சனி, மார்ச் 09, 2013

அடங்காத அமீர்.தன்னை தவிர தமிழ் சினிமாவில் அறிவுடையவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் இயக்குநர் அமீர் உள்ளார் போல. பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பின் மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கினார் அமீர். அதன்பின் ராம், பருத்திவீரன் படம் எடுத்தபோது திரும்பி பார்க்க வைக்கப்பட்டார். 

ஈழ போரின்போது சீமானுடன் சேர்ந்து தன்னை ஈழ போராளியாக காட்டிக்கொண்டார். ஒரு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது இனிமேல் ஈழம் பற்றி பேசமாட்டேன் என வாக்குறுதி தந்து வெளியே வந்தவர். அதன்பின் தமிழ் ஈழம் என்றதும் பதுங்கிக்கொள்ள தொடங்கினார். திரைப்பட இயக்குநர் சங்கத்தில் ஈழ ஆதரவாளராக காட்டிக்கொண்டு செயலாளர் பதவிக்கு வந்தார். 

நடிகர் கமல்ஹாசனின், விஸ்வரூபத்துக்கு சில இஸ்லாமிய இயக்கங்கள், அரசு தடை ஏற்படுத்தியபோது இயக்குநர் சங்க செயலாளராக கருத்து சொல்ல தயங்கிய இந்த கருத்து கந்தசாமி, மிக தாமதமாக படம் வெளிவந்தப்பின் முதல் ஆளாக போய் படம் பார்த்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன் என வெண்டைக்காய் அறிக்கை வெளியிட்டார். விஸ்வரூம் படம் வெளியாகி பல பகுதிகளில் திரையரங்கை விட்டும் போய்விட்டது. இப்போது வந்து விஸ்பரூபம் இஸ்லாமியர்களை பற்றி பேசவில்லை. தாலிபான்களை பற்றி பேசுகிறது. தாலிபான்கள் தங்கள் நாட்டின் சுய உரிமைக்காக போராடுகிறார்கள். விடுதலைப்புலிகளைப்போல என மாபெரும் விஞ்ஞானியாக அறிக்கை விட்டுள்ளார். 

இப்போது எதற்கு இந்த அறிக்கை ?. 

விஸ்வரூபத்துக்கு சில இஸ்லாமிய இயக்கங்களால் சிக்கல் வந்தபோது இஸ்லாமியரான அமீர் இயக்குநர் சங்க செயலாளராக அறிக்கை விடவில்லை. முதல்வர்க்கு பயந்தும், தன் மதத்துக்கு ஆதரவாக அடங்கிகிடந்தார். ரொம்ப நெருக்கடிக்கு பின் தாமதமாக எதிர்ப்பு அறிக்கை அவரிடம்மிருந்து ஈனஸ்வரத்தல் வந்தது. இதில் வெறுப்பான சில இந்து அமைப்புகள் அமீர்க்கு குடைச்சல் தர தயாரானாயினர். அவர்களும் திரைபடத்தையே கையில் எடுத்தனர். ஒரு இஸ்லாமியர் (அமீர்) எப்படி இந்து கடவுள் ( ஆதிபகவான் ) பெயரை வைக்கலாம் என பிரச்சனை செய்து போலிஸில் புகார் தந்தனர். பஞ்சாயத்து முடிந்து படம் திரைக்கு வந்தது, 

ஒரு சிலரை திருப்திபடுத்த என் படத்துக்கு ஏ சான்றிதழ் தந்துவிட்டார்கள் இது அநியாயம் என குதித்தார். படம் படுதோல்வி. படத்தை ஓட வைக்க திரைப்பட தணிக்கை குழு மாஃபியா கும்பல் என சாடினார். அதில் ஒரு உறுப்பினர் அமீர் மீது புகார் தந்துள்ளார். ஏதாவது ஒன்றை செய்து பிரச்சனை செய்து பிரபலமாகி அதன்வழியில் படத்தை ஓட வைக்கவும், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் முயல்கிறார். 

இந்நிலையில் தான் விஸ்பரூம் படம் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன் போர்வழி என தாலிபான்களையும் - விடுதலைப்புலிகளையும் ஒரே தராசில் வைத்து அளவிட்டு அறிக்கை விடுகிறார்.  


அமீர் அவர்களே, 

முற்போக்கு தனமாக பேசிய பெண்களை, இளம்பெண்களை விடுதலைப்புலிகள் எத்தனை பேரை கொன்றுள்ளார்கள் என பதில் தர முடியும்மா ?.

விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை குறிவைத்து எத்தனை வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளார்கள் என பட்டியல் தர முடியுமா ?.

விடுதலைப்புலிகள் எங்கேயாவது பிற்போக்கு தனமாக நடந்துக்கொண்டுள்ளார்கள் என சொல்ல முடியும்மா ?.

விடுதலைப்புலிகள் பெண் கல்வியை, உரிமையை மறுத்துள்ளார்கள் என குற்றம் சாட்ட முடியும்மா ?.

விடுதலைப்புலிகள் தங்களது தேசத்தில் சம உரிமைக்காக, நல் வாழ்வுக்காக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுகிறார்கள். 

விடுதலைப்புலிகள் மதத்துக்காக, மத வெறியை முன் வைத்து போராடவில்லை. 

தாலிபான்கள் யாரை எதிர்த்து போராடுகிறார்கள், எதற்காக தாலிபான்கள், பெண்கள் என்பவர்கள் தாலிபான்கள் பார்வையில் எப்படி பட்டவர்கள் என சொல்லுங்கள். இப்படி எத்தனையோ கேள்விகளை கேட்க முடியும். 

விடுதலைப்புலிகளையும் - தாலிபான்களையும் ஒரே தராசில் வைப்பதில் இருந்து தெரிகிறது அமீரின் அரசியல், சமூக அறிவு. 

9 கருத்துகள்:

 1. நல்ல பதிவு....

  நடனமாடியதற்க்காக 17 முஸ்லிம்களை கொன்றவர்கள் தாலிபான்கள்..இவர்களை சுதந்திர போராட்ட வீரார்கள் என்பவர்கள் உண்மையில் அறியாமையில் உள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.....

  தாலிபான்கள் ஜிஹாத்,சுவனம் என்ற மாயையில் மதவெறி கொண்டு நடக்கின்றனர்.........
  இந்த மதவெறியர்களுக்கு அமீர்,சீமான் போன்றோர் ஆதரவு தருகிறார்கள்......
  சிந்திக்க தெரிந்தவர் சீமான் என்று எண்ணி இருந்தேன் இல்லை நானும் மற்ற அரசியல்வாதிகள் போலதத்தான் என்று காட்டி வருகிறார்......

  வைகோ மீது மட்டுமே கொஞ்சம் மரியாதை கூடுகிறது...........

  பதிலளிநீக்கு
 2. THERE IS SUSPICION THAT AMIR MAY BE FROM A TERRORIST GROUP. IF ANYBODY KNOWS ABOUT HIS PAST, THEY CAN REVEAL.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் பதிவை கண்டதும் சிரிப்புத்தான் வந்தது. நீங்கள் நினைப்பது போல இந்த அமீர் மட்டும் இப்படி விடுதலை புலிகளையும் தாலிபான் மதவாதிகளையும் இணைத்து பேசுவது இல்ல. சொல்லப்போனால் இஸ்லாமிய மதவாதிகள், ஆதரவாதிகள் என்று அணைத்து இஸ்லாமிய அபிமானிகளும் இதையே தான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். கீழே ஒரு அதிமேதாவியின் இணைப்பை கொடுத்துள்ளேன். இவர் உலக வரலாற்றையே புரட்டிப்போடும் அளவுக்கு புதிய விஷயங்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பார். படியுங்கள்.
  http://kalaiy.blogspot.in/2013/02/blog-post_16.html
  படித்ததும் உஷ்ணம் ஏறுவது நூறு சதவிகதம் உறுதி.

  பதிலளிநீக்கு
 4. சிறுபிள்ளைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு முதல்நாள் விருந்துவைத்து மறுநாள் அவர்கள் உடலில் குண்டைக்கட்டி பொதுமக்கள் மீது வெடிக்கச்செய்யும் ஈன வேலையை தாலிபான்கள் செய்ததில்லை. போர் என்று சொன்னதும் பாதள பங்கரில் பதுங்கும் பொட்டைவேலையை தாலிபான்கள் செய்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுமக்கள் இல்லடா முட்டா துலுக்கா...
   அவர்கள் இயக்கத்தின் எதிரிகள்...தனி நபர்கள் ..தெருவில் போகும் அப்பாவி கூட்டமல்ல...
   தமிழ்நாட்டுத் துலுக்கன் நீயே இப்படி வெறியன் என்றால் தலிபான்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா....மதவெறியை வைத்து உன் கண்ணை குத்திக் கொள்ளாதே முட்டாப்பயலே..

   நீக்கு
 5. சிறுபிள்ளைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு முதல்நாள் விருந்துவைத்து மறுநாள் அவர்கள் உடலில் குண்டைக்கட்டி பொதுமக்கள் மீது வெடிக்கச்செய்யும் ஈன வேலையை தாலிபான்கள் செய்ததில்லை. போர் என்று சொன்னதும் பாதள பங்கரில் பதுங்கும் பொட்டைவேலையை தாலிபான்கள் செய்ததில்லை.

  பதிலளிநீக்கு
 6. ஆப்கானில் எலிகளை போல பொந்துகளில் வசிப்பவர்கள் யாரப்பா நிஜாம் பாகிஸ்தானவில் இன்று 17 சிறுவர்கள் கைது செய்தார்களே அந்த செய்திகளை நீ படிக்கவில்லையா?

  ¤¤¤¤¤⊙⊙⊙⊙¤¤¤¤¤¤

  பதிலளிநீக்கு