புதன், ஜனவரி 29, 2014

அழகிரிக்காக அழும் நடுநிலை வேடதாரிகள்.


அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் இந்த செய்தி திமுகவில் கூட அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. மாற்றுக்கட்சிக்காரர்களை விட நடுநிலை பேசும் மறைமுக அதிமுககாரர்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவரை எப்படி நீக்கலாம் என இணையத்தில், சமூக வளைத்தளங்களில், செய்தித்தாள் மற்றும் மீடியாக்களில் அதுப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் சொல்வதற்க்கெல்லாம் அழகிரியிடம் கருத்து கேட்டு ஒளிப்பரப்பிக்கொண்டு இருக்கிறது மீடியா.

வெளிப்படையாக சொல்ல வேண்டும்மென்றால் இது குடும்ப தகராறு, கட்சியில் தனக்காக இடத்தை தக்கவைத்துக்கொள்ள நடக்கும் அதிகார மோதல். இதைப்பற்றி அதன் தொண்டர்கள் தான் கவலைப்படவேண்டும். யார் தலைவராக வர வேண்டும் என்பது கட்சி தொண்டர்களின் விருப்பம். ஒருவரை கட்சியில் சேர்ப்பதும், நீக்குவதும் கட்சி தலைமையின் உரிமை. இன்று நீக்கப்பட்ட அழகிரி நாளை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படலாம். இதில் கேள்வி கேட்க அந்த கட்சியின் தொண்டர்களை தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

மீடியாக்கள் மக்களிடம் தகவலை கொண்டும்போய் சேர்க்கிறோம் எனச்சொல்லலாம். அதுயென்ன திமுகவின் நெகட்டிவ் செய்திகளை மட்டும் கொண்டும்போய் சேர்க்கிறிர்கள். அவர்கள் மட்டும் தான் தமிழகத்தில் கட்;சி நடத்துகிறார்களா மற்றவர்களெல்லாம் தெருவில் மிட்டாய் விற்கிறார்களா?. எல்லாருமே கட்சி நடத்துகிறார்கள் தானே. பின் ஏன் மற்ற கட்சிகளில் நடக்கும் அதிகார மோதல்களை செய்தியாக்குவதில்லை ?. சின்ன சின்ன கட்சிகளை விடுங்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் பெரும் கட்சியான அதிமுகவில் இருந்து சிலர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்கள். ஏன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திடீரென கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெ விடம் கேட்க யாருக்காவுது தைரியம் உண்டா ?. நீக்கப்பட்டவர் என்னை ஏன் நீக்கினிர்கள் என கேட்கும் ஜனநாயகம் உண்டா? அட இன்று அழகிரிக்காக ‘குரல்’ கொடுக்கும் மீடியாக்கள் ஜெவிடம் கேட்கும் தைரியம் உண்டா?. ஜெவிடம் கேள்வி கேட்டால் சாதாரணமாக இருந்தால் இது எங்கள் கட்சியின் உட்கட்சிவிஷயம் எனச்சொல்லிவிட்டு போய்விடுவார். மீறி கேள்வி கேட்டால் அதிகாரத்தின் கால்களால் நசுக்கப்படுவார். குறைந்த பட்சம் இணையத்தில், சமூக வளைத்தளத்தில் புழங்குபவர்களுக்கு கூட கேள்வி கேட்கும் தைரியம் கிடையாது.

இங்கு ஒன்றை தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். அழகிரி கழகத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படவில்லை. தற்காலி நீக்கம் தான். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் அழகிரியிடம் இருந்து பதில் வரவில்லையென்றால் நிரந்தரமாக நீக்கப்படுவார். பதில் தந்தால் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பரிசீலித்து பதில் ஏற்புடையதாக இருந்தால் தற்காலிக நீக்கம் நீக்கப்படும். இல்லையேல் நிரந்தரமாக நீக்கப்படுவார். திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையிது. நடைமுறை என்பதை விட கழக சட்டவிதிமுறை. இதை எந்த காலத்திலும் திமுக தலைமை மீறியது கிடையாது என்பதே உண்மை. இந்த நடைமுறை இந்தியாவில் எந்த கட்சியிடமும் கிடையாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

திமுகவில் கேள்வி கேட்கும் ஜனநாயகம் இன்றளவும் உண்டு. அதனால் தான் தேர்தலில் சீட் கேட்டு கட்டிய பணத்தை சீட் தராததால் அந்த பணத்தை திருப்பி தாருங்கள் என ஒரு முன்னால் எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அதை திமுகவும் ஏற்று பதில் தந்தது.

அதனால் திமுகவை கொள்கை ரீதியாக, அதன் பொது முடிவுகள் மீது விமர்சியுங்கள். அற்பத்தனமாக ஈழ மக்களுக்கு செய்த துரோகம், நாடகம் அதுயிதுவென பிதற்றி எழுதி உங்கள் முகத்திரையை கிழித்துக்கொள்ளாதீர்கள். ஏன் எனில் உங்கள் நடுநிலை முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டு இருக்கிறது.

6 கருத்துகள்:

 1. கடந்த திமுக அரசில் சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றிய Dr .பூங்கோதை ஆலடி அருணா தான் பெற்ற டாக்டர் பட்டத்தை பெயருக்கு முன்னால் போடுவதை சகிக்காத தலைமைதான் திமுக தலைமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழமை விஜயன் அவர்களுக்கு, தவறான தகவல்களை பதிய வைக்க முயல வேண்டாம். கடந்த கால அரசு குறிப்புகளை எடுத்து பாருங்கள். அவர்கள் பெயருக்கு முன்னால் டாக்டர், மருத்துவர் என்ற பட்டத்தோடு தான் வந்துள்ளன.

   நீக்கு
 2. அட்டகாசமான பதிவு. நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் திமுக வை கடித்து குதறும் அற்ப பதர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள். மனச்சாட்சியின்படி சரியான பதிவு

  பதிலளிநீக்கு
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழமை திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்ட பின் தான் எனக்கு தெரியவந்தது. நானும் கண்டேன். வலைச்சரம் தளத்தை நடத்துபவர்களுக்கு என் மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.

   நீக்கு