புதன், மே 11, 2011

வீம்பு காட்டும் தேர்தல் ஆணையம்.



இந்தியாவில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவர்கள் விவகாரத்தில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது என்பது சரிதான். ஆனால் அவர்கள் நடந்துகொள்ளும் முறையால் அவர்கள் மீது சந்தேகம் தான் வருகிறது. இன்று எதிர்க்கட்சிகள் தங்களது அரசியலுக்காக அவர்களின் அதிகாரத்தை கண்டுக்கொள்ளாமலோ அல்லது தங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் விட்டுவிடலாம். ஆனால் காலப்போக்கில் அது பெரிய பிரச்சனையாக வெடிக்கும்.

தமிழகத்தை போல தேர்தல் முடிந்து கடந்த 1 மாத காலமாக கேரளா, பாண்டிச்சேரி உட்பட 3 மாநில அரசியல் கட்சிகளுடன் பொதுமக்கள் ரிசல்ட்க்காக காத்துயிருக்கிறார்கள். தேர்தல் தேதி நடைமுறையில் இருப்பதால் எந்த அரசு பணியும் நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. வருவாய்துறை ஊழியர்கள், காவல்துறையினர் வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க சென்று விட்டார்கள். இதனால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் சான்றிதழ்கள் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள். காவல்நிலையங்களில் வழக்குகள் தூங்கிக்கொண்டு இருக்கின்றன.

தற்போது தேர்தல்க்கு முன்பு பண்ண அலப்பரையை விட அதிகமாக வீணாக அலப்பறை செய்கின்றன. கோடிக்கணக்கான பணத்தை சும்மா பந்தாவுக்காக பாதுகாப்பு என்ற பெயரில் வாரி இறைக்கின்றது. 234 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அங்கங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குகளை எண்ண 15 டேபிள்கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு டேபிளிலும் 2 அலுவலர்கள் இருப்பார்கள். எதிரே அரசியல் கட்சி, சுயேட்சைகளின் முகவர்கள் இருப்பார்கள். வாக்கு பெட்டிகள் ஒவ்வொரு ரவுண்ட்டுக்கு கொண்டு வரப்பட்டதும் இயந்திரத்தின் பட்டன் அமுக்கப்படும் அது பதிவான வாக்குகள் எவ்வளவு, எந்த சின்னத்துக்கு எவ்வளவு வாக்கு என்பதை அறிவிக்கும் அதை அங்குள்ள முகவர்கள் குறித்துக்கொள்ளுவார்கள். வாக்கு மைய பொது அதிகாரி ஒவ்வொரு டேபிளாக சென்று எண்ணிக்கையை குறித்துக்கொண்டு டோட்டல் போட்டு முதல் ரவுண்ட் படி யார் யார் எவ்வளவு வாக்கு வாங்கியிருக்கிறார்கள் என்பதை பலகையில் எழுதுவார், அதை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவார். பின் இரண்டாவது ரவுண்ட்க்கு பெட்டிகள் எடுத்து வரப்படும். இது தான் கடந்த தேர்தல் வரை நடைமுறை. வாக்கு எண்ணும் மையத்தில் பிரச்சனை ஏதாவது ஏற்பட்டால் அதை பதிவு செய்ய ஒரு வீடியோகிராபர் இருப்பார். வாக்கு சீட்டு இருக்கும் போதும் இதான் நடைமுறை. இதன் மூலம் ஒரு ரவுண்ட் அறிவிக்க அதிகபட்சம் 20 நிமிடங்கள் போதுமானது.

இந்த முறை வாக்கு எண்ண 15 டேபிள்கள் அமைக்கப்படும். 2 அதிகாரிகள் நிற்பார்கள். முகவர்கள் இருப்பார்கள். அவர்களோடு உபரியாக ஒவ்வொரு டேபிளிலும் ஒரு வீடியோகிராபர் நிற்பார். ஒரே நேரத்தில் 15 டேபிளுக்கும் வாக்கு பெட்டிகள் தரப்படும். ஆனால் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் நடக்காது. ஓரு டேபிள் எண்ணி முடிக்கப்பட்ட பின்பே, மற்றொரு டேபிளில் உள்ள வாக்கு இயந்திரம் திறக்கப்படும். இப்படி 15 டேபிள் எண்ணி முடிக்கப்பட்டபின் முதல் சுற்று முடிவு வெளியிடப்படும். இப்படித்தான் அடுத்தடுத்த சுற்றும் எண்ணப்படும். ஆக மதியம் 1 மணியளவில் தெரியவேண்டிய தேர்தல் முடிவுகள் மாலை, இரவு வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது ஆணையம். கேட்டால் பாதுகாப்பு ஏற்பாடாம்.


இதில் புரியாத புதிர் எதற்க்காக ஒவ்வொரு டேபிளிலும் வீடியோகிராபர். புpரச்சனை வந்தால் படம் பிடிக்க ஒரு வீடியோகிராபர் போதாதா?. இப்படி நியமிக்கப்பட்டுள்ள வீடியோகிராபர்களால் ஆகும் செலவை கணக்கிட்டபோது தலை சுத்தியது. ஒருநாள் மட்டும் 234 தொகுதி ழூ 15 ஸ்ரீ 3510  வீடியோகிராபர்கள். 3510 ழூ 1500 (ஒருநாள் சம்பளம்) ஸ்ரீ 5265000 ரூபாய். இது மையத்தில் இருப்பவர்களுக்கு மட்டும். தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் வலம் வரும் வீடியோகிராபர்கள் கணக்கு தனி. உணவு செலவு தனி. அதோடு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சென்று வர ஏ.சி உள்ள டவேரா கார் மட்டும் பயன்படுத்துவார்கள், பிரைவேட் டிரைவர்கள், வாடகை, படி என அது தனி செலவு. மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு. அதற்க்கு உள்நாட்டு ராணுவம், வெளிநாட்டு ராணுவம், உள்ளுர் போலிஸ், வெளியூர் போலிஸ் என அது தனி டீம். அவர்களுக்கான செலவு தனி. இப்படி தண்டமாக செலவு மேல் செலவு செய்கிறார்கள். என்னதான் அவர்களை கேட்க விதியில்லை என கூறினாலும் இப்படியா?.

இப்படி பலவற்றை கூறிக்கொண்டே போகலாம். மற்ற மாநிலங்களில் விசாரித்ததில் இப்படியில்லை என்கிறார்கள். ஆக தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலை. மற்ற மாநிலங்களை விட வாக்கு எண்ணிக்கையின் போது நமது மாநிலம் மிகவும் அமைதியாகவே இருந்துள்ளது. அப்படியிருக்க வீண் பதட்டத்தை தேர்தல் ஆணையம் உருவாக்குவது ஏன்?

2 கருத்துகள்:

  1. பெயரில்லாபுதன், மே 11, 2011

    கருணாநிதி போன்ற அயோக்கியர்கள் வாழும் தமிழ்நாட்டில் இந்த கெடுபிடி கூட போதாது. கடைசி சமயத்தில் பணப்பட்டுவாடா நாராய நடந்துருக்கிறது. எவ்ளோதான் கெடுபிடி காட்டினாலும் திமிக தேசத்துரோகிகள் பண்ணும் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை. இது எல்லாம் போதாது, இன்னும் கெடுபிடி காட்டவேண்டும்,

    பதிலளிநீக்கு
  2. நண்பர் ஹாிக்கு,

    தேர்தலின் போது காட்டப்பட்ட கெடுபிடிகள் அரசியல்வாதிகளிடம், வாக்குக்கு பணம் தந்த அரசியல்கட்சி வேட்பாளர்களிடம் காட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால் பணம் தந்தவர்களை விட்டுவிட்டு வியாபாரத்திற்க்கும், குடும்ப நிகழ்ச்சிக்காக பணம் கொண்டும் போனவர்களை மடக்கி வைத்துக்கொண்டு அவர்களின் பணத்திற்க்கு கணக்கு கேட்ட கொடுமையையும் அவர்கள் மீது வழக்கு போட்டு தேர்தல் விதிமீறலில் 5 ஆயிரம் வழக்கு, 6 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கணக்கு காட்டுவது பந்தாவுக்கு தானே தவிர வேறில்லை.

    அதோடு திமுக அ அதிமுக எந்த கட்சி ஆட்சியில் இருந்தபோதும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரம் ஏற்பட்டதில்லை. ஆனால் கலவரம் ஏற்படும் என துணை ராணுவம், வீடியோகிராபர்கள் என குவித்து செலவுகளை தாறுமாறறாக உயர்த்துவது கொள்ளையடிக்க தானே தவிர வேறில்லை.

    நான் சொல்வதில் சந்தேகம் என்றால் இன்னும் 3 மாதங்கள் பொறுத்து 2011 தமிழக சட்டமன்ற தேர்தல்க்கு எவ்வளவு எது எதற்க்கு செலவானது என தகவல் அறியும் உாிமை சட்டத்தின் படி கேள்வி கேளுங்கள் நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பது தொிந்துவிடும்.

    கருணாநிதி மீதுள்ள கோபாத்தில் மற்றவர்கள் செய்யும் தவறுகள் சாி என ஏற்றுக்கொள்வது தவறான போக்கு.

    பதிலளிநீக்கு