புதன், ஜனவரி 23, 2013

வீடியோ உருவானது எப்படி ?.

உலகின் முதல் திரைப்பட நிறுவனம்.

பாண்டிய மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா என்ற ஐயத்துக்கு விடை தேடியது போல கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்த லீலண்ட் ஸ்டான்போர்ட்க்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா என்பதே சந்தேகம். அதை அப்போது பிரபலமாக இருந்த புகைப்பட கலைஞர் எட்வர்ட் மெய்பிரிட்ஜ் ஜிடம் கேட்டு விடை தாருங்கள் என்றார்.

அவரும் உடனே களத்தில் இறங்கினார். ஐந்து அடிக்கு ஒரு மேகரா என 24 கேமராக்களை லைனாக தயாராக வைத்தார். ஒவ்வொரு கேமராவுக்கும் ஒவ்வொரு போட்டோகிராபரை நியமித்தார். குதிரையை ஓடவிட்டு படங்களை எடுத்து அந்த நெகட்டிவ்வை அவர் கண்டறிந்த சூப்பிராசிஸ்கோப் என்ற பிரஜக்டர் மூலம் இணைத்து நெகட்டிவ்வை ஓட்டினார்.

திரையில் குதிரை ஓடியது. குதிரை ஓடும்போது நொடி நேரங்களில் குதிரையின் கால்கள் பூமியில் இருக்காது என திரையில் பார்த்ததை கவர்னரிடம் கூறினார். அதோடு, 1878 ஜீன் 15ந்தேதி முதல் ஓடும் படம் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்பட்டது.

அந்த படத்தை திரையிட்டு காட்டியதால் உலகின் முதல் திரைப்பட நிறுவனமாக மோஷன் பிச்சர்ஸ் வரலாற்றில் இடம் பிடித்தது.

வீடியோ துறையின் தந்தை - லூயிஸ் லீ பிரின்ஸ். இவர் இயக்கி 1888 அக்டோபர் மாதம் வெளியிட்ட சுழரனொயல புயசனநn ளுஉநநெ என்ற குறும்படம் தான் முதல் படமாக அங்கீகரிக்கப்பட்டது. 1890ல் இவர் காணாமல் போனதால் இவர் நகரும் படத்தை கண்டறிந்த பெருமை இவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் தாமஸ் ஆல்வா எடிசன் அதிகாரபூர்வமாக கேமராவை கண்டறிந்தவர் என வரலாற்றில் பதியப்பட்டார். இவர் கண்டறிந்த வீடியோ கேமராவின் பெயர் முiநெவழபசயிh.

அதன் பின் ஆகஸ்ட் - லூயிஸ் லூமிரி சகோதரர்கள். 1895ல் சினிமாமோட்டோகிராபி என்ற கேமராவை கண்டறிந்தனர். அதனை கொண்டு அவர்களின் தொழிற்சாலைக்கு வெளியே நின்று தொழிலாளர்கள் வெளியே வருவதை படம் எடுத்தனர். 50 விநாடிகள் படம் எடுக்கப்பட்டது.

ஜார்ஜ் மெல்லியஸ்.


கறுப்பு வெள்ளையில் படம்பிடிக்கப்பட்ட நாட்களில் நெகட்டிவ்வில் கலர் பூசி கலர் படமாக காட்டியவா இவர்.

முதல் விளம்பர பட இயக்குநர். 

ஷிராலால்சென் என்பவர் ஏ டான்சிங் சீன்ஸ் என்ற குறும்படத்தை இயக்கினார். முதல் விளம்பர பட இயக்குநரும் அவரே.


இந்தியாவில் வீடியோ.

1895ல் இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான மும்பையில் முதல்முறையாக திரைப்படம் காட்டப்பட்டது. அந்தப்படம் லூமிரி சகோதரர்கள் எடுத்த முதல் படம்.

இந்திய சினிமாவின் தந்தை யார் ?.

இந்தியாவில் வெளியான முதல் இந்தியப்படம் ஸ்ரீபுன்தலிக். இது 1912ல் வெளிவந்தது. அதை இயக்கியவர் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் டோர்ன். ஆனால் வரலாற்றில் இவர் இருட்டடிப்பு செய்யப்பட்டு இவருக்கு பின் படமெடுத்த தாதாசாகேப் பலிக் பெயர் பிரபலமாக்கப்பட்டது. இந்தியாவில் இரண்டாவது மௌன படமான ராஜா அரிச்சந்திரா எடுத்த தாதாசாகேப் பலிக் 1913ல் எடுத்தார்.

இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்
Jamshedji Framji Madan. 

1931ல் இந்தியாவில் முதல் பேசும்படம் ஆலம் அரா. இதனை இயக்கியவர் அர்தர்சிர் இரானி.

அடுத்து தென்னிந்திய சினிமா பற்றி கொஞ்சம்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக