வெள்ளி, நவம்பர் 25, 2011

சுட்டு கொல்லப்பட்ட போராளி.


கிஷன் ஜீ எ கோட்டீஸ்வரராவ். இந்தியாவில் செயல்படும் மாவோயிஸ்ட்டு அமைப்பின் மத்திய குழுவின் மிக முக்கிய உறுப்பினர். தவீர களப்போராளி. அவர் எங்கிருப்பார் என்பது மற்ற மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட அவ்வளாக தெரியாது. அவர்தான் பாதுகாப்பு படையுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொள்ளப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள், மத்தியரசு சந்தோஷ கூச்சல் போடுகின்றன. கிஷன்ஜீயை அமைப்பின் மூளை என மத்திய உள்துறை அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள். அவரின் இறப்பு அந்த அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் கூறுகிறார்கள்.
 
ஆந்திரா மாநிலம் கரிம்நகர் மாவட்டம் பெத்தபல்லியில்; 1956ல் பிறந்த ராவ், பி.எஸ்.சி கணிதம் படித்தவர். ஐதராபாத்தில் சட்டம் பயில வந்தார். அங்கு தெலுங்கான வேண்டி போராடிய தெலுங்கான சங்கர சமிதியின் மாணவர் பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவரும், சுதந்திரபோராட்ட வீரருமான அவரது அப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பாட்டது.
 
மாநிலத்தில், சாதி மற்றும் நிலக்கிழார்களால் ஏழை மக்கள் அடிமையாக கிடப்பதை கண்டு போராட்ட களத்தில் தீவிரமானார். பீப்புல்ஸ்வார் என்ற அமைப்பை தொடங்கி ஆந்திராவில் தீவிரமாக போராட தொடங்கினார். தெலுக்கானா மாநிலம் தேவை என்ற குரல் எழுப்பியவர்களில் மிக முக்கியமானவர். ஆந்திராவில் நக்சல் அமைப்பை பலமாக கட்டமைத்தவர். ஆந்திராவின் பாதுகாப்பு படைக்கும் அரசுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார்.
 
1980களுக்கு பீப்புள்ஸ் வார் அமைப்பை சி.பி.எம் (மாவேயிஸ்ட்) என்ற அமைப்போடு இணைத்து விட்டார். 1974க்குபின் அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் இருந்த உறவு அறுந்து போனது. 1990களில் வடகிழக்கு மாநில அமைப்பு பணிகளுக்கு அனுப்பப்பட்டார். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம், பீகார், பகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றி மாவோயிஸ்ட் அமைப்பை கட்டமைத்தவர். 2009 தொடக்கத்தில் ரா அமைப்பு மத்தியரசுக்கு தந்த தகவலின்படி இந்தியாவில் 21 மாநிலங்களில் 220 மாவட்டங்களை தங்களது ஆளுகையின் கீழ் மாவேயிஸ்ட்டுகள் வைத்துள்ளார்கள் என்றது. இதை மத்தியரசும் உறுதி செய்தது.
 

இயக்கத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட துப்பாக்கி தூக்கிய போராளிகள் காடுகளுக்குள்ளும், லட்சகணக்கான ஆதரவாளர்கள் நாட்டில் உள்ளனர். அமைப்பின் செயல்பாடுகளை வெளியுலகத்துக்கு அறிவிக்கும் நபராக, மீடியா உலகத்தோடு நட்போடு பழகியவர் கிஷன்ஜீ.
 
53 வயதாகும் கிஷன்ஜீ 19 வயதில் துப்பாக்கி தூக்கியவர். 34 ஆண்டுகள் தன் வாழ்வை ஒரு கொரில்லா போராளியாக காடுகளிலேயே கழித்தவர். அவரது மனைவி சுஜாதாவும் காட்டிலேயே போராளியாக அவருடன் துணை நின்றார். ஒரு மாபெரும் மத்திய மாநில அரசுகளின் தூக்கத்தை கெடுத்த போராளி. உழைக்கும், போராடும் மக்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என இதுவரை 90க்கும் அதிகமானோரை கொன்றுள்ளதாக சமீபத்தில் ஒருபேட்டியில் கூறியவர்.
 
மக்கள் எதிர்ப்பை மீறி மேற்குவங்க மாநிலத்தில் அமைய இருந்த டாடா தொழிற்சாலையை துரத்தியடித்ததில் மாவேயிஸ்ட் தளபதியான இவரின் பங்கு மிக முக்கியமானது. கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக செயல்பட்ட மாவோயிஸ்ட்டுகளை அப்போதைய மத்தியமைச்சரான திரிணாமுல்காங்கிரஸ் தலைவி மம்தா தீவிரமாக ஆதரித்தார். மேற்கு வங்க மாநில தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் தனது முதலாளித்துவ, அதிகார திமிரை காட்ட தொடங்கினார். ஆட்சியமைக்க காரணமாக இருந்த மாவோயிஸ்ட்டுகளை மேற்கு வங்கத்தில் இருந்தே அழிக்க உத்தரவிட்டார் முதல்வர் மம்தா.

 
மத்திய – மாநில பாதுகாப்பு படைகள் அதில் தீவிரமாக இருந்தன. இந்நிலையில் தான் நவம்பர் 24ந்தேதி பாதுகாப்பு படையுடன் நடந்த சண்டையில் கிஷன்ஜீ சுட்டுக்கொள்ளப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுக்கு முன் இதேபோல் ஒரு முறை ஒரு உடலை காட்டி கிஷன்ஜீ என அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
கிஷன்ஜீ கொல்லப்பட்ட விவகாரத்தில் உளவுத்துறை ஒரு தகவலை பரப்பியுள்ளது. அதாவது, சமீபத்தில் பிடிபட்ட ஒரு மாவோயிஸ்ட்டிடம்மிருந்து லேப்டாப் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாம். அதை ஆராய்ந்தபோது அதில் பலதகவல்கள் இருந்தன. கிஷன்ஜீ தங்கியிருந்த இடம்பற்றி அதில் தகவல் இருந்தது. அதை கொண்டே அந்தயிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினோம். அதில் அவர் கொல்லப்பட்டார் மற்ற தலைவர்கள் தப்பியோடி விட்டார்கள். அதில் அவரது மனைவி சுஜாதாவும் அடக்கம் என்றுள்ளார்கள்.

மாவோயிஸ்ட் ஆதரவாளர்களோ, லேப்டாப்பிலோ, மின்னஞ்சல் மூலமாக தகவல் பறிமாற்றம் நடக்க வாய்ப்பில்லை. இயக்கத்தின் தகவல் பறிமாற்றம் என்பது வேறு வகையானது. உளவுதுறை சொல்வது பச்சை பொய். ‘யாராவது’ காட்டி தந்திருக்க வேண்டும் அ ஏதோச்சையாக சிக்கியிருக்க வேண்டும் என்கின்றனர். மம்தாவை நம்பி மோசம் போனோம் என்ற குரலும் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக