செவ்வாய், டிசம்பர் 27, 2011

ஸாரி மேடம். ( பகுதி…… 3 )




இரயில் பெட்டியின் வாயில் கதவை திறந்துவைத்துவிட்டு தம்மடித்து முடிக்கும் போது கூபேவில் இருந்து எனது கேங்க் நான் இருக்கும் இடத்திற்க்கு வந்தது. 

விநோத் தான் ஆரம்பித்தான். என்ன மச்சான் யாரு அவுங்க என்றான். 

ஏன்னை அடிக்கறதுயென்ன, தூக்கி போட்டு மிதிக்கற அளவுக்கு அவளுக்கு உரிமையிருக்கு என்றபோது மவுனமாகவே நான் பேசுவதை கேட்டனர். 

என் உயிர் மச்சான் அவ எனக்கூறிய போது புரியாமல் பார்த்தனர். 

10 ஆண்டு பின்னோக்கி போனது என் நினைவுகள். 

எரும மாதிரி தூங்கறத பாரு. விடிஞ்சி ஒரு மணி நேரம் ஆவுது. எழுந்திருக்குதா பாரு என்றவர் சமையல் கட்டை நோக்கி போய் அவனை எழுப்பான்டீ என எங்கப்பா கத்துவது நன்றாக கேட்டது. 

12வது படிக்கறான் விடியகாத்தால எழுந்து ஏதாவது படிக்கறானா பாரு. மத்த பசங்கள பாரு காலையிலயே எழுந்து படிக்குதுங்க இவனும் இருக்கானே என்றவர். படிக்கதான் மாட்டேன்கிறான் கழனிக்காவுது வந்து ஏதாவது வேலை பாத்தானா அதையாவது கத்துக்கலாம். அதயும் செய்யறதில்ல என்றவரிடம், அவன் பாஸ் பண்ணுவான் நீங்க போய் வேலைய பாருங்க என்றார் தாய்க்கான அக்கறையோடு. 

புhஸ் பண்ணி கிழிச்சான் மாடு மேய்க்கதான் லாயக்கு இவன் எனச்சொல்லி விட்டு வெளியே வரும்போது பாயில் இருந்து எழுந்து உட்கார்ந்திருந்தேன். எதுவும் சொல்லாமல் வெளியே போனார். 

பின்னாலயே வந்த அம்மா அவரு கத்தறமாதிரியே தாண்ட நீயும் நடந்துக்கற என்ற அம்மாவிடம். சுடுதண்ணி வை ஸ்கூலுக்கு கிளம்பனும் எனச்சொல்லிவிட்டு எழுந்து பிரஸ்சை எடுத்துக்கொண்டு கொள்ளைப்பக்கம் போய்விட்டேன். திரும்பி வந்து குளித்துவிட்டு சாப்பிட்டு விட்டு சைக்கிளில் புத்தக பையை வைத்துவிட்டு எங்க சேலைப்பட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நாயக்கன்பாளையத்துக்கு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். 

ஊர்க்காரர்கள் எல்லாம் கழனி காட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்போவே மணி 8 ஆகிவிட்டது. 10 மணிக்குள் போயாகவேண்டுமே என வேகவேகமாக சைக்கிளை மிதித்தேன். 3 கி.மீ தூரம் வந்திருப்பேன். எனக்கு முன்னால் தான் பக்கத்து தெருவை சேர்ந்த மஞ்சு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தாள். நானும் அவளும் ஒரு க்ளாஸ் தான். அவளைக்காட்டி தான் காலையில் திட்டினார். 

அவளை நெருங்கிய நேரத்தில் ஏண்டீ உனக்கு அறிவில்ல. படிக்கறவ வீட்டுக்குள்ள படி. இல்லன்னா நைட்லயே படிச்சி தொலை. விடியகாலையில எழுந்து படிச்ச கொன்னுடுவன். உன்னப்பாத்துட்டு எங்கப்பன் காலையில எழுந்திருக்கறானா பாரு, படிக்கறானாரு பாருன்னு அந்தாளு தினமும் திட்டறாரு என்றேன். படிக்கச்சொல்லி தானே திட்டறாரு, வாங்கு என்றாள் முகத்தை கோனலாக வைத்தப்படி.  ஆமாம் படிச்சி கலெக்டராவ போறன் பாரு. போடீ படிக்கறதாம் எனச்சொல்லிவிட்டு வேற என்னடீ விசேஷம் என்றேன். 

சின்ன வயதில் இருந்தே அவளிடம் நெருங்கி பழகியதால் வாடி போடீ என்றே அழைப்பதால் அவளும் இதை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. ஸ்கூலில் தான் பசங்க என்னடா லவ்ஸ்சா என கிண்டல் அடிப்பார்கள். 

