1808 முதல் இலங்கை மக்களுக்கு டாட்டா காட்டிவிட்டு கப்பல் எறிய
1948 வரையென 133 ஆண்டுகள் இலங்கையை ஆண்டக்ஏ ஆங்கிலேயர். அவர்களின் ஆட்சி காலத்தில்
தான் சட்டபூர்வமான பல துறைகளை உருவாக்கி அலுவலர்களை நியமித்து நிர்வாகம் செய்யும் முறையை
கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் மகாராணியால் அமைக்கப்பட்ட கோல்புறாக் காமெரன்னின் குழு
அறிக்கைப்படி 15 பேரை கொண்ட சட்ட நிரூபன சபையும், 6 பேரைக் கொண்ட சட்ட நிர்வாக சபையும் அமைத்தனர். அதில் உத்தியோகப்பற்ற உறுப்பினர்களாக
சபையில் ஐரோப்பியர் 3 பேர், சிங்களர்-1, தமிழர்-1, பறங்கியர்-1 நியமிக்கப்படுவார்கள் என்றவர்கள் ம்ண்த் அமல்படுத்தவும்
செய்தார்கள்.
இந்த உத்தியோகப்பற்ற சபை உறுப்பினர் பதவியை மக்கள் மத்தியில்
பிரபலமாகவும், படித்தவர்களாகவும் பாரம்பரியமிக்க செல்வாக்கான அதிலும் குறிப்பாக
தங்களுக்கு சாதகமாக யார் இருப்பார்கள் என்பதை பார்த்தே நியமித்தார்கள் ஆங்கிலேயர்.
தமிழர்களுக்கான பிரதிநிதியாக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குமாரசாமி முதலியார்.
ஆங்கிலேயர் சொல்வதை கேட்டு சரிங்க அய்யா என எப்போதும் கூறியதால் பலப்பல சலுகைகள் குமாரசாமி
குடும்பத்துக்கு கிடைத்தது. தங்கசங்கிலி, பதக்கம் ஆகியவை தந்து தொடர்ந்து ஆமாம் சாமி போட வைத்தது பிரிட்டிஷ் அரசு.
அதே கோல்புறாக் காமெரன் பரிந்துரைப்படி இலங்கையில் 1868ல் முதலில்
காவல் துறையையும், 1870ல் பொதுத்துறை, 1887ல் நீர்பாசன துறையையும், 1889ல் வன பாதுகாப்பு துறையும், 1890ல் குடியமர்த்தல் துறையையும் உருவாக்கினர். நிர்வாக பணிச்செய்ய பணியாளர்களை
தேர்வு செய்தபோது ஆங்கிலேய மூளைகள் இனப்பிரிப்பையும் செய்தது. ஆங்கிலம் கற்று ஆங்கிலேயருடனிருந்த
தமிழர்களை 2 ஆம் தரமாக நினைத்ததோடு தங்களை எதிர்த்தே பழக்கப்பட்ட சிங்களர்களுக்கு அரசு
பணியில் அதிகமிடம் தந்தனர். 1868ல் 1710 அரசு பணியில் 794 சிங்களவர்கள் இருந்தனர்.
ஏறக்குறைய அதேயளவு தமிழர்களும், முஸ்லீம்களும் போட்டிபோட்டு பணிக்கு வந்தனர். பிற்காலங்களில்
சிங்களவரை விட அரசு பணிகளில் தமிழர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.
தமிழர் பிரதிநிதியாகயிருந்த குமாரசாமி முதலியார் குடும்ப வழியான
பொன்னம்பலம் ராமநாதன் சட்ட நிரூபன சபைக்கு 1879 ஆண்டு தமிழர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
1910ல் சபை நியமன உறுப்பினர் என்பது கலாவதியாகி 1911ல் முதல் சட்டசபை தேர்தல் இலங்கையில்
நடந்தது. தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக சட்டசபை சென்ற ராமநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு
பிரபு பட்டம் தந்து தொடர்ந்து ஆதரவாளராக வைத்துக்கொண்டது. ராமநாதனும் ஆங்கிலேயர் மனம்
நோகாமல் நடந்துக்கொண்டார்.
ராமநாதனின் சகோதரர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆங்கிலேயருக்கு
எதிராக அடிக்கடி அணல் கக்க ஆரம்பித்தார். 1913 ல் அருணாச்சலம் அரசு பதிவாளராகயிருந்து
ரிட்டயர் ஆனதும் 1915 ஐனவரி 29ந்தேதி “சமூக சேவை
சங்கம்” ஆரம்பித்து அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றியவர், ஆங்கிலேய ஏகாதியபத்தத்தை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். ஆங்கிலேய அரசை
தமிழர் ஒருவர் எதிர்ப்பதை கண்டு மகிழ்ந்தனர். சிங்களத்தின் கரவா பிரிவு மக்களால் 1888ல் உருவாக்கப்பட்டு
செல்வாக்குடன் இருந்த “இலங்கை தேசிய சங்கநிர்வாகிகள். பொன்னம்பலம் அருணாச்சலத்தை தங்களது
சங்க வருடாந்திர மாநாட்டில் பேச வைக்கலாம் என முடிவு செய்தனர். தேசிய சங்க நிறுவனர்
+ பொது செயலாளர் டி.ஆர்.விஜயவர்த்தனா, அருணாச்சலத்தை சந்தித்து பேச அழைத்தார். அவரும் சரியென்றார்.
1917 ஏப்ரல் 2ல் நடந்த இலங்கை தேசிய சங்கத்தில் எங்கள் அரசியல்
தேவைகள் என்ற தலைப்பில் பேசினார். அதில், “நாட்டை நிர்வாகம் செய்யும் நிர்வாக அதிகாரிகளின் ஆட்சியால் நாங்கள் அதிகாரிகம்
இல்லாமல், அவர்களை எதிர்க்கும் திறமை குறைந்தவர்களாய் இருக்கிறோம். எங்கள்
மக்களும், நாங்களும் எங்களுக்கு எதுவேண்டும் என கேட்க நினைத்தாளும் அதற்கு
தடையாக நிர்வாக அதிகாரிகள் உள்ளார்கள் என கண்டித்ததோடு சுயாட்சி உரிமை வேண்டும் எனப்பேச
தேசிய சங்கமோ ஏக வரவேற்பு தந்தது இலங்கை மக்களிடையே ஏக வரவேற்பும் பெற்றது.
சுயராட்ஜியம் வேண்டும் என கேட்டு 1917 மே மாதம் வழக்கறிஞர்கள்
ஒண்றிணைந்து இலங்கை சீர்த்திருத்த கழகம் ஆரம்பித்து போராடினர். இதே காலகட்டத்தில் நாட்டில்
தேசிய சங்கம், சீர்த்திருத்த சங்கம், இளைஞர் கழகம், சிலாபச் சங்கம், யாழ்பாண சங்கம், முஸ்லீம் சங்கம், பறங்கியர் சங்கம் பிரபலமானவைகள் மக்களிடையே செல்வாக்காவும் இருந்தன. மக்கள் பிரச்சனைகள், அரசியல் உரிமை வேண்டி தனித்தனியாக போராடவும் செய்தன.
இவைகளை ஒண்றினைத்து பெரிய இயக்கமாக உருவாக்கி கோரிக்கை வைக்கலாம், போராடலாம் என எண்ணிய அருணாச்சலம் எல்லா சங்கங்களிடமும் போய் பேச ஆரம்பித்தார்.
ஆரம்பித்ததிலேயே முஸ்லீம் சங்கம் முடியாது என்றது. காரணம், அப்போது சிங்களர்-முஸ்லீம் இடையே கலவரம் வந்தது. அதில் சிங்களவர்களுக்கு சாதகமாக
தமிழர் பிரதிநிதியாகயிருந்த ராமநாதன் செயல்பட்டதால் உங்களோடு இணையமாட்டோம் எனச் சொல்லிவிட்டது.
பறங்கியர் சங்கம் உங்களால எதுவும் முடியாது போய்யா நாங்க வரல எனச் சொல்லிவிட்டனர்.
மற்ற 5 சங்கங்களில் இலங்கை தேசிய சங்கமும், யாழ்பாண சங்கமும் இணையலாம் ஆனா நாங்க சொல்றத தான் எல்லாரும் கேட்கனும் என்றார்கள்
தனித்தனியாக. காரணம், தேசிய சங்கம் பிரதேச வாரியாக பிரிநிதித்துவம் வேண்டும் என கேட்கிறது.
யாழ்ப்பாண சங்கமோ, பிரதேச வாரியாமெல்லாம் வேணாம் இனவாரியாக மட்டுமே பிரதிநித்துவம்
வேண்டும் என கேட்பதால் முரண்பட்டு நின்றன. 2 அமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேசிப்பேசியே
கூட்டத்துக்கு அழைத்து வந்தார் அருணாச்சலம். 1917 டிசம்பர் 15 கொழும்பில் 5 சங்க பிரதிநிதிகள்
முக்கிய பிரமுகர்களென 144 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில்
1. இனரீதியான பிரதிநித்துவம்
இருக்கும்.
2. உத்தியோகப்பற்ற
உறுப்பினர் சபையில் சிங்களர் தமிழர் இடையே சம பலம் இருக்க வேண்டும். என தமிழர்கள் கேட்டதற்கு
கூட்டத்திலிருந்த சிங்கள தலைவர்கள் அறை-குறை மனதுடன் தலையாட்டினர். ஆனால் தேசிய சங்க
தலைவர்களான ஜேம்ஸ்பிரிஸ், சமவிக்கிரம், எல்.ஆர்.சேனநாயக்கா எதிர்த்தனர். அப்படி எதிர்க்க மற்றொரு காரணமும்மிருந்தது. இனரீதியாக
எடுத்துக்கொண்டதால் தமிழர்கள் தம்மோடு சம பலத்துடன் இருப்பார்கள் அது கூடவேகூடாது என
எண்ணியதாலே எதிர்த்தனர். பேசிப்பேசியே இறுதியில் வடமாகாணத்தில்-3, கிழக்கு மாகாணத்தில்-2, மேல் மாகாணத்தில்-1 பிரதிநிதிகள் இருப்பார்கள் என ஒப்பந்தம்
செய்துக்கொண்டார்கள்.
1919 டிசம்பர் 11ல் கொழும்பு - டவுன் ஹாலில், 5 அமைப்புகள் இணைந்த இலங்கை தேசிய காங்கிரûஸ தோற்றுவித்தனர்.
இதன் தலைவராக பொன்.அருணாச்சலமே நியமிக்கப்பட்டார். ஒரு தமிழன் கீழ நாமளா என எண்ணிய
சிங்கள தலைவர்கள் அருணாச்சலத்தின் பேச்சை மதிக்காமல் செயல்பட்டதோடு தமிழர்களுடன் போட்டிக்கொண்ட
ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தனர். இதனால் 1922ல் தலைவர் பதவியை தூக்கி எறிந்த அருணாச்சலம்.
தேசிய காங்கிரஸிருந்து வெளியேறி தமிழர் சீர்திருத்த கழகத்தை உருவாக்கினார். அதே ஆண்டு
இந்தியா வந்திருந்தவர் இந்தியாவிலேயே காலமானதால் இலங்கையில் ஆங்கிலேய எதிர்ப்புக்கு
ஆளில்லாமல் வெற்றிடம் ஏற்பட்டது.
அந்த வெற்றிடத்தை நிரப்ப யாழ்ப்பாணம் வடமராட்சியையடுத்து சில
கி.மீ. தொலைவிலுள்ள அல்வாய் கிராமத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இயற்கை
அறிவியல், சட்டம் படித்து தனது வாத திறமையால் பக்கத்து நாடுகளிலும் போய்
வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழர்களுக்காக போராடவந்தார். 1931 இலங்கைக்கான முதலாவது
எம்.பி.தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவு தொகுதிகளில் நின்றபோது தோற்றவர். 1934 பருத்திதுறையில்
நடந்த இடைத்தேர்தலில் வென்றார். 1936ல் 2வது முறையாக நடந்த பொது தேர்தலில் வென்று தமிழர்களுக்காக
மட்டுமே பேசினார்.
இலங்கையில் தமிழன் பதவிகள் மூலம் அரசாளுகிறான். பெரும்பான்மை
சமூகமான நம்மை தமிழன் அதட்டுகிறான்னென்று 1937ல் சிங்கள மகா சபையை தொடங்கிய ந.ர.த.ப.
பண்டாரநாயக்கா தமிழர்களுக்கு எதிராக அணல் கக்க தொடங்கினார். 1939ல் அரசவை தலைவராகயிருந்த ஐக்கிய தேசிய கட்சியின்
அவை தலைவரான ப.ந.சேனநாயக்காவிடம்,
1. இந்தியா வம்சாவழியினரை
நாடு கடத்த வேண்டும்.
2. அரசாங்க பணியிலுள்ள
தமிழனை அடித்து துரத்த வேண்டும். என கோரிக்கை வைத்தார். புன் முறுவலோடு செய்யலாம் என
சேனநாயக்காவும் சொல்ல தமிழர்களிடம், மலையக மக்களிடமும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அரசவை தலைவரிடமும், ஆங்கிலேய அதிகாரிகளிடம் பேசினர் தமிழர் தலைவர்கள். தமிழர்களுக்கான சாதகமான பதில்
இல்லை என்றதும், இலங்கையின் இந்திய மக்கள் பிரதிநிதிகளாக வைத்தியநாதனும், பெரய்ராவும் காந்தியிடம் தங்களுக்கான ஆபத்தை கூறி நீங்கவரனும் எங்களுக்காக போராடனும்
என கோரிக்கை வைத்தனர்.
காந்தியோ இந்தியாவை விட்டு ஆங்கிலேயனை துரத்தனும் என தீவிர போராட்டத்தில்
இருந்ததால் தனது பிரதிநிதியாக நேருவை இலங்கை அனுப்பிவைத்தார். இலங்கை வந்த நேரு இந்தியர்
சார்பாக ப.ந.சேனநாயக்காவை சந்தித்து பேசியபோது சேனநாயக்காவின் பேச்சு, செயல் எல்லாம் சிங்கள மக்களுக்கு சாதகமாகவே இருந்ததை உணர்ந்த நேரு தொங்கிய முகத்தோடு
வெளியே வந்தவர் நம் மக்களுக்காக தனியாக ஒரு அமைப்பு வேண்டும் எல்லாரும் ஒண்றிணையனும்
என அறிவித்தவர் இலங்கையின் இந்தியர்களிடையே மிக பிரதானமான, இந்திய இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கை இந்திய மத்திய சபை உறுப்பினர்களை ஒண்றிணைத்து 25 ஜீலை 1939ல் இலங்கை இந்திய
காங்கிரஸ்ûஸ தொடங்கினார். ஒன்றிணைந்த இலங்கை இந்தியர்களின் போராட்டம் ஆரம்பமானது.
அதேபோல் தொழிலாளர்களுக்கான மலையக பகுதியில் இடதுசாரிகளும் குரல் எழுப்பினர். லங்கா
சமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய சோஷலிசக் கட்சியும் குரல் எழுப்பிக்கொண்டிருந்த
நிலையில் 1943ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.
அமிர்தலிங்கம். |
அதே காலகட்டத்தில் காலணி நாடுகளுக்கு சுதந்திரம் தரப்போகிறோம்
என பிரிட்டிஷ் அரசு அறிவித்தபோது இலங்கையில் பல அரசியல் கட்சிகள் உருவாயின. 1944ல்
சுதந்திரம் தருவது பற்றி பரிசீலிக்க வந்த சோல்பாரி குழுவிடம் சிங்களர்களுக்கு 50%மும், தமிழர்கள், சோனர்கள், பறங்கயிர்க்கு 50% ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார்
தமிழ்ர்கள் சார்பாக பேசிய ஜீ.ஜீ.பி.
பிரிட்டிஷ் குழுவே சிங்களர்க்கு 75% மற்றவர்களுக்கு 25% உரிமையென்றது.
இதையறிந்த ஜீ.ஜீ.பி 1944 ஆகஸ்ட் 29ந்தேதி தமிழர்களுக்காக இலங்கை தமிழ் காங்கிரûஸ உருவாக்கி குரல் கொடுத்தார். தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக கோரிக்கை எழுப்பிக் கொண்டிருந்த
நிலையில் ஆங்கிலேயர் தன் எண்ணப்படி இட ஒதுக்கீடு தந்தவர்கள். சுதந்திரத்துக்கு போராடாத
சிங்கள-தமிழர்-சோனகர்களிடம் 1948 பிப்ரவரி 4ந்தேதி நாங்க போறோம் உங்க நாட்டை நீங்களே
பாத்துக்குங்க எனச்சொல்லியபடி டாட்டா காட்டி விட்டு கப்பல் ஏறிபோய்விட்டனர் பிரிட்டிஷார்.
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராக சிங்கள நலனில் மட்டுமே அக்கறை
செலுத்திய, ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சேனநாயக்கா இருந்தார். இவர் தான்
இலங்கையின் தேசபிதா என அழைக்கப்படுகிறார்.
சுதந்திரத்துக்கு முன் வரை இலங்கûயின் அனைத்து சமூக மக்களுக்காக சில கட்சிகள் மட்டுமே இருந்தன. 1950க்கு பிறகு சிங்களர்.
தமிழர், சோனகர், மலையக மக்களுக்காகயென்று பல கட்சிகள் உருவாயின. எல்லாமே த்ந்ல்ர்ச்
ஸ்டைலில் ஒரு கட்சியிலிருந்து உடைந்து-பிரிந்து, புதுசாக என உருவானது. இலங்கையிலும் நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்தார்.
குறிப்பு.
முதல் பகுதியை படிக்க - 1. இலங்கை வரலாறு ( சிலோன் முதல் ஈழம் வரை )
அடுத்த பகுதி எப்போ ரிலீஸ்...
பதிலளிநீக்கு