சனி, டிசம்பர் 31, 2011

வயது வந்தோர்க்கு மட்டும். ( சென்னை 8வது இடம்)இந்தியா அளவில் வரும் பிரபலமான ஒரு இதழ் ஆண்டுதோறும் செக்ஸ் வாழ்வில் இளைய சமுதாயத்திடம் எந்த அளவில் ‘மாற்றம்’ ஏற்பட்டுள்ளது என பெரு நகரங்களில் வாழும் இளைய சமுதாயத்திடம் கருத்து கணிப்பு நடத்துகிறது. ஆண்டு தோறும் வெளியிடப்படும் இந்த கருத்துகணிப்பை நான் கடந்த 5 ஆண்டுகளாக படித்து வருகிறேன். அதை படிக்கும்போது, வேகவேகமாக இந்திய இளையோர்களின் பார்வை செக்ஸ்சில் மாற்றம்மடைந்து வருகிறது போல இந்த வேகம் சரியா? தவறா? என்பதை நினைக்கும்போது ஒரு முடிவுக்கு வராமல் தடுமாறியிருக்கிறேன்.

சமீபத்தில் நடந்த ஒரு செக்ஸ் வாழ்வு பற்றிய மாநாட்டில் பிரபல செக்ஸாலிஜிஸ்ட்டுகள் பேசும்போது, மேலை நாடுகளில் விற்பனையாகி வந்த செக்ஸ் டாய்ஸ்கள், பொம்மைகள் தற்போது சென்னையில் அதிகளவில் விற்பனையாகின்றன. இதற்க்கு காரணம், ஆண்-பெண் இருவரிடமும் செக்ஸ் லைப்பை சந்தோஷமாக தங்கள் மனம் விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அது கிடைக்காத போதும், துணையில்லாத மேல்தட்டு வர்க்க இளம் பெண்கள், இளைஞர்கள் டாய்ஸ்களை அதிகம் நாடுகிறார்கள் என்றுள்ளார்கள். அது வரவேற்க்கதக்கது என்றுள்ளார்கள்.


அடுத்ததாக தற்போது ஒரு ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது. அதாவது, இணையத்தில் பிரபலமான தேடுபொறியான கூகுல் தளம் மூலம் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள எந்த நகரத்தில் வாழ்பவர்கள் அதிகளவில் செக்ஸ் படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடுகிறார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகரங்கள் வரிசையில் இலங்கை தலைநகர் கொழும்பு முதலிடம். பாகிஸ்தானின் பிரபல நகரான லாகூர் 4வது இடத்தை பிடித்துள்ளது. டாப் 10 இடத்தில் 7 இடத்தை இந்திய நகரங்கள் பிடித்து ‘சாதனை’ புரிந்துள்ளது. இந்திய நகரங்களில் லக்னோ 2 வது இடம், கொல்கத்தா 3வது இடம், டெல்லி 6வது இடம், பெங்களுரூ 7வது இடம், மும்பை 9வது இடம் பிடித்துள்ளது.

இதலயும் தமிழ்நாடு இல்லயா அப்படின்னு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ அடையாதீர்கள். தமிழகத்தின் சென்னை மாநகரம் இதில் 8வது இடத்தை பிடித்துள்ளது. ( ஏம்ப்பா அடுத்த வருசமாவுது முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்யுங்கப்பா ).


இந்தியாவை விட தினம் தினம் நித்திய கண்டத்தில், மத முற்போக்குவாதிகள் வாழும் பாகிஸ்தான் இளையோர்கள் கூட செக்ஸ் விஷயத்தில் முன்னிலையில் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகள் பலவற்றில் வாழும் இளையோர்களிடம் செக்ஸ் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதையே இது காட்டுகிறது. காலத்தின் கட்டாயம் இந்த மாற்றம் வந்தே தீரும். ஒரு விவகாரத்தை அடக்கி அடக்கி வைக்கும்போது தான் அதை பார்க்கவேண்டும், அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வரும். அதைத்தான் இந்திய கலாச்சாரம் செக்ஸை செய்து வருகின்றன.

செக்ஸ் என்பது மனிதனின் உடல்க்கு நிச்சய தேவை. உணவை போன்றது என்று கூட வைத்துக்கொள்ளலாம். உணவு இல்லாமல் குறைந்த காலம் வாழலாம். அதேபோல் தான் குறிப்பிட்ட வயது வந்தபின் செக்ஸ் உறவு இல்லாமல் ஒரு மனிதன் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது. ( சுவாமி விவேகானந்தர் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழததற்க்கு அவரது உடலில் தேங்கிய விந்துவை வெறியேற்றாததே காரணம் என கூறுவோரும் உண்டு).

அப்படியிருக்க, தற்போதைய இளையோர்களின் செக்ஸ் கருத்து பறிமாற்றம் நண்பர்கள் மத்தியிலேயே ரொம்ப ரொம்ப குறைவாகவே இருக்கிறது. ஆண் பிள்ளையாகட்டும், பெண் பிள்ளையாகட்டும் ஒரு வயதுக்கு மேல் அவர்களுக்கான உடல்கூறு சந்தேகங்களை தீர்க்க இதற்க்கு முந்தைய அதாவது நமது பெற்றோர்கள் உதவுவதில்லை, கல்வி சாலையிலும் வாய்ப்பில்லை இதனால் நவ யுக காலத்தில் இளையோர்கள் தவித்து போய்விடுகிறார்கள். இந்நிலையில் உலகத்தை இளையோர்களின் கையில் இணையம் கொண்டு வந்து தருகிறது. அதில் சமூகத்தில் மறைத்து வைப்பதை, அறிந்து கொள்ள நினைத்து தேடத்தொடங்குகிறார்கள். அதைத்தான் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும். அதனால், முடிந்த அளவு பெற்றோர்கள் மேம்போக்காவாவுது உடல்கூறுகள், உறவுகள் பற்றி தங்களது பிள்ளைகளுக்கு கற்று தர முயல வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது வாரிசுகளுக்கு கற்று தர முயல்வார்கள்.

அதேபோல் தற்போதைய கூ+ழலில் நிச்சய தேவை செக்ஸ் கல்வி. மேல்நிலைப்பள்ளி அ கல்லூரியில் பாடம் நிச்சயம் கற்றுதர வேண்டும். இல்லையேல் இளையோர்களின் வாழ்வு இப்படி தேடுபொறியிலேயே சென்று வாழ்வை சீரழித்துவிடும். அரசாங்கம் அதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக