சில
இடங்களில் கடுமையான சொற்கள் இருக்கும்…….
எழுத்தாளர் புளுத்தி என்றால் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நினைப்பு சில இணைய எழுத்தாளர்களுக்கு எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை.
நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார், அந்த நிகழ்வுக்கு நடிகை த்ரிஷா வருகிறார். அவர் சக தொழில்முறை நண்பராக வந்துயிருக்கலாம், நெருங்கிய தோழியாக வந்துயிருக்கலாம் அல்லது விஜய் மனைவி விவாகரத்து வழக்கில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதைப்போல விஜய்யின் இல்லீகல் காதலியாக வந்துயிருக்கலாம். செய்தி தொலைக்காட்சிகளின் நேரலையில், த்ரிஷா கண் கலங்கினார், பூரித்துப்போனார் எனச்சொல்லியபடி இருந்தனர். கங்கா முழு சந்திரமுகியாக மாறியிருப்பவரை பார் என்பதுப்போல் செய்திகள் இருந்ததால் பொதுத்தளத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. நடிகர் விஜய் செய்வதையே சரி, தவறு எனச்சொல்லவேண்டிய நிலையில் இருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் இப்படித்தான் இருக்கவேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பது தவறாயென்ன?
நடிகர் விஜய் – நடிகை த்ரிஷா குறித்து சமூகவளைத்தளங்களில் கிசுகிசுக்கள் எழுந்தபோது, நடிகனுக்கு இதெல்லாம் சகஜம் என நீட்டி முழங்கி நார்மலைஸ் செய்தார்கள் பலர். அதே விஜய் இப்போது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகிவிட்டார். அவர் என்ன செய்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உற்றுநோக்குவார்கள், அவரின் ஒவ்வொரு செயலும் அனைத்து மட்டங்களிலும் எதிரொலிக்கும்.
தனது மனைவியிடம்மிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாதநிலையில் இன்னொரு பெண்ணுடன் பகிரங்காமா வலம் வரும் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பாமல், கலைஞருக்கே இரண்டு பொண்டாட்டி அது தப்பில்லையா எனக்கேட்கிறான் ஒரு எழுத்தாளன். எழுத்தாளர் என்கிற போர்வையில் என்ன மயித்த வேண்டுமானாலும் கேட்டுவிடலாமா? அறிவுள்ள எவனும் அப்படியொரு கேள்வி எழுப்பமாட்டான். காரணம் கலைஞர் சட்டப்படி இருதிருமணங்களை செய்துக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு என் மனைவி, துணைவி என பொதுவெளிக்கு உரிமையோடு அழைத்துவந்தார். நடிகர் விஜய்யை போல் கலைஞர் செயல்படவில்லை. இப்போதுகூட நடிகை த்ரிஷாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ளச்சொல்லுங்கள், யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? விமர்சனமே வரப்போவதில்லை. முறையற்ற உறவை தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் விஜய் உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளார், அதனை அவரும், அவரது ஆட்களும் நார்மலைஸ் செய்கிறார்கள், அதனை எழுத்தாளர் போர்வையில் இருந்துக்கொண்டு நியாயப்படுத்துவது எழுத்தாளர்களுக்கு அவமானம்மில்லையா?
தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு காவல்நிலையத்துக்கு கணவன் – மனைவி கள்ளக்காதல் தொடர்பாக புகார் வருகிறது என வைத்துக்கொள்வோம். காவலர்கள் விசாரணையில் முதலமைச்சர் விஜய்யே பொண்டாட்டிய துரத்திவிட்டுட்டு இன்னொருத்தியோட வாழும்போது நான் வாழறது தப்பா என கேள்வி எழுப்பினால் என்ன பதில் தரும் காவல்துறை? சட்டப்படி தவறு என்றுதானே சொல்லும், அதைத்தான் நாமும் சொல்கிறோம். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளன் என்றால் அதைத்தான் சொல்வான்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என குன்ஹா தீர்ப்பு எழுதும்போது ஒரு விஷயத்தை கோடிட்டுகாட்டினார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவர்களுக்கு கீழே பணியாற்றுபவர்கள் தவறு செய்தால் அதனை எப்படி கேள்வி கேட்கமுடியும்? தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கவேண்டும், சமூகம் அதனால் தான் அவர்களை உயர்ந்த பதவியில் உட்காரவைக்கிறது, முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்கிற ரீதியில் தீர்ப்பில் குறிப்பிட்டுயிருந்தார்.
கலைஞருக்கு இரண்டு மனைவிகள் என்பது லீகலானது, அதனை அவர் நியாயப்படுத்தி என்னைப்போல் இரண்டு மனைவிகள் வைத்துக்கொள்ளுங்கள் அவர் மறைமுகமாக, நேரடியாக எங்கும் சொல்லவில்லை. நடிகர் விஜய் சமூகத்துக்கு என்ன சொல்கிறார் முதல்மனைவியோடு சட்டரீதியான விவாகரத்துக்கு பெறவில்லை. பிள்ளைகள் எதிர்காலம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபின் அவரின் செயல்பாட்டைதான் கேள்வி எழுப்புகிறது. நடிகர் விஜய்யை பல லட்சம் ரசிகர்கள் வெறிக்கொண்டு அவரை கொண்டாடினார்கள். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அந்த பொறுப்புணர்ந்து செயல்படவேண்டாமா?
இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது, இதெல்லாம் மக்களை பாதிக்காது, மக்களுக்கு இதெல்லாம் தேவையில்லாதது என கம்பு சுற்றும் எழுத்தாள பொறுக்கிகள் சிலர், விஜய்யின் செயலை நார்மலைஸ் செய்து பதிவு எழுதுகிறார்கள்.
கள்ளக்காதல் தப்பில்லை, மனைவிக்கு துரோகம் செய்யலாம், பிள்ளைகளை நடுத்தெருவில் விடலாம், தன்னுடைய அரிப்புக்கு யாரும் யாருடனும் படுக்கலாம், மெட்ரோ நகரங்களில் பாருங்கள் இதெல்லாம் சாதாரணம் என யாரோ சிலர் செய்யும் தவறுகளை பொதுமைப்படுத்தி எழுதி நியாயப்படுத்துவதுப்போல் இதையும் நியாயப்படுத்துகிறார்கள். அப்படி நியாயப்படுத்துபவர்கள் யாரென உன்னிப்பாக கவனித்துப்பாருங்கள், தங்களது முறையற்ற பாலியல் இச்சையை நியாயப்படுத்த முடியாது என்பதால் முதலமைச்சர் விஜய் – த்ரிஷா விவகாரத்தை நியாயப்படுத்துவதன் மூலம் தங்கள் தவறுகளை நியாயப்படுத்துகிறார்கள். மனதளவில், உடலளவில், மூளை, ரத்தம் என உறைந்துப்போன ஆணாதிக்கவாதிகள் மட்டுமே இதுப்போன்ற பாலியல் அயோக்கியத்தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதில் சில கார்ப்பரேட் எழுத்தாள பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.
தனிமனித உரிமை என்பது வேறு, தனிமனித வாழ்க்கை என்பது வேறு என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். அது யாராக இருந்தாலும் தவறுகளை தவறு என சுட்டிக்காட்டுபவனே மனிதன். அவன் மட்டுமே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக