புதன், பிப்ரவரி 05, 2014

பிரதமரை உருவாக்குவாரா ஜெ ?. மோடிக்காக ஒரு நாடகம்.






சில வாரங்களுக்கு முன்பு சோவின் மகனுக்கு திருமணம். திருமண அழைப்பிதழை கலைஞர், ஜெ, ராமதாஸ், வை.கோ உட்பட அனைவருக்கும் தந்தார் சோ. ஜெவின் நெருங்கிய நண்பரும், அரசியல் ஆலோசகருமான சோ, ஜெவுக்கு திருமண அழைப்பிதழை தலைமை செயலகத்தில் தந்தது பார்வையாளர்களுக்கு முதல் அதிர்ச்சி, திருமணத்துக்கு ஜெ செல்லவில்லை இது இரண்டாவது அதிர்ச்சி. கருணாநிதிக்கு பத்திரிக்கை தந்ததால் வரவில்லை என்றும், தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதால் சோ மீது கோபமாக உள்ளார் அதனால் தான் வரவில்லை என்றும் காரணம் சொன்னார்கள். இதுபோன்ற காரணங்கள் முற்றிலும் பொய் என்றே தோன்றுகிறது. காரணம், சோ கனவிலும் தன் ஆரிய இனத்துக்கு எதிராக சிந்திப்பவரல்ல. ஜெ ஆரிய இனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மோடியை பிரதமராக்க காவி கூடாரங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மீடியாக்கள் விரும்புகின்றன. ஜெவும் விரும்புகிறார் இதுதான் உண்மை.

மோடிக்காக நடக்ககிறதா நாடகம் ?.

தற்போதைய நாடாளமன்ற தேர்தல் மோடிக்கும் காங்கிரஸ்க்கும் இடையே நடக்கும் போட்டி. ஆளும் காங்கிரஸ் மீது நாடு முழுவதும் பெரிய அளவில் அதிருப்தியுள்ளது. அதனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளே பிச்சிக்கிட்டு ஓடுகின்றன. அடுத்து ஆட்சி அதிகாரத்துக்கு வரும் நிலையில் உள்ள பி.ஜே.பியுடன் கூட்டணி சேர சின்ன சின்ன தேசிய கட்சிகள், செல்வாக்குடன் திகழும் மாநில கட்சிகள் தயங்குகின்றன. காரணம், குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்களை பாலியல் வல்லுறுவு செய்தும், ஆண்களை எரித்தும் கொன்ற காவி கும்பலின் தலைவனாக இருந்தவர் குஜராத் முதல்வர் மோடி. அந்த மோடியை பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி முன்னிறுத்ததியுள்ளதால் உ.பி முலாயம்சிங், மேற்குவங்கம் மம்தா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திரா ஜெகன்மோகன்ரெட்டி, தமிழகத்தில் கலைஞர் போன்றவர்கள் கூட்டணி வைக்க தயங்குகிறார்கள். இதனால் 10 ஆண்டுகால காங்கிரஸ் மீதான வெறுப்பில் உள்ள வாக்காளர்களை, எதிர்கட்சிகளை தன் பக்கம் இழுக்க முடியாமல் திணறுகிறது பி.ஜே.பி. இவர்களை விடுங்கள் மோடி பதவியேற்பு விழாவில் போய் கலந்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பராக உள்ள ஜெ வே பிரதமர் வேட்பாளராக உள்ள மோடியை ஆதிரிக்க தயங்குகிறார். பி.ஜே.பியின் 3 சதவித ஓட்டுக்காக 20 சதவிதத்துக்கும் மேல் உள்ள சிறுபான்மையின வாக்குகளை அவர் இழக்க விரும்பவில்லை அதனால் தான் பி.ஜே.பியுடன் இணைய மறுக்கிறார். மற்றவர்களின் பார்வையும் அதே வகைதான். அதற்காக பி.ஜே.பியை ஜெ கை கழுவியதாக அர்த்தமல்ல. மோடிக்கு ஒரு வாய்ப்பை தேசிய அளவில் உருவாக்குகிறார் என்றே இதனை பார்க்க வேண்டும்.

1991க்கு பின் தேசிய மற்றும் மாநில அளவில் கூட்டணி பலம் தான் தேர்தல் வெற்றியை தீர்மானித்து வருகின்றன. 2004, 2009 நாடாளமன்ற தேர்தல் வெற்றி கூட்டணி பலம் தான். தற்போதைய நிலையில் தேசிய அளவில் பி.ஜே.பியுடன் கம்யூனிஸ்ட்டுகள் இணைய மறுத்துவிட்டனர், மாநிலங்களில் பலமாக உள்ள கட்சிகளும் மறுத்துவிட்டன. இவர்களை தனியாக விட்டால் காங்கிரஸ் மிரட்டல், வழக்கு, பணம், சமாதானம் என்ற வகையில் இறங்கி வலுவான மாநில கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கும். அப்படி நடந்தால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தே தனக்கு சாதகமான மாநில கட்சிகள் வழியாக தாங்களும் பிரதமர் என பேசவைத்ததது காவி, கார்ப்பரேட் கூடாரம். இந்த கட்டுரை எழுதும் போது கம்யூனிஸ்ட்டுகள் ஜெவை பிரதமராக முன்னிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு மம்தா வரக்கூடாது என்ற பயம். உ.பி முலாயம் சிங் 82 சீட்ல நாங்க தான் அதிகமா ஜெயிப்போம் அப்போ நான் தான் பி.எம் என்கிறார், மம்தாவோ நான் 42 வச்சியிருக்கன் எனக்கு கனவுயில்லையா என கேட்கிறார். பகலில் கனவு காண தொடங்கிவிட்ட இவர்கள் காங்கிரஸ்சுடன் போகமாட்டார்கள். மோடிக்கு தேசிய அளவில் முதல் கட்ட வெற்றி. மோடி அலையில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என பி.ஜே.பி நம்புகிறது. கிடைக்காத போது பிரதமர் கனவில் உள்ள மாநில கட்சிகள் வழியாக கூட்டணி அமைச்சரவை அமைக்க தயாரகவுள்ளது பி.ஜே.பி.

நானே பிரதமர் வாசகத்துக்கு பின்னால்.............

தமிழகத்தில் அதிக ஓட்டு வங்கியுள்ள கட்சி அதிமுக, திமுக, தேமுதிக (ஓரளவு), மற்ற கட்சிகள் வட்டார கட்சிகளைப்போல. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செல்வாக்குயிருக்கும். திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சியில் எந்த கட்சி பலமான கூட்டணி அமைக்கிறதோ அதன்படித்தான் தொகுதிகளின் வெற்றி எண்ணிக்கை கூடுவதும் குறைவதும்.

2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்து அதிமுக அறுவடை செய்துவிட்டது. விஜயகாந்தின் நடவடிக்கை அந்த கட்சியை தேய்பிறையாக்கிவிட்டது. அதிகாரத்தில் உள்ள ஜெ, பாமக, தேமுதிக போன்ற எல்லா கட்சிகளுடன் பகைத்துக்கொண்டதால் அவர்கள் அதிமுகவை விரோதியாக பார்க்கிறார்கள். தேசிய கட்சியான காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என்பதால் தான் திமுகவே அதை கழட்டிவிட்டது என்பதால் தான் ஜெ அதை ஆப்ஷனில் கூட வைக்கவில்லை. விசிக்கள் திமுக கூட்டணியில் நங்கூரம் பாய்ச்சி அமர்ந்துள்ளதால் அதுவும் வாய்ப்பில்லை, மமகவுக்கு எம்.எல்.ஏ தேர்தலில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் அவர்களும் டாட்டா காட்டிவிட்டனர், புதிய தமிழகம் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்ததால் அவர்களும் ஜெவை எதிர்த்து நிற்கின்றனர். கொங்கு கவுண்டர் அமைப்புகள் உடைந்து எதிர்நிலைப்பாடு எடுத்துள்ளன. தற்போதைக்கு அம்மாவின் அனுகிரகத்தில் இருப்பவர்கள் சி.பி.ஐ, சி.பி.எம், துண்டு துக்கடா கட்சிகள் தான். இவர்களை வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்க்கொள்ள முடியாது. அதற்காக பி.ஜே.பியுடன் கூட்டு சேரமுடியாது. சேர்ந்தால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்காது என்பதால் அதுவும் ஜெவின் பட்டியலில் இல்லை.

இப்படியே விட்டால் எதிர்கட்சிகள் திமுக தலைமையில் ஒண்றிணைந்துவிடும். திமுக தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் சதவித கணக்கில் வெற்றி அவர்களுக்கே. என்ன செய்யலாம் என்ற திட்டமிடலில் தான், எதிர்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் செய்வதற்கான திட்டமிடலை தொடங்கியது ஜெவின் படை. பி.ஜே.பிக்கும் தனக்கும் மோதல் இருப்பதை போல ஒரு நாடகத்தை உருவாக்கினார். தன்னை பிரதமர் வேட்பாளராக தமிழகம் முழுவதும் தகவலை பரப்பினார். பி.ஜே.பி தரப்பிலோ மோடி தான் பிரதமர் வேட்பாளர் அதனால் ஜெவை ஏற்க முடியாது என்றது. பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அதிமுகவுக்கு மாற்று திமுகதானே. அங்கு தானே பி.ஜே.பி முயற்சி செய்துயிருக்க வேண்டும். செய்யவில்லை. காரணம். அதுதான் திட்டம்மே.

பி.ஜே.பி தமிழகத்தில் தன் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கிறது. அதில் முதன் முதலில் துண்டு போட்டு ரிசர்வ் செய்தவர் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து, இரண்டாவது ஓடிப்போய் காவி துண்டு போர்த்திக்கொண்டவர் வை.கோ, மற்ற துண்டு துக்கடா கட்சிகளுடன் பேச்சு வார்த்தை. பாமகவும், தேமுதிகவும் அதனுடன் சேரப்போவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணி தனி. வாக்குகள் திமுக கூட்டணி, பி.ஜே.பி கூட்டணி பிரியும். அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பி.ஜே.பி கூட்டணி வாங்கிவிடும். திமுக ஓட்டு குறைவாக இருக்கும். ஆளும்ஆட்சி என்ற அதிகார பலம், பண பலம் மூலம் மூலம் அதிக தொகுதிகளை பெறலாம் என்ற கணக்கிலே எதிர்கட்சிகளை ஒண்றியை விடாமல் செய்தார் ஜெ. பி.ஜே.பியும் அதற்கு ஒத்தொழைத்தது. அதில் வெற்றியும் பெற்றார்.

தேர்தலில் காங்கிரஸ்-பி.ஜே.பி இரண்டுக்கும் பலம் கிடைக்காத போது, 40 எம்.பி தன்னிடம்மிருந்தால், தன் நண்பரான மோடிக்கு தான் தன் ஆதரவை தருவார் அதில் மைக்ரோ அளவுக்கு கூட சந்தேகம் வேண்டாம். இது பி.ஜே.பிக்கு நன்றாக தெரியும் என்பதால் தான் அவர்கள் திமுகவை நாடவில்லை.

ஜெ வே அடுத்த பிரதமர் என அதிமுக அடிமைகளை சொல்ல வைத்ததன் பின்னால் மற்றொரு காரணமும் உள்ளது. பிரதமர் பருப்புயெல்லாம் தன்னால் வேக வைக்க முடியாது என்பது ஜெவுக்கு நன்றாக தெரியும். இருந்தும் தன்னை தமிழகத்தில் முன்னிறுத்த காரணம், தமிழச்சி பிரதமராக கூடாதா என பிரதமர் என்ற இனிப்பான அல்வாவை மக்களுக்கு தந்து 40க்கு 40 வெல்ல நினைக்கிறார். காங்கிரஸ் ஆட்சியமைக்க முயன்றால், கம்யூனிஸ்ட் மற்றும் சில மாநில கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர்க்கு போட்டி போடுவார். சமாதான படலம் நடக்கும் அப்போது அதிகார மையமாக மாறி தன் மீதான சொத்து குவிப்பு வழக்கு, வருமானவரி வழக்கு உட்பட சில வழக்குகளை முடித்துக்கொள்வார். அந்த திட்டத்துடன் தான் பிரதமர் என பிரச்சாரம் செய்ய வைத்தார்.

2004, 2009 நாடாளமன்ற தேர்தல் களம் கலைஞரை மையமாக வைத்து நடந்தது. வெற்றி பெற்றது. 2014 தேர்தல் களம் ஜெ தன்னை மையமாக வைத்து நடத்துகிறார். வெற்றி பெறுமா என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக