விஸ்வரூபம் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு செல்கிறதே தவிர அடங்கியப்பாடில்லை. அதற்கு காரணம், சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜெ அரசு என வெளிப்படையாக குற்றம்சாட்டலாம். விஸ்வரூபத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளது என சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து படத்தை தடுப்போம், பிரச்சனை செய்வோம் என்றன. தமிழக உள்துறை செயலாளரிடம் தடை மனு தந்தார்கள். அரசும் தடை விதித்தது. இஸ்லாமிய இயக்கங்கள் மாபெரும் வெற்றி என குதித்தார்கள். தமிழகம் தவிர்த்து பிறயிடங்களில் படம் வெளியானது.
இஸ்லாமிய இயக்க தலைவர்கள் குறைபட்டுக்கொண்டது போல் இஸ்லாத்தை தாக்கும் காட்சிகள் படத்தில் கிடையாது என தமிழகத்துக்கு வெளியே இருந்து கருத்துகள் வந்தன. ஆனாலும் சில இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாம் பற்றி எப்படி படம் எடுக்கலாம் என பேசப்பேச கருத்தாளர்கள், நடுநிலைவாதிகள், இஸ்லாத்தை சகோதரத்துவத்தோடு பார்த்த பொதுமக்கள் ‘அவர்களை’ வெறுப்பாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
உயர்நீதிமன்ற தனி நீதிபதி படம் பார்த்து ஆட்சேபகரமான கருத்துக்கள் இல்லை என 29ந்தேதி இரவு 10 மணிக்கு படம் வெளியிடலாம் என தீர்ப்பு தருகிறார். மறுநாள் காலை படம் தமிழகத்தின் சிலயிடங்களில் திரையிடப்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தியேட்டர் அதிபர்களை மிரட்டி படத்தை நிறுத்தினார்கள். டிவிஷன் பெஞ்ச் முன் தமிழகரசின் தலைமை வழக்கறிஞர் தடைக்கேட்கிறார். தலைமை நீதிபதியும் வழங்;குகிறார்.
சில இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜெ அரசு விஸ்வரூபத்துக்கு எதிராக கிளம்ப வேண்டிய அவசியம்மென்ன ?. பின்னணியென்ன ?.
சில இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்தை பற்றி பத்திரிக்கைகள், மீடியாக்கள், எழுதினாலோ, பேசினாலோ, கருத்து சொன்னாலே அவர்களை மிரட்டுவது, கும்பலாக சென்று போராட்டம் செய்வது, அவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மறுக்கப்பட முடியாத உண்மை.
கமல் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளான தாலிபான்கள் - அமெரிக்க படை மீதான மோதல் பற்றி 100 கோடி செலவில் படம் எடுக்கிறார். அதில் அந்த தீவிரவாதிகள் தொழுவது, குரான் ஓதுவது போன்ற காட்சிகள் வருகின்றன. இதனை பிடித்துக்கொண்டு எதிர்ப்பு என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளார்கள். தற்போது பிரச்சனையை கையில் எடுத்துள்ள இயக்கங்களின் நோக்கம் மதம்மல்ல, படத்தை எதிர்க்க வேண்டும் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே தவிர இதன்பின்னால் வேறு ஒன்றும்மில்லை.
ஜெ கமலுக்கு எதிராக களம்மிறங்க காரணம் ?.
100 கோடி ரூபாய் செலவில் தீவிரவாதிகள் பற்றி எடுக்கப்பட்ட படத்துக்கு எப்படியும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என துப்பாக்கி படத்துக்கு நேர்ந்த நிலையை கண்ட கமல் முதல்வர் ஜெ வின் ஜெயா டிவிக்கு டிவி ஒளிப்பரப்பு உரிமையை விற்க முடிவு செய்தார். அதன்படி பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஜெ டிவி நிர்வாகம் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்க தொடங்கினார். விலை பேச்சுவார்த்தை நடந்த போது, இரு தரப்பு பிரச்சனைகள் கமல் முன் நின்றன.
ஆவை இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு, அடுத்து தியேட்டர் பிரச்சனை. விஸ்வரூபம் முதலில் டி.டி.எச்சிலா?, தியேட்டரிலா? என்ற பிரச்சனை நடந்து வந்தது. தியேட்டர் அதிபர்கள் ஓன்றுகூடி கமலை எதிர்த்தபோது கமல் சட்ட போராட்டத்துக்கு தயாரானார். ஜெ அரசாங்கம் கமல்க்கு ஆதரவு என்பது போல் காட்டியது. தியேட்டரில் தான் முதலில் என்ற முடிவுக்கு வந்தபோது ஜெவுடனான சாட்டிலைட் உரிமை பேச்சுவார்த்தையும் முறிந்திருந்தது. அடிமாட்டு விலைக்கு கேட்டதால் படத்தை ஸ்டார் விஜய்க்கு விற்றுவிட்டார் கமல். இதில் ஜெவுக்கு கமல் மேல் ஆத்திரம்.
இந்தநிலையில் தான் சில இஸ்லாமிய இயக்கங்கள் விஸ்வரூபத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. படத்தை தடை செய்ய வேண்டும்மென குதித்தன. உள்துறை செயலாளரிடம் மனு தந்ததும் இதற்காகவே காத்திருந்த ஜெயா அரசின் அதிகாரிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி விஸ்வரூபத்துக்கு தடை போட்டனர். ஒரே நேரத்தில் 32 மாவட்ட கலெக்டர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என இரண்டு வாரம் தடை போடப்பட்டது.
நீதிமன்ற விவாதத்தில் தமிழகரசின் தலைமை வழக்கறிஞர் படத்தை தடை செய்ய வேண்டும் என எடுத்து வைக்கப்பட்ட வாதங்களே எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல எனச்சொல்லாமல் சொன்னது. சில இஸ்லாமிய இயக்கங்கள் மட்;டுமே இந்தப்படத்தை தடுக்கிறார்கள் என இருந்ததை இல்லையில்லை நாங்களும் தடுக்கிறோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கியது தமிழகரசின் செயல்பாடுகள்.
ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என கமலை சில இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து பேசியபின் அறிவித்தார். இருந்தும் தமிழ்நாடு தவ்ஹ{த்ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி போன்ற சில அமைப்புகள் மீண்டும் தலைமை செயலகம் சென்று மனு தந்தள்ளார்கள்.
விஸ்வரூபம் படத்தின் மூலம் ஜெ சாதித்துக்கொண்டது.
விஸ்வரூபம் படத்தை தடை செய்து நான் இஸ்லாமியர்களுக்கு நண்பன் என்ற முகமுடி போட்டுக்கொண்டார். இதனால் அதிமுக ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள், சில தீவிர பிற்போக்குவாத இஸ்லாமிய அமைப்புகள் சந்தோஷப்படுத்தி வரும் நாடாளமன்ற தேர்தல் கூட்டணியில் ஒரு கட்சியை இணைத்துக்கொண்டார்.
தன் சேனலுக்கு சாட்டிலைட் உரிமையை தராத கமல்ஹாசனை தன்னிடம்முள்ள முதல்வர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார். எந்த படமாகயிருந்தாலும் நான் கேட்ட விலைக்கு கிடைக்கனும் என திரைத்துரைக்கு விஸ்வரூபம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்துக்கு எதிராக சில இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்தன. அவர்களை தன் நடவடிக்கையால் ஒன்றிணைத்த ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவு தந்ததன் விளைவாக வாய்க்கு வந்தப்படி பேசிவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனைத்தான் ரத்தவெறி பிடித்த மோடியின் நண்பர் ஜெ விரும்பினார். இஸ்லாமிய இயக்க தலைவர்கள் தங்கள் மோசமான பேச்சுகளின் வாயிலான இஸ்லாமியர்கள் ‘மோசமானவர்கள்‘ என்ற பிம்பத்தை மாற்று மதக்காரர்களிடம் பதியவைத்துவிட்டார்கள்.
இந்த உண்மைகளை உணராமல் ஜெ தங்கள் மதத்தை காக்க வந்த இறை தூதராக போற்றி புகழ்கின்றனர் இஸ்லாமிய இயக்கத்தினர்.
இதனை பார்க்கும் போது யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ நான் ஒப்புக்கொள்கிறேன் ஜெவின் மூளை நரி மூளை.