புதன், ஏப்ரல் 03, 2013

மருத்துவரை ஜெயிலுக்கு அனுப்பிய ஜெ. இதுதான் ஜனநாயகம்.




தமிழகத்தில் வெளிவரும் மிக முக்கியமான செய்தித்தாள் தினதந்தி. இதன் உரிமையாளராக உள்ள சிவந்திஆதித்தன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா 26ந்தேதி வருகிறார். அவர் வருவதற்க்கு முன்பே பாதுகாப்பு போலிஸார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வருகிறார். ஐ.சி.யூ பிரிவில் உள்ள சிவந்திஆதித்தனை சந்திக்க அறைக்கு செல்லும் போது சிவந்தி ஆதித்தனின் தனி மருத்துவரும், சென்னை மருத்துவக்கல்லூரி பேரசிரியராக இருந்தவரும், மருத்துவ தொழிலை புனிதமாக கருதும் கருணாநிதி என்ற 70 வயது மருத்துவர் ஜெயலலிதாவிடம், மேடம் உங்கள் காலணிகளை வெளியே கழட்டி விடுங்கள் எனச்சொல்லியுள்ளார். அவரை முறைத்துவிட்டு உள்ளே சென்று ஆதித்தனாரை சந்தித்துவிட்டு சென்றுவிடுகிறார். 28ந்தேதி தனது மருத்துவமனையில் இருந்த கருணாநிதியை காரணம் சொல்லாமல் அழைத்து சென்ற போலிஸார், பாதுகாப்பு பணியில் இருந்த இளம் காவல் உதவி ஆய்வாளரை பிடித்து தள்ளியதாக வழக்கு பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். 

இந்த கைதுக்கு பின்னால் ஜெயலலிதாவின் வெறி தான் உள்ளது. வயது கூடக்கூட பக்குவம் வரும் என்பார்கள். அது ஜெ வுக்கு இன்றளவும் வரவில்லை என்பது வேதனையானது. ஒரு மூத்த மருத்துவரை தன் அதிகாரத்தின் மூலம் காவல்துறையை கொண்டு துன்புறுத்த வைத்த ஜெயலலிதாவை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. தான் மாறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிறுபிக்கிறார் ஜெ.

மருத்துவர் கருணாநிதியின் கைதுக்கு திமுக தலைவர் கருணாநிதி மட்டும்மே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மற்றப்படி யாரும் கருத்துக்கூறவில்லை. திமுக ஆட்சியில் தங்களுக்கு யூரின் மஞ்சளாக வந்தாலே கருணாநிதி தான் காரணம் என அறிக்கை வெளியிடும் மருத்துவம் பற்றி நன்கறிந்த மருத்துவர்கள் ராமதாஸ், கிருஷ்ணசாமி, பழ.நெடுமாறன், ‘காந்தியவாதி’ தமிழருவி மணியன், சீமான் உட்பட அனைவரும் வாய்மூடி மவுனியாக இருந்துவிட்டனர். கம்யூனிஸ்ட்டுகளும் இதில் அடக்கம். வை.கோ ஒரு படி மேலேப்போய் இலங்கையில் இரண்டு தமிழ் நாளிதழ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர்களுக்கு உடலில் இருந்து ‘பின்பக்கம் வழியாக வாயு பிரியவில்லை’ என்றாலே இதுக்கு திமுகவில் நடக்கும் உள்கட்சி பூசலே காரணம் என ஆய்வு செய்து எழுதும் ‘புலனாய்வு ஏடுகள்’ கூட சைலண்டாகிவிட்டன. புலனாய்வு இணைய தளங்கள் இந்த கைது நடவடிக்கைக்கும், முதல்வர்க்கும் சம்மதம்மில்லை என பதிவு செய்கின்றன. உச்சகட்டமாக தினதந்தி ஏடு மற்றும் அவர்களது தொலைக்காட்சியோ கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை. 

சமூக இணைய தளங்களான பேஸ்புக், டுவிட்டர் பகுதிகளில் ஈழம், இந்தியா, காங்கிரஸ், திமுக, கலைஞர் விவகாரங்களில் தங்களது கருத்துக்களை எழுதி நாங்கள் தவறு எங்கு நடந்தாலும் படையென புறப்படுவோம் என கீபோர்டில் வேகத்தை காட்டும் ‘நடுநிலை மற்றும் மனித உரிமை போராளிகள்’ கூட இதுப்பற்றி ஒரு கருத்து பதிவிடவில்லை.

நான் என்றாவது ஒருநாள் ஜெவை கூட நம்பிவிடுவேன். ராஜவிசுவாசத்தை விஞ்சிய விசுவாசிகளாக பச்சோந்திகளை விட மோசமான இவர்களை மட்டும் நம்பமாட்டேன்.

1 கருத்து:

  1. இதில் இருந்து தெரிவதெல்லாம் ஜெ பற்றி கருத்தை மாற்றி கொண்டு ஏமாற்றமடைந்து
    உள்ளீர்கள். அதை விட முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் எல்லாம். அவர்கள் தமிழ் தமிழ் என்று கூவுவதெல்லாம் , தங்களுக்கு முகவரி வேண்டும் என்பதற்காக. கலைஞர் பற்றி திட்டிவிட்டு சுகமாக தூங்க முடியும் அவர் ஆட்சி செய்யும் போதே ..இப்போது கேட்கவே வேண்டாம். இவர்கள் பற்றி நல்லெண்ணம் கொண்டதும் முதலாவதை விட ஏமாற்றமானது .

    பதிலளிநீக்கு