பள்ளிக்குள் நுழைந்ததும் என்ன மச்சான், இன்னைக்கும் உங்காளுக்கூடதானே வந்த என கலாய்க்கும் போதே பின்னாடியே வந்தவள் எல்லோரையும் முறைத்துவிட்டு போய் உட்கார்ந்தாள். இரண்டு வகுப்பு முடிந்து இண்டர்வல் பெல் அடித்தார்கள். போய்விட்டு வந்ததும் இங்கிலிஸ் மிஸ் வரவில்லை என்றதால் அந்த பீரியட் ஜாலி என பேசிக்கொண்டுயிருந்தோம்.

நான் டெஸ்க்கில் படம் வரைந்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஆனந்திடம் பேசிக்கொண்டு இருந்தேன். 

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜான் மெல்ல காதருகே வந்து ஒரு சின்ன சந்தேகம்டா கேட்கட்டா. பாடத்தை தவிர வேற எதல வேண்ணா கேளு. 

பொண்ணுங்க யூஸ் பண்ணுவாங்களே அதுக்கு பேர் என்னடா.

நிறைய யூஸ் பண்றாளுங்க அதல எது ?

அதாண்டா. டிவியில கூட விளம்பரம் பண்றானே.

கோத்தா எல்லாமே தான் டிவியில விளம்பரம் பண்றான். 

பேர் மறந்துட்டன் மச்சான். 

டீவியில விளம்பரம் பண்ணும் பொருட்களை லைனாக அடுக்கினேன். கடைசியாக நாப்கீனா இருக்குமோ என யோசித்தபடியே நாப்கீனா என அவனிடம் கேட்டேன்.

ஆமாண்டா அதேதான். என்ன பேர் சொன்ன.

நாப்கீன்.

யார் வாங்கி வரச்சொன்னா. பக்கத்து வீட்ல ஜெஸி வாங்கி வரச்சொன்னா டா அதான் என இழுத்தான். கொஞ்சம் நேரம் பொருத்து நாப்கீன் தாங்கன்னு கடையில கேட்டா தருவாங்களா?

இல்ல. கம்பெனி பேர் சொல்லனும். 

நல்ல கம்பெனி எது என திருப்பி என்னிடம்மே கேட்டவனை பார்த்து கோபம் வந்தது. நாயே வாங்கியாற சொன்னவங்கக்கிட்டயே கேட்க வேண்டியது தானே என குரலை உயர்த்தினேன். 

சொன்னாங்க. மறுந்துட்டன் மச்சான் என்றவன் சொல்லுடா சொல்லுடா என நச்சரிக்க.

விஸ்பர்டா என சத்தமாகவே சொன்னேன். இதைக்கேட்டு பசங்க சைலண்டா எங்களை பார்க்க, பொண்ணுங்கயெல்லாம் ச்சீ என எங்களை பார்த்து சிரிக்க தொடங்கினார்கள். 

ஜானோ இப்படியாடா கத்தறது என்றான் கிசுகிசுப்பாக. 

கோபமாக அவனை முறைத்தேன். 

யாருக்கு மச்சான் என பசங்க கோரஸாக கத்த, பொண்ணுங்க அதிகமாக சிரிக்க அசிங்கமாக போய்விட்டது. 

மதியம் சாப்பாட்டு நேரம், நானும் ஜானும் பள்ளிக்கு எதிரில் இருந்த பெட்டிக்கடை ஹோட்டலுக்குள் புகுந்து தக்காளி சாதம் வாங்கிவிட்டு உட்கார்ந்தோம். மானம் போச்சிடா இன்னைக்கி என்றவனிடம்.

டேய் வாய மூடு. என்னத்தயோ உலகத்தல இல்லாத்தையா சொன்னன். நிமிஷத்துக்கு பத்து விளம்பரம் போடறான். சுpரிச்சவளுங்க எல்லாம் அதைத்தான் யூஸ் பண்ணுவாளுங்க விடு என பேசியபடியே சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்குள் வந்து சுற்றிக்கொண்டிருந்தோம். 

சாப்பிட்டுவிட்டு டிபன் பாக்ஸை கழுவிவிட்டு வந்துக்கொண்டிருந்த மஞ்சு, எங்களை பார்த்ததும் நின்றாள். அவள் அருகே போனதும் ஜான் முன் எச்சரிக்கையாக சற்று தள்ளி போய் நின்றான்.

என்னிடம் அறிவிருக்கா என கேட்டாள். 

இல்ல. கொஞ்சம் கடன் தாயேன். 

முறைத்தவள். எதுக்கு அப்படி ஏலம் போட்ட. இந்த நாய் பேர் என்னன்னு கேட்டு டார்ச்சர் பண்ணான். சோல்லும் போது சவுண்ட் அதிகமாயிடுச்சி.

ச்சீ பே என கோபமாக கூறிவிட்டு நகர்ந்தாள். 

மாலை பள்ளி விட்டதும் கிளம்ப தயாரானபோது மஞ்சு வரலயே என காத்திருந்தேன். 

நேரமாகியும் வரவில்லை. சரி முன்னாடி போய்ட்டு இருப்பா என எண்ணியபடி புறப்பட்டு வந்துவிட்டேன். 

மறுநாள் காலை பள்ளிக்கு வரும்போதும் பார்த்தேன் வழியில் ஆள் தட்டுப்படவேயில்லை. சைக்கிள் ஸ்டாண்டில் பார்த்தேன். அவளது சைக்கிளும் இல்லை. 

ஏன் வரல என யோசித்தபடி க்ளாஸ் ரூம்க்கு போனபோது உள்ளே அமர்ந்திருந்தாள். எப்படி வந்தா என போய் உட்கார்ந்து அவள் பக்கம் திரும்பி எங்கடீ நேத்தும் காணோம். இன்னைக்கும் காலையில பாத்தன் காணோம். சைக்கிளும் இல்ல. உங்கப்பன் என்ன சைக்கிளை அடமானம் வச்சி குடிச்சிட்டானா?

முறைத்தவள். இனிமே சாயந்தரத்தல டியூஷன் வர்றததா நேத்தே மிஸ்க்கிட்ட சொல்லிட்டன். டியூஷன் விடும்போது இருட்டிடும் அதனால சைக்கிள விட்டுட்டு பஸ்ல வந்தன். இனிமே பஸ் தான் என்றாள். 

கம்பெனிக்கு ஆள் இல்லாம போச்சே என எண்ணியபடி திரும்பி உட்கார்ந்தேன். 

மறுநாள் காலை நானும் சைக்கிளை வீட்டிலேயே விட்டுவிட்டு பஸ்சில் போக வந்தேன். பஸ் ஸ்டாப்பில் என்னடா ஆச்சி சைக்கிள் என்றார் எதிரில் வந்த அப்பா. 

நீ தான் டிய+ஷன் போன்னு சத்தம் போடறியே அதான் இன்னையிலயிருந்து டியூஷன் போறன். சாயந்தரம் லேட்டாகிடும் அதான் பஸ்ல என்றேன். 

பஸ்ல போக காசுயிருக்க ?

பஸ் பாஸ் இருக்கு எனச்சொல்லிவிட்டு நகர்ந்தேன். 

இப்பவாவுது புத்தி வந்ததே என முனகியபடியே சென்றார். 

உள்ளுரில் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பதால் சைலண்டாகவே பஸ்க்காக காத்திருந்தோம். 

பஸ் வந்ததும் ஏறினோம். ஊள்ளே பள்ளிக்கு வரும் பக்கத்து எங்களுடன் படிக்கும் பசங்கள் என்னடா உங்காளு பஸ்ல வருதுன்னதும் நீயும் பஸ்சா என கேட்க. அதெல்லாம் கிடையாது எனச்சொல்லிவிட்டு அவளை பார்த்தேன். 

என்னை பார்த்தபடியிருந்தவள் சடாரென திரும்பிக்கொண்டாள். 

பள்ளிக்கூடம் வந்ததும் எல்லோரும் இறங்கினோம். 

என்னருகே வந்தவள் என்ன சார் திடீர்ன்னு டியூஷன் வர்றதா சொன்னிங்க. படிப்பு மேல என்ன அவ்வளவு அக்கறை. 

நக்கலாக சிரித்தேன். 

எதுக்கு சிரிக்கற

டியூஷன் வர்றன்னு யார் சொன்னது. 

நீ தானே உங்கப்பாக்கிட்ட சொன்ன.

சும்மா சொன்னன். நான் டியூஷன் வரப்போறதில்ல. 

இங்கப்பாரு. எங்கப்பா உங்கிட்ட எப்பவாவுது வந்து டியூஷன் வரானான்னு கேட்பாரு வர்றன்னு சொல்லு. பீஸ் எவ்வளவுன்னு கேட்டா 200 ரூபான்னு சொல்லு. 

நான் பொய் சொல்ல மாட்டான். பெரிய இவ சொல்ல மாட்டா. ஒழுங்கா நான் சொல்றத செய்யல. உங்கிட்ட பேசமாட்டான். 

சைலண்டாக இருந்தவள். 

டியூஷன் வராம சாயந்தரத்தல எங்கப்போவ.

லட்டர் தந்துட்டு 2 மாசம்மா காத்திருந்தன். இப்பத்தான் ஒ.கேயாச்சி. நேத்து உனக்காக காத்திருந்தப்ப தான் உன் ப்ரண்ட் தேவி வந்து சொல்லிட்டு போனா. இனிமே என்ன சாயந்தரத்தல ஜாலி தான் என கண்ணடித்தேன். 

கடுகடுவென முகத்தை வைத்தபடி க்ளாஸ் ரூம்க்குள் போனாள். 

தொடரும்…………


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக