சனி, மே 12, 2012

மனிதர்களின் போலி வாழ்க்கை.




இந்தியாவில் மனிதர்கள் அதிகமாக போலி வாழ்க்கை வாழ தொடங்கிவிட்டார்கள். அது ஆதி காலம் தொட்டே வருவதால் நம் ரத்த அணுக்களில் அது பரம்பரை பரம்பரையாக வருகிறது என எண்ணுகிறேன். மனிதன் நான் நல்லவன் தப்பே செய்யாதவன் என்றும், தப்பு என்றால் உடன் பிறந்தவர்களாகவே இருந்தாலும் மன்னிக்கமாட்டேன் என வசனம் பேசுகிறார்கள். இவர்கள் தங்களை சமுகத்தில் யோக்கிய சிகாமணிகளாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தான் இந்த சமுகம் தன்னை மதிக்கும் என எண்ணுகிறார்கள். 

அடுத்தவன் தவறு செய்தால் வாய் கிழிய பேசுவோம். ஆனால் நாம் தவறு செய்தால் அது தவறாகவே இருந்தாலும் அதை நியாயப்படுத்தி வாதாடுவோம் இது தான் மனிதன் மனம். தவறு செய்துவிட்டால் ஆமாம் தவறு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் இனி அதுபோன்ற தவறுகள் நடைபெறாது என நம்மில் ஒப்புக்கொள்பவர்கள் யாரும்மில்லை. காரணம், பயம். அந்த பயம் எதிராலியைப்பார்த்து வருவதில்லை இந்த சமுகத்தை பார்த்து வருகின்றன. இந்த சமுகத்தை பார்த்து எதற்காக பயப்படவேண்டும். 

இந்த சமுகத்தில் ஒரு பணக்காரன் தவறு செய்தால் அது சகஜம் என்பார்கள். ஒரு ஏழை தவறு செய்தால் அவனை தண்டிப்பார்கள் அது தான் இன்றைய சமுகம். நடிகர் சிம்பு அடிக்கடி காதலிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார். நயன்தாரா இரண்டு காதலர்களை இதுவரை இழந்துள்ளார் சினிமாவில் மட்டுமல்ல. தொழில் உலகத்திலும், அரசியல் உலகத்திலும் உள்ளார்கள். இச்சமுகம் இவர்களை கொண்டாடுகிறது. ஆனால், இதே தமிழகத்தின் பலப்பகுதிகளில் சமானியன் இதே தவறை செய்கிறான். ஆனால் சட்டமும், இச்சமுகமும் தூற்றுகிறது. ஆக இங்கு பணக்காரன், பதவியில் இருப்பவனுக்கு ஒரு நீதி. சமானியனுக்கு ஒரு நீதி. 

நாம் வாழும் வாழ்க்கையே போலியாக தான் உள்ளது. அதனை நாம் அறிந்தும் ஒவ்வொருவரும்; உத்தமர்கள் போல் வேடமிட்டே வாழ்கிறோம். எதற்காக இப்படிப்பட்ட போலி வாழ்க்கைகள். சமயத்துக்கு ஏற்றாற்போல் போலியாக வாழ பழகி கொண்ட இச்சமுகத்தில் தான் நாமும் வாழ்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இங்கு தனி மனித வாழ்க்கை மட்டுமல்ல எல்லாமே போலி தான். ஆனால் சாமானியன் இச்சமுகத்தை கண்டு பயப்படுகிறான். சிறு தவறு செய்தாலும் இச்சமுகம் தன்னை தாழ்த்தி பேசும் என மனம் ஒடிந்து போகிறார்கள். ஊண்மைதான் சமானியன் தவறு செய்தால் அவனை தண்டிக்க இச்சமுகம் தயாராக இருக்கிறது. பலமானவன் தவறு செய்தால் சகஜமப்பா என ஒதுங்கிக்கொள்கிறது. 

இப்படி இந்த சமுகமே போலியாக வாழும் போது, எதற்காக இந்த சமுகத்தின் முன் தலை குணிந்து வாழ வேண்டும். சமுகத்தை பார்த்து கவலைப்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் போலி வாழ்க்கை வாழ பழகி கொண்டோம் என்பதை விட மற்றவர்களை ஏமாற்ற நாம் வாழ பழகுகிறோம். போலி வாழ்க்கை உடையும் போது அதோடு சேர்ந்து மனமும் உடைகிறது. நாம் மற்றவர்களுக்காக வாழ தேவையில்லை. உங்களுக்காக வாழ பழகிக்கொள்ளுங்கள். போலி வாழ்க்கை, வார்த்தைகளை விட்டு ஒழியுங்கள். 

நான் எனக்காக வாழ்கிறேன், என் குடும்பத்துக்காக வாழ்கிறேன். என் சந்தோஷத்துக்காக வாழ்கிறேன் நான் எதையும் மறைத்து வாழவில்லை, ஏமாற்றி வாழவில்லை என எண்ணினாலே போலி வாழ்வு வாழ வேண்டி வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையை இன்பமாக வாழுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக