திங்கள், பிப்ரவரி 17, 2014

4அ. இனக்கலவரம் - இரண்டாம் பகுதி. ( சிலோன் முதல் ஈழம் வரை)

உலக தமிழ் மாநாடு.

தமிழர் கூட்டணி கூட்டமைப்பு சார்பில் சட்டத்தை எதிர்த்த செல்வா தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தவர் 3 ஆண்டுக்கு பின் நடந்த இடை தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார். அதற்கு காரணம் இலங்கை அரசு மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த கோபம், தமிழ் மாநாடு படுகொலையும் தான். 1964 புதுடெல்லியில் தமிழ் மக்கள் சார்பில் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த தோற்றத்தில் ஈழ மண்ணிலிருந்து பேரா.தனிநாயக அடிகளார், பேரா.கணபதிப்பிள்ளை, பண்டிதர் ரத்தினம் கலந்துகொண்டனர். இதன் முதல் மாநாடு, மலேசிய அரசின் துணையோடு கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 முதல் 23 வரை நடந்தது. இரண்டாவது மாநாடு தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தலைமையில் 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3-10 வரை நடந்தது. மூன்றாவது மாநாட்டை பாரிசில் 1970-ஆம் ஆண்டு பேரா.ஜீனபிலியோசா நடததினார். நான்காவது மாநாட்டை இலங்கையில் 1972 ஆம் ஆண்டு நடத்துவது என தீர்மானித்தனர் உலக தமிழ் அறிஞர்கள்.

அரசின் உதவியோடு நடத்த தீர்மானித்து, இ.மு.எ.ச, இதற்காக ஸ்ரீமாவே அரசிடம் பேசினர். தமிழ் அறிஞர்களும் மாநாட்டு தலைவருமான பேர.வித்தியானந்தனை பாதுகர்பபு துறை அமைச்சர் லஷ்மண் ஜெயக்கொடியிடம் அனுப்பி வைத்தார் ஸ்ரீமாவே. அமைச்சர் எடுத்த எடுபிலேயே, மாநாட்டை கொழும்பு பண்டார நாயக்கர் மண்டபத்தில் தான் நடத்த வேண்டும், பிரதமர் ஸ்ரீ மாவே மாநாட்டை தொடங்கி வைப்பார் என சொல்லும்போதே கோபமான தமிழறிஞர்கள், தமிழ் மக்களின் பகுதியில் தான் மாநாடு நடக்கும் என கோபமாக எழுந்தபோது போங்க நாங்க பாத்துக்கறோம் என கோபப்பட்டார் அமைச்சர்.

அதைப்பற்றி கவலைப்படாமல் மாநாட்டு பணிகளை யாழ்பாணத்தில் செய்தனர் தமிழறிஞர்கள். தமிழரான யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பாவிடம் நம்பிக்கையுடன் போய் மாநாடு நடத்த இடம் கேட்டனர். ஆளும்கட்சிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த மேயர் கடுகடுப்புடன் அனுமதி தந்தார். மாநாடு கோலாகலமாக, கொண்டாட்டத்துடன் 3-10-1974ந்தேதி ஆரம்பமானது. 7 நாள் மாநாட்டுக்கு இலங்கை வர முயன்ற தமிழ் அறிஞர்களுக்கு விசா தர இலங்கை தூதரகங்கள் மறுத்தன. இறுதியில் உலக நாடுகளின் கண்டனங்களால் விசா தந்தது இலங்கை அரசு.

7வது நாள் மாநாட்டில் கடைசி நாள் 10ந்தேதி விருந்தும், பரிசு வழங்கி கொண்டிருந்தபோது மாநாட்டு வளாகத்துக்குள் புகுந்த காவல்துறையினர் அறிவிப்பு எதுவும்மில்லாமல் 50 ஆயிரம் தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என உலகத்தின் பல பகுதியிலிருந்தும் வந்த கூட்டத்தில் புகுந்து தடியடி நடத்தினார்கள். அதோடு போலிஸôர் மின் கம்பத்திலிருந்த ஒயரை பார்த்து சிங்கள போலிஸôர் சுட்டனர். அறுந்து விழுந்த ஒயரை மிதித்த தமிழ்மக்கள் 9 பேர் மாநாட்டு திடலிலேயே இறந்து போயினர். இலங்கை அரசோ மிதிபட்டு இறந்தாôர்கள் என அறிவித்து. இது இலங்கை தமிழர்களிடையே கோபத்தை உருவாக்கியது. இளைஞர்கள் பழிவாங்க துடித்தனர்.

1976 ஆண்டு தமிழர் கூட்டணி கூட்டமைப்பை தமிழர் விடுதலை கூட்டணி என பெயர் மாற்றம் செய்ததுடன் வட்டுக்கோட்டையில் மாநாடு போட தீர்மானித்தனர். அதுவரை தந்தை.செல்வா கட்டுப்பாட்டில் இருந்த கட்சி அமிர்தலிங்கம் கைக்குபடிப்படியாக மாறியிருந்தது. மாநாட்டில், சுதந்திரமான சோஷலிச தமிழீழத்தை உருவாக்குவதே லட்சியம் என தீர்மானம் இயற்றினர். வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.


ஈழ தந்தை செல்வா மறைவு.

இந்த வரவேற்ப்பு தமிழர் விடுதலை கூட்டணியை பலமுடையதாக்கியது. ஆனால் அடுத்த சில மாதங்களில் பெரிய இடியொன்று தமிழர்களை தாக்கியது 1977 ஏப்ரல் 29 தந்தை செவ்வா தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்ட அந்த தலைவர் மறைந்தார் தமிழ் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. தந்தை செல்வாவின்யிடத்தை அமிர்தலிங்கம் கைப்பற்றினார். அந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் 18 இடங்களை தமிழர் விடுதலை கூட்டணி கைப்பற்றியது. இத்தேர்தல் மூலம் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ஜெயவர்த்தனா பிரதமரானார்.

ஜெயவர்த்தனா அரசியல் சாணக்கியர். சிங்கள மக்களின் தேசபிதாவும் முதல் பிரதமருமான சேனநாயக்கா அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர். பின் ஐக்கிய முன்னணிக்குள் புகுந்து கைப்பற்றி எதிர்கட்சி தலைவராகயிருந்தவர். 77 தேர்தல் மூலம் பிரதமரானார். பிறப்பில் கிருஸ்துவராகயிருந்தவர் பதவிக்காக சிங்களத்துக்கு மாறியவர். புத்தபிக்குகளின் செல்லப்பிள்ளையாக தன்னை மாற்றிக்கொண்டவருக்கு தமிழர்களை கண்டாலே கண் சிறுக்கும். காரணம் தேர்தலின் போது யாழ்ப்பாண நகரத்தில் பிரச்சாரத்தின்போது மேடை சரிந்து கீழே விழுந்தபோது. தமிழ் மக்கள் கைகொட்டி சிரித்தது ஜெயவர்த்தனாவுக்கு சினத்தை உருவாக்கியது. அதோடு வட-கிழக்கு பகுதிகளில் தமிழர் விடுதலை கூட்டணியே அதிகம் ஜெயித்து. அரசியலில் வருங்காலத்தில் பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால் தான் கோபமே. அமிர்தலிங்கம் நாடாளமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக ஆனதும் அரசு பதவி, பங்களா, கார், வேலையாட்கள் என அரசே தந்தது. இதை எதிர்த்து கோபபட்ட தொண்டர்களை சமாதானப்படுத்தியவர் இது மூலமா  நம்ம மக்களுக்கு நிறைய செய்யலாம் என்றார்.

தேர்தளுக்கு பின் வரிசையாக படுகொலைகள் தொடர்ந்தன. தமிழராட்சி மாநாட்டின் போது அரசுக்கு ஆதரவாகயிருந்த மேயர் ஆல்பிரட் துரையப்பாவை கொன்றனர் அதேபோல் காவல்துறை அதிகாரி துரையப்பா மற்றும் கொலை வழக்கை விசாரித்த வந்த அதிகாரிகளையும் தமிழ் மக்களை ஏமாற்றிய கனகரத்திரம் எம்.பி. தாக்குதல் ஆயுத குழுக்களை சேர்ந்த தமிழ் போராளிகள் கொன்றதால் அரசு அவர்களை ஒடுக்க தீர்மானித்தது.

அதே நேரத்தில் 1978 செப்டம்பர் 7ந்தேதி பிரதமர் ஜெயவர்தனே அரசியல்லமைப்பு சட்டத்தை திருத்தி நாட்டில் இனி அதிபர் பதவி தான் பெரியது. முதல் அதிபர் நான் தான் என்றவர் அதிகாரம்மெல்லாம் அதிபர்க்கு தான் என சட்டம் கூறியது. அதோடு வட -கிழக்கு மாகானங்களில் மட்டும் தமிழ் ஆட்சிமொழி என்றார். இதற்கு தமிழ் மக்கள் அதிர்ச்சியோடு எதிர்ப்பு காட்டினர். சிங்கள இளைஞர்களோ, எல்லாத்தையும் தமிழனுங்களுக்கு வாரிவழங்குங்க. நாங்கயென்ன இளிச்சவாயன்களா என கோபப்பட்டவர்கள் ஜெயவர்தனாவுக்கு எதிராக போராடினர். அந்த பக்கம் எங்கள ஏமாத்தறிங்கயென்று தமிழ் போராளிகள் பஸ் எறிப்பு, விமான தகர்ப்புயென பிரச்சனை பெருசானது. இதை நரி மூளையான ஜெயவர்த்தனா சிங்களவர்களின் கோபத்தை திசை திருப்பியவர் நெருப்பில் நெய்யையும் வார்த்தார். அரசின் ஆசியோடு கலவரம் ஆரம்பமானது 1979-ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவந்து தமிழ் போராளி குழுக்களை தடை விதித்த ஜெயவர்த்தனா போலீஸ்க்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் தந்ததன் பலன் தமிழ் மக்கள், இளைஞர்கள் மன்டை ஓடுகள் சில ஆண்டுகளுக்கு பின் கிடைத்தது. எல்லாமே விசாரணையில்லா கொலைகள். இத்தொடர்கொலை காலத்தில் யாழ்ப்பாண நகரில் வரலாற்று பெட்டகமாக விலங்கிய யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். 


சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம்.

1934ஆம் ஆண்டு பொது நூலகம் வேண்டி அறிஞர்கள் மாநாடு நடத்தினர். அதில் நிதியாக 1,194.20 ரூபாய் வசூல் ஆனது. அதன் மூலம் வாடகை கட்டிடத்தில் தொடங்கிய யாழ்ப்பாண நூலகத்தில் 844 நூல்கள் இருந்தது. நூலக குழு 1935 ஆம் ஆண்டு நூலகத்தை நகர சபையிடம் ஒப்படைத்தது. யாழ்ப்பாண நகரசபை மூலம் 1959 ஆம் ஆண்டு 15,910 சதுர அடியில் அப்போதய சென்னை மாகாண கட்டிடகலை நிபுணர் கே.எஸ். நரசிம்மன் வரைந்து தந்த வரைபடம் மூலம் கட்டிடம் கட்டப்பட்டது. 1981 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 1ந்தேதி சிங்கள கடையர்களால் பழமையான, வரலாற்று சிறப்பு மிக்க நூலகம் 97 ஆயிரம் நூல்களோடு தீ வைத்து எரித்து மகிழ்ந்தது. இதனால் தமிழர்களின் வரலாற்று ஆவணங்கள் எரிந்து சாம்பல்களாயின. யாழ்ப்பாண நூலக எரிப்பில்  சிங்கள அரசியல் தலைவர்களான காமினி திசநாயக்க உட்பட சிலர் இருந்தனர்.

இதில் ஆத்திரமுற்ற தமிழர்களும், போராளி குழுக்களும் போராட ஆரம்பித்ததோடு, அதிகாரிகளை கொல்ல ஆரம்பித்தனர். சிங்கள-தமிழர்களை உக்கிரமாக மோதவைத்த ஜெயவர்த்தனா அரசின் இராணுவத்தினர் தமிழ் போராளிகளை தேடி தேடி அழித்தனர். 1983 ஜீலை 15 விடுதலைபுலிகளின் தளபதியும் பிரபாகரனின் நெருங்கிய நண்பருமான சார்ள்ஸ் அன்ரனியை இராணுவத்தினர் கொன்றதால் கோபமான புலி தலைவர் பிரபாகரன் 1983 ஜீலை 23ந்தேதி நள்ளிரவு, சென்னை இராணுவ பயிற்சி பள்ளியில் படித்த இலங்கை இராணுவத்தின் இரண்டாவது லெப்டினன்ட் குணவர்தனா தலைமையில் மாதகல் இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர்கள் 15 பேர் டிராக்கில் வந்த போது அவர்களுக்காக தபால் பெட்டியடியில் காத்திருந்த புலிகள் நில கண்ணி வெடி மூலம் டிராக்கை வெடிக்க வைத்தனர். அதில் சிங்கள வீரர்கள் 13 பேர் அங்கேயே இறந்தனர். இதேபோல் ஏதாவது நடக்குமா என எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிங்கள அமைச்சர்கள், அரசியல்வாதிகளுள் ஒருவரான சிறில்மாத்யூ தமிழர்களை அழிக்க முடிவு செய்தார். அரசின் ஆதரவோடு சிங்கள கடையர்கள் காவல் துறையினர், ராணுவத்தினர் உதவியோடு வட-கிழக்கு பகுதிகளில் புகுந்து தாக்க தொடங்கினர் ஜீலை கலவரம் ஆரம்பமானது.

முதல் தினம், நூற்றுக்கணக்கான, தமிழர்கள் கொல்லப்பட்டதோடு தமிழர்களின் ஆயிரக்கணக்கான வீடுகளும், வியாபார கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. கலவரத்தின் கொடுமையை மனித இனம் இருக்கும் வரை மறக்க முடியாதது. 


சிங்கள இளைஞர்களின் கோபத்தை தூண்டிவிட எண்ணிய சிங்கள அரசியல்வாதிகளோடு இராணுவ மேஜர் ஜெனரல் வீரதுங்கா இறந்து Nhன 13 ராணுவ வீரர்களின் உடல்களை பாலீத்தின் பைகளில் போட்டு சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஊர்வலமாக வலம் வர வைத்தார். இதனை அப்போது அதிபராகயிருந்த ஜெயவர்தனா வேடிக்கை மட்டுமே பார்த்தார். இதில் கோபம் கொண்ட சிங்கள காடையர்கள் அரசின் ஆசிர்வாதத்தோடு தமிழர்களை தேடி தேடி தாக்கினார்கள்.

தமிழர் பகுதிகளில் புகுந்த சிங்கள காடையர்கள் தமிழ் பெண்களை பட்ட பகலில் வீடுகளில் இருந்து இழுத்து வந்து தெருவில் சாலைகளில் கணவன் எதிரேயும், பெற்ற தந்தையின் கண் முன்னாலேயே நிர்வானமாக்கி தங்களது காம வெறியை தீர்த்துக்கொண்டனர். நாய்கள் கூட யாராவது பார்த்தால் விலகி ஓடும் ஆனால் மனிதனாக பிறந்த சிங்களர்கள் நாய் குணம் கூடயில்லாமல் அதற்க்கும் மேலே போய் தங்களது குரூரத்தை காட்டினார்கள். இதை எதிர்த்த ஆண்களை, இளைஞர்களை நிர்வாணமாக்கி சாலையில் இழுத்து வந்து சுட்டுகொன்றார்கள் இலங்கை ராணுவவீரர்களும்- சிங்கள காவல் துறையினரும். அப்பாவை இழுத்து போகிறார்களே, அம்மா மேல் பலர் படுத்துக்கொன்டு என்னவே பண்ணுகிறார்களே அம்மா கத்துகிறாளே என காப்பாற்ற ஓடிய பால்மனம் மாற குழந்தைகளை போலிஸாரின் லட்டிகளும், ராணுவவீரர்களின் கத்திகள் அந்த பிஞ்சு குழந்தைகளின் மண்டையை பதம் பார்த்தது. கடையர்கள் குழந்தைகளை தூக்கி போட்டு பந்து விளையாடினார்கள். மக்களுக்கான அரசாங்கமாகயிருந்தால் காவல்துறையிடம் மக்கள் ஓடியிருப்பார்கள். சிங்களனுக்கு மட்டுமே எனது அரசு என ஆளும் சிங்கள வர்க்கத்தின் குரூரத்தையும், மக்களை அழிக்கும் வேலையில் காவல் துறையும் - ராணுவமே ஈடுபட்டதால் தங்களது உயிரை தாங்களே பாதுகாத்துக்கொள்ள கூட்டம் கூட்டமாக ஓடி வீடுகளில் ஒலிந்தபோது எலியை துரத்தும் பூனையை போல பின்னாலேயே ஓடியவர்கள் அவர்களை அப்படியே வீடுகளில் வைத்து எரித்தனர்.     

கலவரம் ஆரம்பமான ஐந்தாவது நாள் தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ஜெயவர்த்தனா கலவரத்துக்கு காரணம், தமிழர்களும், தீவிரவாதிகளும் தான் சிங்களவர்கள் நல்லவர்கள் என சிங்களவர்களை தூண்டிவிட தொடர்ந்த கலவரம், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பார்க்காமல் கை-கால்கள் வெட்டப்பட்டும், தலைகள் வெட்டப்பட்டும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என 7 நாள் தமிழின அழிப்பில் 350 போர் இறந்ததாகவும், 18 ஆயிரம் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் சேதமடைந்ததாகவும், ஒரு லட்சம் தமிழர்கள் அகதிகளென இலங்கையரசு பின் அறிக்கை வெளியிட்டது. ஆனால் உலக வங்கியோ, இறந்தது 65 ஆயிரம் போர், 80 ஆயிரம் போர் இடம் பெயர்ந்தனர், 70 ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். கலவரத்தை அடக்க 6 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது என்றது அதன் அறிக்கை. இலங்கையின் இன அழிப்பிற்காக நடந்த மிகப்பெரிய கலவரம் அதுதான். தமிழ் மக்களால் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத கலவரம்.

                இந்த ஜீலை கலவரம் கொழும்பில் உயர் பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறைச்சாலைக்கும் பரவியது. வெலிக்கடை சிறை 1843ல் பிரிட்டிஸாரால் சகல பாதுகாப்புடன் கட்டப்பட்டது. அ,,,ஈ என 4 குறுக்கு வடிவில் அமைக்கப்பட்டது இச்சிறைச்சாலை. இவற்றில் அ3, 3, 3, 3, பிளாக்குகள் சிறைச்சாலையின் கீழ் பகுதி. இதில் ஆ3, இ3, ஈ3 பிளாக்குகளில் இருந்தவர்கள் தமிழ் அரசியல் கைதிகளாவர். அ3 யில் இருந்தவர்கள், கொலை, கொள்ளை, ரவுடிஸம் என குற்றம் சாட்டப்பட்ட பயங்கரமான சிங்கள கைதிகள். வெளியே கலவரம் நடந்த போது 25.7.1985 சிங்கள சிறையின் உதவி பிரதம ஜெயிலரான ரெஜாஸ், ஜெயிலர் சுமிதரத்னா பாலித் ஆகியோர் சர்வதேச குற்றவாளியான சேபால எக்கநாயக்க என்பவனின் தலைமையில்  அறையில் இருந்த சிங்கள கைதிகளை திறந்துவிட்டு ஆ3, இ3, ஈ3 யில் இருந்த தமிழ் கைதிகளை கொல்லசொல்ல சந்தோஷமான சிங்கள கைதிகள் ஆ3, இ3 யில் அரசியல் கைதிகளாக அடைபட்டிருந்த குட்டிமணி, தங்கமணி, ஜெகன் உட்பட 53 தமிழ் கைதிகளை கொன்றனர். அதிலும் குட்டிமணி, ஜெகன் போன்றோரை கண்களை தோண்டி கொடூரமாக கொன்றனர். கண்களை வெற்றிகரமாக தோண்டியதை பார்த்து கை தட்டினர் சுற்றி நின்ற சிங்கள கைதிகள். குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான் ஒரு சிங்கள வெறியன். அவரின் உடல் ரத்தத்தினை சில கைதிகள் பிடித்து உடலில் தடவிக்கொண்டு கும்மாளம்மிட்டனர். கொடூரம் செய்த சிங்கள கைதிகளின் உடல் அசதியை போக்க மது, மாமிச வகைகளை வாங்கி வந்து தந்துள்ளர்கள் சிறை அதிகாரிகள். சிங்களர்களின் இந்த கொடூரம் தமிழர்களை அதிர்ச்சியாக்கியது.


தமிழர்களின் மீதான கலவரத்தை மனதில் ஆறாத காயமாக வடுவாக மாறியது. அக்கலவரத்தை கறுப்பு ஜீலை என வர்ணிக்கப்படுகிறது. இலங்கை தமிழின மக்களின் துயரத்தைக் கண்டு தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமே நடந்தது. உலகமே இலங்கையை கண்டித்தது.

ஆனால் மக்கிபோன சிங்கள அரசியல்வாதிகளின் இதயத்தில் மட்டும் ஈரம் இல்லவேயில்லை என்பதை நாடாளுமன்றத்தில் 1983 செப்டம்பர் 5ந்தேதி சிங்கள அமைச்சர் காமினிதிசநாயக்கா கொக்கரித்து காட்டினார். உங்களை தாக்கியதம் காப்பாற்றியதும் சிங்களவர்கள் தான். உங்களை காக்க இந்தியா வரவேண்டும் மென்றால் 14 மணி நேரமாகும். ஆனால் உங்களை 14 நிமிடங்களில் எங்களால் அழித்துவிட முடியும். உங்களை யாழ்பாண தமிழனன்னென்றோ, மட்டகளப்பு தமிழர்களென்றோ மலையக தமிழர்களைன்றே நினைக்கவில்லை நீங்களெல்லாம் எங்கள் பார்வைக்கு தமிழர்கள் தான் என கொக்கறித்தார்.

இந்த கொக்கறிப்பால் 1970 முதல் தமிழர் பகுதிகளில் தம் மக்களை காக்க உருவான ஆயுத போராட்டம் ஜீலை கலவரத்துக்கு பின் இந்தியாவின் ஆதரவோடு பெரிய அளவில் வடிவம் பெற்றது. இலங்கை நாட்டின் நிலையே முற்றிலும் மாற ஆரம்பித்தது.

முந்தைய பகுதியை படிக்க.  4. இனக்கலவரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக