புதன், பிப்ரவரி 12, 2014

4. இன கலவரம். ( சிலோன் முதல் ஈழம் வரை.)
இலங்கையில் வசதியோடும், ஆங்கிலேயர்களோடு அனுசரையாக இருந்து கடல் வாணிபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது 1915ஆம் ஆண்டு கண்டி பகுதியில் வன்மை கொண்ட பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டமிட்டே தாக்குதலை தொடங்கினர். முஸ்லீம்களின் வீடுகைளயும், கடைகளையும் தேடித்தேடி அழிக்க தொடங்கினர். இது வேகவேகமாக தீவு முழுவதும் பரவியது முஸ்லீம்மக்கள் நசுக்கப்பட்டதை தமிழர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்ட பிரிட்டிஷ் கவர்மெண்ட் சிங்கள தலைவர்களான ப.ந.சேனநாயக்கா, ஊ.த.சேனநாயக்கா உட்பட ஆயிரக்கணக்கான சிங்களர்களை தூக்கி கொண்டும் போய் வெளியே வர முடியாதபடி சிறையில் வைத்தனர். இலங்கையில் போராட்டங்கள் தீவிரமானது சிங்கள தலைவர்களை அரசு விடமாட்டேன் என்றதால் இலங்கையின் பிரபலமான வழக்கறிஞரும் படித்த அவையின் தமிழர்கள் பிரதிநிதியுமான பொன்னம்பலம் ராமநாதனை அணுகிய சிங்கள பிரமுகர்கள் தலைவர்களை காப்பாற்ற வேண்டும் என முறையிட்டனர். கப்பல் மூலம் லண்டனுக்கு பயணமானவர் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்து பேசி வாதாடி வெற்றியோடு திரும்பினார். சிங்கள தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்காக இலங்கை திரும்பும் ராமநாதனுக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தனர். கொழும்பு வந்து இறங்கும் பொன்னம்பல ராமநாதனை 11 குதிரை பூட்டிய வண்டியில் ஊர்வலம் கொண்டுபோக முடிவுசெய்தனர்.

கப்பலிலிருந்து இறங்கிய ராமநாதனை அலேக்காக தூக்கிய சிங்கள இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சரட்டு வண்டிக்கு தூக்கிகொண்டு போனவர்கள் சந்தோஷத்தில் குதிரைகளை வண்டியிலிருந்து கழட்டி துரத்தியவர்கள் தாங்களே ராமநாதனை உக்காரவைத்த வண்டியை இழுத்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். இதை கண்ட முஸ்லீம் மக்கள் வெதும்ப ஆரம்பித்தார்கள். தேர்ல சிம்மாசனம் தந்தவங்க நாளைக்கே உங்கள அந்த சக்கரத்துல வச்சி நசுக்குவாங்க அன்னைக்கு தெரியும் அவங்களோட கொடூரம் என நினைத்திருப்பார்கள். காரணம், சிங்களவர்-முஸ்லீம் கலவரத்தால் முஸ்லீம்களின் வாழ்க்கையை மாறிவிட்டது. வியாபாரத்தில் வெற்றி கொடி கட்டிய முஸ்லீம்கள் கலவரத்தால் வியாபாரம், கடல் வாணிபத்தில் நொடிந்துப்போய் விவசாய வேலைக்கு போயினர்.

1936ல் சிங்கள தலைவர்கள் பார்வை இலங்கைக்கு வேலைக்காக வந்த இந்திய மலையக மக்கள் மேல் திரும்பியது. எங்க மக்களோட வேலைய புடுங்கிட்டாங்க அவங்கள திரும்பவும் இந்தியாவுக்கே துரத்தனும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷாரிடம் எழுப்பி போராட ஆரம்பித்தார்கள். 1940ல் அரசு பணிகளில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. அவர்களை பணியிலிருந்து துரத்த வேண்டும் என போராட ஆரம்பிக்க சிங்களவர்களின் எண்ணம் அக்கால கட்டங்களில் தான் தமிழர்களுக்கு புரிய ஆரம்பித்தது.

சுதந்திரத்துக்கு பின் பதவியில் அமர்ந்திருந்த பிரதமர் சேனநாயக்கா. 1948ல் பிரஜாவுரிமை சட்டத்தை கொண்டு வந்தார் தொடர்ந்து 49ல் துணைக்கு இரண்டு சட்டங்களை இயற்றினார். அதன் மூலம் சிங்கள பெயரை உடையவர்கள் மட்டுமே இலங்கை பிரைஜை. தமிழ்-முஸ்லீம் பெயருடைய லட்சகணக்கான மலையக மக்களிடம் நீங்க இலங்கை பிரஜையில்லையென்றது சட்டம்.

இதற்கு அமைச்சரவையில் தொழில்-தொழில் ஆராய்ச்சி துறை அமைச்சராகயிருந்த தமிழர் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார். இது தமிழர் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பாக பேசிய தமிழர் காங்கிரûஸ சேர்ந்த செல்வநாயகம், “மலையக மக்களுக்கு எதிராக கிளம்பியவர்கள். நாளை எங்களுக்கு எதிராக திரும்பமாட்டீர்கள் என்று என்ன உத்தரவாதம் என்றவர் அச்சட்டங்களை எதிர்த்து வாக்களித்தனர்.

தமிழர் காங்கிரஸில் கருத்து வேறுபாடு அதிகமாகி கட்சியின் முக்கிய தலைவர்களான செல்வநாயகம், வன்னிய சிங்கம், நாகநாதன் போன்றோர் கட்சியிலிருந்து வெளியேறி 1949 டிசம்பர் 18ந்தேதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி தமிழரசு கட்சியை ஆரம்பித்தவர்கள்.

1. சிங்கள மொழியோடு தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வேண்டும்.
2. இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நீக்கனும்.
3. பாரம்பரியமான தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்தல் வேண்டும்.
4. ஜனநாயகமான அரசியல் வேண்டும் என்றது.

 தமிழரசு கட்சியின் தலைவராக செல்வநாயகம் இருந்தார். தமிழர்களின் விடிவெள்ளியாக கருதப்படும் செல்வநாயத்தை தந்தைசெல்வா என்றே தமிழர்கள் அழைக்கின்றனர். மலேசியாவில் பிறந்தவர் யாழ்ப்பாணத்தில் படித்தவர் கிருஸ்த்துவரான இவருக்கு தமிழர் பண்பாடுகள் மீது தீவிர ஆர்வம். ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் பின் கொழும்பு போய் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர். வழக்கறிஞராக பணியை தொடங்கினார். சிவில் வழக்குகளில் பிரபலமானவர். தமிழ் காங்கிரஸில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் கருத்து வேறுபாட்டால் தமிழரசு ஆட்சியை தொடங்கினார். செல்வாவின் புகழும், கட்சியும் வளர வளர 70கள் வரை வெற்றியை மட்டுமே ருசித்த ஜீ.ஜீ.பி. அதன் பின் அவரின் ஒளி தமிழர்களிடம் மங்க தொடங்கியது.

1950களில் பிரதமராகயிருந்த சேனநாயக்கா அரசியலில் தனது வரிசாக அவரின் மகன் டட்லி சேனநாயக்காவை உருவாக்குகிறார் என கட்சியில் பிரச்சனை ஏற்பட்டு ஜ.தே.கட்சியிலிருந்து விலகிய ந.ர.த.ப.பண்டாரநாயக்கா 1951ல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தார். சிங்கள மக்களை கவர தன் கட்சியின் கொள்கையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என் அறிவித்தார். இது சிங்கள மக்களிடம் ஏக-போக வரவேற்பு பெற்றது.
     
1952ல் சேனநாயக்கா குதிரை சவாரியின்போது கீழே விழுந்து காயமடைந்ததால் காலமானார். இவரின் மகன் டட்லி சேனநாயக்கா இலங்கை பிரதமர் சீட் டில் உட்கார்ந்தார். தேர்தல் நெருக்கத்தில் இவரும் சுதந்திர கட்சி கொள்கை ந்டஒ ழ்ல்வ்;ச்ள் ந்ச்;ச்ள்; ண்ற்த்;த்ல்மங்;த் ஙண்ழ்ண்ஹ பார்த்து சிங்களம் அரச மொழியாக்கப்படும் என்றார். ஜ.தே.க. சார்பில் 1956ஆம் ஆண்டு சுதந்திர கட்சி வேறு சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி தேர்தலை சந்தித்தனர். மாபெரும் வெற்றி. கட்சியின்கொள்கை, சிங்கள மொழி மட்டுமே என்ற பிரச்சாரத்திற்க்கு கிடைத்த வெற்றி என்பதால் அதனை செயல்படுத்த எண்ணி பாராளமன்றத்தில சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற மசோதாவினை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டார். இதனை கண்டித்து வாக்கெடுப்பு நாளன்று செல்வநாயகம் கொழும்பு காலைமுக திடலில் சத்தியாகிரகம் போôட்டத்தை தொடங்கினார். சிங்களர்கள் பகுதியான கொழும்பில் அவர்களின் மொழியை எதிர்த்தும், கண்டித்தும் கோஷம் போரட்டதால் எங்க ஏரியாக்குள்ள வந்து எங்க மொழியை எதிர்த்து போராட்டம் செய்கிறிர்களா என கல்லெடுத்து வீசி வன்முறையை தொடங்கி வைத்தார்கள் சிங்களர்கள். கொழும்பில் கலவரம் ஆரம்பமானது அது கிழக்கு மாகாணம் வரை பரவியது.

எத்தனை உயிர் போனாலும் பரவாயில்லை உங்களின் இந்த மசோத வெற்றி பெற ஒத்தொழைக்க மாட்டோம் என அறிவித்தார் தந்தை சொல்வா. தொடர்ந்து மற்றொரு போராட்டத்தை அறிவிக்க பிரதமர் பண்டாரநாயக்கா செல்வாவிடம் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்.

1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா-செல்வா ஒப்பந்தப்படி கிழக்கு வடக்கில் பிரதேச சபைகள் அமைத்து 10 துறைகள் உருவாக்கவும் கிழக்கில் வடக்கில் தமிழ் ஆட்சி மொழியாக்கவும் சம்மதித்தால் மலையக மக்களின் குடியுரிமை விவகாரத்துக்கான போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு படிப்படியாக குடியுரிமை தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. அன்படி 1957 ஜீலை 26 பாராளுமன்றத்தில் சமர்பித்தார். தமிழ் ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை முன்மொழிந்தார் செல்வா. அந்த சட்டத்திற்க்கு சிங்கள பாராளமன்ற ஆளும்கட்சி உறுப்பினர்களும், எதிர்கட்சியான ஐ.தே.க.வும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1957 அக்டோபர் 4 தேதி கண்டி தலதா மாளிகை வரை ஊர்வலம் நடத்தினர் சிங்களர்கள். தொடர்ந்து டிசம்பர் மாதம் ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக வாகனங்களில் சீறி என்கிற சிங்கள எழுத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றியவர்கள் 1 ஜனவரி 1958ல் நாடு முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்றது அரசு. இதற்கு தமிழரசு கட்சி வடக்கு-கிழக்கு பகுதியில் தமிழ் மொழி பயன்படுத்த வேண்டும் என கேட்டு போராடியது. கோரிக்கை சரிதான் என்பதை உணர்ந்த பிரதமர், கோரிக்கையை ஏற்று சரியென அறிப்பு செய்தார். சட்டமாக்கப்பட்டது. இதை சிங்களர்கள் எதிர்த்தோடு 1958 ஏப்ரல் 9ந்தேதி சுகாதார அமைச்சரான விமலா விஜயவர்த்தனா தலைமையில் பிக்குகள் பிரதமர் பண்டாரநாயக்கா மாளிகைக்கு சென்று ஒப்பந்தத்தை கிழித்து எறி எனக்கேட்டு உக்காந்து விட்டனர். இதனால் ஒப்பந்த கைவிடுவதாக எழுதிதந்தார் பண்டாரநாயக்கா.

ஒப்பந்தம் கிழிப்பு இரண்டு தரப்பிலும் கொதிப்பை உருவாக்கிவிட்டது. சிங்களவர் தமிழ் எழுத்தையும், தமிழர் சிங்கள எழுத்தையும் பேருந்துகளில், கடைகளில் அழித்தனர். தாங்கள் வலிமையாக உள்ள பகுதிகளில் தங்களது தாய்மொழியான தமிழில்  பெயர்களை எழுத ஆரம்பித்தனர். இந்த நிலையில் 1958 மே மாதம்  தமிழரசு கட்சி வருடாந்தர மாநாட்டை வவுனியாவில் நடத்தியது. மாநாட்டில் பிரதமருடனான உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும் எனக்கேட்டு சத்தியாக்கிரகம் இருக்கபோகிறோம் என முடிவு செய்து அறிவித்தனர். மாநாடு முடிந்து தமிழரசு கட்சியினர் வவுனியாவிலிருந்து ரயில் மூலம் மட்டகளப்பிற்கு திரும்பபிவந்துக்கொண்டு இருந்தனர். வழியில் பொலனாறுவில் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக்கொண்டுயிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர், கத்தி குத்தும் நடந்தது.

தொடர்ந்தார்போல் மே 25 அன்று பஸ் ஒன்றையையும் சிங்களர்கள் கவிழ்த்தார்கள் மிகப்பெரிய தாக்குதல் ஆரம்பமாகின. இதை பிரதமர் கண்டுக்கொள்ளவில்லை 500 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 15 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாயினர். தமிழர்களின் வீடுகள், கடைகள் நொருக்கப்பட்டதை சிங்கள காவல்துறை பார்வையாளராக இருந்து கை கட்டி அமைதியாக வேடிக்கை பார்த்தது. பிரதமர் உத்தரவுப்படி 10 தமிழரசு கட்சி எம்.பி.களோடு 150 தமிழர்கள் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

ஏகப்பட்ட சேதாரம், கோடி கணக்கில் தமிழர்களின் சொத்து அழிவு, விலை மதிப்பில்லா உயிர்கள் பலியானது. தமிழர்கள் பகுதியிலும் இது எப்படி சாத்தியமானது என எண்ணலாம். 1930களில் சிங்கள தலைவரான டி.எஸ் சேனநாயகா நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்ற இலவச வீடு, 5 ஏக்கர் நிலம், பயிர் செய்ய விதை, மருந்து, மாடு, மண்வெட்டி என இலவசமாக அரசு செலவிலேயே தந்து தமிழர் பகுதிகளில் குடிபுக வைத்தார். சுதந்திரத்திற்கு பின் குடியேற்றம் அதிகமானது. இதனால் தமிழர்களின் இடங்கள் பறிபோனதோடு இன ரீதியாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டது.

1951ல் மட்டகளப்பில் தமிழர்கள் 1,30,831,  சிங்களர் 31,174பேர் மட்டுமே இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் அதாவது 1971ல் தமிழர்கள் 2,46,582 சிங்களர் 94,150 பேராக மாறினர். திருகோணமலையில் தமிழர்கள் 37,517 பேரும், சிங்களர் 15,206 பேர் இருந்தனர். 1971ல் தமிழர்கள் 73,255 பேரும், சிங்களர் 55,308 பேராக மாறினர்.  தமிழர்கள் கூட்டல் கணக்கில் போனால் சிங்களர்கள் பெருக்கல் கணக்கில் உயர்ந்தனர். இதனால் அரசியலில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு கூடுதல் எம்.பி. பதவி கிடைத்ததோடு தமிழர்களை அடித்து உதைக்கவும் தமிழர் பகுதகளல் குடியேற்றப்பட்ட சிங்களர்கள் பயன்பட்டனர். இதனாலயே கலவரம் அடங்காமல் போனது.


அதே வேலையில் பண்டாரநாயக்காவை பிரதமர் பதவியில் அமர்த்திய மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டணியில் சண்டைகள் அதிகமானது. இடது சாரியான பிலிப் குணவர்தனாவை கூட்டணியை விட்டு நீக்க சொன்னார்கள் வலதுசாரிகள். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குணவர்த்தனாவை கட்சியை விட்டு நீக்கினார் பண்டாரநாயக்கா. அடுத்ததாக தமிழர்களையும் கொல் என்றனர். இதில் முரண்பாடு வர கடுப்பான வலதுசாரிகள் பிக்குகள் முன்னணி செயலர் களனி விகாரை அதிபதி புத்திரகித்திரதேரா கொலை சதித்திட்டம் தீட்டி தந்து ஆசிர்வதித்து அனுப்பினார். 1959 செப்டம்பர் 25ல் அரசாங்க இல்லத்திலேயே வைத்து வளர்த்து விட்ட மத கடாவே பண்டாரநாயக்காவை சுட்டு கொண்றது. இதனால் பாராளமன்றம் கலைகப்பட்டடு தேர்தல் அறிவிப்பு செய்ப்பட்டது.

1960 ஜீலையில் நடந்த தேர்தலில் சுட்டு கொல்லப்பட்ட பண்டார நாயக்காவின் சுதந்திர கட்சி சார்பில் அவரின் மனைவி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க வெற்றி பெற்று பிரதமர் பதவியேற்றார். உலகின் முதல் பெண் பிரதமர். பிரதமராக ஸ்ரீமாவோ இருந்தாலும் நாட்டின் நிர்வாகம், செயல்பாடுகள், நடவடிக்கைகள் பிக்குகள் சொல்படி நடந்தது. நாடு முழுமைக்கும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என ஸ்ரீமாவை அறிவிக்க செய்தனர். போராட்டங்கள் ஆரம்பமாகின. இதை எதிர்த்த தமிழரசு கட்சி சத்வீக நேரடி இயக்கத்தை ஆரம்பித்தது. அரசு அலுவலககங்களை முற்றுகையிட்டு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்க முடிவு செய்தனர். அதன்படி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இரண்டு மாதம் நிர்வாகமே நடக்கவில்லை. ராணுவத்தை களத்தில் இறக்கினர் ஸ்ரீமாவே. அடி-உதை தந்து போராட்டத்தை அடக்கியது ராணுவம். 1964ல் ஸ்ரீ மாவோ வின் அரசு கலைக்கப்பட்டதால் 1965 தேர்தல் அறிவிக்கப்பட்டதும். இந்தியாவில் பிராந்திய கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ், பி.ஜே.பி அலைவதும், ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதைப் போல சுதந்திர கட்சி தலைவர்கள் தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் திருச்செல்வம் மூலம் தமிழ்மொழி வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அரசு மொழியாக்கப்படும். வடக்கிழக்கில் மாவட்ட சபை அமைக்கப்படும், குடியேற்ற திட்டம் மூலம் நிலம் இல்லாதவர் முன்னுரிமை தரப்படும் என வாக்குறுதி தந்து ரகசிய ஒப்பந்தம் போட டட்லி - செல்வா இடையே தேர்தல் உடன்பானது.

145 தொகுதியில் ஐ.தே.க - 66, சுதந்திர கட்சி - 41, தமிழரசி கட்சி 14, வங்க சமசமாய கட்சி 10, கம்யூனிஸ்ட் கட்சி - 4, தமிழ் காங்கிரஸ் - 3ல், வென்றது தனி மெஜாரட்டி கிடைக்காததால் சுதந்திரா கட்சி கூட்டணி அரசு அமைத்து அதில் தமிழரசும், தமிழ் காங்கிரஸ்சும் அங்கம் வகித்தன. தமிழரசு கட்சிக்கு அமைச்சர் பதவியும், கூட்டணி அமைய காரணமான திருச்செல்வத் மேலவை உறுப்பினர் பதவி மூலம் உள்ளாட்சி அமைச்சரானார். தமிழரசு கட்சி கொள்கையிலிருந்து விலகி விட்டதாகவும், செல்வாவுக்கு வயதாகிவிட்டதால் அமிர்தலிங்கம் வழிநடத்துகிறார் என்ற பேச்சு களம்பியது தமிழர்களிடையே அதோடு அமிர்தலிங்கம் தலைமை பொறுப்புக்கு வர நினைக்கிறார் தவறான வழியில் செயல்படுகிறார். எனக் சொல்லி நவரத்தினம் என்பவர் பிரிந்து தமிழர் சுயாட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

டட்லி - செல்வா செய்து கொண்ட உடன்படிக்கையின்படி 1966ல் தமிழ் மொழி தொடர்பாண சட்டம் பாராளமன்றத்தில் கொண்டு வந்தபோது சிங்கள கட்சிகள் எதிர்த்தன. அவர்களை சிங்கள போலிஸார் துப்பாக்கி சூடுமூலம் அடக்கினர். அதோடு 1968ல் மாவட்ட சபை அமைப்பதற்கான மசோதாவை டட்லி கொண்டு வராததால் அதிருப்தி அடைந்த தமிழரசு கட்சி பிரதமர் டட்லிக்கு நெருக்கடி தர கடைசியில் அவரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சிங்கள உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பால் மசோதா தோல்வியடைந்து. அதிருப்தியடைந்த தமிழரசு கட்சி 1969ல் கூட்டணியிலிருந்து விலகியதால் 1970ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 1970 மே மாதம் தேர்தல் நாளாக குறிக்கப்பட்டது. 1970க்கு பின் இலங்கையின் நிலை படிப்படியாக மாற ஆரம்பித்தது.

1970 தேர்தல் மூலம் ஜக்கிய முன்னணி கூட்டணி மூலம் இரண்டாவது முறையாக பிரதமரான ஸ்ரீ மாவேவிடம் போன புத்த பிக்குகள் தமிழர்களின் பிள்ளைங்க மருத்துவம், விஞ்ஞானம், கணக்குள நம்ம புள்ளைங்கள விட நல்ல படிக்கறானுங்க. அராசங்க தேர்வுல அதிகமா ஜெயிக்கறானுங்க அத தடுக்கனும் என வலியுறுத்தினர் புத்த பிக்குகள் பேச்சை கேட்க வேண்டிய கட்டாயத்திலிருந்த ஸ்ரீ மாவே சிங்களர் - தமிழர்களுக்கு தனித் தனி நுழைவு தேர்வு என சட்டம் போட்டார். தமிழர் மாணவர்கள் கவலையுற்றனர் காரணம் சிங்கள மாணவ மாணவிகள் தேர்வு பெற்றனர். நன்றாக படித்தே தமிழர் மாணவர்கள் நுழைவு தேர்வில் தோற்க மிரண்டு போயினர்.

1970ல் நவம்பர் 4 யாழ்பாணத்தில் அரசுக்கு எதிராக ஊர்வலத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதே நேரம் ஸ்ரீமாவே துரோகம் செய்கிறார் எனச்சொல்லி, அரசை எதிர்த்து சிங்கள இளைஞர்களை கொண்டு 1964ல் சீன சார்புடைய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ரோசண விஜயவீரா 1965 மே 14ல் மக்கள் விடுதலை முன்னணி (JVP- Janatha Vimukthi Peramuna) போராட்டங்கள் மூலம் அரசு சிங்கள இளைஞர்களை ஏமாற்றுகிறது என போராடிது. சீனர்களிடமிருந்து ஆயுதங்களை பெற்று சண்டைக்க தயாரானது. இலங்கை அரசுக்கு தெரியவந்து ஜே.வி.பி தலைவரை கைது செய்தது. அப்படியும் 1971 ஏப்ரல் 5ல் நாட்டின் பல பகுதியிலும் ஆயுத சண்டை ஆரம்பமானது. தெற்கின் பல பகுதிகளை ஜேவிபி கைப்பற்ற உலகநாடுகளிடம் இலங்கை உதவி கேட்டதால் உதவிக்கு ஓடிய இந்தியா, சீனா கலவரத்தை அடக்கியது. ஆயிரக்கணக்கான ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜேவிபியும் தடைசெய்யப்பட்டது.

சிங்கள இளைஞர்களை அடக்கினாலும் தமிழ் மாணவர்களை மட்டும் அடக்க முடியாமல் திணறியது அரசு. தமிழ் மாணவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளிடம் உதவி கேட்ட நேரத்தில் 1972ல் ஸ்ரீ லங்காவில் புதிய ஒற்றையாட்சி என்ற சட்டத்தை ஸ்ரீமாவே அரசு இயற்றியது. இதனால் இலங்கையிலிருந்த தமிழ் சமூகமே பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழரசு கட்சி, தமிழர் காங்கிரஸ் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களான செல்வா, ஜீ.ஜீ.பி. தொண்டமான் ஆகியோர் இணைந்து கூட்டு தலைமையில் தமிழர் கூட்டணி கூட்டமைப்பை உருவாக்கி புதிய ஒற்றையாட்சி சட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்ததால் மாணவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கிவிட்டார்கள். மாணவர்களே போராட களத்தில் தனியாக நின்றனர்.

தொடரும்........... 

அடுத்த பதவில்.


 • உலக தமிழ் மாநாடு. 

 • ஈழ தந்தை செல்வா மறைவு.   
 • சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம்.


2 கருத்துகள்:

 1. பின்னிட்ட.. கொன்னுட்ட.. தோழா. வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 2. //1970 தேர்தல் மூலம் ஜக்கிய முன்னணி கூட்டணி மூலம் இரண்டாவது முறையாக பிரதமரான ஸ்ரீ மாவேவிடம் போன புத்த பிக்குகள் தமிழர்களின் பிள்ளைங்க மருத்துவம் விஞ்ஞானம் கணக்குள நம்ம புள்ளைங்கள விட நல்ல படிக்கறானுங்க. அராசங்க தேர்வுல அதிகமா ஜெயிக்கறானுங்க அத தடுக்கனும் என வலியுறுத்தினர் புத்த பிக்குகள் பேச்சை கேட்க வேண்டிய கட்டாயத்திலிருந்த ஸ்ரீ மாவே சிங்களர் - தமிழர்களுக்கு தனித் தனி நுழைவு தேர்வு என சட்டம் போட்டார். தமிழர் மாணவர்கள் கவலையுற்றனர் காரணம் சிங்கள மாணவ மாணவிகள் தேர்வு பெற்றனர். நன்றாக படித்தே தமிழர் மாணவர்கள் நுழைவு தேர்வில் தோற்க மிரண்டு போயினர்.//

  நாங்கள் பலர் கூட ஏதோ தமிழ் மாணவர்களை உயர் படிப்பு படிக்காத படி சிங்கலவங்க செய்திட்டாங்க என்று தவறாகவே முன்பு விளங்கி கொண்டிருந்தோம்.பிரச்சனை ரொம்ப சிம்பிள். தமிழகத்தில் ஒரு சிறுபான்மை ஜாதி எப்படி அதிகமான வாய்புகளை கைபற்ற மற்றவங்க பெரும்பான்மையோர் அனுமதிக்க மாட்டாங்களோ அதே மாதிரியானதே இது. நீங்க முன்பு சொன்படி ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் திட்டபடி மிக சிறுபான்மையிரான யாழ்பாணத்து செல்வந்த தமிழர்கள் உயர் படிப்பு அரசு வேலை என்பவற்றில் பெரும் பங்கை கைபற்றி ஆதிக்கவாதிகளாயினர்.அதன் காரணமாகவே கொண்டுவரபட்ட ஒரு ஒதுக்கீட்டு முறையினால் சிங்கலவங்க மட்டுமல்ல இலங்கையில் வாழும் பின்தங்கிய இந்திய தமிழர் (மலையகம் மற்றும் சிங்கள பிரதேசங்களில் வாழ்பவர்கள் )பின்தங்கிய தமிழர்கள்,அரபு வழ்சாவழியினர் பயன் அடைந்தனர்.

  பதிலளிநீக்கு