2013 நவம்பரில் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துக்கொள்ள கூடாது என்ற போராட்டம் பலயிடங்களில் நடந்து வந்தது. அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 30ந்தேதி இரவு சேலத்தில் உள்ள மத்தியரசின் வருவாய்த்துறை அலுவலகத்தின் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் தீ வைக்கப்பட்ட கோணிப்பையை அலுவலகத்துக்குள் வீசிவிட்டு சென்றனர். அதில் மின் விளக்குகள் சேதமடைந்துள்ளன. அலுவலகத்துக்குள் பிட் நோட்டீஸ்கள் வீசப்பட்டுயிருந்துள்ளன. அதில், தமிழக அரசின் தீர்மானத்தை கண்டுக்கொள்ளாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம், இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும், காமன்வெல்த்தில் கலந்துக்கொள்ளகூடாது என இருந்துள்ளது.
இந்த ‘சதி’ செயலை செய்தவர்கள் என நான்கு பேரை கைது செய்தது போலிஸ். சென்னையில் மூன்று பேர் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கைது செய்தது. பி்ன் தேசிய பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கை மாற்றியது போலிஸ். பொய் வழக்கு என ஜெ அரசை சாடினார் கைதான கொளத்தூர்.மணி. பழ.நெடுமாறன், வை.கோ ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
அதற்கடுத்த இரண்டாவது நாள் தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் ஜெ அரசால் இடிக்கப்பட்டது. ‘எதிர்ப்பு’ காட்டிய பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். தமிழ் உணர்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். போராடியவர்களை விரட்டி விரட்டி அடித்தது ஜெ போலிஸ். பழ.நெடுமாறனுக்காக பத்திரிக்கைகள் வாயிலாக, அறிக்கைகள் வாயிலாக, பேஸ்புக், இணைய தளங்களில் பொங்கினார்கள் பலரும்.
பழ.நெடுமாறன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். அவருடன் கைதானவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். தங்களை கைது செய்தது ஸ்காட்லாந்து போலிஸ் இதற்கும் தமிழக முதல்வர் அம்மாவுக்கும் எந்த சம்மந்தமும்மில்லை என்ற ரீதியில் அறிக்கை தந்துவிட்டார் பழ.நெடுமாறன். உணர்ச்சி வேகத்தில் பொங்கி ஜெவை வசைப்பாடிய வை.கேவும் அமைதியாகிவிட்டார்.
அவர்களோடு மற்றவர்களும் அடுத்தடுத்த ‘அரசியல்’ வேலைகளை கவனிக்க போய்விட்டார்கள்.
ஆனால் அதே ஈழ தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்த கொளத்தூர் மணி கைதை மறந்துவிட்டார்கள். அவர் கைதாகி தற்போது 75 நாட்களை கடந்து விட்டது. அவரை வெளியே கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என விசாரித்தால் கொஞ்சம் கஸ்டமாகத்தான் உள்ளது.
தங்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்காக பணியாற்றிய, விடுதலை புலிகளுக்காக உண்மையாக போராடிய, ஈழப்போராட்டம் என்றால் தயங்காமல் முன்னின்ற கொளத்தூர்மணி கைதானதை வாகாக மறந்துவிட்டார்கள். ஈழத்தின் தமிழக குத்தகைதாரர்களான சீமான் வகையறா, நெடுமாறன் வகையறா மற்றும் பிற தமிழ் தேசியம் பேசும் வகையறாக்கள்.
வேடதாரியான சீமானை விட கொளத்தூர்மணி எந்த விதத்தில் குறைந்து போனார் ?.
ஈழத்தை மையமாக வைத்து உங்களுக்குள் ( நெடுமாறன், வை.கோ, மணி, சீமான் மற்றும் பிறர் ) இருக்கும் மோதல் சிலர் அறிந்தது தான். அதற்காக உங்களுடன் தோள் கொடுத்து நின்றவரை முதுகில் எலும்பில்லாமல் விட்டு தந்துவிட்டீர்களே நியாயம்மா?. எதற்காக நீங்கள் முன் எடுக்கும் போராட்ட வழிமுறைகள் தோற்றுப்போய்விடுகின்றன என்பது இப்போது புரிகிறது.
கொளத்தூர் மணியின் திராவிட பேச்சு, திராவிட கொள்கை, சாதிக்கு எதிரான செயல்பாடுகள், பெரியார் மீதான பாசம் போன்றவை தமிழ் தேசியம் பேசுகின்ற நெடுமாறன், சீமான் வகையறாவுக்கு கசக்கத்தான் செய்யும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நடத்துகின்ற வை.கோவுக்கும் கசக்குகிறது என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனாலும் நீங்கள் அனைவரும் எதில் வேறுபட்டாலும் ஈழ அரசியலில் ஒன்றுபடுகிறிர்கள். அதற்காகவாவுது நீங்கள் குரல் கொடுத்துயிருக்கலாம் ஆனால் செய்யவில்லை. ஜெ மீதான பயமும் ஒரு காரணம் எனச்சொல்லலாம்.
கொளத்தூர் மணி கைதை மறந்து அரசியல் செய்யும் அற்பர்களே இதுதான் உங்கள் வீரதீர அரசியலா ?.
வெளிநாட்டிலிருந்து பணம் வரும் ஈழ குத்தகைதாரர்களுக்கு பிரச்சனையே கிடையாது. மற்றும்படி உண்மையென்று நம்பி செயல்பட்டா இப்படி தான்.
பதிலளிநீக்குதிராவிட விடுதலை கழகத்தின் பெரிய போஸ்டர் ஒன்று பார்த்தேன்.அம்பேத்கர்.பெரியார் படங்களுக்கு நடுவே பெரிய பிரபாகரன் படம் வைக்கபட்டிருந்தது என்ன பகுத்தறிவோ!
///அம்பேத்கர்.பெரியார் படங்களுக்கு நடுவே பெரிய பிரபாகரன் படம் வைக்கபட்டிருந்தது என்ன பகுத்தறிவோ!///
பதிலளிநீக்குசகோ. வேகநரி,
அம்பேத்கார், பெரியார் படங்களுக்கு நடுவில் சங்கராச்சாரியார் படத்தை வைப்பது தான் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத செயலே தவிர, பிரபாகரன் படத்தை வைப்பது, இவ்வளவுக்கு அல்லட்டிக் கொள்ள வேண்டிய விடயம் அல்ல. ஏனென்றால், அம்பேத்காரும், பெரியாரும் சாதியை எதிர்த்தனர், ஆனால் பிரபாகரனோ சாதியை எதிர்த்தது மட்டுமல்ல, அவர் உயரோடிருக்கும் வரை சாதிப்பேயை அடக்கி, தமிழர்களையும் சாதிப்பாகுபாடற்ற சமுதாயமாக மாற்ற முடியும் என்பதை நடைமுறையில் காட்டியவர். அந்தக் காரணத்துக்காக பிரபாகரன் படத்தையும், பெரியார் அம்பேத்கார் படங்களுடன் சேர்த்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது உங்களில் ஏன் இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.