அப்ப என்னடா பண்ண, எதுக்கு அடிச்சாங்க என குமார் வேகமாக ஆர்வத்துடன் கேட்டான்.
நான் மவுனமாக இருந்ததைப்பார்த்து …….
மச்சான் பிகர் நல்லாயிருக்குன்னு வேற எங்கயாவது கை வச்சிட்டியா என தருண் கேட்டதும் சடாரென முகத்தை திருப்பி கோபமாக அவனை முறைத்தேன்.
முறைக்காத உரசனதுக்கு அடிக்கலன்னா? வேற ஏதாவது தப்பு பண்ணியிருந்தா தானே அடிப்பாங்க. அதனால தான் கேட்டன் என்றான்.
சிறிது நேர தயக்கத்துக்கு பின் நான் அவக்கிட்ட ஸாரி சொன்னதுக்கு அடிச்சாங்க என்றதும்……..
ஏண்டா லூசா நீ. ஸாரி சொன்னதுக்கு போய் யாராவது அடிப்பாங்களா என்றான் இதுவரை மவுனமாகவே இருந்த விநோத்.
அவ அடிப்பாடா என கூறிவிட்டு எழுந்து கதவு பக்கம் வந்து நின்றுக்கொண்டு பாக்கெட்டில் இருந்து கிங்ஸ் எடுத்து பற்ற வைத்தேன்.
கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டு கோப கனலாக இரயில் நிலையத்தை விட்டு குழந்தையுடன் வெளியே வந்தாள் பிரியா. ஒரு டாக்ஸியை அழைத்தவள் ஏலங்கா போகனும் எனக்கூறிவிட்டு டாக்ஸியில் அமர்ந்தாள். எதுக்கும்மா அந்தாளை அடிச்ச. நீ இப்படி கோபப்படமாட்டியே என கேட்டாள் ஒன்றாவது படிக்கும் அவளது ஆறு வயது பெண் சரண்யா.
கோபப்பட்டனா அவனை கழுத்தை நெறிச்சியிருக்கனும். யார்க்கிட்ட அவன் வேலைய காட்டறான். கூட்டம் கூடுதேன்னு அவனை விட்டுட்டு வந்தன். இல்லன்னா அவனை என நிறுத்தியவள். இந்த பிரியாவப்பத்தி என்ன நினைச்சான் அவன் என பல்லைக்கடித்தால்.
இதுவரை காணாத தனது தாயின் முகத்தில் கோபத்தையும், உக்கிரமான வார்த்தைகளை கேட்டதும் பயந்து போய் அம்மா என அவளது கையை பிடித்துக்கொண்டு மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள். எதுக்கு அம்மா கேபப்படறா என யோசித்தபடியே தூங்கிவிட்டாள்.
அரை மணி நேர டாக்ஸி பயணத்துக்கு பின் மேடம் நீங்க சொன்ன ஏரியா வந்துடுச்சி. எங்க போகனும் மேடம் என டிரைவர் கேட்டதும் வழிச்சொன்னால் ஒரு திருப்பத்தில் ஆழகான ஒரு குட்டி பங்களாவை காட்டி அங்க போ என்றாள். அங்கு வந்து வண்டி நின்றதும் பணத்தை தந்துவிட்டு சரண்யாவை எழுப்பினாள். எழுந்த சரண்யா அம்மாவின் முகத்தை பார்த்தவளுக்கு அம்மா அழுதிருக்கா என்ற எண்ணம் புரிந்தது அவளுக்கு.
கேட் டை தள்ளிவிட்டு சரண்யாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு சர்ரென வீட்டுக்குள் போனாள். ஏய் வீட்டுக்கு தானே வர்ற என்ன இவ்வளவு வேகம் என கேட்ட மதனிடம் எதுவும் கூறாமல் பெட்ரூமில் போய் அப்படியே குப்புற கட்டிலில் விழுந்தாள்.
ஏய் என்னாச்சி கேட்கறன் எதுவும் சொல்லாம போற என நியூஸ் பேப்பரை மடித்து வைக்கும் போதே சரண்யா ஓடிவந்து தனது டாடியின் மடியில் அமர்ந்தவள் இரயில்வே ஸ்டேஷன்ல ஒருத்தரை அம்மா அடிச்சிட்டாங்க என்றதும். புருவத்தை சுருக்கியபடி ஏன் என கேட்க தெரியாது என உதட்டை பிதுக்கினாள்.
ப்ரியா, சரண்யா சொல்றது உண்மையா? என கேட்டபடியே மதன் பெட்ரூம்மைநோக்கி நடந்தான். அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு சரண்யாவும் கூடவே வந்தாள். கட்டிலில் குப்புற படுத்திருந்தவளின் முதுகை தடவியபடியே யார் அவன் எதுக்கு அவனை அடிச்ச என்னாச்சி என கேட்கும் போதே அவள் மூக்கை உரியும் சத்தத்திலேயே அவள் அழுகிறாள் என அறிந்த மதன் அதிர்ந்து போய் அவள் தோளை பிடித்து திருப்பினான் மதனை பார்த்தபடி ஒருத்தகளித்து படுத்தவள் அழுகையை மட்டும் நிறுத்தவில்லை. சத்தமில்லாமல் அழுதவளின் கண்ணீல் இருந்து வந்த கண்ணீர் கட்டிலில் வட்டம் போட்டுயிருந்தது.
என்ன நடந்துச்சி என கேட்க முந்திக்கொண்ட சரண்யா, சிட்டி இரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கி வந்துக்கிட்டுயிருந்தோம். அம்மா திடீர்ன்னு நின்னா அம்மாவை பாத்து ஒரு அங்கிள் ஸாரி சொன்னாங்க. உடனே அடிச்சிட்டாங்க அம்மா என்றாள் மழலை குரலில்.
இதை கேட்டு மேலும் அழுதவள், யார் என்ன நடந்துச்சி என கேட்டான் மதன். கண்ணை லேசாக துடைத்துக்கொண்ட ப்ரியா. ஊர்லயிருந்து வந்து ஸ்டேஷன்ல இறங்கனன். இவ என்னை தூக்கும்மா தூக்கும்மான்னு தொந்தரவு பண்ணா. ஐகல பேக் இருந்ததால இவளை ஒரு கைல புடிச்சிக்கிட்டு இன்னோரு கைல பேக் எடுத்துக்கிட்டு வந்துக்கிட்டுயிருந்தன். அப்பத்தான் என் தோளை யாரோ உரசிட்டு போறதபாத்து கேபமா திரும்பறப்பவே ஒருத்தன் என்னைப்பாத்து ஸாரி மேடம்ன்னான்.
அப்பத்தான் அவன் முகத்தை பார்த்ததும், அவனும் பாத்தான். அவன் தான் உரசிட்டு ஸாரி சொன்னான்னு தெரிஞ்சி கேபமாயிடுச்சி அதான் கேபத்த கட்டுப்படுத்த முடியாம எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டன் என்றாள்.
கூட்டத்தல உரசிக்கிட்டு போனான் அப்பறம் தான் ஸாரி கேட்டானே அப்பறம் எதுக்கு அடிச்ச என கேட்ட மதனை பார்த்து அவன் உரசனப்ப கோபம்மா தான் இருந்துச்சி. ஆனா அடுத்து செஞ்சது தான் கேபத்த வரச்சிடுச்சி என்றபோது என்ன பண்ணான் என கோபமாக கேட்டான்.
ஸாரி சொன்னான்.
ஏய் என்னை என்ன பைத்தியகாரன்னு நினைச்சியா என்றான் கேபமாக.
சிறிய மவுனத்துக்கு பின் ராஜாவ பாத்தன் அவனை தான் அடிச்சிட்டன் என ப்ரியா கூறும்போதே உங்க விளையாட்டுக்கு நான் வரல என்ன விடுடீயெம்மா என கூறியபடியே தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு பெட்ரூம்மை விட்டு ஹால்க்கு வந்தான்.
எதுவும்மே புரியாமல் விழித்தபடி ரூம்லயே நின்றுக்கொண்டிருந்தாள் சரண்யா.
தொடரும்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக