நடிகை ரஞ்சிதா ஜோடிப்புகழ் நித்தியானந்தா பற்றி எழுதவே கூடாது என நினைத்திருந்தேன். ஆனால், ஆன்மீகத்தை மையமாக வைத்து தற்போது வாழும் ‘சுவாமிகள்’ அடிக்கும் கூத்துக்களை பார்த்து எழுத வைத்துவிட்டது.
293வது ஆதினமாக ரஞ்சிதாவுடன் மன்மத ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் தொடங்குகிறது நித்தியானந்தாவின் இரண்டாவது தில்லாலங்கடி அத்தியாயம். மதுரை ஆதினம் செய்திகளின் நாயகராக எப்போதும்மே இருந்து வந்துள்ளார். அரசியல் கருத்துக்கள் முதல் ஆன்மீக கருத்துக்கள் வரை அடிக்கடி ஏதாவது சொல்லி தமிழக களத்தில் பகடி செய்வார். இன்று அவரே பகடியாகியுள்ளார். நித்தியானந்தானிடம் பணம், பொருள் என பலப்பல வாங்கிக்கொண்டு அவரை 293வது ஆதினமாக முடி சூட்டிவிட்டார்.
ஆதினமாக மாறியப்பின் நித்தியானந்தா தன் மீதுள்ள கறைகள் கழுவப்பட்டு விட்டதாக என்னுகிறார். அவர் எதற்காக ஆதினமாக ஆக வேண்டும் என எண்ணினாரோ அது நடந்துவிட்டது. ஆதினங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை என்ற விதிக்காகவே கோடிகளை கொட்டி தந்து ஆதின பதவியை பெற்றுள்ளார்.
இதனை சைவ மட ஆதினங்கள் ஒன்றிணைந்து எதிர்த்ததோடு, நித்தியாந்த மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவரை உடனடியாக அந்த பதவிiயில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் இயற்றினர்.
என் மீதான குற்றச்சாட்டை வாபஸ் வாங்கவில்லையெனில் நீதிமன்றம் செல்வேன் என ஆதினங்களுக்கு கெடு விதித்தார் நித்தி.
வாபஸ்சோ, மறுப்போ கிடையவே கிடையாது என்றனர் மற்ற ஆதினங்கள்.
உடனே, உங்கள் அறைகளில் கேமரா வைக்க தயாரா? - நித்தி.
பயமே கிடையாது. எங்கு வேண்டுமானாலும் கேமரா வைக்க தயார் என்றார்கள் ஆதினங்கள்.
இடையில், நித்தி முடிசூட்டு விழாவுக்கு மக்களிடம் ஆதரவும்மில்லை, எதிர்ப்பும்மில்லை என அறிக்கை விட்டார் கொலை குற்றச்சாட்டில் உள்ள சங்கராச்சாரியார்.
அவருக்கு என்னைப்பற்றி பேச அருகதையில்லை என பதில் தந்தார் நித்தி.
நடிகையுடன் சுற்றுபவர் எப்படி ஆதினமாகலாம். - சங்கராச்சாரியார்.
பெரிய சங்கராச்சாரியாரை விஷம் வைத்து கொன்ற நீ என்னைப்பற்றி பேசியதை வாபஸ் வாங்கவில்லையென்றால் வழக்கு தொடருவேன் என அறிக்கை விட்டார் நித்தி.
நித்தியுடன் ஜோடியாக உள்ள நடிகை ரஞ்சிதா, என் ‘பெயருக்கும், புகழுக்கும் களங்கம்’ ஏற்படுத்திய சங்கராச்சாரியார் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன் என்கிறார்.
இவர்கள் மீது மட்டுமல்ல இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் உட்பட தன்னை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்து விரோதிகள், ரவுடிகள் என்கிறார் நித்தியானந்தா. கூடவே எனக்கு இந்த ஆட்சியாளர்கள் ஆதரவு உள்ளது என வெளிப்படையாக கூறுகிறார் நித்தியானந்தா. அதனை அதிகமாக வெளிக்காட்ட மதுரை மடத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோது, இதற்கு காரணம் திமுக மத்தியமைச்சர் என குற்றம் சாட்டினார்கள்.
நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டு ஒரு பக்கம்மிருக்கட்டும். ஆதினங்கள் என்பவர்கள் சமயத்தை வளர்க்க வந்தவர்கள். அவர்களுக்கான மத கட்டுப்பாடு, ஆன்மீக விதிமுறைகள் ரொம்ப அதிகம். நினைத்தவுடன் காவியுடை தரித்து தன்னையே கடவுள் என அழைத்து கொண்டு ஆன்மீகத்தை ஐடெக்காக விற்பனை செய்யும் வியாபாரிகள் அல்ல அவர்கள்.
விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல், சர்ச்சைகள் பலக்கொண்ட நித்தியாந்தா ஆதினமாக மூடி சூட்டியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதாலயே எதிர்க்கிறார்கள். இதை புரிந்துக்கொள்ளால், தன் பணத்தால் எல்லோரையும் தன் காலில் விழ வைத்துவிடலாம் என எண்ணும் ரவுடி, பணக்கார திமிர் தான் நித்தியானந்தனிம் உள்ளது. பணத்தால் சிலவற்றை மாற்ற முடியாது என்பதை என்றுதான் புரிந்துக்கொள்ள போகிறார்.
தற்போது, நித்தியானந்தாவுக்கு ஆதரவு வட்டம் பெருகிறது. எப்படி என கேட்கிறிர்களா?.
நித்தியாந்தா திமுகவை அட்டாக் செய்ய, அதனை கேட்டு திமுகவை எதிர்ப்பதையே குல தொழிலாக கொண்டுள்ள சில நாளேடுகள், மீடியாக்கள், நாங்கள் நடுநிலைவாதிகள் என பேசும் திமுக எதிர்ப்பாளர்கள் எல்லோரும் நித்தியாந்தாவுக்கு ஜெ போட தொடங்கியுள்ளார்கள் என்பதை அவர்களின் பேச்சி, எழுத்து, நடவடிக்கை போன்றவை காட்டி தருகிறது. புரியாதவர்கள் நன்றாக இணையம், மீடியா, செய்தித்தாள், புத்தகங்களை கவனிக்கவும்.
ரஞ்சித நித்தியானந்தாவுக்கு நானும் ஒரு ஜே போட்டுக்கிறேன்.
பதிலளிநீக்குஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
பதிலளிநீக்குnalla karpanai valam ungalukku irukku rajpriyan, cinemaku poneengana ungalukku nalla vaalvu irukku, media solluratha mattum nambuneengana ipadi thaaan ninaipeenga, media kaaranga avangalukku business aganumgurathukaka SWAMI NITHYANANDARa pathi ipadi news pottu avanga viyaparatha kootikuranga, neengalum apadithaan irukkeenga
பதிலளிநீக்குசகோதரர் அருண் ஏதோ நான் கர்ப்பணையாக எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார். எதை கர்ப்பனையாக எழுதியுள்ளேன் என குறிப்பிட்டால் விளக்கம் தர தயாராக உள்ளேன். இல்லையேல் நீங்கள் குறிப்பிடுவது போல் சினிமாவுக்கு எழுதுகிறேன்......
பதிலளிநீக்கு