பெங்களுருவை சேர்ந்த கிரண் என்கிற சப்ட்வேர் இன்ஜினியரை அவனது காதலி பிரேமா, நாற்காலியில் கட்டிப்போட்டு அவன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் புகை வருவதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல்போய்வுள்ளது. பிரேமாவை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பி.டி.எஸ்.எம் செய்தோம், அப்படி நடந்துவிட்டது எனச்சொன்னதை காவல்துறை நம்பவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக பார்க்கிறது பெங்களுரூ காவல்துறை.
இப்படி தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. (தமிழ்நாடா என அதிர்ச்சியடைய வேண்டாம் ஒசூர் சம்மந்தமான புகார் ஒன்று இணையத்திலேயே உள்ளது.) அதனை குற்றம்சாட்டப்பட்டவர் பி.டி.எஸ்.எம் எனச்சொல்ல காவல்துறை அதனை திட்டமிட்ட கொலையாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.
அதுயென்ன BDSM?
இது கலவியில் ஒருவகை சிற்றின்ப விளையாட்டு.
B - Bondage : Use of physical restraints (ropes, handcuffs) to limit movement.
D - Discipline : Rules-based interaction involving a dominant partner and a submissive partner.
S - Sadism : Deriving pleasure from inflicting
M - Masochism : masochism pain or intense sensation.
நீங்கள் தமிழ்படுத்தி படித்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து எளிமையாக சொல்லவேண்டும் என்றால் உணவில் ஒருவருக்கு இட்லி பிடிக்கும், இன்னொருவருக்கு தோசை, மற்றவருக்கு பூரி, சிலருக்கு பரோட்டா, மிகச்சிலருக்கு உப்புமா பிடிக்கும். இப்படித்தான் கலவியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் பிடிக்கும். தம்பதிகளில் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. டுபாகூர் செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களை தாண்டி உண்மையான செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர்களின் விளக்கங்கள் மூலம் அதுக்குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளமுடியும்.
இந்த பி.டி.எஸ்.எம் குறித்த பயிற்சி வகுப்புகள் சென்னை, பெங்களுரூவில் நடப்பதாக இணைய நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் ஆச்சர்யத்துடன் வெளியிட்ட விளம்பரத்தை கண்டேன். அந்த விளம்பரத்தில் பி.டி.எஸ்.எம் பாதுகாப்பாக செய்வது குறித்த பயிற்சி எனச்சொல்லியிருந்தார்கள். எனக்கு பி.டி.எஸ்.எம் குறித்தெல்லாம் அதிர்ச்சியெல்லாம் இல்லை. பலஆண்டுகளுக்கு முன்பே நாராயணரெட்டி போன்ற மருத்துவர்களின் கட்டுரைகள் வழியாக இதுப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதன்பின் கோவில் சிற்பங்கள், தண்டராம்பட்டு, தானிப்பாடியில் உள்ள கலவி குளத்தின் சிற்பங்களில் பார்த்துள்ளேன். நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரை நேரிலும் பார்த்துள்ளேன். இப்போது பி.டி.எஸ்.எம் க்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுமட்டும்மல்ல மாஸ்ட்ரூபேட் செய்யவும் பயிற்சி தருகிறார்கள் என்கிற விளம்பரத்தையும் பார்த்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. இந்த 2கே தலைமுறை எல்லாவற்றிலும் தெளிவு என நினைக்கிறோம். ஆனால் அதிலும் 100க்கு 10 பேராவது அம்மாஞ்சியாக அதாவது இணையருக்கு முத்தம் தந்தால்போதும் குழந்தை பிறந்துவிடும் கேட்டகிரியாகவே இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.
மரணித்த அந்த இளைஞனின் அப்பா தன் மகன் குறித்து சொன்னதாக எழுதியிருந்தார்கள்.தன் மகன் நல்லவன், அவனுக்கு பெண்களிடம் பேசுவதே தெரியாது எனச்சொல்லியிருந்தார். உலகத்தில் 90 சதவித பெற்றோர்கள் என் பிள்ளைகள் அப்பாவி என நினைக்கிறார்கள், நம்புகிறார்கள், வாதாடுவார்கள். தன் பிள்ளைகளின் தவறுகள் தெரியாதவரை.
உலகம் முழுவதும்மே பி.டி.எஸ்.எம் விரும்பும் கேட்டகிரி மனிதர்கள் குறிப்பிட்ட சதவிதம் இருக்கிறார்கள். உணவே ஆளுக்கு ஆள் மாறுப்படும்போது கலவி மாறுப்படாதா என்ன? மறுப்படும். சட்டத்திற்கு உட்பட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இணையருக்குள் நடக்கும் கலவி தவறில்லை. அதிலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அப்படி நஞ்சாகி ரத்த காவு வாங்கியபின்பே விவகாரம் வெளியே வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக