சனி, மார்ச் 23, 2013

மீண்டும் திணிக்கப்படும் இந்தி. – தமிழகம் என்ன செய்ய போகிறது ?.

இந்தி திணிப்பு மக்கள் மீது திணிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் திணிக்கப்பட்ட இந்தியும் அதற்கான போராட்டங்கள் பற்றிய வரலாறும். 

இந்திய துணை கண்டத்தில் 1652 மொழிகள் பேசப்படுகின்றன. அவை 826 மொழி கூட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை முகலாய பேரரசு ஆண்ட காலத்தில் தான் சில காலம் உருது ஆட்சி மொழியாகயிருந்தது. மற்றப்படி அந்தந்த பகுதிகளின் மொழியே அந்தந்த பகுதிகளின் ஆட்சி மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழி. அப்போதும் அந்தந்த பகுதி மக்களின் மொழியே துணை ஆட்சி மொழியாக இருந்தன. இருந்தும் இந்தியை அனைத்து மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கான ஒரே மொழியாக்கும் பணிகள் நடைபெற்றன. அதனை எதிர்த்து அப்போதே பிரச்சனைகள், போராட்டங்கள் நடந்தன.இந்திய விடுதலைக்கு முன்பு.

தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 1922ல் இருந்தே காங்கிரஸில் இருந்த ஆதிக்க சக்திகள் சமஸ்கிருதத்தையம், இந்தியையும் பரவலாக்கினர் இதை உணர்ந்த பெரியார் 1926ல் இருந்தே இந்தியை எதிர்க்க ஆரம்பித்தார்.

1937ல் சென்னை மாகாணத்தில் நடந்த பொது தேர்தலில் நீதிகட்சி தோற்றது. மாகாண பிரதமராக அரியணை ஏறிய ராஜாஜி உத்தரவுப்படி அப்போதைய கல்வி அமைச்சரான டாக்டர் சுப்பராயன் 21.7.1938ல் பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கினார். சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட தமிழகத்தில் - 60, ஆந்திராவில் 54, கேரளாவில் 7, கர்நாடகாவில் 4 என மொத்தம் 125 பள்ளிகளுக்கு இந்தி கட்டாயம் என்ற உத்தரவு பறந்தது.

ஈழத்து சிவானந்தா அடிகள் தான் முதன் முதலில் தன் எதிர்ப்பை தந்தி மூலம் ராஜாஜிக்கு அனுப்பி வைத்தார்.

1938 சனவரி 3ல் தமிழக பள்ளிகள் முன் மறியில் பேரும் சி.எம் வீட்டு முன்பும் திரண்டு எதிர்பு தெரிவித்து 1271 பர் கைதானார்கள். அதில் 1166 ஆண்கள், 73 பெண்கள், 32 குழந்தைகள் சிறைப்பட்டனர்.

முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு 27.2.1938 காஞ்சிபுரத்தின் எம்.எல்.ஏவான கான் பகதூர் கலிபுல்லாசாகிபு தலைமையில் நடந்தது.

சுதந்திரத்திற்க்கு பின்

1947ல் சுதந்திர இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை கட்டாயமாக்கியதால் 17.7.1948ல் பெரியார் இந்தி எதிர்ப்பு மாநாட்டை கூட்டினார். மறைமலையடிகளார் தலைமையில் நடந்த இந்த மாநாட்டை திரு.வி.க அவர்கள் தொடங்கி வைத்தார். அண்ணா, மா.பெ.சி ஆகியோர் இந்தயை எதிர்த்து பேசினர்.

2.8.1948ல் இந்தி எதிர்ப்பு கூட்டடத்தில் இந்தி எதிர்ப்புக்குயென்று ஒரு படை ஒருவாக்கப்பட்டது. அந்த படையின் தளபதியாக பேரறிஞர் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் அண்ணா.

1.8.1952ல் திருச்சியில் இந்தி எதிர்ப்பை முன்னிட்டு இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் தொடங்கி வைத்தார்.

13.10.1957ல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாளாக கொண்டாடப்படவேண்டும் என திமுக அறிவித்து வெற்றிகராமாக நடத்தியது. தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்ட குழு தலைவராக ஈ.வி.கே சம்பத் தேர்வு செய்யப்பட்டார். 1.8.60ல் சென்னை கோடம்பாக்கத்தில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில், பேரறிஞர் அண்ணா நேருவின் முடிவை கண்டித்தார்.

3.8.1960ல் பிரதமர் நேரு, சம்பத்க்கு எழுதிய கடிதத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றார்.

13.10.1963ல் திமுக மாநாட்டில் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை தீயிட்டு கொளுத்துவோம் என தீர்மானம் இயற்றப்பட்டது. கைது செய்யப்பட்டார் அண்ணா.

நேரு தன் உறுதிமொழியை மீறி ஆட்சி மொழி சட்டத்ததை உருவாக்கி 26.1.1965ல் நாடாளமன்றத்தில் இந்தியே ஆட்சிமொழி என்றார். 1965 சனவரி 26 ஐ துக்க நாளாக அண்ணா அறிவித்தார்.

அப்போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்தன.
திருச்சி கீழப்பழுர் சின்னசாமி – 20.1.1965
கோடம்பாக்கம் த.மு.சிவலிங்கம் - 26.1.1965
விருகம்பாக்கம் 25 வயது அரங்கநாதன் 27.1.1965
திருச்சி ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்
விராலிமலை சண்முகம்
கோவை சத்தியமங்களம் முத்து
திருச்சி கீரனூர் முத்து என தீக்குளிப்பு தொடர்ந்தது.

1967 ல் நடந்த பொது தேர்தலில் 9 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தன. ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டத்தை (ழுககiஉயைட டயபெரஎயபநள யுஅநனெஅநவெ யஉவ 1968 ஏ) கொண்டு வந்த மற்ற மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் கூடுதல் மொழியாகயிருக்கும் என்றார்.23.1.1968ல் தமிழகத்தின் முதல்வாரன அண்ணா, தமிழகத்தில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் படித்தால் போதும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தமிழ்மகன் ஒருவன் உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் இந்தி திணிப்பை நுழைய விடமாட்டோம் என்றனர் தமிழ் மற்றும் திராவிட அரசியல் இயக்கத்தினர்.

சில ஆண்டுகள் கமுக்கமாக இருந்த இந்திய ஒன்றியத்தை ஆளும் பொறுப்பில் உள்ள அதிகாரவர்க்கத்தின் இந்தியை பல்வேறு வடிவங்களில் நுழைத்தபடியே வந்தனர். தற்போதைய நிலையில் ஒவ்வொரு சிறிய நகரங்களிலும் பத்துக்கும் குறையாத சி.பி.எஸ்.சி பள்ளிகள் தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளன. இப்பள்ளி உள்ள மாநிலங்களில் கூட அம்மாநில மொழிகள் கற்றுதரப்படுவதில்லை. இந்தி, சமஸ்கிருதம் போன்றவையே கற்று தரப்படுகின்றன. மக்களிடம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் சிறந்த பாடத்திட்டம், அந்த பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள் தான் புத்திசாலிகள் என்ற மாயையை உருவாக்கி வருகிறார்கள். இது பிற மொழியை அழிக்கும் ஒர் மறைமுக யுக்தி.

இந்த வகையில் தான் மத்தியரசின் பணியாளர் தேர்வுகளில் பிராந்திய மொழிக்கான இடத்தினை அழிக்கும் வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்தியரசின் பணியாளர் தேர்வுகளை இந்தியில் எழுத விரும்பாதவர்கள் தமிழில் அல்லது வேறு பிராந்திய மொழியில் எழுத வேண்டுமானால் குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும். அதோடு பிராந்திய மொழியில் படித்தவர்கள் மட்டுமே அந்த தேர்வை எழுத முடியும் என விதிகளில் திருத்தம் செய்துள்ளது யு.பி.எஸ்.சி. இது இனி வருங்காலத்தில் இந்தியை படிக்க வைக்க செய்யப்படும் யுக்தி.

இந்தியை கற்றுக்கொள்ளட்டும் பிரச்சனையில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தியில் தேர்வு எழுதுகிறவர்களைப்பற்றி கவலையில்லை. ஆனால் இந்தியை திணிக்காதீர்கள் என்றுத்தான் கேட்கிறோம். இந்தி படித்தால் தான் அரசாங்க வேலை என பிளாக்மெயில் செய்வது தவறானது.

பட்டும் புத்திவராத கட்சி எதுயென்றால் அது காங்கிரஸ் தான். இந்தி திணிப்பு தான் இந்தியாவின் கதாநயகனாக இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் பிம்பத்தை உடைத்து மாநில கட்சிகளை கதாநாயகர்களாக்கியது. இப்போது நொண்டி குதிரையாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் காணாமல் போகும் சூழ்நிலை வரும்.

( கட்டுரைக்கான தகவல்கள் வழக்கறிஞர் ஆறுமுகம் முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்தி சிக்கலும் இறுதி தீர்வும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. )

4 கருத்துகள்:

  1. பல மாநிலங்களும் எதிர்த்ததால் கைவிட்டு விட்டதாகப் படித்தேன் ?

    பதிலளிநீக்கு
  2. good link http://www.quora.com/Tamil-Nadu-India/Why-do-Tamils-hate-Hindi-Why-are-people-in-Tamil-Nadu-reluctant-to-learn-Hindi-even-though-it-is-spoken-by-the-vast-majority-of-India-Why-cant-we-have-one-national-language-as-most-other-countries-have/answer/Koushik-Rajagopalan?srid=3SLM&st=ns

    பதிலளிநீக்கு
  3. http://www.quora.com/Tamil-Nadu-India/Why-do-Tamils-hate-Hindi-Why-are-people-in-Tamil-Nadu-reluctant-to-learn-Hindi-even-though-it-is-spoken-by-the-vast-majority-of-India-Why-cant-we-have-one-national-language-as-most-other-countries-have

    பதிலளிநீக்கு