புதன், நவம்பர் 16, 2011

2ஜியில் விலகும் மர்மம்.


2ஜி விவகாரத்தில் ஆரம்பம் முதலே நாம் சொல்லிவந்தது இவ்விவகாரத்தில் எதிர்கட்சிகள், மீடியாக்கள் கூறுவதை போல 1.76 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டது என்பது பொய். நட்டம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஸ்பெக்ட்ராம்மில் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அதாவது ஊழல் புரிந்துள்ளார்கள் அதிகாரத்தில் இருந்தவர்கள்-இருப்பவர்கள். ஆனால், மத்திய தணிக்கை துறை, மீடியாக்கள் குறிப்பிடும் அளவுக்கல்ல என்பதே நமது வாதம்.
 
திமுகவை அழிக்க வீணாக பழி சுமத்துகிறார்கள் என்றிருந்தோம். இதோ அரசு அதிகாரிகளின் கடித பறிமாற்றம், அப்போது அவர்களுக்குள் நடந்த விவகாரம் தாமதமாக வெளியே வந்து நமது வாதத்திற்க்கு வலு சேர்க்கின்றன.
 
2ஜி விவகாரத்தில் 1.76 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டது என அறிக்கையில் கையெழுத்திட்டுயிருந்தவர் தற்போது நான் அவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டது என எந்தயிடத்திலும் சொல்லவில்லை. எனது மேலதிகாரிகள் அப்படியொரு அறிக்கை தயார் செய்து அதில் மிரட்டி என் கையெழுத்தை வாங்கினார்கள் என பாராளமன்ற குழுவிடம் சாட்சி சொல்லியுள்ளார். அதோடு அவர் சொல்வது உண்மை என்பதை போல அப்போது அதிகாரிகளுக்குள் நடந்த கடித பறிமாற்றங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 
ஸ்பெக்ட்ராம் விற்பனையை முழு அளவில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்தவர் மத்திய தலைமை தணிக்கை துறையில் தொலைதொடர்பு பிரிவுக்கான டைரைக்டர் ஜெனரலாக இருந்த ஆர்.பி.சிங், ஒய்வு பெற்றுவிட்ட அவர் ஸ்பெக்ட்ராம் ஊழலை விசாரிக்கும் பாராளமன்ற குழுவிடம், நான் யூகமாக எந்த கணக்கும் போடவில்லை. யூக கணக்கில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. நான் ஆராய்ந்த வரையில் ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் அரசுக்கு நட்டம் 2,645 கோடி.
 
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழக்கியதால் தான் இழப்பு. ஏலம் விட்டுயிருந்தால் இழப்பு ஏற்பட்டுயிருக்காது என்பதே தணிக்கையில் கண்டறியப்பட்டது. அதைத்தான் நான் அறிக்கையாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி விநோத்ராய்யிடம் தந்தேன். அந்த அறிக்கையை வாங்கிய அவர் சில தினங்களுக்கு பின் என்னிடம் அவர் கணக்குகளை ஆய்வு செய்ததாக கூறி ஒரு அறிக்கையை அனுப்பினார். அதில், 2ஜி விவகாரத்தில் 1.76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுயிருந்தது. எதன் அடிப்படையில் ஆய்வு செய்தார் என்பது அதில்யில்லை. ஆனால், அதில் கையெழுத்திடுமாறு என்னை கேட்டுயிருந்தார்.
 
அவரோடு, அப்போது தலைமை கணக்கு துணை அதிகாரி ரேகாகுப்தாவும் இதுதான் உண்மையான கணக்கு எனக்கூறி மிரட்டி கையெழுத்து கேட்டார்கள். உண்மையில் அவ்வளவு இழப்பு ஏற்படவில்லை. ஆனால் மதிப்பு மலையளவு உயர்த்தப்பட்டு இருந்தது. இதுப்பற்றி நான் அப்போதே ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால் விநோத்ராய், ரேகாகுப்தா இருவருமே என் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது எங்களுக்குள் காரசாரமான கடித போக்குவரத்து நடந்தது. ஒருமுறை என் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் ரேகா கடிதம் எழுதியிருந்தார். கடைசியில் அவர்களின் மிரட்டலாலே நான் கையெழுத்திட வேண்டி வந்தது என்றார். அதற்காக அப்போது இந்த அதிகாரிகளுக்குள் நடந்த கடிதங்களும் ஆதராமாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விநோத்ராய் ஸ்பெக்ராமில் நட்டம் என்ற அறிக்கையை மத்தியரசிடம் தருவதற்க்கு முன் பா.ஜ.கவின் அசைக்க முடியாத காவி தலைவரான முரளிமனோகர்ஜோஷியைப்போய் பார்த்துவிட்டு வந்த சில தினங்களுக்கு பின்பே இந்த நட்ட அறிக்கையை மத்தியரசிடம் தந்துள்ளார். அவரை சந்தித்ததன் நோக்கம்மென்ன என கேள்வி எழும்பியபோது, நான் அவரை சந்திக்கவில்லை என மறுத்தார். ஆனால் சந்தித்ததற்கான ஆதராம் வெளியே வந்தபின் இதுவரை காரணத்தை கூறவில்லை. அதேபோல் அதிகாரிகளுக்குள் நடந்த கடிதங்கள் வெளியே வந்தபின் விநோத்ராய், ரேகாகுப்தாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும்மில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக