வெள்ளி, நவம்பர் 18, 2011

விர்ரென உயர்த்தப்பட்ட விலைவாசி உயர்வு.


பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு தேர்தல்க்கு முன்பே எதிர்பார்த்தது தான். அதை தற்போது ஜெ நடைமுறைப்படுத்தியுள்ளார். வரவேற்க்கதக்கது. ஆண்டுக்கு 10 முறை பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நட்டத்திலேயே இயங்கி வந்தன. நீண்ட காலமாக பேருந்து கட்டணத்தில் விலையேற்றம் வேண்டும் என அரசு போக்குவரத்து கழகமும், தனியார் பேருந்து முதலாளிகளும் கேட்டு வந்தனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு அதை கண்டுக்கொள்ளவேயில்லை.

அதேபோல், மின் கட்டணத்தை எப்போதே ஏற்றியிருக்க வேண்டும். கடந்த திமுக அரசு யூனிட் கணக்கில் அதை செய்ய முயன்றபோது லபோ திபோ என குதித்தது அதிமுக மற்றும் மீடியாக்கள். மின் உற்பத்தி என்பது நீண்ட கால திட்டத்தில் போடப்படவேண்டியது. ஆனால் இங்கு எல்லாமே குறுகிய கால திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. அதோடு மக்கள் தொகை எதிர்ப்பார்ப்பதை விட அதிகமாக உயர்க்கிறது. அதோடு, மனிதனின் மின் தேவைகள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக உயர்ந்துக்கொண்டே போகின்றன.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் டிவி, ஏசி போன்றவை புழங்குகின்றன. அதை பயன்படுத்துபவர்கள் சரியாக செய்கிறார்களா என்றால் இல்லவேயில்லை. 100 வீட்டில் 80 வீடுகள் ஃபேன், டிவி போன்றவை ஆள்யில்லாமலே ஓடிக்கொண்டுயிருக்கின்றன. இதற்க்கு காரணம், குறைந்த அளவு மின் கட்டணம் என்பதால் அவர்கள் அதை ஆப் செய்ய வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் இருப்பதால் தான்.

அதோடு, காலமாற்றம், பொருhளதார மாற்றம், மூலப்பொருள் விலைகள் ஏறும்போது பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் போன்றவை உயர்வது என்பது தவிர்க்க முடியாதது. ஒரு புதுப்படம் வருகிறது என்றால் டிக்கட் 250 ரூபாய் என்றாலும் போய் படம் பார்க்க நினைப்பவர்கள் இதுபோன்ற விலைவாசி உயர்வையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தற்போது அதிமுக அரசு விலையேற்றத்தை அறிவித்துள்ளது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிக விலையேற்றம் என்பது அதிர்ச்சிக்குறியதாக இருக்கிறது. பேருந்து கட்டணம் மற்றும் இரயில் கட்டணம் ஒப்பீடு பார்க்க பெட்டி செய்தி.


சென்னை டூ கன்னியாகுமரி – மதுரை – கோவை – திருநெல்வேலி பயணிகள் இனி பேருந்து பயணத்தை நினைக்கவே மாட்டார்கள். பேருந்து பயணம் செய்வதை விட இரயிலில் ஏசி கோட்ச்சில் பயணம் செய்தால் கூட அவ்வளவு செலவாகாது. அந்தளவுக்கு பேருந்து கட்டணம் உயர்ந்தியுள்ளார்கள். இந்த விலையேற்றத்தின் மூலம் அரசுக்கு ஒரளவுக்கு தான் வருமானம். தனியார் பேருந்து முதலாளிகள் தான் கொழுக்க போகிறார்கள். தனியார் முதலாளிகள் கொழுக்க அதிமுக அரசு அதிகமாக சலுகை காட்டியுள்ளது.


என்ன செய்ய நாம் பிறந்துள்ளது அரசியல்வாதிகளின் நாட்டில். அதனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக