புதன், மே 11, 2011

கூட்டு குடும்பம் எதிர்ப்பாளர்களுக்கு……….
சமீபத்தில் தோழி ஒருவர் கூட்டு குடும்பம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையின் உள் கருத்து. கூட்டு குடும்பம் என்பது ஆணாதிக்கத்தின் மற்றொரு வடிவம். பெண்கள் அடிமையாக இருக்க கண்டுபிடிக்கப்பட்ட வழி. பெண்களின் சுதந்திரத்திற்க்கு போடப்பட்ட விலங்கு என்பதாகும்.

தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்;. கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் ஒடி வந்து உதவும், ஆதரவு தரும் அன்பும், நேசமும் அங்குயிருந்தது. குடும்பத்தில் வேலைகள் பங்கிட்டு செய்யும் ஒற்றுமையிருந்தது. மாமியார் கொடுமைகள் கூட்டு குடும்பத்தில் அவ்வளாக இருந்ததில்லை. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் ஆண்கள் போதை, பேதைகளுக்கு அடிமையாக பயந்தனர். பெண்கள் குடும்பத்திற்க்கு தெரியாமல் எதையும் செய்ய தயங்கினர். உற்றார் உறவினர்களுடன் நெருக்கம் வளர்ந்தது. நல்ல நண்பர்கள் யார் என்பதற்க்கான அடையாள படுத்தல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் வளரும் இளம் வயது இளைஞன் இளைஞிகள் தவறு செய்ய தயங்கினர்.


தனிக்குடித்தனம் முறை மேலே சொன்னவற்றை ஒட்டு மொத்தமாக அழித்தது. ஆனால் தனிக்குடித்தனத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூட்டு குடும்பத்தால் பெண்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது என கூப்பாடு போடுகிறார்கள். கூட்டு குடும்பம் என்பது ஆணாதிக்கத்தின் மற்றொரு வடிவம் என்கிறார்கள்.

எது ஆணாதிக்கம். அண்ணன், அண்ணி, தங்கை, மச்சான் போன்ற உறவுகளுடன் சேர்ந்து வாழலாம் என சொல்வது குற்றமா?. பெண்களின் செலவுகளை குறைக்க சொல்வது ஆணாதிக்கமா?

பெண்கள் திருமணம் ஆனதும் கணவன் குடும்பத்தாற்க்கு சம்பாதிப்பதை தர வேண்டும் என்ற நிலை உள்ளதாக கூறுகிறார். உண்மை தான் மறுப்பதற்க்கில்லை. இந்த நிலை தனிக்குடித்தனம் என்ற நிலை உருவானபோது தான் அதிகாரித்தது. கூட்டு குடித்தனம் என்ற நிலை இருந்தபோது மருமகள் வீட்டுக்கு ஒரு உதவியென்றால் ஒடிப்போய் நிற்க்கும் நிலையும், அவர்களுக்கு உதவி செய்யும் அடக்கமும்மிருந்தது.

சினிமாக்கள் மூலம் கூட்டு குடும்ப வாழக்;கையை கொண்டு வரப்பார்க்கிறார்கள் ஆணாதிக்கவாதிகள் என்கிறார். இதே சினிமாக்களில் தனிக்குடித்தனம் உள்ள பெண்கள் கணவன் தரப்பை சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருகிறர்களை கவனிக்கும் விதத்தையும், தன் தரப்பை சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருபவர்களை கவனிக்கும் விதம் பற்றி பல சினிமாக்களில் காட்டுகிறார்களே அதையேன் அவர் விமர்ச்சிக்கவில்லை.

எத்தனை பெண்கள் கணவனை பெத்து வளர்த்தவங்க, கூட பொறந்தவங்க வீட்டுக்கு வந்தால் கவனிக்கும் விதம் பற்றி உங்களை போல் உள்ளவர்களிடம் கேட்காமல் வயது முதிர்ந்தவர்களிடம் போய் கேளுங்கள் தெரியும். தனிக்குடித்தன பெண்கள் மனசாட்சி தொட்டு சொல்ல சொல்லுங்கள் அவர்களின் பெற்றோர், உடன் பிறந்தோர் முன்றாம் பங்காளி, நான்காம் பங்காளி வீட்டுக்கு வரும் போது செய்யும் தராளம் பற்றி சொல்லுங்களேன். இன்று தமிழ் சமுகம் மேலை நாட்டு நாகரீகங்கள் போல் உருவாக காரணம் இந்த தனிக்குடித்தன முறை தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்களது தனிப்பட்ட சுதந்திர வாழ்க்கைக்காக ஒரு சமுகத்தை சீரழிப்பவர்களை என்னவென்று சொல்வது?.

2 கருத்துகள்:

  1. தனிக்குடித்தனம் என்பது பாசத்தில் பிரிவினை வந்துவிட கூடாது என்பதற்காகதான். அதனால்தான், தனிக்குடித்தனம் எனும் முறை உலகில் ஆரம்பமாயிருக்கிறது எனலாம். ஆனால்....தனிக்குடித்தனம் என்பது தான் இப்போது கலாசார மிகுதியாய் மாறியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. தனிக்குடித்தனம் என்பது பாசத்தில் பிரிவினை வந்துவிட கூடாது என்பதற்காகதான். அதனால்தான், தனிக்குடித்தனம் எனும் முறை உலகில் ஆரம்பமாயிருக்கிறது எனலாம். ஆனால்....தனிக்குடித்தனம் என்பது தான் இப்போது கலாசார மிகுதியாய் மாறியிருக்கிறது.

    பதிலளிநீக்கு