2015 உலக கோப்பை
கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டுயிருக்கிறது. அரையிறுதியில் இந்திய சார்பில்
சென்ற கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியதால் வெளியேற்றப்பட்டது. தொடக்கத்தில் வெற்றி
பெற்றபோது ஆஹா ஓஹோ என புகழ்ந்த இந்திய ரசிகர்கள் தோற்றதும் ஏய் ஏய் என ஏலனம்
செய்துக்கொண்டுயிருக்கிறார்கள். இணையம், மொபைல் வழியாக வீரர்கள் மீது வைக்கப்படும்
ஏலனத்தை கண்டு பலர், நீங்கள் இந்தியானாக இருந்தால் இந்திய வீரர்களை ஏலனம்
செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டு தங்களது தேசபக்தியை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அது அவர்களுடைய
கருத்து என அதை கடந்து போக எனக்கு விருப்பம்மில்லை. கிரிக்கெட்டில் எங்கிருந்து
வந்தது தேசபக்தி. விளையாடுகிறான் வென்றால் பரிசு வாங்கி வரப்போகிறான், தோற்றால்
மீண்டும் முயற்சி செய்யப்போகிறான். இந்தியா ஜெயித்தால் கைதட்டி மகிழ்ச்சியை
பகிர்ந்துக்கொள்ளலாம், தோற்றால் அடுத்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என ஊக்கு
விப்பு செய்யலாம் இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது. இந்தியா ஜெயிக்க வேண்டும் என
கத்துபவன் தான் தேசபக்தன் என்றால் அது என்னமாதிரியான தேசபக்தி ?.
மைதானத்தில்
விளையாடும் வீரர்கள் இந்தியா என பெயர் பொறிக்கப்பட்ட டிசர்ட் போட்டுக்கொண்டு
விளையாடினால் அவர்கள் இந்திய அரசு அங்கீகரித்த வீரர்களாகி விடுவார்களா ?. இந்தியா
சார்பில் அவர்கள் விளையாடவில்லை. இந்தியாவில் இருந்து செல்லும் அணி அவ்வளவு தான்.
இந்த அணி வீரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.
பி.சி.சி.ஐ
எனப்படும் போர்டு ஆப் கன்ட்ரோல் ஃபார் கிரிக்கெட் இன் இந்தியா என்ற அமைப்பால் தான்
வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அமைப்பு அரசு பதிவு பெற்ற அமைப்பே தவிர
அரசாங்க அமைப்பல்ல. இன்று வரை அது ஒரு தனியார் அமைப்பு. முழுக்க முழுக்க மேட்டு
குடி வர்க்கத்தினர் அங்கத்தினராக உள்ள அமைப்பு. இன்று சில லட்சம் கோடிகள்
சொத்துவுள்ள அமைப்புயிது. இந்த பணம் எங்கிருந்து வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடம்
இருந்து பெறப்பட்டது, மக்களின் வரிப்பணத்தில் இருந்து சலுகைகள் பெற்றது. இதற்கு
இந்திய அரசு உரிமை கொண்டாட முடியாது. அந்த அமைப்பு மட்டுமே உரிமை கொண்டாட
முடியும்.
இந்த அமைப்பின்
தலைவர், செயலாளர் பதவிகள் பிடிக்க நடக்கும் தேர்தல்களில் கோடிகளில் பணம் தந்து
உறுப்பினர்களிடம் வாக்குகளை பெற்று பதவிக்கு வருகிறார்கள். இந்த அமைப்பின்
நிர்வாகிகள் பட்டியலை எடுத்து பார்த்தால் மலைத்து போவீர்கள் அத்தனை பேரும் பெரும்
பெரும் கோட்டீஸ்வரர்கள்.
கிரிக்கெட் தான்
தேசிய விளையாட்டு என்பது போல மற்ற விளையாட்டுகளுக்கு கிடைக்காத முக்கியத்துவத்தை
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக மக்களிடம் திணிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்களை
கடவுளாக கொண்டாடும் அளவுக்கு மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்கள். அடிமையாக்கி
கோடி, கோடியாய் மக்களிடம் இருந்து மறைமுகமாக சுரண்டுகிறார்கள். அரச அதிகாரத்தில்
இருப்பவர்களும் ஊக்குவிக்கிறார்கள். இந்த ஊக்குவிப்புக்கு பின்னால் அவர்களுக்கு
கோடிகளில் லாபம் உள்ளது என்பது பலரும் அறியாதது. இந்த விளையாட்டு ஒரு சூதாட்டம், மேட்ச்
பிக்சிங் நடக்கிறது என தெரிந்தபின்பும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என நம்மபும்
முட்டாள் ரசிக மக்கள் இருப்பதால் தான் இந்த அமைப்பு கொழுக்கிறது.
கிரிக்கெட் மக்களிடம்
தேசபக்தி என்ற பெயரில் பாகிஸ்தான் மீதான வெறியை மறைமுகமாக இந்திய மக்களிடம்
வளர்த்தார்கள். வெறுப்பை ஊக்குவித்து பின்பக்கமாக கோடிகோடியாய் மக்களிடம்மிருந்து
கொள்ளையடித்து வருகிறார்கள்.
இந்தியா கடந்த
முறை நடந்த உலககோப்பை போட்டியின் போது கோப்பையை வென்றது. இதன் மூலம் நாட்டில்
வேலையில்லா திண்டாட்டம் குறைந்துவிட்டதா?, வறுமை குறைந்துவிட்டதா?, விவசாயிகளின்
தற்கொலைகள் நின்றுவிட்டனவா?, உலக சுகாதார நிறுவனம் சத்துயில்லாத குழந்தைகள்
பிறக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது அந்த
நிலை மாறிவிட்டதா?, அமெரிக்க டாலருக்கு சமமாக இந்திய ரூபாயின் மதிப்பு
உயர்ந்துவிட்டதா?, உலக வங்கி இந்தியாவுக்கு தந்த கடனை தள்ளுபடி செய்துவிட்டதா?, அட
அதுயெல்லாம் வேணாம்ய்யா டீ ஒரு ரூபாய் குறைந்தாவுது உள்ளதா சொல்லுங்கள்
பார்க்கலாம். எந்த மசுரும் கிடையாது. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல்
வெறிக்கொண்டு அலைவதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
எவனோ
விளையாடுகிறான், எவனோ வெற்றி பெறுகிறான், எவனோ சம்பாதிக்கிறான்? இதனால் உனக்கென்ன லாபம்.
உன் சந்தோஷத்துக்காக விளையாட்டை பார்த்தாயா அதோடு நின்றுவிடு வெறியாகி
கிடக்காதே......... கிடந்தால் நாசமாய் தான் போவாய் நண்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக