வியாழன், ஜூன் 18, 2015

மீண்டும் ஒரு எமர்ஜென்ஸி. போட்டுடைத்த அத்வானி.







இந்தியா டுடேவுக்கு பி.ஜே.பியில் செல்லாத காசாக தூக்கி வீசப்பட்ட அத்வானி அளித்த ஒரு நேர்காணலில், 2015 இறுதிக்குள் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கே இந்தியாவில் அரசியல் சூழ்நிலை உள்ளது என மறைமுகமாக தன் சிஷ்சியர் மோடி அரசை தாக்கியுள்ளார்.

இதில் எந்தளவுக்கு உண்மை என யோசித்தால் அத்வானி சொல்வது நிச்சயம் நடக்கும் அந்த நிலையில் தான் இந்தியா உள்ளது.

அரசாங்கம், அரசியல் கட்சிகள், நீதித்துறை, பத்திரிக்கை என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். தங்களை அரசாங்கம் காப்பாற்றும் என நம்பினார்கள் கடந்த கால காங்கிரஸ் அரசாகட்டும் இப்போதைய மோடி அரசாகட்டும் இரண்டும்மே அம்பானிக்கும், அதானிக்கும், டாட்டா, மிட்டல் போன்ற பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவகம் செய்கிறார்கள். 

மோடி வந்தால் இந்தியாவில் பாலும், தேனும் ஆறாக ஓடும் என மோடி பல்லவி பாடியவர்கள் இன்று ஊமையாக அமைதிகாக்கிறார்கள் அந்தளவுக்கு மிக மோசமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. இன்றைய மோடி அரசுக்கு கடந்த கால காங்கிரஸ் அரசே பரவாயில்லை என்னும் அளவுக்கு கார்ப்பரேட் நல அரசின் பிரதமராக இயங்குகிறார் மோடி. மோடி மட்டும்மல்ல மோடி அமைச்சரவையே கார்ப்பரேட் கம்பெனி இயக்குநர்கள் போல் தான் செயல்படுகிறார்கள். 

மத்தியரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தெரியும் மோடி ஒன் மேன் ஆர்மியாக செயல்பட நினைக்கிறார். வேலையை செய்யும் அலுவலர்களாக அதிகாரிகள் இருந்தால் போதும், ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் தேவையில்லை என நினைக்கிறார். மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இன்னமும் பல முக்கிய துறைகளின் குழுக்கள் அமைக்கப்படவேயில்லை. இதை யாரும் கேள்வி கேட்ககூடாது என நினைக்கிறார் மோடி. 

அதிகார வர்க்கத்தால் விதிமுறைகள் கால் செருப்பால் மிதிக்கப்படுகின்றன. ஏழைக்கு தான் சட்டம், விதிமுறையெல்லாம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சட்டம், விதிமுறைகள் எதுவும் கிடையாது என நினைக்கிறது இந்தியாவில் உள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள். மோடி அரசாங்கம் தான் இப்படியென்றால் நீதித்துறை படுமோசமான வீழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வருகிறது. அமித்ஷா விடுதலை, சல்மான்கன்க்கு கிடைத்த ஜெட் வேக ஜாமீன், தப்பான கணக்கில் ஜெ விடுதலை என நீதித்துறை கேலிக்கூத்தாகிறது. மக்கள் வெளிப்படையாக விமர்சிக்கும் அளவுக்கு நீதித்துறை ஊழல் மலிந்து கிடக்கிறது.

இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய இந்தியாவின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிக்கைகள் விளம்பரத்துக்கு அதிகார வர்க்கத்தின் காலுக்கு கீழே கிடக்கிறார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை இரண்டும் கார்ப்பரேட் மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சேவகம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். 

மக்களை காக்க இவர்கள்யில்லை.......... இந்த அதிகார வர்க்கத்தை காக்க தான் மீடியாக்கள் உள்ளன. அதோடு, மக்களின் மனங்களில் சாதி, மதம் சார்ந்த நச்சுகள் கடந்த காலங்களை விட இப்போது அதிகமாக வீசப்படுகின்றன. அதற்கு நான்காம் தூணும் துணை போகின்றன.
பெரும் செலவில் மிக உயர்ந்த அளவில் கட்டப்பட்ட மோடியின் ஆளுமை சடசடவென சரிந்து வருகிறது. மோடி தன்னை காப்பாற்றிக்கொள்ள, தனது அரசை காப்பாற்ற எமர்ஜென்சி என்ற ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலையில் தான் உள்ளார். அதற்கான சந்தர்ப்பத்தை தான் எதிர்நோக்கியுள்ளார். 

கடந்த காலத்தை போல பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்து தேசபக்தியை வளர்க்கும் நிலையில் மோடியும் கிடையாது, ஊடகமும் கிடையாது. அதோடு நம் ராணுவத்துக்கு அந்த அளவுக்கு வலிமையும் கிடையாது. ஏன் எனில் அங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதோடு, போரை கார்ப்பரேட் கம்பெனிகள் விரும்பாது. 

ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், கார்ப்பரேட் கம்பெனிகள், நீதித்துறை, ஊடகம் மீதான் கசப்பை மக்களிடம் இருந்து மறக்கடிக்க எமர்ஜென்ஸியை பயன்படுத்தலாம். இதைத்தான் அத்வானி மறைமுகமாக சொல்கிறார்.