக்கலாம் அது எல்லா பிரிவிற்க்கும் சரிசமமாக இருக்கும்படி செய்யலாம் என யோசித்தே சமச்சீர் கல்வி என்ற முடிவை எடுத்தனர்.

அதை அரசாங்கத்திடம் பல ஆண்டுகளாக முறையிட்டனர். கடந்த முறை ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசாங்கம் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால் சரியாக இருக்குமா என பல கட்டமாக ஆராய்ந்து, சரிப்பட்டு வரும்மென முடிவு செய்து கல்வியாளர்களை கொண்டு சமர்ச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி கடந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பில் சமச்சீர் பாடத்திட்டத்தை புகுத்திவிட்டார்கள். பொறியியல் கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்தார்கள். இதனால் மார்க் இருந்தால் போதும் என்ற நிலையில் பணக்கார, நடுத்தர வீட்டு பையன், பெண்ணை போல ஏழை வீட்டு பையனும், பொண்ணும் கல்லூரிக்குள் நுழைந்தனர்.


இந்த ஆண்டு முதல் எல்லா வகுப்புக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தை அமல் படுத்த 200 கோடி செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம், தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ-இண்டியன், ஒ.எஸ்.எல்.சி பாடப்பிரிவுகள் இருக்காது. இதனால் ஏழை வீட்டு பையனாக இருந்தாலும், பணக்கார வீட்டு பையனாக இருந்தாலும் சரிசமமான கல்வி கிடைக்கும். வெற்றி தோல்வி சரிசமமாக இருக்கும். இத்திட்டத்தை தமிழகத்தின் பெரும்பாலான பெற்றோர்கள், கல்வியாளர்கள் வரவேற்றனர். ஆனால் தனியார் பள்ளி கூட்டமைப்பு சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. அரசு சொல்வதை கேட்க சொன்னது நீதிமன்றம்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வரானார் ஜெயலலிதா. சமச்சீர் பாடத்திட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் செம்மொழி பாடல், படம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்க்காக சமச்சீர் கல்வி திட்டத்தையே ரத்து செய்துவிட்டார். அதேபோல் பள்ளி கட்டணம் சீரமைப்பு குழு தனியாக செயல்படுகிறது. இதில் அரசு தலையிட முடியாது. தனியார் பள்ளிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே அரசு தலையிடும் என அறிவிவத்துவிட்டார்


எனக்கென்னவோ, கருணாநிதிக்காக மட்டும் அப்பாடத்திட்டத்தை ரத்து செய்துயிருக்க மாட்டார் என எண்ண தோன்றுகிறது. காரணம். ஜெ படித்தது கான்வென்ட்டில். அதனால் அவர் பேச்சில் கான்வென்ட் என்கிற தனியார் பள்ளிகள் மீதான் ‘காதல்’ அவர் பேச்சில் அதிகம் வீசும். அதேபோல் அவர் வாழ்வில் ஏழைகளை கண்டால் ஆகாது. அதற்க்கு காரணம் அவரின் பிறப்பு மற்றும் அவர் சார்ந்த பிராமண சமுகம். மற்றவர்கள் படித்தால் தங்களுக்கு சிக்கல் என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள். அந்த சமுகத்தை சார்ந்தவர் எப்படி மற்றவர்கள் படிக்க வேண்டும் என எண்ணுவார். மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என எண்ணியிருப்பார். அதனால் தான் சமச்சீர் கல்வி திட்டத்தை ஊத்தி மூடிவிட்டார் எப்படி அம்மாவின் திட்டம்.

12 கருத்துகள்:

 1. ஸ்ரீதர்சனி, மே 28, 2011

  //..என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள்.//

  அந்த வர்ணசிரம கொள்கையை கையில் பிடித்து தன் குடும்பம் தழைக்க நியாயபடுத்திய கருணாநிதி ஒரு பிராமணர்.

  அப்பொழுது இந்த கேள்வி கேட்க முதுகெலும்பில்லாத கூட்டம் இப்ப ஜெயலலிதா வந்த உடன் குரைப்பது இந்த நாட்டில் பேச்சுரிமை இருப்பது உங்க மாதிரி இரட்டை நாக்கு பேர்வழிக்களுக்கு நல்லது தான்.

  உங்கள மாதிரி ஆட்கள் இருக்கும் வரை நாங்கள் பிராமணராக இருப்பதற்க்கு பெருமை படுகிறோம்.

  ஸ்ரீதர்

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாசனி, மே 28, 2011

  மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.தேர்தலுக்கு முன்பே பிராமணக்கூட்டம் சமச்சீர்க் கல்விக்கு எதிராய் சதித் திட்டம் தீட்டி விட்டனர்.அம்மா வந்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஞாயிறு, மே 29, 2011

  அரசியல் நோக்கத்துடன் பார்க்காமல், கலவியின் தரத்தை மட்டும் பார்த்து கருத்து சொல்லுங்கள். தினம் கூலி பெறுபவன் கூட தன் பிள்ளைகள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக மெட்ரிக் பள்ளிகளில் தன் பிள்ளைகளை சேர்க்க விரும்புகிறான். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி விட்டு, பிறகு சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வருவது சிறந்தது. ஒரு ஆசிரியயாக, தரமில்லாத சமச்சீர் கல்வி பாடங்களை எதிர்க்கிறேன். இந்த அரசு தரமான சமச்சீர் கல்வியை வழங்கவேண்டும் , அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாதிங்கள், மே 30, 2011

  //மற்றவர்கள் படித்தால் தங்களுக்கு சிக்கல் என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள். அந்த சமுகத்தை சார்ந்தவர் எப்படி மற்றவர்கள் படிக்க வேண்டும் என எண்ணுவார்//
  இந்த நூற்றாண்டின் பிறப்பு முதல் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது வரையாவது பள்ளிகளில் அதிகம் ஆசிரியர்கள் அந்த குலத்தை சேர்ந்தவர்களே' தமிழ் நாட்டில் கல்வி அனைத்து சாதியினரிடேயும் வளர்வதற்கு அவர்கள் முக்கிய காரணம்; பிற சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்று நினைத்தவர் இல்லை. உங்கள் மனசாட்சியை அல்லது உங்கள் தந்தையை கேட்கவும்.
  சமச்சீர் கல்வியை கடாசுவது ஜெயலலிதாவின் குரங்குத்தனம்.அதற்கு பிராமணர் என்று காரணம் கூறாதீர். இந்த சாதியை எல்லா விஷயத்துக்கும் இழுப்பது கருணாநிதியுடன் போகட்டும்.

  பதிலளிநீக்கு
 5. ராஜ்ப்ாியன்திங்கள், மே 30, 2011

  பெயாில்லாத நண்பர்கள்க்கு வணக்கம்,

  1. 1970 வரையில் கல்வித்துறையில் பிராமணர்களின் ஆதிக்கம் இருந்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறிர்கள் நன்றி. அந்த காலத்தில் தான் அவர்களின் சாதி பிாிப்பு என்பது அதிகமாக இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள். அதேபோல் அன்று படித்தவர்கள் அனைவரும் பிராமணர்கள் அதற்கடுத்த நிலையில் இருந்த சாதியினர் தானே தவிர மற்றவர்கள் இல்லை. 70க்கு பின் காலம் மாறியது. அவாக்களின் ஆட்டம் குறைந்தது. அவர்களின் காலத்தில் தான் கல்வித்தரம் உயர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ளமறுக்கிறேன். அதோடு அந்த காலத்தில் ஒரளவு சிறந்த பிராமண ஆசிாியர்கள் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்க்கில்லை. ஆனால் சாதி பார்த்தவர்குள் தான் அதிகம். காலப்போக்கில் மற்ற சாதியினர் அதிகளவில் படித்தனர். கல்வி துறை உட்பட பல துறைகளில் உள் நுழைந்தனர். இது பெரும்பாலான பிராமணியர்களுக்கு பிடிக்கவில்லை . அவர்களின் தூண்டுதல் தான் நீங்கள் கூறியதை போல குரங்குதனத்தை ஜெ செய்கிறார். அந்த பெரும்பாலானோாில் அவரும் ஒருவர். அவர் அந்த சாதியை சார்ந்தவர் என்பதால் தான் அப்படி நடந்துக்கொள்கிறார்.

  2. சமச்சீர் கல்வி தரம்மில்லை என்று எதை வைத்து நீங்கள் கூறுகிறிர்கள் நண்பரே. கூலி வேலை செய்பவன் கூட மெட்ாிக் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்புகிறான் என்கிறிர்கள் உண்மை தான். அதற்க்கு காரணம் என்ன என்பதை விளக்கமாக கூறினால் நீங்கள் அதிகம் வருத்தபடுவீர்கள். ஏன் எனில், குறைபாடு என்பது அரசு பள்ளிகளிலோ, பாடத்திலோ இல்லை ஆசிாியர்கள் இடத்தில் தான் உள்ளது. அரசு ஊழியர்களின் நாங்கள் சமுகத்தில் உயர்ந்தவர்கள் என்ற மனநிலையில் உள்ளது. பந்தாவினால் தான் கூலிக்காரனும் மாறிப்போனான். இதற்க்கு முழு காரணத்தை அரசு ஊழியர்களும், ஆசிாியர்களும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைப்பற்றி விாிவான கட்டுரை நிச்சயம் விரைவில் வெளியிடுகிறேன். அதைப்படித்து பார்த்துவிட்டு கருத்து வெளியிடுங்கள்.

  3. நீங்கள் பிராமணராக இருங்கள் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உங்கள் வளர்ச்சிக்காக மற்றவர்களை அழிக்காதீர்கள் தான் என கூறுகிறோம். இரட்டை நாக்கு எங்களுக்கல்ல. அவர் குடும்பம் வாழ்ந்தாலும் அவருடைய ஆசான் பொியார், அண்ணா போன்றவர்கள் உங்கள் ஆதிக்கத்தில் இருந்து லட்சகணக்கான குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்கள். அதற்க்கு பெருமைபடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 6. Sridhar

  He is arguing for and against something. U r talking abt something.

  Write to the point: Do u accept the scrapping of equal education for all ?

  பதிலளிநீக்கு
 7. Simmakkal

  When someone argues with an idea of propagating his agenda (of criticising a community) by hiding behind a issue to make fools think he is arguing something for the benefit of the society, the idea has to be stripped in public and i am doing that.

  If you do not understand this or want to act like not understanding this, kindly join him i am least bothered.

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லாபுதன், ஜூன் 08, 2011

  Sridhar

  U can go to Paaraagavan's blog who has written extensively on the scheme of education welcoming it.

  U can say whether u r for or against it.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா,

  The intention of the post is to spread the agenda of the person who posted, by hiding behind an issue.

  I am here to expose the agenda and bring to the forefront that the intention is not public.

  பதிலளிநீக்கு
 10. Sridhar alias Indian

  "அதற்கு காரணம் அவரின் பிறப்பு மற்றும் அவர் சார்ந்த பிராமண சமுகம். மற்றவர்கள் படித்தால் தங்களுக்கு சிக்கல் என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள். அந்த சமுகத்தை சார்ந்தவர் எப்படி மற்றவர்கள் படிக்க வேண்டும் என எண்ணுவார். மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என எண்ணியிருப்பார். அதனால் தான் சமச்சீர் கல்வி திட்டத்தை ஊத்தி மூடிவிட்டார் எப்படி அம்மாவின் திட்டம்."

  ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்காரணம் அவரின் ஜாதிப்புத்தி என்கிறார் பதிவாளர். அதன்படி, பார்ப்பனராகப் பிறந்த எந்தவொருத்தியும், அல்லது ஒருவனும் சமூகத்தின் அடித்தள மக்கள், அல்லது பார்ப்ப்னரல்லாத மற்றவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது கிடையாது. முதலாளித்துவ மற்றும் ஆதிக்கச்சக்திகளோடுதான் தங்களைச் சேர்த்துக்கொண்டு வாழ்பவர்கள். இன்று மட்டுமல்ல. ஆதிகாலமுதல். இதைத்தான் இப்பதிவாளர் மனதில் வைத்துச்சொல்கிறார். இதுவே சமச்சீர் கல்வியை ஜெயலலிதா ஒதுக்கித்தள்ளியதன் காரணம் என்கிறார்.

  இது சரியா தவறா என்பதைச் சொன்னால் போதும்.

  மாறாக, இவரை ஜந்து என்றும் நான் பிராமணனாகப் பிறந்ததில் பெருமை அடைகிறேன் என்பதும் ஏன்?

  ஒருவன் தன்னைப்பிராமணன் என்றால் வருணக்கொள்கையைப் பிடித்துச் சரியென்று சொல்லி வாழ்கிறான் என்று பொருள். அதைத்தானே இவர் சாடுகிறார் ? வருணக்கொள்கை பிராமணன் என்று சொல்லி தன்னை உசத்திக்கொள்ள உருவாக்கப்பட்ட கொள்கை. இதை மற்றவர்கள் எதிரிப்பதில் என்ன தவறு ?

  From

  Amalan

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா alias Amalan,

  The post is not about what is in the Topic, so i am touching the crux of the post.

  I am proud to be a Brahmin till such "ஜந்து", who shamelessly hide behind issues, are here in this world.

  பதிலளிநீக்கு