ஞாயிறு, நவம்பர் 13, 2011

அழிக்கப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம்.


 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறோம் என அரசு அறிவித்தது முதல் தமிழகத்தின் பல பக்கங்களில் இருந்து குய்யோ முய்யோ என்ற சத்தம் காதை பிளக்கிறது. இதைப்பற்றி நண்பர் யுவகிருஷ்ணா தனது இணைய தளத்தில் தெளிவாக பதிவு செய்துயிருந்தார். ஜெயலலிதாவிடம் இதை தவிர்த்து வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். இதை விட்டு வைத்திருந்தால் அவர் மாறிவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டுயிருக்க முடியும். அவர் மாற மாட்டார் என்ற ரீதியில் பதிவு செய்துயிருந்தார். அதுதான் உண்மை.
 
தமிழகத்தின் அறிவு களஞ்சியம். உலக வரலாறுகளை உட்கார்ந்தயிடத்தல் படிக்க தமிழகத்தில் ஓர்யிடம் என்றால் அது அண்ணா நூற்றாண்டு நூலகம் தான். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெயர் பெற்ற நூலகம் கடந்த 2010 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த தினத்தன்று தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம்.
 
180கோடி ரூபாய் செலவில் அந்த கட்டிடம் தமிழகத்தின் பண்பாட்டையும், உலகத்தின் வரலாறுகளை தன்னுள் வைத்துக்கொண்டு அமைதியாக சென்னை கோட்டூர்புரத்தில் காட்சியளிக்கிறது. 8 ஏக்கர் பரப்பளவில் 9 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டுள்ளது. ஐ.நாவின் யுனஸ்கோ மின்னியல் நூலகத்தோடு இணைக்கப்பட்ட நூலகம்மிது. உலகத்தின் பல மொழி புத்தகங்கள், சிறந்த ஆய்வு நூல்கள், லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள மருத்துவ நூல்கள், செப்பேடுகள், புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள், பழங்கால நூல்கள், இந்தியாவின் பிற மொழி நூல்கள், பார்வையற்றவர்களுக்கான நூல்கள் என கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ன. ஆடிட்டோரியம், மீட்டிங் ஹால்கள் என அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 2800பேர் இந்நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். வரலாற்றில் கலைஞர்க்கு மணிக்கல் என்றால் மிகையில்லை.
 
ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததுமே திமுக தலைவர் கவலைப்பட்ட விவகாரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்னாகுமே என்பது தான். காரணம் பழைய சட்டமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பாவேந்தர் தமிழ் செம்மொழி நூலகத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்க உத்தரவிட்டு அதன்படியே ஏவல் அடிமைகள் செய்து முடித்திருந்ததை கண்டதால் தான் அவர் அதிகம் கவலைப்பட்டார். அவர் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள், எழுத்தாளர்கள், நடுநிலையாளர்கள் அனைவரும்மே கவலைப்பட்டனர். ஆனால் அம்மையார் அதைப்பற்றி கொஞ்சம் கூட எண்ணவில்லை. நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
ஒரு நூலகத்தை சிதைப்பது என்பது நூற்றாண்டு கால வரலாற்றை, பண்பாட்டை சிதைப்பதற்க்கு சமம். அதைத்தான் இன்று ஜெ செய்கிறார். அவர் படிப்பாளி, வாசிப்பாளி, எழுத்தாளர் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் நன்கறிவார்கள். அவர் ஒரு நூலகத்தை சிதைக்கிறார் என்பதை காணும்போது அவர் என்னத்தை படித்து கிழித்தார் என்பது யோசனையாக உள்ளது. இந்த செயல் வரலாற்றில் அவருக்கு சிறுமை. தமிழக வரலாறு அவரை மன்னிக்காது.
 
ஒரு அரசியல்வாதி தனது பெயரை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்மென்றால் அவர் இப்படிப்பட்ட சாதனைகளை உருவாக்கியிருக்க வேண்டும். இல்லையேல் உருவான சாதனைகளை விட அதிகமாக சாதனைகளை உருவாக்க பாடுபடவேண்டும். கலைஞர், அண்ணா நூலகம் என்ற வரலாற்றை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். இதை முறியடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் இதை விட பெரிய பெரிய நூலகத்தை ஜெ அமைத்திருந்தால் வரலாற்று பக்கங்களில் அவரது பெயர் மின்னியிருக்கும். ஆனால், அவர் இருக்கும் நூலகத்தையே அழிக்க துணிந்துவிட்டார். இதுவும் வரலாறு தரான். வரலாற்றின் பக்கத்தில் அவரது இந்த செயல்கள் மோசமாக தான் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.
 
கலைஞருடன் போட்டியிட ஜெவுக்கு எத்தனையோ விவகாரங்கள் உள்ளன. ஆனால் ஜெ தேடித்தேடி கல்வி விவகாரங்களாக பார்த்து பார்த்து கை வைப்பது உண்மையில் அவர் பிராமணீயத்தை தலை தூக்க வைக்க முயல்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகிறது. சமச்சீர் கல்வி, பொறியியல் கல்வியில் தமிழ், நூலகம் போன்றவற்றை பார்த்து பார்த்து சிதைப்பது என்பது வர்ணாசிரம வெறி தானே தவிர வேறில்லை.

ஜெ மீண்டும் மீண்டும் தான் யார் என்பதை நிறுபிக்கிறார். இதற்க்கு பட்டுத்திரை போட்டு பார்ப்பனர்கள் மூட நினைத்தாலும் வரலாறுகள் நிச்சயம் பதில் சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக