ஞாயிறு, நவம்பர் 13, 2011

ராமதாஸ்சின் “கீழ்“ புத்தி


பாட்டாளி மக்கள் கட்சியை பற்றி எழுதுவது என்பது வேலை வெட்டியில்லாதவனின் வெட்டி செயல். மருத்துவர் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கேவலமான அரசியல்வாதிகளுள் ஒருவர். ஒரு நேரத்தில் அவருக்கு வன்னிய மக்கள் கடமைப்பட்டுயிருந்தார்கள். அதை வைத்து பிழைப்பு நடத்தியதோடு வன்னியர்களின் டீலராக தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி சிறுமைப்பட்டு போய்வுள்ளார்.
 
பதவிகளை பணத்துக்காக மட்டுமே பயன்படுத்திய அரசியல்வாதி யார் என்றால் மருத்துவர் ராமதாசு என்றால் அது மிகையில்லாத வாக்கியம். தனக்காக, கட்சிக்காக உயிர் நீத்த, உழைத்தவர்களை பிடித்து வெளியே தள்ளிய தலைவன் ராமதாஸ்.
 
ஒரு கட்சியென்றால் விமர்சனம் வரும் அதை ஏற்றுக்கொள்பவன் தான் தலைவன். அதேபோல் பவர் இருக்கும் போது கட்சி தலைமைக்கு விசுவாசமாக நடிப்பதும், பவர் இல்லாத போது கட்சி தலைமையை தூற்றுவதும் அரசியலில் சகஜம். இன்று தலைமையை தூற்றுவோர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாருமே அப்படித்தான். பதவியை அனுபவித்தவர்கள், சம்பாதித்தவர்கள்.
 
தலைமையை விமர்சித்தார் என வேல்முருகன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அது அரசியல். வேல்முருகன்க்கு அதற்க்கு அரசியல் ரீதியாக பதில் அளித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனக்கு பிள்ளை இருக்கிறது வாரிசாக்கினேன், உனக்கு பிள்ளையில்லையேப்பா என கட்சியினர் மத்தியில் வேல்முருகனை ராமதாஸ் கிண்டலடித்ததாக சேலத்தை சேர்ந்த முன்னால் பாட்டாளிகள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
 
இப்படி வேல்முருகனை பார்த்து ராமதாஸ் கூறியிருந்தால், ராமதாசை போல கேவலமான அரசியல்வாதி வேறுயாரும்மில்லை என்பது நிதர்சன உண்மை. குழந்தை இல்லை என குத்தலாக பேசிய ராமதாஸ்சிடம், உன் வாரிசுகள் என்கிறாயே உண்மையில் உனக்கு தான் பிறந்ததா என வேல்முருகன் திருப்பி கேட்டுயிருந்தால் அந்த கூட்டத்தில் ராமதாஸ்சின் மரியாதை என்னவாகியிருக்கும்.

ஒருவர் கட்சியை விட்டு போகிறார், நீக்கப்படுகிறார் என்றால் அதற்க்கு அரசியல் ரீதியாக மட்டும்மே கருத்து கூற வேண்டுமே தவிர தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து கருத்து கூற கூடாது அது தலைமைக்கு அழகல்ல. இதை ராமதாஸ் மட்டுமல்ல பிற்காலத்தில் கருத்து கூற விரும்பும் மற்ற தலைவர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

1 கருத்து:

  1. //இப்படி வேல்முருகனை பார்த்து ராமதாஸ் கூறியிருந்தால், ராமதாசை போல கேவலமான அரசியல்வாதி வேறுயாரும்மில்லை என்பது நிதர்சன உண்மை.//
    இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது கேவலத்திலும் கேவலமே.

    பல பாமக தலித்து உறுப்பினர்களை அவர் நிற்க வைத்துத்தான் பேசுவார் எனவும் கேள்விப்பட்டுள்ளேன். அதுவும் உண்மைதானோ.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு