ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கதை – 1. ஸாரி மேடம்




பெங்களுர்ரூ சிட்டி இரயில் நிலையத்தில் சென்னை செல்லும் மைசூர் டூ சென்னை எக்ஸ்பிரஸை பிடிக்க நண்பர்களுடன் பிளாட்பாரத்தில் கூட்டத்தை விலக்கியபடி வேகவேகமாக சென்றுக்கொண்டிருந்தபோது தான் எதிரில் வந்த யாரோ ஒரு பெண்மணியின் இடது கை மீது எனது வலது கை பலமாக உரசியபடி சென்றதால் அவரிடம் திரும்பி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் நின்று அப்பெண்ணின் முகம் பார்க்கும் முன் ஸாரி என்ற வார்த்தை போய் விழுந்தது. 

கையில் குழந்தையுடன் இருந்த அந்த பெண், நம் முகத்தை பார்த்த அந்த விநாடியும் ஸாரி என்ற வார்த்தை அவளின் காதில் விழ 3 விநாடி நேரத்தில் பளார் என கன்னத்தில் அறை விழுந்திருந்தது. பரபரப்பான இரயில் நிலையத்தில் இதை கண்டவர்கள் தங்கள் பணியை மறந்து எதுக்காக அடித்தார் என அதிர்ச்சியுடன் நின்று வேடிக்கை பார்த்தார்கள். 

ஊரில் டேய் என அழைத்தாலே சும்மாவே பந்தாவுக்காக சாமியாடும் என்னை ஒரு பெண் அடித்ததை பார்த்து அதிர்ந்து போன உடனிருந்த நண்பர்கள். ஏய் எதுக்கு அவனை அடிச்ச என எகிற அவள் சைலண்டாகவே முறைத்தபடி நின்றாள். 100 அடி தூரத்தில் லத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த போலிஸ்காரர் இதைப்பார்த்துவிட்டு எங்களை நெருங்கி வர தொடங்கினார். 

அடிவாங்கிய நான் அவளிடம் சீறுவேன் என எதிர்பார்ர்த்த நண்பர்கள் சைலண்டாக இருப்பதை கண்டு அவளை திட்ட துவங்கினார்கள். அருகில் வந்த போலிஸ்காரர் என்னம்மாச்சி என கேட்க கேபாபமாக ஒன்னும்மில்ல சார் என சொல்லிவிட்டு என்னை கண்ணில் கோபத்தை வரவைத்து முறைத்துவிட்டு 5 வயது பெண் குழந்தையை கையில் பிடித்தபடி விறு விறுவென நடந்து போனாள். 

தப்பு பண்ணா இப்படித்தான், நல்ல பொண்ணாயிருக்கவே கேஸ் தரல பொழைச்சி போ என பேசிவிட்டு நம்மை விட்டு நகர்ந்தார் போலிஸ்காரர். ஏதோ வில்லங்கமா பண்ணியிருக்கான் அதான் அடிச்சியிருக்கு அந்த பொண்ணு, இப்படி அடிச்சா தான் இவனுங்களுக்கு எல்லாம் புத்தி வரும் என வேடிக்கை பார்த்தவர்கள் முனகியபடி அவசரமாக நகர்ந்தார்கள். 

எங்க்கிட்ட தான் வீரத்த காட்டற ஒரு பொண்ணு பொதுயிடத்தல உன்னை அடிச்சிட்டு போறா வேடிக்கை பார்க்கிறான் பாரு என நண்பர்கள் திட்டியபடியே இரயில் பெட்டியை தேடி ஏறினர். மனதில் ஒருவித விரக்தியோடு இயிலில் ஏறி அமர்ந்திருந்தேன். 

அடிச்ச அவ கைய உடைச்சியிருக்கனும், நம்ம வயசு தான் அவளுக்கு இரயில புடிக்கற அவசரத்தல கூட்டத்தல உரசிக்கிட்டு போறது சகஜம்ன்னு தெரிஞ்சிக்க முடியாதவளா என்ன அவ. பாத்தா படிச்சவ மாதிரியிருக்கறா அதனால தான் அடிக்கற அளவுக்கு திமீர் வந்திருக்கு என நண்பர்கள் விவாதமாக்கினர். அவாள் மீதான வார்த்தை தாக்குதல் அதிகமாக …………

மெல்லிய குரலில் அவுங்க உரசனதுக்கு அடிக்கல என்றதும் எல்லோரும் அதிர்ச்சியுடன் என் பக்கம் திரும்பினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக