சனி, மே 05, 2012

மீண்டும் டெசோ. அலறும் அல்பைகள்.


மீண்டும் டெசோ அமைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு திமுக தலைவர் அறிவித்தவுடன் புற்றீசல் போல் கிளம்பிவிட்டார்கள் அதனை எதிர்க்க. பலர் இணையத்தில் கட்டுரைகள் எழுதுகிறார்கள், பேஸ்புக்கில் புகாரி பாடுகிறார்கள். அவைகளை படித்தபோது ஈழம் பற்றி எதுவும் தெரியாத வெத்து வேட்டுகள் என்பது புரிந்தது. அவர்கள் தான் அதிகமாக பேசியிருந்தார்கள். ஈழத்தை சேர்ந்த தற்போது அகதியாக வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் நீண்ட கட்டுரை ஒன்றை தீட்டியுள்ளார். டெசோவுக்கான முழு பெயர் தெரியாமல் அதுப்பற்றி எழுதியுள்ளார். இப்படித்தான் இருக்கிறது இவர்களின் ஈழ அரசியல் அறிவு.

டெசோ – தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு ( ஆங்கிலத்தில் வுயஅடை நுநடய ளுரிpழசவநசள ழுசபயnபையவழைn )

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 1985ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் பேரா.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பழ.நெடுமாறன் கொண்ட இந்த அமைப்பு தான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஈழம் பற்றியும், அம்மக்கள் படும் துன்பங்கள் பற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். பலப்பல போராட்டங்கள் இதன் மூலம் அப்போது நடைபெற்றன. அதில் சில…….

ஆண்டன்.பாலசிங்கத்தை நாடு கடத்திய போது அது கூடவே கூடாது என போராடி பாலசிங்கத்தை திரும்ப இந்தியா கொண்டு வந்தார்கள். ஒரே நாளில் அறிவிப்பு தந்து தமிழகத்தில் இரயில் ஓடவிடாமல் செய்யப்பட்டது.

மதுரையில் டெசோ சார்பில் நடந்த மாநாட்டில் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல மாநில, தேசிய அரசியல் தலைவர்களை அழைத்து வந்து பெரிய ஈழ போராட்டத்துக்கு பலம் சேர்த்தார். டெசோ சார்பில் ஈழத்தில் போராடிய அமைப்புகளுக்கு தமிழக மக்களிடம் நிதி திரட்டி தந்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் திடீரென டெசோ என்ற அமைப்பு இயங்காது என அறிவிக்கப்பட்டபின்னும் திமுக பலப்பல போராட்டங்களை நடத்தியது.

1990ல் இராஜிவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டபோது, விடுதலைப்புலிகளுக்கு திமுகவே ஆதரவு அளிக்கிறது என குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது திமுக இனி இல்லை என்றே எதிர்ப்பாளர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறினர். அந்தளவுக்கு திமுக ஈழத்துக்காகவும், புலிகளுக்காகவும் இழந்தது அதிகம். அது மட்டுமல்ல கலைஞர் இருக்கையில் வை.கோவை அமர வைக்க புலிகள் திட்டமிட்டனர் என்ற தகவல் அப்போதே பரவியது.


2009ல் ஈழத்தில் நடந்த யுத்தம் பற்றி இப்போது ‘இணையப்புலிகள்’ எழுதுகிறார்கள். அவர்கள் ஈழப்போரட்டத்தின் முந்தைய வரலாறு தெரியாத அரை வேக்காடுகள். இதை நான் ஏதோ சொல்ல வேண்டும் என எழுதவில்லை. தற்போதும் இணையத்தில் எழுதும் சிலர் என்னிடம், பொழைக்க போனயிடத்தல இவனுங்களுக்கு ஏன் அரசியல் ஆசை என கேட்ட ‘வரலாற்றாசிரியர்கள்’ பலர் இன்று கலைஞர் துரோகம் செய்தார், ஒரு லட்சம் பேரை கொன்றெழித்தார் என எழுதி வரலாறாக்க முயல்கிறார்கள். அது வரலாறு அல்ல. வரலாறு என்ற போர்வையில் எழுதப்படும் குப்பைகள்.

2009ல் முதல்வராக கலைஞர் இருந்தார். போர் நடந்தது மக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் நிர்முலமாக்கப்பட்டது. நான் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டதை போல கலைஞர் நினைத்திருந்தால் ஈழப்போரை தடுத்திருக்க முடியும் எனச்சொல்லப்படுவது சுத்த முட்டாள் தனமாது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருந்தால் கூட தடுத்திருக்க முடியாது. அந்தளவுக்கு பல நாடுகளின் ஆதரவையும், ஆயுதத்தையும் பெற்றிருந்தது இலங்கை. பன்னாட்டு அரசியல் அறியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இதனைத்தான் சொல்வார்கள்.

ஆனால், பன்னாட்டு அரசியல் அறிந்த வை.கோ, பழ.நெடுமாறன் போன்றவர்கள் கலைஞர் மீது குற்றம்சாட்டுகிறார்கள். கலைஞர் காங்கிரஸ்சோடு கூட்டணியில் இருந்ததால் போர்க்கு ஆதரவாக பேசினார். ஆனால், போரை நிறுத்தும் சூழ்நிலை வந்தபோது போரை நிறுத்த வேண்டாம் என்று தங்களது அரசியல் லாபத்துக்காக வை.கோ, பழ.நெடுமாறன், சீமான் போன்ற அல்பைகள் அவர்களின் முதுகில் குத்தினர். இப்படிப்பட்டவர்கள் இன்று பேசுகிறார்கள் துரோகத்தைப்பற்றி. தமிழ் தமிழ் என முழங்கும் நெடுமாறன், சீமான் பற்றிய துரோகங்களை ஈழத்துக்காக போராடி சிறையில் உள்ளவர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள்.

இவர்கள் இன்று டெசோ மீண்டும் துவக்கப்பட்டதும் அய்யோ அய்யோ என குதிக்கிறார்கள். என் கேள்வி என்னவெனில் திமுக போராடுவதால் உங்களுக்கு எந்தந்த விதத்தில் பாதிப்பு என விளக்கினால் மக்கள் தெரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள்.

விளக்க தயாரா?.

18 கருத்துகள்:

  1. ராஜ்பிரியன்,

    உங்கள் கட்டுரையைப்படித்த போது நீங்கள் ஒருவரே ஈழ வரலாற்றினை முழுவதும் அறிந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல புலானாகிறது எனவே உங்களிடமே எனது அய்யங்களை தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்,

    எனது கேள்விகள்,

    #//2009ல் முதல்வராக கலைஞர் இருந்தார். போர் நடந்தது மக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் நிர்முலமாக்கப்பட்டது. நான் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டதை போல கலைஞர் நினைத்திருந்தால் ஈழப்போரை தடுத்திருக்க முடியும் எனச்சொல்லப்படுவது சுத்த முட்டாள் தனமாது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருந்தால் கூட தடுத்திருக்க முடியாது. அந்தளவுக்கு பல நாடுகளின் ஆதரவையும், ஆயுதத்தையும் பெற்றிருந்தது இலங்கை. பன்னாட்டு அரசியல் அறியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இதனைத்தான் சொல்வார்கள். //

    மிகசிறப்பாக சொன்னீர்கள் , கலைஞர் பதவியில் இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடிந்திருக்காது ஏன் காங்கிரஸ்ஸாலும் முடியாத்உ வெத்து வேட்டுக்கள் அவர்கள் என்பதை,

    அப்போவே அப்படி எனில் இப்போ பதவியே இல்லாத போது டெசோ வைத்து என்ன செய்ய முடியுமாம் ? டெசோவில் இருப்பவர்கள் எல்லாம் சர்வதேச தலைவர்களா அப்படியே ராச பக்சேவை அல்லாக்க தூக்கி மல்லாக்க போட்டு மிதிக்க :-))

    மேலும் டெசோ என்ற பெயர் கடந்த அய்ந்தாண்டுகளாக கலைஞருக்கு நினைவில் வராமல் மறந்து போக காரணம் அல்சீமர் போன்ற ஏதோ ஒரு வியாதியாக இருக்க வேண்டும், இப்போது வியாதி குணமாகி டெசோ நினைவுக்கு வந்து விட்டது என நினைக்கிறேன் :-))

    #// போரை நிறுத்தும் சூழ்நிலை வந்தபோது போரை நிறுத்த வேண்டாம் என்று தங்களது அரசியல் லாபத்துக்காக வை.கோ, பழ.நெடுமாறன், சீமான் போன்ற அல்பைகள் அவர்களின் முதுகில் குத்தினர். //

    மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமே தெரியாமல்ல் பேசுபவர்கள் நீங்கள் எல்லாம் தெரிந்த பின் பேசுபவர் எனவே எனவே எப்படி முதுகில் குத்தினார்கள் என்பதை அறிந்து இருப்பீர்கள், அதனையும் விளக்க வேண்டும்!

    தமிழக தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பவர்கள் அதில் கலைஞர் ,வைகோ, சீமான், நெடுமாறன் என அனைவரும் அடக்கம் என்பதை சொல்லி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரே நிச்சயமாக ஈழ வரலாற்றை நான் நன்கறிந்தவன் அல்ல. ஏதோ நான் அறிந்தவரை எழுதுகிறேன். உங்கள் கேள்விக்கு பதில் கேட்டுள்ளீர்கள்.

      1. பதவியில் இருந்தபோது செய்ததை விட இப்போது செய்ய முடியாது. மற்றொன்று பதவியில் இருக்கும் போது மாநிலத்தை ஆள்வது யாராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்க்கு மேல் செயல்படமுடியாது. நீங்கள் சொல்வது போல் இராஜபக்சேவை தூக்கி போட்டு மிதிக்க முடியாது. ஆனால் இராஜிவ் கொல்லப்பட்டதற்க்கு பின் ஈழ மக்களுக்கான ஆதரவு பெருமளவு தமிழகத்தில் குறைந்ததுவிட்டது. அதனை போராளி இயக்கங்கள் திரும்ப பெற வேண்டும்மென்றால் தமிழகத்தில் பெரும் அரசியல் ஆதரவு தேவை. வேண்டி நின்றாலும் அதிமுகவிடம் கிடைக்காது. திமுகவிடம் கிடைக்கும் போது பெற்றுக்கொள்ளலாம். மேலை நாடுகளின் ஆதரவு கிடைக்கும். இதை ஈழத்தமிழர்கள் பெற்றுக்கொள்ளலாம். போராளிகள் பெறலாம். மீண்டும் 1983ல் கிடைத்த ஆதரவு கிடைக்க வழியுண்டு.

      2. சில வெளிநாடுகளின் ஆழுத்தம் மற்றும் காங்கிரஸ்சின் தேர்தல் பயத்தால், சிலர் முயற்சியால் போர் நிறுத்தத்திற்கு முயன்றபோது, அதனை வை.கோ மற்றும் பழ.நெடுமாறனிடம் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசியபோது, அடுத்து பி.ஜே.பி ஆட்சித்தான் அதனால் போர் நிறுத்தத்திற்க்கு ஒத்துக்கொள்ள வேண்டாம் என சொன்னவர்கள் இவர்கள். அதற்கான ஆதரங்கள் தமிழகத்தில் உள்ளன. அதுமட்டுமல்ல அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த சில கட்சிகளும் வி.பு களுக்கு துரோகம் செய்தார்கள். இன்னும் சொல்லலாம் வேண்டாம் விட்டு விடுவோம்.

      நீக்கு
  2. //கலைஞர் நினைத்திருந்தால் ஈழப்போரை தடுத்திருக்க முடியும் எனச்சொல்லப்படுவது சுத்த முட்டாள் தனமாது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருந்தால் கூட தடுத்திருக்க முடியாது. அந்தளவுக்கு பல நாடுகளின் ஆதரவையும், ஆயுதத்தையும் பெற்றிருந்தது இலங்கை. பன்னாட்டு அரசியல் அறியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இதனைத்தான் சொல்வார்கள்.//

    Yes, you are right.

    பதிலளிநீக்கு
  3. //இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருந்தால் கூட தடுத்திருக்க முடியாது//

    //காங்கிரஸ்சின் தேர்தல் பயத்தால், சிலர் முயற்சியால் போர் நிறுத்தத்திற்கு முயன்றபோது,//

    ரெண்டுமே நீங்க சொன்னது தான். இதில் எனக்கு கீழ்கண்டவாறு புரிந்தது
    "காங்கிரஸால் முடியும் ஆனா முடியாது "
    என்ன சரிதானே :))

    பதிலளிநீக்கு
  4. இது மட்டும் பிரபாகரன் காலத்திலேயே அமைத்திருந்தால் அவரும் புலிகள் அமைப்பை கலைத்து விட்டு இங்கு வந்து சரணடைந்திருப்பார்.

    இன்னுமா இந்த உலகம் இவரை நம்புகிறது?

    பதிலளிநீக்கு
  5. ராசபக்சேவே நினைத்திருந்தாலும் போரை தடுத்திருக்க முடியாது என்று எழுதியிருந்தால் படிக்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்வது உண்மை. கருணாநிதியால் போரை நிறுத்தியிருக்க முடியாதுதான். ஆனால் அவர் போரின் இறுதிக்காலத்தில் ஆடிய நாடகங்கள் வழக்கமான அவரது பித்தலாட்டம்தான். போருக்குப் பின்பு உண்மை மக்களின் நிலை குறித்து அறிய இந்தியாவால் அனுப்பப்பட்ட குழுவில் கனிமொழியும், திருமாவும் இருந்தனர். அவர்கள் இலங்கை அரசு குறித்து நற்சான்றிதழும் கொடுத்தனர். காங்கிரஸ் நினைத்தாலும் போர் நின்றிருக்காது என்பதை மறுக்கிறேன். போர் முழுக்க நடத்தப்பட்டது காங்கிரஸ் அரசு ஆதரவினால்தான். அதற்காக பாஜக வந்திருந்தால் போர் நின்றிருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை. என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் தமிழ்நாட்டுக்கார்களால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையாது, ஈழத்தில் தற்போது அரசியல் நிலைமைகள் மாறிவருகிறது. கலைஞரால் அந்நாளில் முடியவில்லை என்று கூறுவது போலவேதான் இப்போதும் முடியாது. தமிழ்நாட்டுக்கட்சிகள் தம் தன்னல நோக்கில்தான் ஈழப்பிரச்சனையைக் கையாள்கிறார்கள். தலைவருக்கு உண்மையிலேயே தமிழர் நலன் மீது ஆர்வமிருந்தால் ஈழ அகதிகளின் மீதான் அடக்குமுறை, கண்காணிப்புகளை நீக்கச் சொல்லிப் போராடவேண்டும், மிகவும் பாதுகாப்பாக அரசியல் செய்ய தமிழீழம் என்ற அல்வா இருக்கும்போது அதை அவர் செய்வாரா ?

    பதிலளிநீக்கு
  7. டெசோவின் வருங்காலத் தலைவி கனிமொழியை தரிசிக்க உள்ளோம்.

    பதிலளிநீக்கு
  8. கருணாநிதி போன்ற நாத்தம் பிடித்த நபர்கள் வாயை கூவம் அளவிற்கு திறக்காமலிருந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  9. கருணாநிதிக்கு பால் ரெடி.........ஊத்தலாமா...?

    பதிலளிநீக்கு
  10. ராஜ் பிரியன்!நான் எந்த கட்சியை சாராத விமர்சகன் மட்டுமே.டெசோ ஆதரவு பற்றி யார் பதிவு வெளியிட்டாலும் தி.மு.க சார்பான கருத்துக்கள் வெளிப்பட்டு விடுகின்றன.சார்பு நிலை தவறில்லை.ஆனால் தவறுகள் கண்ணை உறுத்தாத படி நின்று கொண்டு பேசுவது சரியாக படவில்லை.முந்தைய தி.மு.க வின் ஈழ நிலைப்பாட்டில் பெரும்பாலோனோர்க்கு விமர்சனம் இல்லை.ஆனால் போர்க் காலத்தில் ஆட்சிக்கட்டிலில் இருந்து கொண்டும் திசை திருப்பல்களைக் கொண்ட தி.மு.கவின் தலைமையின் மீதே விமர்சனம்.மூன்று வருடம் கழித்து தனது தவறுகளை உணர்ந்து கலைஞர் அறிக்கை விடுகிறாரோ தெரியவில்லை.ஆனால் ராஜபக்சே பொய் வாக்குறுதிகளை தந்தார் என்று அறிக்கை விடும் நேர்மை கூட இல்லாத வக்காலத்து வாங்கும் ராஜ்பிரியனாக உங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது அல்பங்கள்,அரைவேக்காடுகள்,முட்டாள்தனமானது என்று தங்க முட்டை போடுகிறீர்கள்.சரி நீங்கள்தான் தெரிந்ததை சொல்லுங்கள் என்று பதிவர் வவ்வால் கேட்கும் கேள்விக்கும் சறுக்குகிறீர்கள்.

    1.டெசோ மீதான விமர்சனமே திடீரென கலைஞர் இந்த ஆயுதத்தை தூக்கும் பின்புலம் என்ன என்ற 3 மணி நேர உண்ணாவிரத சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

    2. நான் கூட்டணிக் கட்சியாளன் தானே!என்னை கூட டெசோ அறிவிப்புக்கு அடைக்கவில்லையென திருமா பொறுமுகிறார்.

    3.கலைஞர் தமிழீழம் காணும் வரை நீடுழிய வாழட்டும் என வாழ்த்துகிறேன்.ஒருவேளை அவரது வயோதிக காலத்துக்குள் தமிழீழம் சாத்தியமில்லையென்றால் தொடர்ந்து போராடுவது வீரமணியா?வீரபாண்டியா?அவர்களுக்கு ஒன்றிணைக்கும் வலுவுள்ளதா?

    அனைத்து கட்சி தலைமைகளும் இணைந்து டெசோவுக்கு குரல் கொடுக்கும் சாத்தியமுள்ளதா?

    இப்படி பல கேள்விகள் இன்னும் டெசோ மீதான விமர்சனங்களை உருவாக்குகிறது.என்னைப் பொறுத்த வரையில் கலைஞர் மீதான விமர்சனத்தோடு இலங்கையின் பிடிவாதத்திற்கு எதிராக பல அழுத்தங்களுடன் டெசோவையும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்பதே.

    பதிலளிநீக்கு
  11. வேர்ட் வெரிபிகேசன் பற்றி முன்பே சொல்லியிருந்தேன்.நீங்க கேட்குற ஆளா தெரியல.

    பதிலளிநீக்கு
  12. நண்பர் ராஜநடராஜன் அவர்களுக்கு, வேர்ட் வெரிபிகேசன் பற்றி நீங்கள் பலமுறை கூறியிருந்தீர்கள். எனக்கு பிளாக் டெக்னிக்கல் பற்றி அவ்வளவாக தொியாது. நீங்கள் எப்படி செய்வது என குறிப்பிட்டால் அதன்படி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இராவணன் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டால். விவாதிக்கலாம். அதற்கு நேர்மாறாக இருந்தால் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  14. தமிழானவன் அவர்களுக்கு, கனிமொழியோ, திருமாவோ எந்தயிடத்தில் எப்போது, எங்கே இராஜபக்சேவை பாராட்டினார்கள் எனச்சொன்னால் சிறப்பாகயிருக்கும்.

    கலைஞர் அன்று ஆடியது நாடகம் தான். காரணம் கேட்டால் கூட்டணி தர்மம் என்பார். அரசியல் செய்துவிட்டார் அதை நான் மறுக்கவில்லை. அதற்காக அவர் செய்வதை வேடிக்கையாக நினைத்தால் சாியா............

    போரை நடத்தியதில் காங்கிரஸ் பங்கு அதிகம் தான். ஆனால் அவர்கள் நினைத்திருந்தால் போர் நிறுத்தம் என்பது ஓரளவுக்கு தான் சாத்தியம். காரணம் சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவின.

    கடைசியில் நீங்கள் கூறியது போல் தமிழக அரசியல்வாதிகளால் நிச்சயம் ஈழம் அமையப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
  15. அன்பர் கரிகாலன் அவர்களுக்கு, தனித்தனியாக வார்த்தைகளை பிரித்து கேட்டுள்ளீர்கள். இப்போதும் சொல்கிறேன். போர்க்கு அதிகம் உதவிய காங்கிரஸ் நினைத்திருந்தால் கூட போர் நின்றிருக்காது. போர் நிறுத்த முயற்சி உண்மை. பாராளமன்ற தேர்தலில் தமிழகத்தில் கலைஞர் தோல்வி ஏற்படும் என பயந்து காங்கிரஸ்க்கு அழுத்தம் தர அவர்கள் நாம் சொன்னால் கேட்கமாட்டார்கள் என அமெரிக்கா மூலம் அதற்கான முயற்சியை எடுத்தார்கள். அமெரிக்கா சொல்வதை கேட்கும் ( அதாவது மிரட்டலுக்கு) நார்வே மூலம் போர் நிறுத்தம் கேட்டது. இல்லையேல் எங்கள் படை அங்கு வரும் என யு.எஸ் கப்பற்படை கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலுக்கு வந்தது. பயந்து போர் நிறுத்ததுக்கு அப்போதைய இராணுவ தளபதி பொன்சேகா ஒப்புக்கொண்டார். ஆனால் அதை கெடுத்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள் சிலர் .........

    பதிலளிநீக்கு
  16. நண்பர் ராஜ்பிரியன் அவர்களுக்கு!

    வேர்ட் வெரிபிகேசன் மாற்றும் முறை

    1. Design
    2. Settings
    3. Post and comments
    4. Show word verification Yes என்று இருப்பதை No என்று
    மாற்றி Save Settings என்பதை க்ளிக் செய்து சேமிக்கவும்.

    புரியாமல் இருந்தால் இன்னுமொரு கமெண்ட் சொல்லுங்க.நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நண்பர் ராஜ நடராஜன் அவர்களுக்கு நன்றி. நான் உண்மையிலயே தெரியாததால தான் கேட்டன். நீங்க சொன்னப்படி செய்துயிருக்கன். இனி சரியா வரும்ன்னு நம்பறன். தவறுகள் இருந்தால் சுட்டுக்காட்டுக்கட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு