தமிழகத்தின் முதன் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் நடராசமுதலியார். 1916ல் கீசகவதம் என்ற மௌன படத்தை வெளியிட்டார். தென்னிந்தியாவில் வெளியான முதல் மௌன படமாகும்.
தென்னிந்தியாவில் முதன்முதலில் திரையரங்கு கட்டியவர் ரகுபதிவெங்கய்யநாயுடு. இவர் தான் தெலுங்கு சினிமாவின் தந்தை.
தென்னிந்தியாவில் முதல் பேசும் படம் பக்தபிரகலாதா. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எச்.எம்.ரெட்டி தான். 1931 செப்டம்பர் 15ந்தேதி பக்தபிரகலாதா வெளியிடப்பட்டது.
ஒன்னரை மாதம் கழித்து அதாவது 1931 அக்டோபர் 31ந்தேதி காளிதாஸ் என்ற பேசும்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது. இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. சென்னையில் பிரபலமாக இருந்த லிபர்ட்டி திரையரங்கில் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின் மொத்த செலவு 30 ஆயிரம் ரூபாய். காளிதாஸ் படத்தில் பாதிக்கு மேல் தெலுங்கு மொழியே பேசினார்கள் நடிகர்கள்.
1933ல் பி.பி.ரங்காச்சாரி என்பவர் கலபா என்ற படத்தை எடுத்தார். இந்த படத்தில் தான் நடித்தவர்கள் அனைவரும் திரையில் தமிழில் பேசினார்கள்.
1934ல் சீதா கல்யாணம் என்ற படம் வெளிவந்தது. அந்தப்படத்தில் ராஜம் என்பவர் ராமனாக நடித்தார். ராமனின் மனைவி சீதையாக ராஜத்தின் தங்கை ஜெயலட்சுமி அந்த காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியவர் பாபுரேவ் பிந்தர்கர்.
சூப்பர் ஸ்டார்.
1934ல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த முதல் திரைப்படம் பவளக்கொடி வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சுப்புலட்சுமி. படத்தை கே. சுப்பிரமணி இயக்கினார். அப்போது இந்தப்படம் மாபெரும் வெற்றி படமாம். தொடர் வெற்றிகள் தந்த எம்.கே.டி தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்.
மேற்குறிப்பிட்ட படங்கள் எல்லாம் தமிழில் வெளிவந்தாலும் தயாராது கல்கத்தா, மும்பை போன்ற இடங்களில் தான்.
தமிழகத்தில் எடுக்கப்பட்ட முதல் படம்.
தமிழகத்தில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஸ்ரீநிவாசகல்யாணம்.
முதல் பெரும் சம்பளம்.
1935ல் வெளியான நந்தனார் படத்தில் நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் சம்பளம் பெற்றுக்கொண்டு நடித்துள்ளார். இந்தியாவே அதை பரபரப்பாக பேசியது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டது.
முதல் இரட்டை வேடம்.
1935 தமிழ் சினிமாவில் முக்கியத்துவமான ஆண்டு. இந்த ஆண்டு தான் துருவா என்ற படத்தில் தான் ஒருவரே இரட்டை வேடத்தில் நடிக்கும் காட்சி வைக்கப்பட்டது.
சமூக புரட்சியவாதி, நகைச்சுவை மன்னர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து வெளிவந்த முதல் படம் மேனகா. அதோடு இந்தப்படம் தான் தமிழின் முதல் சமூக படம் என்ற பெயரை பெற்றது. அதோடு, ஏ.வி.மெய்யப்பசெட்டியார் சினிமா தயாரிக்க தொடங்கிய ஆண்டு இதுவே.
எம்.ஜீ.ஆர் அறிமுகமான சதிலீலாவதி என்ற படம் 1936ல் வெளிவந்தது. டி.எஸ்.பாலைய்யா இந்தப்படத்தில் தான் அறிமுகமானார். இந்தப்படத்தில் கலைவானர் கதாநாயகராக நடித்தார்.
தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர் - டி.பி.ராஜலட்சுமி. அவர் இயக்கிய படம் மிஸ் கமலா. வெளியான ஆண்டு 1936.
தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னி.
1944 தீபாவளியன்று சுந்தர் ரா நட்கர்னி இயக்கத்தில், எம்.கே.டி நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளியை தாண்டி தியேட்டர் ஹவுஸ்புல்லாக ஓடி சாதனை புரிந்த படம். இந்த படத்தில் மன்மதலீலையை வென்றோர் உண்டோ என்ற பாடல் இன்றளவும் ஹிட் பாடல். அதோடு அன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி இந்த படத்தில் நடனம் ஆடியுள்ளார்.
1948ல் எஸ்.எஸ். வாசன் தயாரிப்பில் 30 லட்ச ரூபாய் செலவில் உருவான படம் சந்திரலேகா. இந்தியாவின் பல மொழிகளில் வெளியான படம்மிது.
1949ல் வெளியான நல்லதம்பி படத்துக்கு அறிஞர் அண்ணா வசனம் எழுதினார்.
1950ல் வெளியான மந்திரகுமாரி படத்துக்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம். 1952ல் சிவாஜி அறிமுகமான பராசக்தி வெளிவந்தது.
1954ல் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம் அந்தநாள். சிவாஜி நடித்தது. இயக்கம் சுந்தரம் பாலசந்தர்.
தமிழில் முதல் வண்ணப்படம்.
1956ல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் தான் முதல் வண்ண திரைகாவியம். இதனை இயக்கியவர் சேலம் மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம்.
1964ல் சிவாஜியின் 9 மாறுப்பட்ட நடிப்பில் வெளியான படம் நவராத்திரி. படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன்.
( இவைகள் அனைத்தும் வேறு பதிவவர்களின் பதிவுகளில் இருந்து சுட்டதன் தொகுப்பு).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக