தாயின் கர்ப்ப பையின் ரத்த நாளங்களை அறுத்துக்கொண்டு வெளியே வரும்போது மொழி தெரியாத, பாசம் புரியாத, அன்பு தெரியாதவர்களாக தான் பூக்கிறோம். நம்மை சுற்றியுள்ளவர்களும், இந்த சமுகமும் தான் அவனை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ உருவாக்கம் செய்கிறது. அவன் வாழ்ந்து மரணிக்கும் போது அவனை சுற்றியுள்ளவர்களுக்கு அது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு தான். அந்த இழப்பை எதை கொண்டும் சரி செய்ய முடியாது.
அப்படி ஒரு இழப்பு தான் சாய்பாபா.
வயிற்றில் இருந்து வாய் வழியாக லிங்கம் எடுத்து தந்து பக்தர்களை அசிர்வதிக்கிறேன் என உருவானவர் சாய்பாபா. ஆந்திராவில் தவிர்க்க முடியாதவர். புhபாவின் ஆஸ்ரமம் அமைந்துள்ள ஆனந்தபூர் மாவட்டத்தோடு சுத்தியுள்ள 10 மாவட்ட மக்கள் அவரை ரட்சகனாகவே காண்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாராம், அடிப்படை தேவைகள் போன்ற சகலத்தையும் அம்மக்களுக்கு உருவாக்கி தந்தார் பாபா. அவர் செய்த சேவைகள் அரசாங்கம் செய்ய வேண்டியது. அதை தனிமனிதனாக தனது அறக்கட்டளை மூலம் செய்தார். அதனால் தான் பாபா மறைவிற்க்கு அவர்களது பக்தர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவின் குடியரசு தலைவர் முதல் அனந்தபூர் மக்கள் வரை கண்ணீர் விடுகிறார்கள். அது அவர் செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்.
அதற்காக அவரை கடவுளாக்குவது எந்த விதத்தில் நியாயம். (நாட்ல இருக்கற கடவுள் போதாதா) நான் கடவுளின் அவதாரம், நானே கடவுள், எனக்கு மரணம் 96 வயதில் என பீற்றிக்கொண்ட பாபா என்கிற போலி சாமியார் மரணித்துள்ளார். வயில் இருந்து லிங்கம் எடுக்கிறேன் என தில்லாலங்கடி வேலை செய்து சம்பாதித்து சம்ராஜ்யத்தை உருவாக்கிவிட்டு மரணித்த அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. ஆனால் என்ன செய்ய தந்துவிட்டார்கள்.
பாபா உருவாக்கியுள்ள அறக்கட்டளையின் சொத்து மதிப்பு இன்றைய நிலையில் தோராயமாக 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகள் அவர் உழைத்து சம்பாதித்ததில்லை. இன்று கண்ணீர் விட்டு அழும் பக்தர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பல தரப்பினர் நன்கொடையாக தந்த பணம். பலரின் கறுப்பு பணம். அந்த பணத்தை கொண்டு தான் அவர் சேவைகள் செய்தார். தனக்கு வந்த பணத்தை வாரி வழங்க ஒரு மனம் வேண்டும்மென்பார்கள். அந்த மணம் சாய்பாபாவிடம் இருந்தது. சேவைகள் செய்தார் அது பாராட்டுக்குரியது. அவர் செய்த சேவையால் சந்தனமாக மணக்கிறார்.
அதோடு விட்டு விடுங்கள் அவரை ஓவராக புகழ்ந்து அவரின் பழைய வில்லங்கங்களை அதிகமாக களறி சாக்கடையாக்கி விடாதீர்கள். விட்டு விடுங்கள் போதும் அவரின் புராணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக