1993 மார்ச் மாதம் மும்பையில் கார், டூவீலர்கள் மூலம் மும்பையின் முக்கிய இடங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து பெரிய அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேனன் குரூப், தாவூத்இப்ராஹீம் கேங்க் குற்றவாளிகாக சேர்க்கப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அதில் முக்கியமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத். இவர் மீதான குற்றச்சாட்டு, ஏ.கே57 துப்பாக்கி மற்றும் 9எம்.எம் பிஸ்டல், அதற்கான தோட்டாக்கள் சட்டவிரோதமாக தாவுத் குரூப்பிடம் இருந்து வாங்கினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. விசாரணையின் முடிவுக்கு பின் 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும்.
ஓராண்டு ஆறு மாதம் ஏற்கனவே தண்டனையை அனுபவித்த சஞ்சய்தத் பெயிலில் வெளியே வந்தார். இதில் உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இன்னும் 3.6 ஆண்டுகள் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். நான்கு வாரகாலத்துக்குள் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தான் சஞ்சய்தத்தை மன்னிக்க வேண்டும் என்ற குரல் வெளிப்பட்டு வருகிறது. குரல் தருபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய இந்திய பத்திரிக்கை கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜீ, மத்திய சட்டத்துறை அமைச்சர், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த். இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட தற்போது சினிமாவில், அரசியலில் பிரபலமாக உள்ள அத்தனை முன்னால், இந்நாள் நாயகர், நாயகிகள் மன்னிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எம்.பியாக உள்ள பாலிவுட் நடிகை ஜெயாபச்சன், தனிப்பட்ட முறையில் கவர்னரை சந்தித்து மன்னிக்க வேண்டும்மென முறையிடுவேன் எனச்சொல்லியுள்ளார்.
மத்திய – மாநில அரசுகள் என்ன செய்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதுயென்ன சாமன்ய மக்களின் விலைவாசி உயர்வு குரலா அலட்சியப்படுத்த சினிமா நடிகர் – நடிகைகளின் குரலாச்சே. அதனால் வேகவேகமாக கருத்து சொல்லியுள்ளார்கள் அமைச்சர்கள். மகாராஷ்ட்டிராவின் உள்துறை அமைச்சர் பட்டீல், கோரிக்கை மனு வரவில்லை. வந்தால் பரிசீலிப்போம். இந்தியா ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் ஷிண்டே, மன்னிப்புக்கான அத்தனை வழிகளிலும் அவருக்கு உதவப்படும் எனக்கூறியுள்ளார். இவ்ளோ ஆதரவு கருத்து வந்துவிட்டது. இதற்கு மேல் மகராஷ்ட்டிரா கவர்னர் என்ன முட்டாளா மன்னிக்காமல் விடுவதற்க்கு. கதர் தொப்பி போட்ட அன்ன ஹசாரே, பி.ஜே.பி, சிவசேனா போன்ற கட்சிகள் மட்டும் எதிர்க்கின்றன.
இதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. அதாவது, சட்டம் என்பது பணக்காரர்களுக்கும், பிரபலமானவர்களுக்கும் வலைந்து கொடுக்கும் தன்மை உடையது என்பதே அது. முன்பு மறைமுகமாக வலைந்து கொடுத்த சட்டம் இப்போது வெளிப்படையாக வலைந்து கொடுக்க தொடங்கியுள்ளது.
சஞ்சய்தத் தவறு செய்துள்ளார், பிரபலமானவராக இருந்தால் தவறு செய்யலாம்மா கேட்டால் அவர் குண்டு வைக்கவில்லை, அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தார் அது சாதாரணமானது என்கிறார்கள்.
முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையில் பேட்டரி வாங்கி தந்த பேரறிவாளன் தூக்குதண்டனை கைதியாக உள்ளார். சந்தனகடத்தல் வீரப்பன்க்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நான்கு பேர் தூக்கு கயிற்றின் முன் நிற்கிறார்கள். இன்னும் பலர் தடா சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் வேறு மாநிலத்திலும் இப்படி பலர் உள்ளார்கள். இவர்களும் தான் அவர்களுக்கே தெரியாமல் தப்புக்கு துணை போய்வுள்ளார்கள். இவர்களுக்கு தூக்குதண்டனை தரப்பட்டுள்ளது. தப்பு செய்தவனை விட தப்புக்கு துணை போனவன்க்கு அதிக தண்டனை எனச்சொல்வதால் தானே தப்புக்கு துணை போன பலருக்கும் இந்த நீதித்துறை தண்டனை வழங்கியுள்ளது. அப்படியிருக்க சஞ்சய்தத் தை மட்டும் மன்னிக்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்.
சஞ்சய் தத்க்கு மட்டும் தான் மனைவி, பிள்ளைகள் உள்ளதா? தண்டனை பெற்ற மற்றவர்களுக்கு இல்லையா?. இல்லை குண்டு வெடிப்பில் இறந்துப்போன, குண்டு வெடிப்பில் கை, கால்கள் என உடல் பாகங்களை இழந்து நிற்பவர்களுக்கு குடும்பம் இல்லையா ? யாருக்கு இல்லை குடும்பம். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. இது செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இவர்களும் 20 ஆண்டுகளுக்கும் குறையாமல் சிறையில் வாடி வதங்கி வருகிறார்கள். சஞ்சய் தத்தாவது ஆட்டம் பாட்டத்துடன் இருந்தார்.
20 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்தது போதாதா என அறிக்கை விடுகிறார் ரஜினி. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட பலர் சிறையில் ஆயுள் தண்டனை முடித்தும் உள்ளார்கள். இவர்களுக்கு இந்த தண்டனை போதும் என விடுதலை செய்யவில்லையே ?. 20 ஆண்டுகள் ஒரு வழக்கு இழுத்தது என்றால் நீதித்துறையையும், அரசாங்கத்தின் மீது பாய வேண்டியது தானே. சஞ்சய்தத் பாதிக்கப்பட்டார் என்றவுடன் ஓடி வரும் நாயகர்களே எத்தனை பேர் தப்பே செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஏத்தனை எத்தனை பேர் 10 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு என வழக்கு இழுத்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக ஏன் நீங்கள் கவலைப்படுவதில்லை, குரல் கொடுப்பதில்லை ?.
கவலைப்படமாட்டீர்கள் ஏன் என்றால் அவர்கள் உங்களைப்போல நடிகர்கள்ள என்பதால்.
இதுயென்ன சாமன்ய மக்களின் விலைவாசி உயர்வு குரலா அலட்சியப்படுத்த சினிமா நடிகர் – நடிகைகளின் குரலாச்சே. அதனால் வேகவேகமாக கருத்து சொல்லியுள்ளார்கள் அமைச்சர்கள். -மிக அருமை வரிகள்
பதிலளிநீக்குmaanai konra vazhakku onru ullathe
பதிலளிநீக்குதோழரே, மன் வழக்கு சஞ்சய்தத் மீதல்ல. சல்மான்கான், தபு, சோனாலி பிந்தரே என்று 7 பேர் மீது உள்ளது அந்த வழக்கு. சஞ்சய்தத் மீது வேறு வழக்குகள் உள்ளன.
நீக்குplease add follow by mail.it will be convenient .
பதிலளிநீக்குkalakarthik