புதன், ஜனவரி 15, 2014

சினிமா நடிகர்-நடிகைளும் பொங்கல் வாழ்த்தும் தேவையா ?



இந்த கட்டுரை எழுதிக்கொண்டுயிருந்த நேரம் தமிழகம் முழுவதும் செல்பேசி, தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல் வழியாக நண்பர்கள், உறவினர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள். தொலைக்காட்சி வாயிலாக நடிகர்கள், நடிகைகள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சேனல்களில் வாழ்த்து தெரிவித்த நடிகர் நடிகைகள் எத்தனை பேருக்கு பொங்கல் விழாவென்றால் என்னவென்று தெரியும்?. பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளுக்கான பண்டிகை என்பதாவது தெரியுமா? எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று தெரியுமா?. விவசாயத்தின், விவசாயிகளின் இன்றைய நிலை தெரியுமா?.

நடிகர் – நடிகைகளை உட்கார வைத்து, ஆடவைத்து நீங்க என்ன படம் நடிக்கறிங்க?, போன படத்தல அப்படி நடிச்சிங்க, அடுத்த படத்தல எப்படி நடிச்சியிருக்கிங்க என கேட்டுவிட்டு கடைசியாக பொங்கல் வாழ்த்து சொல்லுங்க எனச்சொல்லி அவர்களின் வாழ்த்தை வாங்கி ஒளிப்பரப்புவதன் மூலம் விவசாயிகளின் வயிறோ, மனமோ நிரம்பிவிடுமா?. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என சேனல்கள் அழைத்தால் இவர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா? ( நடிகர் நாசரிடம் வாழ்த்து கேட்ட சினிமா இணைய தளம் ஒன்றுக்கு பொறித்து தள்ளியுள்ளார். )

மறைந்த நடிகர்களான சிவாஜி, எம்.ஜீ.ஆர், கண்ணதாசன், வாலி, சந்திரபாபு போன்றவர்களின் பிறந்தநாளுக்கு, மறைந்த நாளுக்கு அல்லது சினிமாக்கள் பற்றிய நிகழ்வுகளுக்கு வாழ்த்து சொல்லட்டும் கவலையில்லை. அது அவர்கள் தொழில். அதைப்பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். அதற்கான நிகழ்வுகளில் அவர்கள் வாழ்த்து, பேட்டி தந்தால் சிறப்பாகயிருக்கும். விவசாயத்தை பற்றியே தெரியாத இன்றைய நடிகர்களிடம் பொங்கல் வாழ்த்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம். 

வாழ்த்து தெரிவிக்கும் நடிகர்களை விடுங்கள். வாழ்த்து நிகழ்வுகளை வழங்கும் இந்த தொலைக்காட்சிகளுக்கு என்ன அறுகதை இருக்கிறது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த. பொங்கல் என்பது விவசாயிகளுக்கானது. எந்த தொலைக்காட்சியாவது விவசாயிகளிடம் சென்று வாழ்த்து செய்தியை வாங்கி வெளியிட்டுள்ளதா?. அதற்காக பொங்கல் விழாவில் விவசாயிகளின் அவர்களின் பிரச்சனையை அலச சொல்லவில்லை.

கிராமத்தில் ஒரு விவசாயின் வீட்டிற்க்கு சென்று அவர்கள் எப்படி பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்பதை பதிவு செய்து ஒளிபரப்பலாமே. ஏன் எந்த தொலைக்காட்சியும் செய்வதில்லை. அப்படி செய்தால் விளம்பர வருமானம் வராது என்ற காரணம் தான் வேறுயென்ன. நகரத்தில் வெங்கள பாத்திரத்தில், சில்வர் குண்டாவில் கேஸ் அடுப்பில் வைக்கப்படும் பொங்கலை காட்டி இதுதான் பொங்கல் விழா என விவசாய மக்களின் உழைப்பை கொச்சைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

நகரத்தில் இன்று வாழும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அதற்கு காரணம் நம் சமூகம் மட்டுமல்ல தொலைக்காட்சிகளும் தான். பொங்கலன்று சிறப்பு திரைப்படங்களை ஒளிப்பரப்பி இடைஇடையே விளம்பரங்களை ஒளிப்பரப்பி கோடிகளில் பணத்தை சுரண்டும் தொலைக்காட்சிகள் சம்மந்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்துயிருக்கிறோம் இந்த நாளில் என யோசித்தது உண்டா?.

பெரும்பாலான நாடுகள் தங்களது பாரம்பரிய விழாக்களைப்பற்றி மக்களிடம் நியாயமான முறையில் தகவல்களை கொண்டு போய் சேர்க்கின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தை பற்றியே அறியாத நடிகர் – நடிகைகளை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதனால் தான் பொங்கல் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்க்கிறார்கள் தமிழக நகர குழந்தைகள்.

நடிகர் நடிகைகளுக்கு மட்டும்மல்ல தொலைக்காட்சிகளுக்கும் பொங்கல் வாழ்த்து சொல்ல எந்த தகுதியும் கிடையாது.

5 கருத்துகள்:

  1. அன்புடையீர்..
    இன்று வலைச்சரத்தில் தங்களது தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_30.html
    நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழமை துரை செல்வராஜீ அவர்களுக்கு நன்றி. அறிமுகம் செய்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  2. பொங்கல் மட்டும் இல்லைங்க. குடியரசு தினம், சுதந்திர தினம், புத்தாண்டு, தீபாவளி அட என்ன இழவு விழுந்தால் கூட சினிமாக் காரங்களையே வளைச்சு வளைச்சு இந்த மொத்த டிவிக் காரங்களும் காட்டுறாங்க. சில சமயம் கடுப்பா வரும். மக்கள் என்ன கேணைப் பசங்களா. இப்பதான் சினிமா புதுப்படம் என எல்லாவற்றையும் நெட்டிலே பார்த்திடுறோம், அப்புறமும் எதுக்குய்யா டிவியில் சினிமாக் காரங்களை. புரியவே இல்லை.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாசனி, ஏப்ரல் 05, 2014

    There will be more protective headgear for use where foam filling has thickened.
    He has brain damage from boxing which makes him dizzy when he's tired.
    This game mode allows you to choose matches manually where
    you can choose who you are going to fight with and the boxing arena
    where you will be fighting, or you can select a random fight wherein the app will choose your opponents automatically.


    Also visit my website homepage ()

    பதிலளிநீக்கு