செவ்வாய், ஜூலை 11, 2017

பார்ப்பனராக முயலும் வன்னியர்கள்.


பார்ப்பன சாதியினருக்கு மட்டும்மல்ல முதலியார், செட்டியார், வன்னியர், நாயுடு, தலித், அருந்ததியினர் என ஒவ்வொரு சாதியினருக்கும் பிற சாதியினர் தனக்கு கீழ் அடிமையாக இருக்க வேண்டும் என்கிற வேட்கை உண்டு. இதில் பார்ப்பனர் வெற்றி பெற்றுவிட்டனர். பார்ப்பனர்கள் போல் மற்ற சாதியினரை தனக்கு அடிமையாக்க முயலும் முயற்சியில் வெற்றி பெற இன்றும் சளைக்காமல் வேலை செய்யும் சாதி எதுவென்றால் அது வன்னியர்கள் தான்.  

மகாபாரதம், ராமாயணம் என கற்பனை நாவல்களை எழுதி சாதியில் உயர்ந்தவர்கள், பார்ப்பனர்கள் என பாப்பான்கள் நிறுவியதை போல, வன்னியர்களும் தன் சாதி பிற சாதியினரை விட உயர்ந்த சாதி என காட்டவே காலம் காலமாக வீரவன்னிய நாடகம் நடத்துகின்றனர். நாங்கள் கடவுளின் ஆசியால் நேரடியாக அக்னியில் இருந்து பிறந்தவர்கள் என்பார்கள் வன்னியர்கள். அதற்கான வரலாறாக யாரோ கற்பனையில் எழுதிய நூலை காட்டுவார்கள். அதை நிரூபிக்க வருடந்தோறும் வீர வன்னிய நாடகம் நடத்துவார்கள் வன்னிய மக்கள். இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்துவதன் நோக்கம், அக்னியில் பிறக்கும் வன்னிய வம்சத்தை சேர்ந்த நாங்கள் தான் இருக்கும் சாதியிலேயே உயர்ந்த சாதி என்பதை அடுத்தடுத்த தலைமுறையிடம் திணிக்கவே இந்த நாடகம் நடத்தப்படுகிறது. 

வடமாவட்டங்களில் பல கிராமங்களில் இப்போது, வீர வன்னிய நாடகம் கலைக்கட்டியுள்ளது. கடந்த காலங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட இந்த நாடகங்களில் இப்போது, 20 வயதேயான வன்னிய இளைஞர்கள் அதிகளவில் கலந்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. படிக்காத இளைஞர்கள் என்றால் பரவாயில்லை, படித்த இளைஞர்களே இதில் போட்டி போட்டுக்கொண்டு கலந்துக்கொள்வது அதிர்ச்சியாய் இருக்கிறது.

இன்று வயது முதிர்ந்த பெரியவர்களிடம் இருப்பதை விட வளரும் பருவத்தினரிடம் தான் சாதி பற்று அதிகமாய் இருக்கிறது. இதை வன்னிய இளைஞர்களிடம் காடுவெட்டி குருவும், அன்புமணியும் வளர்த்தார்கள் என்றால், தலித் இளைஞர்களிடம் திருமாவளவன் வளர்த்தார். இது ஏதோ இந்த இரு கட்சி தலைவர்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா சாதி கட்சி, இயக்க தலைவர்களும், இளம் தலைமுறையை சாதி வெறியர்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக